Posts

Showing posts from January, 2014

மனதின் செயல்முறை விஞ்ஞானம்: வாழ்க்கையில் ஏன் வேற்றுமைகள்?

சென்ற பதிவில் ஒவ்வொரு உயிரினதும் மனிதனதும் வாழ்க்கை நோக்கம் இன்பத்தினை நோக்கியதாகவே இருக்கிறது என்பது பற்றி பார்த்தோம். ஆனால் இன்பத்தினை நோக்கி செய்யப்படும் செயல்கள் அனைத்தும் இன்பத்தினை தருவதில்லை. இலாபம் தரும் என்று தொடங்கிய வியாபாரம் நஷ்டத்தினை தருகிறது. சுவைக்கு என அருந்தும் உணவு நோயினைதருகிறது. இன்பம் என்று எண்ணிய உறவுகள் துன்பத்தினை தருகிறது. இப்படி எண்ணுவது ஒன்றாக இருக்க விளைவு வேறாக இருக்கிறது.
இவை எல்லாம் ஏன் என்று தேடவிரும்பும் ஒருத்தன் கடவுள் மீது பழி போடுகிறான், கிரகதோஷம் என்கிறான், ஜாதகத்தில் கோளாறு என்கிறான், கர்மம் காரணம் என்கிறான், பில்லி சூனியம், செய்வினை காரணம் என்கிறான், செய்த பாவங்கள் காரணம் என்கிறான், இப்படி காரணங்கள் பலவாக இருந்தபோதும் எல்லோருக்கும் பொதுவான விடை எப்போதும் கிடைப்பதில்லை. ஏனெனினில் இவற்றில் நம்பிக்கை இல்லாதவர்களும் இதே துன்பங்களை அடைகின்றனர்.
இதனை தெளிவாக ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர் இப்படிக்கூறுவார். “பிறப்பதற்கு முன் ஏற்பட்டதோ, பிறந்த பின் ஏற்பட்டதோ, கடவுள் கொடுத்ததோ, கர்மவினை அளித்ததோ, கிரகங்கள் விளைவித்ததோ, வேறேதேனால்லுண்டானதோ மனித வாழ்க்கையின் உயர்வ…

மனதின் விளக்கம்

முகநூலில் சித்தர்களது மனம் பற்றிய உண்மைகள் பற்றி கலந்துரையாடலாம் எனக்கேட்டபோது பல நண்பர்கள் விருப்பம் தெரிவித்திருந்தனர். அதன் அடிப்படையில் இந்த பதிவுகள் ஆரம்பிக்க படுகிறது. முதலாவதாக 

ஆக இதில் உள்ள அடிப்படைவிடயங்கள் குருமுகமாக பெற்றதும், மேலும் யாம் கற்று, பயிற்சித்து, சிந்தித்த விடயங்களும், மனம் பற்றிய பௌத்த, தாந்திரீக தத்துவங்களும்   அடங்கியிருக்கும்.
எமது குருபரம்பரையின் அடிப்படை கல்வி மனம் என்பது என்னவென்று அறிதல் என்று எமது குருநாதர் கூறுவார்.  ஏனென்றால் யோகம், ஞானம், பக்தி, கர்மம் எதுவென்றாலும், வழிபாடுகளாக இருக்கட்டும் மனத்தின் வழியாகத்தான் அவை செய்யப்பட வேண்டும்.
சமய நெறிகள், யோக மார்க்கம், தத்துவ நெறிகள் இவையாவும் மனிதனின் மனச் சலனத்தினை கட்டுப்படுத்தி, சித்த விருத்திகளை நிரோதித்து, தகுந்த பண்புகளை உருவாக்கி இறையை அடைவிக்க செய்யும் முறைகளே ஆகும்.
மனது இல்லாமல் மனிதனிற்கு இக வாழ்வும் இல்லை, பர வாழ்வும் இல்லை, இன்பம் துன்பம் இரண்டிற்கும் காரணம் மனமே அன்றி வேறில்லை. ஆக மனதினை அறிந்து பலப்படுத்தி, வசப்படுத்தி செயற்பட தெரிந்தவன் தனது வாழ்க்கையினை தனது இச்சைப்படி வாழ்வை அனுபவிப்பான்…

எது பகுத்தறிவு?

அறிவு என்பதன் வரைவிலக்கணம் என்ன? அனுபவத்தாலோ, கல்வியாலோ பெற்றுக்கொள்ளப்பட்ட தரவுகள், தகவல்கள், திறன்கள் அறிவு எனப்படும். இந்த அறிவினை பெறுவதற்கு எமக்கு தேவையான திறன் “பகுத்தல்” எனக்கொள்ளலாம். இந்த பகுக்கும் தன்மையினைதான் நாம் “அறிவியல் அல்லது விஞ்ஞானம்” என்று கூறுகிறோம்.
இந்த அறிவியல் ரீதியில் ஒரு விடயத்தை அல்லது செயலைப்பற்றிய அறிவினை பெறுவதற்குரிய வரைமுறை “விஞ்ஞான முறை” எனப்படும். இந்த முறையில் முதலில் ஆய்வுகளுக்கு தேவையான தரவுகளை கட்டுப்பாடான முறையில் சேகரித்தல், சேகரித்த தகவல்களின் உண்மை தன்மையினை உறுதிப்படுத்தல், அவற்றை கணித சமன்பாடுகளில் வரைவு படுத்தல், அவற்றிலிருந்து குறித்த செயல், தொகுதியினை புரிந்து கொள்ளுதல், இது கண்களால் பார்த்து தர்க்கத்திற்கு பொருந்தி வரும் விடயங்களை அறிந்து கொள்ளுதல்!  இதுவே நவீன அறிவியல்! அறிவினை பெறுவதற்கான மேற்கத்திய முறை!
எந்த அறிவினை பெறுவதற்கும் மனிதன் தனது மனதினைத்தான் பயன்படுத்த வேண்டும். மனித சமுதாயத்தின் சரித்திரத்தை உற்று நோக்கினால் அறிவினை பெறுவதற்கு மனதினை உபயோகித்து இருவகையான அறிவுகளை பெற்றிருப்பதை அறிந்து கொள்ளலாம். ஒன்று தர்க்க முறை எனப்பட…

புதிய 2014 வருட பிரார்த்தனை

இந்த புதிய 2014 ஆங்கில வருடத்தில் எமது வலைத்தள  நண்பர்கள் அனைவருக்கும் பதினாறு பேறுகளுமான; 
01. கலையாத கல்வியும்
02. குறையாத வயதும்
03. ஓர் கபடு வாராத நட்பும்
04. கன்றாத வளமையும்
05. குன்றாத இளமையும்
06. கழுபிணியிலாத உடலும்
07. சலியாத மனமும்
08. அன்பகலாத மனைவியும்
09. தவறாத சந்தானமும்
10. தாழாத கீர்த்தியும்
11. மாறாத வார்த்தையும்
12. தடைகள் வாராத கொடையும்
13. தொலையாத நிதியமும்
14. கோணாத கோலும் (நாட்டில் நல்லாட்சி)
15. ஒரு துன்பமில்லாத வாழ்வும்
16. துய்யநின் பாதத்தில் அன்பும்
பெற்றிட குருநாதரும் ஆதிசக்தி பராபட்டாரிகையும் அருள் புரியட்டும்.

என்றும் அன்புடன்
சுமனன்