Posts

Showing posts from July, 2013

ஸர்ப்ப சக்தி எனும் குண்டலினி யோக விளக்கம் - Tamil Translation of Serpent Power of Arthur Avalon

குண்டலினி யோகம் பற்றிய மேலைத்தேய சாதகர்களின் புரிதல் - பேராசிரியர் மொனியஸ் வில்லியமின் சமஸ்கிருத அகராதியின் படி:
தற்காலத்தில் மேற்கத்தையே ஆன்மீகர்களில் சிலர் இந்த விடயம் தொடர்பான ஆர்வத்தினைப் பெற்றிருக்கிறார்கள். ஆனால் அந்த ஆசிரியர்கள் இந்து தத்துவங்ககளை சரியாக விளங்கிக்கொள்ளாமலும், புரிதல் இன்றியும், தவறாக விபரித்து வருகின்றனர். இந்த நிலை இங்கு குறிப்பிடப்படும் நபர்களை மட்டும் தொடர்புடையவை இல்லை. இப்படியான நிலையினை விளங்கிக்கொள்வதற்கு கீழ்வரும் சில உதாரணங்களைப் பார்ப்போம். எல்லோருக்கும் நன் கு பரிட்சயமான சமஸ்கிருத அகராதியில்(9) சக்கரங்கள் என்பது கீழ்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளது "வட்டங்கள் அல்லது உடலில் காணப்படும் ஆன்மீகம் சார்ந்த அழுத்தப்புள்ளிகள் அல்லது கைரேகையுடன் தொடர்பு பட்ட குறியீடுகள்" எனக் கூறப்பட்டுள்ளது. அடுத்து சக்கரங்களின் அமைவிடம் பிழையான முறையில் விபரிக்கப்பட்டுள்ளது. மூலாதாரத்தின் அமைவிடம் இடுப்புக்கூட்டின் முன் மைய பாகமுள்ள பொச்சு எலும்பிற்கு அண்மையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சுவாதிஷ்டானம் நாபிப்பகுதியில் உள்ளதாகவும், இதய மையத்தில் அமைந்துள்ள அநாகதம் …

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 30: நாமங்கள் 76 - 80

விசுக்ர-ப்ராணஹரண்-வாராஹி-வீர்ய-நந்திதாயை (76) விசுக்ரனை கொன்ற வாராஹியின் வீர்யத்தை மெச்சுபவள் விசுக்ர‌ன் ப‌ண்டாசூர‌ன‌து ம‌ற்றைய‌ ச‌கோத‌ர‌ன் (மேலே நாமாவில் குறிப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌து. வாராகி விசுக்ர‌னை வ‌த‌ம் செய்தாள். இத‌னால் ல‌லிதை மிக்க‌ ம‌கிழ்வுற்றாள். 74,75, 76 ம் நாமாக்க‌ள் பாலா, ம‌ந்திரிணி, வாராகி ஆகிய‌ மூவ‌ரைப்ப‌ற்றியும் பேசுகிற‌து. க‌றை அல்ல‌து அழுக்கினை ச‌ம‌ஸ்க்ருத‌த்தில் ம‌ல‌ என‌ப்ப‌டும். இந்த‌ மூன்று தேவிய‌ரும் புல‌ன் இச்சையால் ல‌லிதையின் ப‌க்த‌னின் ம‌ன‌தில் எழும் அழுக்கினை அக‌ற்றுகின்ற‌ன‌ர். இந்த‌ ம‌ன‌ அழுக்குக‌ளில் மிக‌வும் மோச‌மான‌து ஆண‌வ‌ம், பாலாவினைப்ப‌ற்றிக் கூறும் போது பாலா என்றால் ப‌ல‌ம் என‌ப்ப‌டுகிறது. ஒருவ‌ன் தெய்வ‌ ச‌க்தியை த‌ன்னில் ஏற்றுக்கொள்ள த‌குந்த‌ வ‌கையில் உட‌லைப் பல‌மாக‌ வைத்திருக்க‌ வேண்டும். பொதுவாக‌ தீட்சையின் போதும் தியானத்தின போதும் ச‌க‌ஸ்ரார‌ ச‌க்க‌ர‌த்தினூடாக‌வும், பிட‌ரிச்ச‌க்க‌ர‌த்தினூடாக‌வும் தெய்வ சக்திகள் செலுத்தப்படுகின்றன. மந்திரிணி தேவி பஞ்சதசி, சோடஷி போன்ற மந்திரங்களின் வீரியமாக குறிக்கப்படுகிறாள். புராதன மந்திரசாஸ்திர விதிப்பிரகாரம் ஒவ்வொரு மந…

