குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, May 18, 2019

ஸ்ரீ காயத்ரி சித்தரின் வழிகாட்டலில் - 10

பகுதி - 01
பகுதி - 02 
பகுதி - 03 
பகுதி - 04 
பகுதி - 05 
பகுதி - 06 
பகுதி - 07
பகுதி - 08
பகுதி - 09 


நான் சாமிக்கு அடுத்த அறையில் இரவில் உறங்கிக்கொள்வேன். இரவு உணவிற்கு பின்னர் சற்று உரையாடிய பின்னர் உறக்கத்திற்குச் செல்வோம். சாமியின் இருப்பிடத்தில் சாமி கட்டிலில் சென்று அமர்ந்தவுடன் அவரிற்கு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி விட்டு சாமி கட்டிலில் சாய்ந்தவுடன் விளக்கினை அணைத்து விட்டு வெளியே வந்து அருகில் இருக்கும் சிறிய அறையில் நான் உறங்குவேன். 

ஒரு நாள் நான் நன்கு அயர்ந்து தூங்கிவிட்டேன். சாமிக்கு இரவு பசியெடுக்க என்னைக் கூப்பிட்டுப் பார்த்திருக்கிறார். நான் எழும்பவில்லை.  தானே தனியாக ஆசிரமத்திற்கு சென்று தட்டி எழுப்பி உணவருந்தி டீ குடித்துவிட்டு வந்திருக்கிறார். அடுத்த நாள் சாமி என்னிடம் இதைச் சொல்லவே இல்லை. ஆசிரமவாசிகள் இதை உதிப்பெருப்பித்து விட்டார்கள். எனக்கும் சற்று சங்கடமாகிவிட்டது. குருவிற்கு தேவையான நேரம் உதவி செய்ய முடியாமல் படுத்து தூங்கிவிட்டோமே என்று. 

அடுத்த நாள் சாமியின் அறைக்கு முன்  இருக்கும் தியான அறையில் நான் மெத்தையைப் போட்டு உறங்கிக்கொள்வதாக சாமிக்குச் சொன்னேன். இல்லையப்பா, கட்டிலில் நன்கு வசதியாக படுத்துக்கொள்ளுங்கள், குளிரும்" என்றார், நானோ இல்லை சாமி நான் வாசலில் படுத்துக்கொள்கிறேன் என்று விட்டேன்.  சாமி "சரிப்பா உங்கள் வசதிப்படி பாருங்க" என்று விட்டார்.  நானும் மகிழ்ச்சியாக மெத்தையைப் சாமியின் வாசலில் போட்டு உறங்கி விட்டேன்.  எனக்கு இப்போது பெரிய மனத்திருப்தி சாமி எழுந்தால் என்னைத்தாண்டி போக முடியாது. ஆகவே இனிமேல் இப்படியான தவறு  நடக்காது அல்லவா.

சிறிது நாட்களுக்குப் பின்னர் நான் தினசரி உறங்கும் இடம் சாமிகள் தினசரி தனது தியானம் சாதனை செய்யும் இடம். என் புத்திக்கு அப்போதுதான் உறைத்தது அட நாம் அந்த இடத்தில் சாதனை வாய்ப்பு அல்லவா குருநாதர் தந்திருக்கிறார், நான் வீணாகத்தூங்கிக்கொண்டு இருக்கிறோம் என்று. சாமியிடம் சொல்லி விட்டு இரவில் படுக்க முன்னர் ஒரு மணித்தியாலம் சாதனை செய்வதை வழக்கமாக்கிக் கொண்டேன். 

நுவரெலியா இலங்கையில் அதி குளிரான பிரதேசம் இரவில் அனேகமாக 14 - 16 டிகிரி குளிர் இருக்கும். உறங்குவதற்கு தடிமனான கம்பளி இல்லாமல் உறங்க இயலாது. அதுபோல் குளிப்பதானால் வெந்நீர் அவசியம். ஆனால் நான் ஒரு போதும் குளிப்பதற்கு வென்னீர் பயன்படுத்தியதில்லை. அப்பா சிறு வயதில் குளிப்பதற்கு ஒரு முறை சொல்லித்தந்திருந்தார். உடலை சிறுக சிறுக நனைக்க மூளை அந்தக்குளிரை ஏற்கும் வகையில் தயாராகிவிடும். ஆகவே குளிர் நீரில் முதலில் சற்று அமைதியாக உடலை நனைத்து விட்டுக் குளிக்க உடல் தயாராகிவிடும். ஆகவே குளிர் நீர் ஒரு பிரச்சனையாக இருந்ததில்லை.  மேலும் வென்னீரில் குளிப்பதானால் நேரத்திற்கு வேலைகளைச் செய்ய முடியாது. ஆசிரமத்தில் மூன்று கொதிப்பான்களே இருந்தது. எல்லோருக்கும் வென்னீர் வேண்டும் என்றால் தண்ணீர் கொதிப்பதற்கு சராசரி 45 நிமிடங்கள் தேவை. ஆகவே சாமி தனது தியானத்தை முடித்து வருவதற்குள் நான் தயாராகி இருக்க வேண்டும் என்றால் வென்னீருக்காக காத்திருந்தால் முடியாது. ஆகவே குளிர் நீரிலேயே குளித்தேன். இது உடலை எப்போதும் சளி, தடிமன் போன்ற எந்த உபாதையையும் ஏற்படுத்தவில்லை. 

