Posts

Showing posts from May, 2015

சோம்பலின் காரணம் என்ன ? - சில யோக, சித்த மருத்துவ கருத்துக்கள்

நண்பர் ஜெய்கணேஷ் அவர்கள் கீழ்வரும் கேள்விகளின் எனது புரிதலை சித்த மருத்துவம் சார்ந்து பதியும் படி கேட்டிருந்தார். விடைகள் வருமாறு;

மருத்துவர் Thava Sumanenthiran.. சோம்பலைப் பற்றிய சித்த மருத்துவத்தின் கருத்தென்ன..? இது நோயா..? இதற்கு மருந்துகள் எதுவும்..?1)சோம்பல் என்பது உண்மையில் என்ன..?a மூளையின் தூக்கமா.. அல்லது
b மனதின் தூக்கமா.. அல்லது
c உடலின் மறுப்பா..? இல்லை
d சுவாசக் கோளாறு போன்ற உடல் உபாதை நோயா..?
e பேய், பிசாசு, பிரேத துர் தேவதைகளின் தாக்குதலா..?
f கிரகங்களின் கோளாறா..?
g விட்டேத்தி துறவு மனநிலையா..? 2) சோம்பல் ஒருவனைத் தாக்குவது எப்போதெல்லாம்..? 3) சோம்பல் வருவது எதற்காக..? ஏன்..? உங்களுடைய ஒன்று தொடக்கம் மூன்று வரையிலான கேள்விகளிற்கு பதில் வருமாறு; சோம்பல் என்பது உடலிலும், மனதிலும் ஏற்படும் பிராண சக்தி குறைபாடு, பிராணன் மூச்சினால் கட்டுப்படுத்தப்படுகிறது. உடலின் பிராணனின் இழப்பு நோய்கள், உணவு முறை, இருக்கும் சூழல் என்பவற்றால் ஏற்படலாம். மனதின் பிராண சக்தி இழப்பு அதீத சிந்தனை, கவலை, கோபம் போன்ற எந்த நல்ல கெட்ட உணர்ச்சிகளினதும் அதீத நிலையால் ஏற்படலாம். உடல், மனம், பிராணன் ஆகி…

பெருங்குழப்ப விதியும் அதன் பயன்பாடும் - CHAOS THEORY AND ITS APPLICATION

(chaos – பெருங்குழப்பம், nonlinear – அநேர்கோடு)
குழப்பம் என்பது பலருக்கும் பிரச்சனையான ஒன்று. இதைப்பற்றிய விஞ்ஞான புரிதல் chaos theory என்று அழைக்கப்படுகிறது. எனது சூழலியல் ஆய்வில் இந்த விதியை பயன்படுத்தி இருந்தேன் என்று கூறியிருந்தேன், இதன் அடிப்படையினை தமிழ் வாசகர்களுக்காக தமிழில் தர முயற்சிக்கிறேன். இது குழப்பத்தினை புரிந்து கொள்ள உதவும் என்று நினைக்கிறேன். உங்கள் கருத்துக்களை பதியுங்கள்.
chaos என்பதனை குழப்ப நிலை என்று வரையறை செய்யலாம். இந்த குழப்ப நிலை இரண்டு தளங்களில் நடைபெறமுடியும் ஒன்று காலம் மற்றது இடம். இதனை கொண்டு குழப்ப நிலையில் காலம் சார்ந்த குழப்பம் (''temporal chaos"), இடம் சார்ந்த குழப்பம் ("spatial chaos.")என்று வரையறை செய்யலாம். எப்போதும் ஒரு குழப்பம் நடைபெறுவதற்கு ஒரு ஒழுங்கு இருக்க வேண்டும் அல்லவா? ஆகவே குழப்பம் நிகழ்வதற்கான நிபந்தனைகள் மூன்றினை குறித்த தொகுதி கொண்டிருக்க வேண்டும்.
அந்த தொகுதி Dynamical system: தொகுதி இயங்கும் தன்மை உடையதாய் இருத்தல் வேண்டும்Deterministic: குறித்த தொகுதியின் எல்லைகள் வரையறுக்க கூடியதாக இருக்க வேண்டும், அதாவது…