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 29: நாமங்கள் 71 - 75

ஜ்வாலாமாலினிகாக்ஷிப்த-வஹ்நிப்ராகார-மத்யகாயை (71) ஜ்வாலாமாலினி சக்தியால் அமைக்கப்பட்ட அக்னிக்கோட்டை நடுவிலிருப்பவள்
ஜ்வாலாமாலினி என்பவள் தேவியின் திதி நித்யாக்களில் ஓருவள், அவள் தேவியிற்கு அக்னியாலான பாதுகாப்பு அரண் அமைப்பவள். லலிதை அந்த அக்னி கோட்டைக்கு நடுவில் வசிக்கின்றாள். திதி நித்யா தேவி என்பவர்கள் சந்திர மாதத்தின் ஒவ்வொரு திதிக்கும் உரியவர்கள். பௌர்ணமிக்கும் அமாவாசைக்கும் இடையில் பதினைந்து நாட்கள் உள்ளன, பதினாறாவது நாள் பௌர்ணமி அல்லது அமாவாசையாக வரும். இந்த ஒவ்வொரு நாளும் திதி எனப்படும். இந்த ஒவ்வொரு திதிகளுக்கும் ஒவ்வொரு தேவியர் இருக்கின்றனர். ஜ்வாலாமாலினி பதினான் காவது நாளாகிய சதுர்தசிக்குரிய திதி நித்யா ஆவாள். லலிதாம்பிகை மஹா நித்யா என அழைக்கப்படுகிறாள். மஹா நித்யா பௌர்ணமி மற்றும் அமாவாசையினை குறிப்பவள். இந்த பதினைந்து தேவியரும் ஸ்ரீ சக்கரத்தின் ஒன்பதாவது ஆவரணமாகிய முக்கோணத்தில் வணங்கப்படுபவர்கள். ஒவ்வொரு பக்கத்திற்கும் ஐந்து தேவியர் வீதம் பதினைந்து நித்யாக்களும் நடுவில் பிந்து ஸ்தானத்தில் மஹா நித்யாதேவியும் ஸ்ரீ சக்கரத்தில் வீற்றிருக்கின்றனர். பண்டாஸுரனுடனான போரின் போது லலிதை …

தாந்திரீக மைதுனம் பற்றிய விளக்கம் - காயத்ரி சாதனை சித்தி அடைந்ததற்கான அடையாளங்கள் - 02

Image
ஒரு சாதகன் தனது சாதனையில் அமரும்போது உடலுறவு கொள்ளும் நிலையே ஏற்படுகிறது. இதனையே தாந்திரீகத்தில் “மைதுனம் - உடலுறவு” எனக்குறிப்பிடுவார்கள், உடலுறவினை எப்படி பகிங்ரங்கப்படுதுவதில்லையோ அதுபோல் சாதனையும் இரகசியமாக செய்யப்படவேண்டியது. ஆன்மா பெண் கடவுள் ஆண், கடவுளாகிய ஆணிடமிருந்து தெய்வசக்தியாகிய விந்தினை பெற்றுக்கொள்ளும் செய்முறையே சாதனை, இதனை இன்னும் ஒரு படி மேலே க்ருஷ்ண பக்தர்கள் “பக்தி” மார்க்கமாக கண்டறிந்துள்ளார்கள். ஆன்மாவும் கடவுளும் இரண்டறக்கலக்கும் போது உண்டாகும் அதீத இன்ப உணர்வே சமாதி என யோக மொழியில் குறிப்பிடப்படுகிறது. தாந்திரீகம் மனித அடிப்படையிலான உடலுறவிலிருந்து இந்த நிலையினை அடைவதற்குரிய வழியினை போதிக்கிறது. காயத்ரி உப நிஷத்தும் ஸாவித்ரி உப நிஷத்தும் இப்படியான பல தெய்வீக உறவுகொள்ளலை பற்றி விபரிக்கின்றன, ஸவிதாவும் ஸாவித்ரியும் இணையான ஜோடிகள். ஸாவித்ரி (காயத்ரி) சாதனையினை தொடங்கும் சாதகனது ஆன்மாவும் பஞ்சகோசங்களும் யோனியாக மாறுகின்றது. இந்த யோனியினுள் பிரபஞ்ச பேரின்ப சக்தி விந்தாக பாய்கின்றது. இந்த சக்திப்பாய்ச்சலே “சக்திப்பரிமாற்றம் – ஸக்திபட்” என அழைக்கப்படுகிறது. இந்த சக்தி…

