Posts

Showing posts from December, 2014

நவக்கிரக காயத்ரி சாதனை – சந்திர காயத்ரி மந்திர சாதனை

Image
ஏற்கனவே எமது பதிவில் காயத்ரி மந்திரம் மூல மந்திரம் அதன் சாதனையின் மூலம் பல்வேறு தேவதா சக்திகளை பெறலாம் என்று கூறியுள்ளோம். இந்த வரிசையில் இன்று எல்லோருக்கும் இருக்கும் பயம் நவக்கிரகங்கள், ஆகவே இந்த தொடரில் ஒன்பது கிரகங்களது காயத்ரி மந்திரத்தினையும் அதன் மூலம் குறித்த கிரகசக்தியினை எம்மில் ஈர்த்து எமது குறைகளை போக்கி கொள்ளும் முறையினையும் விளக்குகிறோம். தேவையானவர்கள் பயிற்சித்து பலன் காண்க.
இதற்கான நிபந்தனை, முதலில் தினசரி நூற்றி எட்டு தடவை மகா காயத்ரி (ஓம் பூர் புவஹ ஸ்வஹ.......) கூறி, சித்த சாதனை செய்து முடித்திருக்க வேண்டும்.
அதன்பின்னர் ஒரு திங்கட்கிழமை) சூரியோதயத்தில், சந்திர ஹோரை நேரத்தில் கீழ்வரும் ஒழுங்கில் செய்ய வேண்டும். தாய் தந்தை குரு வணக்கம் -மஹா காயத்ரிமந்திர ஜெபம் – 108 தடவைகாயத்ரி சித்தசாதனைசந்திர காயத்ரிமந்திரம் - 108 தடவை
இறுதியாக சந்திரனை மனதில் தியானித்தது சந்திர சக்தி எமது உடல், மனம், பிராணன் என்பவற்றில் சேர்வதாக பாவிக்க வேண்டும்.
தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் உங்களுக்கு வசதியான்  சந்திர  ஓரையில் இதனை நாற்பது நாட்கள் செய்து வரவேண்டும்.
அதுபோல் சந்திரன் உச்சம் ஆட்சியாகு…

காயத்ரி அனுஷ்டானம்

காயத்ரி அனுஷ்டானத்தில் மூன்று வகை உள்ளன. லகு (சிறிய) அனுஷ்டானம், மத்திம (நடுத்தர) அனுஷ்டானம், உச்ச அனுஷ்டானம் என்பவை அவை. இவை தினசரி காயத்ரி ஜெபத்தில் இருந்து ஒருவருக்கு அதிகமாக ஆன்ம, மனோ, பிராண, தெய்வ சக்திகள் தமது காரிய சித்திக்காக தேவைப்படும் போது செய்து தம்மை வலுப்படுத்திக்கொள்ளமுடியும். 
1) லகு அனுஷ்டானம் என்பது 24000 ஜெபத்தினை  9 நாட்களில் முடிப்பது. தினசரி 27 மாலைகள் வீதம் செய்ய வேண்டி வரும், சராசரி மூன்று மணித்தியாலங்கள் தேவைப்படும். 
2) மத்திம அனுஷ்டானம்: 125,000 ஜெபத்தினை நாற்பது நாட்களில் தினசர் 33 மாலைகள் வீதம் செய்ய வேண்டும். 
3) உச்ச அனுஷ்டானம்: 24,00,000 ஜெபத்தினை ஒருவருடத்தில் தினசரி 66 மாலைகள் வீதம் செய்வது. 
இதன் மூலம் ஒருவன் அதிக தபஸ் சக்தியினை பெறலாம். இந்த விபரத்தினை கண்டவுடன் உடனடியாக இதனை செய்து பலன் பெறவேண்டும் என்று எண்ணி முயற்சிக்க வேண்டாம். முதலில் ஒருவருடம் குருமந்திரம், காயத்ரி சித்த சாதனை, தினசரி 108 தடவை காயத்ரி ஜெபம் செய்து மனம், உடல் உயர்ந்த சக்தியினை பெறுவதற்குரிய பக்குவத்தை சரியாக பெற்று அதன் பின் லகு, மத்திய, உச்ச அனுஷ்டானங்களை குருவின் வழிகாட்டலுட…

