Posts

Showing posts from August, 2011

ஞானகுரு 10: பிரணவ மந்திரத்தின் பயன்

Image
ஸ்லோகம் - 02
வாக்கியம் 07: பிரம்மனின் ஒரேழுத்தைப்பற்றி விசாரித்தறியுங்கள் எல்லாவற்றுடனும் எல்லாமாயிருப்பது இறைசக்தி, இதனை எப்படி அறிவது? உணர்வது? அதற்கு பெயர் வேண்டும், அந்தப்பெயர்தான் பிரணவ மந்திரமாகிய "ஓம்" என்பது. இந்த ஒரு எழுத்தில் அனைத்து மந்திரங்களும் தத்துவங்களும் அடங்கியிருப்பதாக வேத உப நிஷதங்கள் கூறுகின்றன. எந்த மந்திரமும் பிரணவம் இல்லாது உயிர்பெறாது. உலகத்திற்கு விதையாக இருப்பதே இந்த பிரணவ மந்திரம் தான். இந்த மந்திரத்தினை தனியே உச்சரித்தே முக்தி பெறலாம். இதை உணர்ந்த பெரியவர்களிடம் பெறுவதால் எமக்கும் சித்தியாகும், எப்போதும் அதனது உட்பொருளையும், அதனது பயனையும் அறிந்து செய்யும் சாதனையே பலன் தரும். அதன் பொருளை உணர்ந்து அனுபவித்தவர்களே அதனை உணர்த்த முடியும். எனவே முதல் வாக்கியத்தில் கூறிய அனுபவ வித்துவாங்களிடன் இந்த ஒரெழுத்து மந்திரத்தினைக் கேட்டறிந்து சாதனை செய்யுங்கள்.

ஞானகுரு 09: ஏன் பெரியவர்கள் காலில் விழுந்து வணங்க வேண்டும்?

Image
ஸ்லோகம் - 02

வாக்கியம் 06: அவர்களின் பாதங்களை சேவியுங்கள் ஒவ்வொரு மனிதனதும் பாதம் வழியாகவும், கண்கள் வழியாகவும் அவர்களது ஜீவகாந்த சக்தி வெளிப்படுகிறது என்று முன்பு கண்டோம். உண்மையினை அனுபவித்துக்கொண்டிருக்கும் வித்துவாங்களது கால்கள் வழியாக எப்போதும் இறை காந்த சக்தி வெளிப்பட்டுக்கொண்டிருக்கும். அவர்களை காணும்போதும், அவர்களது பாதங்களை சேவிக்கும்போதும் அப்புனித கிரகணங்கள் நம் காந்தசக்தியுடன் கலப்படைந்து நம் மனம், உடல், சித்தம் என்பவற்றில் புகுந்து எம்மில் அப்பக்குவத்தினை உண்டாக்குகிரது. குருவின் இந்த இறைகாந்த சக்தியினை தம்மில் ஏற்பதையே தீட்சை என்று கூறுகிறோம். தீட்சை என்பதன் உண்மையான பொருளும் இதுதான். இந்த ஒரு விதியினை சிந்திதறிவதன் மூலம் எமது கோயில் வழிபாட்டு முறையிலிருந்து, ஆண் பெண் உறவு, திருமணம், மந்திரசாதனை என்ற அனைத்தினது அடிப்படையினையும் விளங்கிக்கொள்ளலாம். அதனால் உண்மையினை அனுபவித்த பெரியார்களின் காந்தத்தினை பெறுவதன் மூலம் தம்மை பலப்படுத்திக்கொள்ளலாம். இந்த தெய்வகாந்த சக்தியினை பெறுவதற்காகவே கோயில்கள் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் தற்போதைய கோயில்களில் இந்த தன்மை இல்லை என்பது வேதனைகுரிய …

ஞானகுரு 08: இறை உண்மைகளை அறிய யாரை அணுகவேண்டும்?

Image
ஸ்லோகம் - 02
வாக்கியம் 05: உண்மையைஅறிந்தவித்துவான்அணுகுங்கள் வித்துவான்என்பதற்குபடித்தவன்என்றுபொருள், ஆயினும்படித்தவர்கள்எல்லோரும்உண்மையினைஅறிந்தவர்களாக, உணர்ந்தவர்களாகஇருப்பார்கள்என்றுசொல்லமுடியாது. எழுத்தறிவேஇல்லாதபலர்இறைவனருளைபெற்றிருக்கிறார்கள். படித்துதெரிந்துகொள்வதுவேறு, அனுபவித்துதெரிந்துகொள்வதுவேறு. பெரும்பாலும்கல்வியறிவுஎன்பதுஉலகஅறிவினைபெறுவதற்கானசாதனமேஅன்றிஉண்மைத்தத்துவத்தினைஅனுபவிப்பதற்கானசாதனம்அன்று. இறைமானவர்கள்வெறும்பட்டதாரிகளிடம்பெறவேண்டியதுஎதுவுமில்லை. உண்மையினைஅனுபவபூர்வமாகஅறிந்தவர்கள்தான்அவர்களுக்குஉதவமுடியும். இந்தவாக்கியத்தின்பொருள்உண்மையினைஅனுபவித்துஅறிந்தவித்துவாங்களினையேஇறைமானவர்கள்உபதேசத்திற்காகவும், ஐயம்தெளிவதற்காகவும்அணுகவேண்டும்என்பதாகும். 