சாமியின் தேவை என்ன? எதை எதிர்பார்க்கிறார்? அடுத்து என்ன செய்ய வேண்டும்? முரண்பாடுகளுடன் வருபவர்கள் சொல்லுவதை செவிமடுக்க வேண்டும் ஆனால் எதிர்வினை ஆற்றக்கூடாது என்பதை எல்லாம் சிந்தித்து செயலாற்றினேன். சாமியிடம் இருந்து எதையும் எதிர்பாக்கவில்லை. 

இந்தப்பண்பு பிற்காலத்தில் நான் வேலை செய்த பல் தேசியக்கம்பனியில் என்னை சிறிய வயதில் பதவி உதவி பெற்று துணை இயக்குனர் ஆக்கியது. 

வெகுவிரைவில் சாமி தான் வேலையில் இருக்கும் போது தன்னுடைய சாவிக்கொத்தை எனக்கு தந்து என்னை தனியே சென்று பொருட்கள் எடுத்து வரும் அளவிற்கு நம்பிக்கைக்கு உரியவன் ஆனேன். அந்த உரிமை சாமியின் வளர்ப்பு மகனிற்கும் எனக்கும் உரியதாகியது.  சாமியின் அனைத்து விஷயங்களிற்கும் நம்பிக்கைக்கு பொறுப்பான ஒருவன் ஆக மாறியிருந்தேன். 

இதற்கு என்னிடம் இருந்த ஞானத்தை தவிர வேறு எதையும் சாமியிடம் எதிர்பார்க்காத தீவிர வைராக்கியம் காரணமாக இருந்திருக்க வேண்டும்.  சாமியின் கருணை எல்லையற்றது.  எல்லோருக்கும் அவரவர் மன விருப்பு அறிந்து அதற்குத்தான் உபதேசிப்பாரேயொழிய எவரையும் வலிந்து ஆன்மீக பாதையை ஏற்றுக்கொள் என்று கடிந்துரைப்பதில்லை. எனக்கு சாமியிடமிருந்து சாதனை கற்றுக்கொள்ள வேண்டும் ஞானம் பெறவேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்தது. இவை ஒரு ஆசையாக எனது மனதை உத்வேகப்படுத்தியதில்லை. இவற்றினை அடைவதற்கு குறித்த தகுதிகள் அவசியம் என்று சாமி தெளிவாக ஞானகுரு என்ற புத்தகத்தைத் தந்து அதைப்படித்து சித்தத்தில் பதியவை என்றிருந்தார். அதை கடந்த பல வருடங்களாகச் செய்து வருகிறேன். உள்ளூர எமக்கு பக்குவம் ஏற்பட்டால் குரு சாதனை சொல்லித்தருவதை எவராலும் தடுக்க முடியாது என்பதை உறுதியாக நம்பினேன். அதற்கேற்றாற் போல் தீக்ஷை கிடைத்த நிகழ்வு இருந்தது. நான் மேலும் தெளிவான விளக்கங்கள் பெற விளங்கினேன். அதற்கு கேட்டபோது " குருவுடன் வந்திருந்து குருசேவை செய்தால்தான் அவற்றையெல்லாம் கற்கலாமப்பா" என்று சாமி சொன்னதால் ஆசிரமம் வந்துவிட்டேன். இதற்கு மேல் ஆஸ்ரமத்தில் வேறு எந்த எதிர்பார்ப்பும் இருக்கவில்லை.