ஜாதக பிரச்சனைகளுக்கு நவக்கிரக காயத்ரி சாதனை – சூரிய மந்திர சாதனை

Image
ஏற்கனவே எமது பதிவில் காயத்ரி மந்திரம் மூல மந்திரம் அதன் சாதனையின் மூலம் பல்வேறு தேவதா சக்திகளை பெறலாம் என்று கூறியுள்ளோம். இந்த வரிசையில் இன்று எல்லோருக்கும் இருக்கும் பயம் நவக்கிரகங்கள், ஆகவே இந்த தொடரில் ஒன்பது கிரகங்களது காயத்ரி மந்திரத்தினையும் அதன் மூலம் குறித்த கிரகசக்தியினை எம்மில் ஈர்த்து எமது குறைகளை போக்கி கொள்ளும் முறையினையும் விளக்குகிறோம். தேவையானவர்கள் பயிற்சித்து பலன் காண்க.
இதற்கான நிபந்தனை, முதலில் தினசரி நூற்றி எட்டு தடவை மகா காயத்ரி (ஓம் பூர் புவஹ ஸ்வஹ.......) கூறி, சித்த சாதனை செய்து முடித்திருக்க வேண்டும்.
அதன்பின்னர் ஒரு ஞாயிற்றுக்கிழமை (இது சூரிய சாதனைக்கு, சனியிற்கு சனிக்கிழமை) சூரியோதயத்தில் கீழ்வரும் ஒழுங்கில் செய்ய வேண்டும். தாய் தந்தை குருவணக்கம்மஹா காயத்ரிமந்திர ஜெபம் – 108 தடவைகாயத்ரி சித்தசாதனைசூரிய காயத்ரி மந்திரம் - 108 தடவை
இறுதியாக சூரியனை மனதில் தியானித்தது சூரியனுடைய சக்தி எமது உடல், மனம், பிராணன் என்பவற்றில் சேர்வதாக பாவிக்க வேண்டும்.
தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் உங்களுக்கு வசதியான்  சூரிய ஓரையில் இதனை நாற்பது நாட்கள் செய்து வரவேண்டும்.
அதுபோல் சூ…

அகத்திய மகரிஷி அருளிச்செய்த‌ மனோன்மணி பூசை அகவல்

இந்த மனோன்மணி அகவல் எனது பாட்டனாரின் சித்தர் பாடல் தொகுப்பில் இருந்தது. எனது சிறுவயதில் எனது தந்தையார் கந்தர் சஷ்டி கவசம் படிப்பதை பார்த்துவிட்டு நானும் ஏதாவது செய்ய வேண்டும், ஆனால் அவர் செய்வதாக இருக்க கூடாது என்ற வீம்புடன் எனக்காக தேர்ந்தெடுத்துக்கொண்ட எனது தினசரி பாராயணம்தான் இந்த மனோன்மணி அகவல்.

அப்போது இதனை தேர்ந்தெடுத்துக்கொண்டதன் காரணம் "அகத்திய மாமுனிவர் அருளியது" என்று அதன் தலைப்பில் இருந்த அறிமுகம் மட்டுமே. அர்த்தம் புரியாமல் சிறுவயதில் விளையாட்டாக வீம்பிற்கு படித்ததன் பலனோ என்னவோ, அதன் இறுதி வரிகளில் கூறப்பட்டதுபோல் "குருவடிவாயு பதேசங் கொடுத்துன் திருவடி தந்தருள் சிவசிவா சரணம்" என்ற பலன் எனது வாழ்வில் மெய்ப்பட்டது.

ஆம் குருவடிவாய் காயத்ரி மஹாமந்திர உபதேசமும், ஸ்ரீ வித்யா உபதேசமும் தேடாமலே கிடைக்கப்பெற்றது! 

ஆக தேவியை உபாசிக்க வேண்டும் என பேராவல் கொண்ட அன்பர்கள் தெரிந்தோ தெரியாமலோ இதனை படிக்க பலன் உண்டு என்பது எமது அனுபவ உண்மை! ஹ்ரீம் ஓம் மனோமணி அற்புதப் பொருளே
ஆதியே பரையே சோதியே சுடரே
ஹ்ரீம் ஓமென்னு மக்ஷரத் தாதி
ஸ்ரீ ஓமென்னும் சிற்பரத் தாளே
உருவடி வான வுத…