ஆன்மீகத்தில் முன்னேற, இறை சாதனையில் சித்திபெற விரும்புபவர்கள் படிக்கவேண்டிய பதிவுத்தொடர்

வாசிப்பவர்களது வசதிக்காக இந்தப்பக்கத்தில் ஞானகுரு பதிவுகள் தொகுக்கப்பட்டுள்ளன. 
இந்தப்பதிவுகளில் ஏன் பலர் ஆன்மீகம் என்று சொல்லிக்கொண்டு எதுவித முன்னேற்றமும் அடைவதில்லை, சோம்பறிகளாக உலகவாழ்க்கையினையும் அனுபவிக்காமல், இறைவனையும் அடையாமல் தனது வாழ்க்கையினையும் குழப்பி, எதுவித பலனும் இல்லாமல் வாழ்ந்து மடிகிறார்கள். வாழ்க்கையின் உண்மையான நோக்கம் என்ன? எப்படி இறை சாதனையினை தொடங்கவேண்டும்? இல்லறத்திலிருந்துகொண்டு ஆன்மீகத்திலும் உயர்ந்த நிலையினை அடைவது எப்படி? என்ற பல விளக்கங்க்கள் பதியப்படுகின்றன. படித்து இன்புறுக!
காயத்ரி சித்தர் அருளிய ஞானகுருஞானகுரு - 01: இறை சாதனையில் சித்திபெற விரும்புபவர்கள் நாள்தோறும் செய்யவேண்டியவைஞான குரு - 02: ஆன்மீகத்தில் முன்னேற எவற்றை கடைப்பிடிக்க வேண்டும்?ஞானகுரு - 03: ஆன்மீகப் பாதையில் முன்னேற இல்லறத்திலிருந்து ஓடவேண்டுமா?ஞானகுரு - 04: இறைவன் அருளை பெறவிரும்புபவர்கள் செய்யவேண்டியது?ஞானகுரு - 05: நல்லவர்களது நட்பு எப்படி எம்மை உயர்த்தும்?ஞானகுரு - 06: இறவனை அடையவும் மனம் வசப்படவும் இருக்கவேண்டிய பண்புகள்ஞானகுரு - 07: கர்மங்களை உறுதிகொண்டு விலக்குவதால் ஏற்படும் …

ஞானகுரு - 07: கர்மங்களை உறுதிகொண்டு விலக்குவதால் ஏற்படும் பலன் என்ன?

Image
ஸ்லோகம் - 02

வாக்கியம் 04: கர்மங்களை உறுதிகொண்டு விலக்குங்கள்
பலர் தமக்கு தேவையில்லாத காரியங்கள் பலவற்றை எப்போதும் செய்தவண்ணம் இருப்பர். இதனை ஏன் செய்யவேண்டும்? இதன் விளைவுகள் என்ன? என்பதனை சிந்திக்காமல் காரியங்களை செய்வதன் மூலம் கர்மங்கள் அதிகரிக்கின்றது. காரியங்கள் அனைத்தும் பலன் தரக்கூடியவை, அதாவது எண்ணும் ஒரு எண்ணம் கூட மனதளவிலாவது பலனைத்தரும். அதை செய்யலாம் இதை செய்யலாம் என்ற எண்ணம் எழும்போது அதனது தேவை, விளைவு அறிந்து உறுதியுடன் ஆராய்ந்து அதனை செய்யலாமா இல்லையா என்பதனை முடிவெடுக்க வேண்டும். கர்மங்களை விலக்கவேண்டும் என்றவுடன் எதையும் செய்யாமல் இருக்க வேண்டும் என்று பொருள் அல்ல. எனெனில் கர்மத்தின் அமைப்பினை விளங்கியவர்களுக்கு தெரியும் கர்மம் என்பது செய்யப்பட்டது, செய்யப்படுவது, செய்யப்போவது என்று முன்று வகைப்படும். இதனையே சஞ்சிதம், பிரார்த்தம், ஆகாமியம் என்பர். மனிதனாக பிறந்தவர்கள் கர்மங்களை செய்யாமல் இருக்கமுடியாது, இருக்கவும் கூடாது.  கர்மங்களை செய்தே ஆகவேண்டும். இறைவழியில் சென்று பிறவாபேரின்பம் பெற விரும்புபவர்கள் புதிதாக கர்மம் சேராமல் இருக்க பழகிக்கொள்ள வேண்டும். இப்படி காரியங…

