குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, October 31, 2011

காயத்ரி மந்திரத்தின் இரகசியம் - பிராண மாதாஸ்ரீ காயத்ரி சித்தர், ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரரிடம் கற்ற உபதேசத்தின்படி....

காயத்ரியின் இரகசிய சக்தியை அறிந்த ஒரு சாரார் அதனை தம் சமூகம் மட்டுமே பாவிக்கும் படி கையகப்பபடுத்திக் கொண்டனர். ஆம் பிராமணர்கள் தான், இன்று பிராமண எதிர்ப்பு, பார்ப்பணிய எதிர்ப்பு என போர்க்கொடி தூக்கி குழப்பம் செய்பவர்கள் அவர்கள் ஏன் சிறப்புடையவர்களாக இருக்கிறார்கள் என்பதனை ஆராயத்தவறிவிட்டார்கள் மிகச்சிறுபான்மையினரான வகுப்பினர் இந்திய தேசத்தில் செல்வாக்கு செலுத்தும் ஒரு குழுவினர்களாக முக்கிய தீர்மானத்தினை எடுப்பவர்களாக இருக்கின்றனர் என்றால் அதற்கு என்ன காரணம்? வேறு எதுவுமில்லலை "காயத்ரி - சந்தியாவந்தனம்" தான். 

காயத்ரி வெறும் மந்திரம் மட்டுமல்ல; அதன் அதிர்வுகள் பிராணசக்தியினை ஆகர்ஷிக்க கூடியது. சாதாரணமாக பிராண சக்தியின் அளவினைப் பொறுத்தே ஒருவருடைய உடல், மனம், புத்தி என்பவற்றின் ஆற்றல் வேறுபடும். காயத்ரியினை ஜெபிப்பவர்கள் பிராணசக்தியினை அதிகமாக ஆகர்ஷிக்கின்றனர். காயத்ரி "பிராண மாதா". 

அதுசரி காயத்ரி பிராமணர் மட்டும்தான் ஜெபிக்கலாமா? இந்த கேள்விக்கான பதில் பலரால் சொல்லப்பட்டுவிட்டது! அனைவரும் ஜெபிக்கலாம். பிரபஞ்ச தாயிற்கு அனைவரும் சமமே! உச்சரிப்பு சரியாக இருப்பதற்கு இன்றைய காலகட்டத்தில் you tube, MP 3 இருக்கிறது. ஆகவே சரியான உச்சரிப்புபினை தெரிந்து கொண்டு உச்சரியுங்கள். எதும் பிழை வந்துவிட்டால் பாதிப்பு ஏற்பட்டுவிடாதே? உங்களுடைய உள்நோக்கம்தான் (intention) விளைவுகளுக்கு பொறுப்பே அன்றி! கடவுள் அல்ல, மின்சாரத்தினை நேரடியாக கையில் பிடித்தால் ஆபத்து! ஆனால் சரியான முறையில் உபயோகித்தால் பயன்பாடு, அதுபோல் மந்திர சாதனையின், தெய்வ வழிபாட்டில் ஒருவருடைய உள்ளார்ந்த நோக்கம்தான் அவரது பலனை நிர்ணயிக்கும். ஒருவர்மேல் வயிற்றெரிச்சலுடன் ஜெபித்தோமென்றால அவரையும் பாதித்து இறுதியில் பலமடங்காக எம்மையும் பாதிக்கும்.

உலகம் சுபீட்சமுற அனைவரும் காயத்ரி ஜெபிப்போமாக!

ஓம் ஸத்குரவே நமஹ!

Saturday, October 29, 2011

காயத்ரி மந்திரம் உச்சரிப்பு


ஏன் பழங்காலத்தில் காயத்ரி ஜெபிப்பது முக்கிய கடமையாக்கப்பட்டது?


குருதேவர் காயத்ரி சித்தரும், ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரரும் உபதேசித்தபடி...