நவீன சூழல் காயா கோட்பாடு/விதியும் (Gaia Theory) பண்டைய இந்திய, சீன தத்துவ மரபும்

இந்த கோட்பாடு அல்லது விதி என்பது பூமியை ஒரு கல், மண், நீர், வாயு  ஆகாயமாகவோ என்ற பௌதீக தன்மையுடையதாக மட்டுமாகவோ அல்லது உயிர்கள் மட்டும் உள்ள கோளமாகவோ பார்க்காமல் இரண்டும் இணைந்த நிலையில் உள்ள ஒரு உயிரினமாக காண்பதற்குரிய ஒரு கோட்பாடாகும்.
இதன்படி ஒரு உயிரினத்தின் அடிப்படை அலகான உயிர்க்கலம் (cell) போன்று முழு பூமியும் ஒரு உயிர் கலமாக (living cell) செயற்படுகிறது,  இது தற்போது ஏற்றுக்கொள்ளப்பட ஒரு விஞ்ஞான கோட்பாடாக விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது.
இதில் வியப்பு என்னவென்றால் தமிழ் சித்தர்களின் அண்டத்தில் உள்ளதெல்லாம் பிணடத்தில் உண்டு, இந்திய தத்துவம் மரபின் "யதா பிண்டே ததா பிரம்மாண்டே", சீன தாவோ தத்துவத்தின் "சுவர்க்கமும் பூமியியும்" போன்ற தத்துத்தின் சுருக்கிய வடிவம் என்பதே. மேற்குறித்த தத்துவங்கள் அனைத்தும் பூமியினை கடந்து பிரபஞ்ச வெளியில் மனிதனும் தொடர்பும் எப்படி இருக்கிறது என்பதனை நிறுவும்போது, காயா கோட்பாடும் பூமியும் மனிதனும் என்ற நிலையில் உள்ளது மேலும் ஆய்வுக்குரியது.

மேலும் இந்த கோட்பாடு மெய்யியலுக்கும் பௌதீக விஞ்ஞானத்திற்கும் உள்ள ஒரு இணைப்பு பாலமாகும்.

நோக்கமும் தெளிவும்: ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை கற்கைநெறி வகுப்புகள்

Image
நாம் அறிவித்த ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை  கற்கைநெறி வகுப்புகள் வெகு வரவேற்பு பெற்றுள்ளது என்பதனை பதிவு செய்த அன்பர்களின் எண்ணிக்கை காட்டுகிறது.  
இந்த வேளையில் இதில் இணைந்து கொள்பவர்களும், விமர்சிப்பவர்களும், எம்மீது கருத்து தாக்குதல் நடாத்துபவர்களுக்கும் ஓர் சில தெளிவுகளையும், நோக்கங்களையும் தருவது எமது கடமையாகிறது.  கடந்த பலவருடங்களாக நாம் ஆத்ம, யோக, ஞான கருத்துக்களை  எழுதி வருவதன் நோக்கம் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற சித்தர்கள் வாக்குப்படி நாம் பெற்ற அறிவினை பகிர்ந்து கொள்வது என்ற ஒரு நோக்கம் மட்டுமே. இதுதவிர இதனை வைத்து எப்படி பணம் சம்பாதிக்கலாம், கூட்டம் சேர்க்கலாம் என்பது இல்லை. ஏனெனில் இதற்கான தேவை இல்லாதபடி குருநாதரும் தேவியும் எம்மை நல்ல நிலையில் வைத்துள்ளார்கள். இந்த அறிவு பகிர்வில் எதுவித எதிர்பார்ப்பும் இருக்க கூடாது என்பது எமது குருநாதரின் விருப்பம், எனினும் ஒரு சில நிலைகளில் யாராவது கருத்து தெரிவிக்க மாட்டார்களா என எண்ணி கேட்டிருக்கிறோம். எனினும் அந்த எண்ணங்களும் குருநாதரால் நீக்கப்படிருக்கிறது. காயத்ரி பற்றி அதிகம் எழுதுவதை பல சாராரும் பலவிதமாக விமர்சித்திருக்க…

ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை கற்கைநெறி வகுப்புகள்

Image
இன்று சித்ரா பௌர்ணமி நன்னாளில் ஆர்வமுள்ள சாதகர்களுக்கு காயத்ரி உபாசனை சாதனை பாடங்களை கற்பிப்பதற்கு குருமண்டலத்தின்  உத்தரவு கிடைத்துள்ளது.

இதனை நடைமுறைப்படுத்துவதில் ஆளணி பற்றாக்குறை (நாம் தனியொருவராகவே இவை அனைத்தையும் செய்ய வேண்டி) இருப்பதால் முதலில் பதிவு செய்யும் 50 அன்பர்கள் மட்டுமே இந்த 2015 ஆண்டில் சேர்த்துக்கொள்ளப்படுவர். அதன் பின்னர் இதில் கற்கும் மாணவர்களது நேர பங்களிப்புடன் பலரை இணைத்துக்கொள்ளப்படும்.  
இதன்படி ஆர்வமும், சிரத்தையும், குருபக்தியும் உள்ள எவரும் இதனை கற்றுக்கொள்ள முடியும். உங்கள் மனத்தடையை தவிர வேறு எந்த தடைகளும் இல்லை! 
இந்த பாடங்கள் ரிஷி பரம்பரையினரின் பிரம்ம ஞான உபதேசங்கள் எளிய முறையில் அனுபவ பயிற்சிகளாகவும், எளிமையான மொழியில் விளக்கங்களாகவும் தரப்படும். 
இதற்கு உங்களுக்கு விருப்பம் இருந்தால் முதலாவதாக கீழ்வரும் விண்ணப்ப படிவத்தினை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவம்

இது தொடர்பான அனைத்து கேள்விகள், தொடர்புகள்  கீழ்வரும் மின்னஞ்சலில் மாத்திரம் தொடர்பு கொள்ளவும்: sumanangs@gmail.com
இதன்பின்னர் எமது உதவி குழுவிடமிருந்து உங்களுக்கு வசதியான ஒரே நேரத்தி…