ஞானகுரு - 06: இறைவனை அடையவும் மனம் வசப்படவும் இருக்கவேண்டிய பண்புகள்

Image
ஸ்லோகம் - 02

வாக்கியம் 02: இறைவனிடத்தில் உறுதியான பக்தி கொண்டிருங்கள் சித்தவித்தையின் படி பக்தி என்பதன் இலக்கணம் சிவவாக்கியர் கூறியபடி இருத்தல் வேண்டும், "நட்டகல்லைத் தெய்வம் என்று நாலு புஷ்பம் சாத்தியே சுத்தி வந்து மோன மோனென்று சொல்லும் மந்திரம் ஏதடா? நட்ட கல்லு பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்", பக்தியென்ற பெயரில் வீணாக செலவுசெய்தல், ஆடம்பர விழாக்கள் எடுத்தல் என்பன எதுவும் உண்மைபக்தியாகாது. எமது உள்ளத்திலிருக்கும் இறைவனை அறிந்து உணர்ந்து, செய்யும் செயல்கள் யாவற்றையும் அவன் ஆணைக்கு ஏற்ப செய்துவருதலே உண்மை பக்தி, அதாவது தம்மில் இறைவனைக்கண்டு பின்பு இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்திலும் இறைவனைக்காணலே உண்மையான பக்தி. இப்படியான பக்தியினை உறுதியாக கொள்ளுங்கள் என்கிறார்.
வாக்கியம் 03: அமைதி முதலான நற்பண்புகளை உலகில் சம்பாதியுங்கள் அமைதி முதலான நற்பண்புகள் எவை? சமம், தமம், விடல், சகித்தல், சமாதானம், சிரத்தை ஆகிய ஆறு பண்புகளே இறை மாணவர்கள் கைக்கொள்ள வேண்டிய பண்புகள். சமம்: மனதில் கலக்கமும் சஞ்சலமும் உண்டாகாமல் எதிலும் அமைதியாக இருத்தல் சமம் எனப்படும்.தமம்: மனம் போனபோக்கில் செல்லவிடாமல் வெளியின்…

ஞானகுரு - 05: நல்லவர்களது நட்பு எப்படி எம்மை உயர்த்தும்?

Image
ஸ்லோகம் - 02
நல்லறிவால் நிற்க விரும்புபவர்களே, எப்போதும் நல்லோர்களின் கூட்டுறவையே கொள்ளுங்கள்இறைவனிடத்தில உறுதியான பக்தி கொண்டிருங்கள்அமைதி முதலான நற்பண்புகளை உலகில் சம்பாதியுங்கள்கர்மங்களை உறுதிகொண்டு விலக்குங்கள்உண்மையை அனுபவமாக உணர்ந்த வித்துவான்களை அணுகி,அவர்களின் பாதங்களை சேவித்து, அவர்களிடம்பிரம்மனின் ஒரேழுத்தைப்பற்றி விசாரித்தறிந்துவேதங்கள் கூறும் மகா வாக்கியங்களைக் கேட்டறியுங்கள்

வாக்கியம் 01: எப்போதும் நல்லோர்களின் கூட்டுறவையே கொள்ளுங்கள் பிரபஞ்சத்தில் அனைத்துப் பொருட்களும் ஒருவித காந்த கிரகணங்களை தம்மை சூழ வெளிவிடுகின்றன. இவற்றை ஆங்கிலத்தில் Aura என்பார்கள். இந்த ஜீவகாந்தமண்டலங்கள் ஒவ்வொரு பொருட்களுக்கும் தனித்துவமானது, மனிதனது காந்த மண்டலம் அவனது மனம், சித்தத்திலுள்ள எண்ணங்களுக்கு ஏற்ப அந்த எண்ணக்கலப்புடன் காணப்படும். ஜடப்பொருட்கள் இக்காந்த அலைகளை ஏற்று பின்னர் வெளிப்படுத்தியவண்ணம் இருக்கும். இந்த காந்த மண்டலங்கள் சாதாரண பௌதீகவியல் விதிகளுக்கமையவே செயற்படுகின்றன. எப்படியெனின் வலிமையான அடர்த்தி கூடிய காந்தமண்டலத்திலிருந்து வலிமை குறைந்த அடர்த்தியற்ற காந்தமண்டலத்திற்கு இந்த ஜீவகா…

சித்த சாதனையில் சித்தியடைய சாதகன் கொண்டிருக்க வேண்டிய‌ பக்குவங்கள் - 01

Image
நல்லறிவால்நிற்கவிரும்புபவர்களே!  1.நாள்தோறும்வேதங்களைபடியுங்கள்,   2.அதைக்கொண்டுஇறைவனைவழிபடுங்கள்,  3.அதில்சொல்லியபடிகர்மங்ககளைசெய்யுங்கள்,  4.பலனைநாடிகர்மங்களைசெய்வதைவிலக்குங்கள்,  5.பாவங்களைஅகற்றுங்கள்,  6.உலகஇன்பங்களைஅனுபவிப்பதில்குற்றம்நேராதபடிபார்த்துக்கொள்ளுங்கள்.  7.எப்போதும்தன்னையறியும்முயற்சியைசெய்யுங்கள்,