எப்போதும் ஒரு காரியம் நன்றாக நடைபெறவேண்டுமானால் அந்த காரியம் நடைபெறவேண்டிய காரணிகளுக்கிடையே ஒரு ஒத்திசைவு (Harmony) இருத்தல் அவசியம். உதாரணமாக நல்ல சினிமா பாடலினை தயாரிக்கவேண்டுமானால் பாடல் வரிகள், பாடுபவரின் குரல், இசை என்பவற்றிற்கிடையே ஒத்திசைவு இருத்தல் அவசியம், அப்படியானால் மட்டுமே பாடல் காதுக்கு இனிமையானதாக இருக்கும். இதுபோல் பிரபஞ்ச மஹா சக்தியுடன் பூமிக்கு ஒத்திசைவு இருந்தால் மட்டுமே பூமி சிறப்பாக இருக்கும். இதனை இயக்குவதற்கு பூமியில் வாழும் மனித இனத்தின் மனோசக்தி அவசியம். இந்த மனோ சக்தி பிரபஞ்ச சக்தியுடன் தொடர்புகொண்டு ஒத்திசைந்தால் மட்டுமே பூமி சுபீட்சமாக இருக்கும். ஜோதிடம் அறிந்தவர்களுக்கு நாம் இங்கு கூறுவது பற்றி தெளிவாக விளங்க்கும். நவ கோள்களுடன் ஒத்திசைவுடன் நடப்பதே பூமியில் நடைபெறும் செயல்கள். இவற்றினை எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் ஆதிசக்திதான் "காயத்ரி" அதன் ஸப்த ரூபம் தான் "காயத்ரி மந்திரம்". காயத்ரி மந்திரம் ஜெபிக்கும் போது பிரபஞ்ச ஆதிசக்தியுடன் தொடர்பு ஏற்பட்டு ஒத்திசைவு ஏற்படுகிறது. இதனால் பெறும் சக்தியால் பிரபஞ்ச சக்தி பற்றிய உண்மை அறிவு ஒருவனுக்கு உண்டாகிறது. இதனாலேயே காயத்ரியை "வேதமாதா" என அழைத்தனர்.

காயத்ரியினை ஜெபிப்பவர்கள் பிரபஞ்ச சக்தியுடன் ஒத்திசைவதுடன் உயர்ந்த அறிவாகிய "ஞானத்தினையும்" பெறுகின்றனர். இதனால் தாம் மட்டுமல்ல தம்மை சூழ உள்ளவர்களையும் அத்தனைமையுடையவராக்கிகின்றனர். 

Friday, October 28, 2011

காயத்ரி சாதனை

குருதேவர் காயத்ரி சித்தரும், ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரரும் உபதேசித்தபடி...காயத்ரி மந்திரம் பற்றி இன்று அறியாத இந்துக்கள் இல்லை எனலாம். இவர்கள் இது ஒரு வேதமந்திரம், பிரார்த்தனை என்ற அளவில் அதன் பலனை அறிந்தோ அறியாமலோ ஜெபித்து வருகின்றனர். உண்மையில் சித்தர்களும், ரிஷிகளும் அறிந்த பேருண்மை "காயத்ரி" ஆகும்.
ஒவ்வொரு மனிதனிற்கும் அறிவு, ஞானம், மனோசக்தி, இருப்பது போல், இந்த பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த ஞான ஆன்ம சக்தியின் ப்ிரம்ம அலைவடிவம்தான் காயத்ரி மந்திரம்.
பூமியில் உள்ள நதிகள், மலைகள், இயற்கை, கோள்கள், நட்சத்திரங்கள் என்ற அனைத்தும் ஓர் ஒழுங்கு முறையில் தமது அசைவை மேற்கொள்ளுகின்றன, உடலில் உள்ள கலங்கள் மனிதனது தன்னறிவில்லாமலே சரியாக இயங்குகின்றன. இவ்வாறு இயங்குவதற்கு சரியான ஞானம் அவசியம், அந்த ஞானம் பெற்ற ஒருவன் தனது வாழ்க்கையில் நடைபெறும் விடயங்களில் எது சரி? எது தவறு என்ற அறிவினை பெற்று வாழ்க்கையின் உண்மையான இலட்சியம் என்ன என்பதனை அறிந்து தனது வாழ்க்கையினை இன்பமுள்ளதாக்கிக்கொள்கிறான். இந்த ஞானசக்தி எமது மனதின் ஆழங்களில் நீறுபூத்த நெருப்பாக மறைந்து காணப்படுகிறது. இந்த தணலினை ஊதி பெரும் ஞானநெருப்பாக்கி அதில் எமது அஞ்ஞானத்தினை எரிக்கும் செயல் முறையினை "சாதனை" "சாதனா" எனப்படும். காயத்ரி சக்தியினை தனது சூஷ்ம உடம்பில் செயற்படுத்த தெரிந்தவனுக்கும் அவனது ஆன்மா தெய்வசக்திகளுடன் தொடர்பு கொள்ளக்கூடிய தன்மை கிடைக்கிறது.
இவ்வாறான காயத்ரி மந்திரம், அதனுடைய சக்தி, அந்த சாதனையினால் எப்படி எம்மில் விழிப்படையச் செய்வது என்பது பற்றி இனிவரும் பதிவுகளில் குருவருளால் விளக்குவோம்.

ஒரு லக்ஷம் ஸ்ரீ காயத்ரி ஜெபம் பூர்த்தி செய்த சாதகரின் அனுபவம்

சாதனை அனுபவம் -------------- குரு ஸ்ரீ ஸக்தி சுமனன் அண்ணாவின் வழிகாட்டலில் சாதனை செய்ய ஆரம்பித்து இந்த ஆண்டோடு 7 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. ...