ஆஸ்ரமம் எல்லாவகையான மனிதர்களும் வரும் இடம். அந்த நேரத்து பிரதம மந்திரி, அவரின் அண்ணன், அரசியல்வாதிகள், பெரும் பணக்காரரிலிருந்து ஏழைகள் வரை அனைவரும் தமது பிரச்சனைகளுக்கு தீர்வு பெற வருவார்கள். இவற்றைப்பார்த்து எனக்கு ஒரு விஷயம் மட்டும் தெளிவாக விளங்கியது, பணம், அதிகாரம், செல்வாக்கு எவை இருந்தாலும் அவற்றால் மனிதனுக்கு நிம்மதியைத் தரமுடியாது என்பது தெளிவாக விளங்கியது. எல்லோருக்கும் வாழ்க்கையில் ஏதோ ஒரு குறை இருந்தது, அதைத் தீர்க்கவே சாமியிடம் வருகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன். சாமி எதைவைத்துக்கொண்டு அவர்களின் குறைகளைத் தீர்க்கிறார் என்பதை தெளிவாக எல்லோருக்கும் சொல்லிக்கொண்டிருந்தார். என்னிடம் ஒன்றுமில்லை அப்பா, குருபக்தியும் தினசரி காயத்ரி சாதனையும் செய்யுங்கள் என்பார். ஆனால் எல்லோரும் சாமியின் ஆசீர்வாதத்தாலும் அற்புத சக்தியாலும் மட்டுமே தங்கள் வாழ்க்கை மாறுகிறது என்று ஆழமாக நம்பினார்கள், எவரும் சாதனைக்கு முயற்சிப்பதாகவோ, ஆன்ம முன்னேற்றம் பெறு விரும்புவதாகவோ தெரியவில்லை. நான் சாதனையை உறுதியாகச் செய்து வந்தேன், ஒருக்காலும் சாமியிடம் எந்தவிதமான லௌகீக ஆசைகளுக்கும் ஆசி வேண்டுவதில்லை என்று உறுதியாக இருந்தேன். ஆகவே எனக்கு எனது A/L என்ன பெறுபேறு வரும் என்பது பற்றி எந்தக்கவலையும் இல்லை. எதிர்காலத்தில் என்ன செய்யப்போகிறோம் என்ற எந்த எண்ணமும் தோன்றியதில்லை. உணர்வுப்பூர்வமாக நிகழ்காலத்தில் மட்ட்டும் வாழ்ந்துகொண்டிருந்தேன். 

ஒரு நாள் நான் வந்த முதல் நாட்களில் வேலையாட்களிற்கு கொங்கிரீட் போடுவதற்கு மாமிச உணவு கொடுத்ததற்கு சாமியிடம் காரணம் கேட்டேன்? அதற்கு சாமி சொன்ன காரணம் " அவங்க கஷ்டப்பட்டு வேலை செய்பவர்கள், அவர்கள் உடலுக்குத் தேவையானது என்று அவர்கள் விரும்புவதை நாம்  கொடுக்க வேண்டும், அதைவிட்டு விட்டு நாம் சைவச்சாப்பாடு சாப்பிடுகிறோம் என்பதற்காக அவர்களுக்கு அதைத் திணிக்கக்கூடாது" என்றார். 

நான் "அப்படியானால் அது பாவம் இல்லையா? என்றேன். 

யார் சொன்னது அப்பா பாவம் என்று? அவரவர் பரிணாமத்திற்கு தக்க ரூல்ஸ் மாறும் அப்பா! நீங்க சாதனை பண்ணோணும் என்று வந்திருக்கீங்க அப்ப சைவச்சாப்பாடுதான் சரி, அவனுங்க உடலைவருத்தி வேலை செய்ய வந்திருக்காங்க அவங்களுக்கு அந்தச்சாப்பாடு தான் சரி" என்றார். 

எனக்கு அந்தப் பதில் சரியானதாகத்தான் பட்டது.  அவரவர் நோக்கம், தேவையும் கருதித்தான் நிபந்தனைகளே அன்றி பொது நிபந்தனைகள் விதிப்பது ஒருவனது சுதந்திரத்தைப் பறிக்கும் செயல் என்று! 

இப்படி இருக்கும் போது வெங்கடாஜலபதி கோயிலிற்கு அடிக்கல் வைக்க ஏற்பாடாகியிருந்தது. வெங்கடாஜலபதி கோயிலிற்கும் எனது உடல் உழைப்பினை மனமுவந்து செய்தேன். நல்ல ஒரு நாளில் அடிக்கல் வைக்கப்பட்டது. அதற்கு அம்மா தன்னிடமிருந்த ஒரு நவரத்தின கற்கள் கொடுத்திருந்தார். அவை மூலஸ்தானத்தின் அத்திவாரத்தில் வைக்கப்பட்டது. சாமி என்னையும் ஒரு கல் வைக்கச் செய்தார்.

சுவாமிகள் வருடத்திற்கொரு முறை திருப்பதி சென்று வெங்கடாஜலபதியை தரித்து வருவார். வெங்கடாஜபதி கோயில் கொங்கணவ சித்தரின் தபஸும் ஆன்ம சக்தியும் பதிப்பித்த இடம் என்று சாமி அடிக்கடி கூறுவார்.  அவரது விருப்பமான தெய்வங்களின் ஒன்றான வெங்கடாஜலபதி கோவில் தாழ்த்திர மாகாளி  ஆலயத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்தது.

தொடரும்....

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...