குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, May 25, 2019

தலைப்பு இல்லை

இது அரசியல் பதிவு அல்ல, ஒரு தந்திரோபாயக் கணிப்பு!
Disclaimer: I am not interested in politics, however I passionate to study about strategy and how winning the Game is happening. so read without prejudice. 
நடந்து முடிந்த இந்தியத் தேர்தலில் பாஜக எதிர்கட்சி என்ற ஒன்று இல்லாத அளவிற்கு துடைத்தெறிந்திருக்கிறது. ஆனால் தமிழகத்தில் திமுக பெற்ற வெற்றி பெரிதாகக் கொண்டாடப்படுகிறது. 
எனது கணிப்பு சரியாக இருந்தால், பாஜக கலைஞர், ஜெயலலிதா இருவரின் அரசியல் சாணக்கியத்தைக் கணித்து அவர்கள் உருவாக்கிய அத்திவாரத்தைக் கரைப்பதற்கு தேவையான எல்லா வேலைத்திட்டங்களையும் கச்சிதமாக செய்து வருகிறது என்பது தான் உண்மை! 
கலைஞரும் திராவிடக் கட்சிகளும் உருவாக்கிய மொழி எதிர்ப்பும், நாத்திக வாதமும் சமூக நலனுக்கு என்ற கோஷத்திற்கு மேல் எப்போதும் இந்தியா என்ற தேசத்தின் மத்திய அரசுகட்சிகள் தமிழ் நாட்டிற்குள் தம்மை மீறி உள்ளே வரவிடமுடியாத காப்பரண்களாகவே உருவாகியுள்ளன! மத்திய கட்சி தமிழ் நாட்டுடன் ஒன்ற வேண்டுமானால் தமிழர்களுக்கு இந்தி தெரிய வேண்டும். மொழி தெரியாவிட்டாலும் நீயும் சிவனைக் கும்பிடுகிறாய், நானும் சிவனைக் கும்பிடுகிறேன் என்று கூறிவிட்டு ஒன்றுபட்டு விடுவார்கள். இந்த இரண்டு வேர்களும் வெட்டப்பட்டது மிக நுட்பமான தந்திரோபாயம், இது கலைஞரின் காலத்திற்கு உகந்த ஒரு தந்திரோயாபமாக இருந்தாலும் பாஜகாவின் திட்டமிட்ட, நீண்ட கால visionary leadership இற்கு முன்னால் செல்லாக்காசாகிக் கொண்டு இருக்கிறது என்பது தான் உண்மை! 
பாஜக வின் game plan சென்ற முறை 37 சீட்டும் அதிமுக விற்கு கொடுத்து அவர்களை நாடாளுமன்றத்தில் கையாலாகாதவராக்கி, மக்களுக்கு வெறுப்பை உருவாக்கி  இந்தமுறை அவர்களுக்கு மாற்று என மக்களால் நினைக்கப்படும் தெரிவு செய்யப்பட்ட 37 திமுகவை கையாலாகாதவர்களாக்கி, இந்த இரண்டு கட்சிகளும் மக்கள் தாமாக விரக்தியுற்று வெறுக்கும் வரை எந்த Charismatic leader இனையும் இறக்கி தனது ஆற்றலை வீணாக்காது, இடையில் நமக்கும் இவருக்கும் தொடர்பே இல்லை என்கிற மாதிரி சட்ட மன்றத்தில் ரஜனியை இறக்கி field ready ஆக இருக்கிறதா என்று நாடி பார்க்கும், தமிழ் நாட்டு மக்களுக்கு திராவிட மாயை அகலத் தொடங்குகிறது என்று தெரிந்த பின்னர் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தாமரையை மலர வைப்பார்கள்! 
அறுபது ஆண்டுகள் ஒழுக்கமுள்ள இயக்கமாக ஒருதேசம் என்ற கோட்பாட்டில் மோடி, அமித் ஷா, யோகி ஆதித்ய நாத் என Serial ஆக தலைவர்களை உருவாக்கியுள்ளார்கள்! இப்போது உள்ள நிலவரத்தில் தமிழ் நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் பாஜக வின் ஆசி இல்லாமல் மக்களின் மனதை வெல்லுவதற்கு முடியாது. இதையெல்லாம் கணித்து தூர நோக்கில் வியூகம் அமைக்கும் ஆற்றலுள்ள கலைஞர் போன்ற தலைவர்கள் இப்போது எவருமில்லை!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...