Posts

Showing posts from September, 2011

ஞானகுரு 11:வேத மகா வாக்கியங்கள்

Image
ஸ்லோகம் - 02

வாக்கியம் 08: வேத மகா வாக்கியங்களை கேட்டறியுங்கள் அஹம் பிரம்ஹாஸ்மி, ஸோஹம், தத்துவமசி போன்ற வேத உபதேசங்கள் சுருக்கமான சூத்திர வடிவில் அனைத்து இறை உண்மைகளையும் தம்முள்ளே கொண்டுள்ளன. இவற்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்துகொள்ளலாம். பிரணவம் ஆகிய ஒரெழுத்தை அனுபவ வித்துவானகளிடமிருந்து அறிந்தது போல் இந்த மகாவாக்கியங்களையும் விசாரித்து அறிந்துகொள்ளுங்கள். இவற்றின் சுருக்கமான பொருள் "நான் பிரம்மமாயிருக்கிறேன், அதுவே நான்" என்பதாகும். எனினும் இதனை குருவின் மூலம் அறிவதே சாலச்சிறந்ததாகும்.


அடுத்த பதிவில் இரண்டாவது ஸ்லோகத்திற்கான உட்பொருள், பிரம்ம வித்யா விளக்கம், உபதேச விளக்கம் என்பன பதியப்படும்.