Posts

Showing posts from March, 2012

பிராண சக்தி விழிப்பு இரகசியம்

பிராணாயாமம் என்பது யோகம் பழகுபவர்களிற்கு முக்கியமான ஒரு பயிற்சியாகும். இன்றைய நோக்கில் யோக பழகுங்கள் உடல் ஆரோக்கியம் வரும். பிராணாயாமம் பழகினால் உடல் ஆரோக்கியம் வரும் என்று யோகா நிலையங்கள் போதித்து வருகின்றன. இது உண்மையானாலும் இதை விட ஒரு அரிய விடயம் இதில் பொதிந்துள்ளது என்பதை விளக்குவதே இந்த கட்டுரையின் நோக்கம். 
முதலாவது பிராணன் என்பது மூச்சு அல்ல, மூச்சு பிராணனை உடலிலிருந்து கட்டுப்படுத்த உபயோகிக்கும் ஒருசாதனம் என்பதனை யோகம் பழக விரும்புபவர்கள் மனதில் இருத்த வேண்டும். மனிதன் பஞ்ச கோசங்களால் ஆனவன் என்பது யோக தத்துவம், சித்தர் தத்துவங்கள் படித்தவர்களுக்கு தெரிந்திருக்கும். இந்த பஞ்ச கோசங்களில் அன்னமய கோசம் என்பது எமது ஸ்தூல உடல், மனோமய கோசம் என்பது மனம் இவற்றை இரண்டையும் இணைக்கும், செயற்படுத்தும் சக்திதான் பிராணன், இந்த பிராணன் மேற்குறிப்பிட்ட அன்னமய, மனோமய கோசங்களில் பயணிப்பதற்கு உள்ள அமைப்புகள் தான் உடலில் உள்ள ஆதார சக்கரங்களும், 72000 நாடிகளும், ஆதாரங்கள் என்பன மொலாதாரம, சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞ்சை, ஆறும் சகஸ்ரதளம் என்பது இந்த ஆறு ஆதாரங்களினது சேர்க்கையும…

காயத்ரி சாதனைக் குறிப்புகள் - 01

காயத்ரி மந்திரமானது ரிஷிகளின் மூல மந்திரமாக இருந்து வருகிறது, அதன் அமைப்பு இரு வகைகளில் பயன் படுகிறது, ஒன்று அர்த்தமுள்ள பிரார்த்தனையாக ஆழ்மனதிற்கு ஒரு சுய ஹிப்னாடிச மறை மொழியாக (auto suggesstion) மனதை செம்மைப்படுத்துகிறது, இரண்டாவது அதன் அதிர்வுகள் எல்லா மந்திரங்களது அதிர்வுகளையும் வழங்கி மனிதனில் சூஷ்ம சக்தியினை விழிப்பிற்க கூடியதாக உள்ளது, சாதாரண வைதிகர்கள் பயன்படுத்தும் காயத்ரி முதலாவது வகையினை சார்ந்தது, இரண்டாவது முறை தாந்திரிக அடிப்படையில் தீட்சை மூலம் செயற்படுத்த படுவது. இரண்டாவது முறையில் முறையாக சித்தி பெற்ற குருமுறையாக சாபவிமோசனம் செய்வித்து மந்திர தீட்சை பெறுதல் வேண்டும். இப்படியான தீட்சையினால் பெறப்படும் காயத்ரி மந்திர சித்தியினால் ஒருவன் தனது ஆன்ம பரிணாமத்தினை சாதனையினை பூர்த்தி செய்யும் வழியில் ஞானம் உருவாக்கி அவனை வலி நடாத்தும்.
இத்தகைய அரிய மந்திரத்தின் சக்தி தவறாக பயன்படக்கூடாது என்பதனை கட்டுப்படுத்துவதற்கு உருவாக்கப்பட்ட அமைப்பு பின்னர் அவை வைதிகர்களுக்கு மட்டுமே சொந்தமானது எனும் கருத்தில் அதனுடைய உபயோகம் மட்டுப்படுத்த பட்டது. தார்காலத்தில் அனைவரும் காயத்ரி ஜெபிக்க…

குருவின் அவசியமும் அநாவசியமும்

உண்மையான குரு அகத்திலுள்ள நான் எனும் ஆன்மாவே, மனிதன் தனது உடலினை பார்த்தறிவதற்கு கண்ணாடி எப்படி உபயோகமாகிறதோ அது போல் எமது உண்மையான சொருபத்தினை அறிவதற்கு தன்னை அறிந்த ஒரு புறக்குரு தேவைப்படுகிறார், அவர் ஒரு கருவி மட்டுமே! இதுதான் உனது உண்மையான சொரூபம் என காட்டிவிட்டபின் அந்த அனுபவத்திலிருந்து எமது உண்மையான ஆன்ம சொருபத்தினை அறிவது நான் ஆகிய எமது அகக்குருவின் வேலை, இந்த படிமுறையில் (குருவை மையமாக கொண்ட எந்த ஆன்மவித்தையிலும் தாந்திரீகத்தில்) தன்னை உணர வைக்கும் செயல்முறையான தீட்சை மட்டுமே குருவால் கொடுக்கப்படுகிறது, அதன் பின் மாணவன் தனது சுய முயற்சியாலும், தேவைப்படி ஆன்மாவினை அறியும் நோக்கத்தில் சலனமுறும் போதும் அவரவர் பக்குவத்திற்கமைய அகக்குருவும், புறக்குருவும் வழிகாட்டுகின்றனர். 
இந்திய ஆன்ம மரபில் பொதுவாக சித்த குருக்களும், தாந்திரீக குருக்களும் மாணவன் பக்குவமடைந்த பின் தம்முடைய பாதையினை சுயமாக தேர்ந்தெடுத்து தமது சாதனையினை தொடர்வதற்கு அனுமதிக்கின்றனர். சமூக அலகில் அது நிறுவனமயப்படுத்தப்படும் போதும், ஞானத்தால், சாதனையால் பெறும் சக்திகளை, சித்திகளை தமது அகங்காரத்தினால் துஷ்பிரயோகம் செ…