காயத்ரி சாதனை சித்தி அடைந்ததற்கான அடையாளங்கள் - 01

Image
இந்த பதிவில் காயத்ரி சாதனையினை மற்றும் வேறு யோக, மந்திர சாதனைகளினை செய்யும் சாதகர்களுக்கு ஏற்படும் குணங்குறிகள் பற்றி பார்ப்போம். காயத்ரி சாதனை அடிப்படையிலேயே இங்கு விளக்கப்பட்டாலும் இவை பொதுவாக எல்லாவித சாதனைகளிற்கும் பொருந்தும்.
காயத்ரி சாதனைபுரியும் சாதகனில் அதீத தெய்வீக உணர்வு விழிப்படையத்தொடங்க்குகிறது. அதனால் அவனது பௌதீக உடலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் உடனடியாக உருவாகாவிட்டாலும் அகமாற்றங்கள் குறிப்பிடத்தக்க அளவில் உருவாகும். அந்த மாற்றங்கள் பிராணமய கோசத்தினை, விஞ்ஞானமய கோசத்தினை, மனோமய கோசங்களில் ஆன்ம சக்தி செயற்படத்தொடங்குவதால் ஆனந்தமய கோசம் விழிப்படையத்தொடங்கும். உடலின் அடிப்படைக்கூறுகள் முழுமையாக மாறாவிட்டாலும் மற்றைய நான்கு கோசங்களிலும் ஏற்படும் தெய்வீக மாற்றங்கள் உடலில் கட்டாயம் பிரதிபலிக்கத்தொடங்கும்,

ஓரு பாம்பு சட்டை கழற்றும் போது அதன் புதிய உடலில் ஏற்படும் மாற்றங்களைக்கூறலாம். இந்த நிலையினை அடைவதற்கு முன்னர் அதன் உடல் கனதியாகி அசையமுடியாமல் சோம்பிப்போய் விடும். அந்த நிலையில் பாம்பு ஓரிடத்தில் எந்த செயலும் செய்யாமல் அசையாமல் கிடக்கப் பார்க்கும். அந்த தோல் வளர்ந்த…

Symptoms of Success in Sadhana – Special reference to Gayathiri Sadhana

Image
SADHANA AND MAITHUNA, PROCESS, ATTAINNG AND MANAGING SIDDHIS 
By Gayathri Siddhar Dr. R. K. Murugesu Swamigal


Subtle divine consciousness emerges in a Sadaka by Gayathri Sadhana. There are no specific changes in his physical form or body but there is considerable inner change in him/her. Changes effect the PRANAMAYA KOSHAM, VIGNANAMAYA KOSHAM AND MANOMAYA KOSHAM due to increase in spiritual elements are bound to have their impact on ANNANDAMAYAKOSHAM. It is true the structure of the body of Sadaka does not change easily, but it is equally true that inner changes are bound to be reflected in some form in the body. 
When a new skin is formed in the tissues of a snake its symptoms are reflected in its body. It become heavy cannot run fast and being deprived of swiftness and enthusiasm. The snake prefers to lie down in a place. When the new skin gets matured, the snake changes its old skin which known as casting of the slough. After this casting off there is a fresh enthusiasm and the activi…

சென்னை ஆத்மா ஞான சபையின் ஆன்மீக வகுப்புகள்

Image
எமது குருவின் குருவான கண்ணைய யோகீஸ்வரரிடம் ஆத்மா, யோக, ஞான வித்தை பயின்று அவர் உபதேசித்த வழி இல்லறத்திலிருந்தே சாதனைபுரிந்து யோக நிலை பெறலாம் என்று உணர்த்தி வரும் பெருமதிப்பிற்குரிய இராஜ யோகி ராஜமோகன் ஐயா அவர்கள்  சென்னையில் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரரிடம் தாம் பயின்றவற்றை ஆன்மீக படைப்புகளாக வெளியிட்டும் வருகிறார். அந்த வகையில் சென்னையில் சித்த வித்தைகளின் சில பயிற்சி வகுப்புகள் நடத்த உத்தேசித்து உள்ளதாக அறியத் தந்துள்ளார்கள்.  இவற்றை பயில ஆர்வம் உள்ளவர்கள் கீழ்வரும் அறிவித்தலின் படி தொடர்புகொள்ளவும்.