குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, May 11, 2019

ஸ்ரீ காயத்ரி சித்தரின் வழிகாட்டல் - 03

சீதாஎலிய ஆலயத்திலிருந்து அனைவருமாக குடும்பத்துடன் காயத்ரி கோவிலிற்கு சென்றோம். மலையடிவாரத்தில் வழமையான எமது கோயில்கள் போன்ற அமைப்பு இல்லாமல் வட இந்திய பாணியில் கட்டப்பட்டிருந்தது. நாம் செல்லும் நேரம் கோயில் மூடிவிட்டார்கள். நானும் ஆவலுடன் சாமி எங்கே இருக்கிறார் என்பதைப் பார்க்க கோயிலின் ஒரு பக்கமாக பச்சை மூங்கில் மரங்களுக்கு அடியில் ஒரு நாற்காலியில் வெள்ளை உடை உடுத்தி கால்களை நீட்டி ஒரு cushion ball இற்கு மேல் வைத்துக்கொண்டு கீழே இருக்கும் மரக்கறித்தோட்டத்தை பார்த்துக்கொண்டு இருக்கிறார்! எனக்கோ ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவருக்கு அருகில் கோயில் பூசகர் கீழே அமர்ந்திருக்கிறார். 

அவர் மெல்ல முகத்தைத் திருப்பினால் ஆம் அதுவரை படத்தில் பார்த்த சுவாமிகள்தான்! மெதுவாக எழும்பி எங்கிருந்து வாரிங்கப்பா? என்றார் அதற்கு நான் மாத்தளையிலிருந்து என்று பதில் சொல்ல வாங்கப்பா என்று தனது இருப்பிடம் நோக்கி நடக்கத்தொடங்கினார். 

உள்ளே சென்று அலுவலகத்திற்குள் சென்று கைகளில் படங்கள், விபூதி எடுத்துக்கொண்டு வந்து தனது நாற்காலிக்கு அருகில் இருக்கும் சிறிய மேசையில் வைத்துக்கொண்டு அனைவரையும் வரச்சொல்லி விபூதி பூசிவிட்டார். விபூதி பூசிவிடும் போது ஒவ்வொருவருக்கும் மேசையிலிருந்து படங்கள் கொடுத்தார். 

பிறகு மாத்தளையில் இருப்பதால் ஒவ்வொரு பௌர்ணமிக்கும் வந்தால் ஸ்ரீ இலங்காதீஸ்வரரிற்கு அபிஷேகமும், யாகமும் நடக்கும் நீங்களே உங்கள் கைகளால் அபிஷேகம் செய்து யாகத்தில் ஆகுதி போடலாம் என்று கூறினார்.  அனைவரும் புறப்படும்போது என்னைப் பார்த்து "தம்பி, பௌர்ணமிக்கு கட்டாயம் வந்திருங்கப்பா" என்று கூறினார். 

என்னை சுவாமிகள் அதற்கு முன்னர் பார்த்ததில்லை. அவர் கடிதம் அனுப்பி நான் காயத்ரி சாதனை செய்துவருவது பற்றி அவருடன் உரையாடவில்லை. அதற்கு முன்னர் இரண்டு தடவை அதுவும் ஒரு வருடத்திற்கு முன்னர் தொலைபேசியில் உரையாடியிருப்பேன். அப்படியிருந்தாலும்  நான் தான் அது என்று அடையாளம் கண்டிருப்பாரோ என்று ஒரு ஐயம், ஆனால் நான் ஒன்றும் சொல்லவில்லை "சரி சுவாமி" என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன். 

வாகனத்தில் வந்து அமர்ந்து விட்டு எல்லோருக்கும் என்ன கொடுத்திருக்கிறார் என்று பார்த்தால் ஆச்சரியம் மற்றவர்கள் அனைவருக்கும் காயத்ரி தேவியின் படமும் மந்திரமும் உள்ள படங்கள் கொடுத்திருக்க எனக்கு மட்டும் அலுமீனியத்தில் அச்சிடப்பட்ட தனது படத்தை தந்திருக்கிறார். இது எனக்கு மிகுந்த ஆச்சரியமும் மகிழ்ச்சியும்!

சுவாமி எனக்குத்தன் கைகளால் தந்த முதல் படம்


உள்ளூர எனது சாதனை சுவாமிகளுக்குத் தெரிந்திருக்கிறது, என்று மகிழ்ச்சி! எனினும் கடைசியாக அவர் கூறிய "பௌர்ணமிக்கு வந்திருங்க, அப்பா" என்ற வார்த்தை எனது காதில் ஒலித்துக்கொண்டு இருந்தது. 

வீடு வந்து சேர்ந்தது அவர் தந்த படத்தை பிரேம் போட்டு அகத்தியர் படத்துடன் எனது சாமித்தட்டில் வைத்துக்கொண்டு எனது சாதனையைத் தொடராலானேன். 

சிறிது நாட்களில் பௌர்ணமி வர இருக்கிறது. இலங்கையைப் பொறுத்தவரை பௌர்ணமி புனித நாள், விடுமுறை! எனினும் படிக்கும் மாணவனாகிய எனக்கு கட்டாயம் வகுப்பு இருக்கும். எனினும் நான் அம்மாவிடம் உரிமையாக சுவாமி பௌர்ணமிக்கு கட்டாயம் வரவேண்டும் என்று சொல்லி இருக்கிறார் அதனால் நான் போகப் போகிறேன் என்று உறுதியாகச் சொல்லிவிட்டேன். 

எனது நண்பரின் மாமா வீடு நுவரெலியாவில் இருக்கிறது. அவர்கள் வீட்டிற்கு நானும் எனது நண்பனும் சென்று முதல் நாள் தங்கி பின்னர் அதிகாலையில் இலங்காதீஸ்வரரிற்கு அபிஷேகம் செய்து பௌர்ணமி யக்ஞத்தில் கலந்து கொள்வதாக உத்தேசம்!

பிடிவாதக்காரனாகிய நான் திட்டமிட்ட படியே நண்பனையும் கூட்டிக்கொண்டு பௌர்ணமிக்கு முதல் நாள் நுவரெலியா சென்று அடுத்த நாள் பூஜை முடிந்தது கிட்டத்தட்ட ஆயிரம் நபர்கள் சுவாமியிடம் ஆசிக்காக வரிசையில் நிற்பார்கள். அவர் காயத்ரி கோயிலில் தனது படத்திற்கு கீழே இருந்து எல்லோரது நெற்றியிலும் விபூதி பூசி ஆசி வழங்கிக்கொண்டு இருப்பார். நானும் நண்பனும் வரிசையில் நின்று கொண்டோம். ஒவ்வொருவராக நகர நகர எனது முறையும் வந்தது, எனக்கு நெற்றியில் விபூதி பூசிவிட்டு என்னைக் கூர்ந்து பார்த்து விட்டு தனது இடப்பக்கத்தில் நிற்கும் படி கூறினார். நானும் நின்று கொண்டிருந்தேன். ஒவ்வொருவராக ஆசி வாங்கி முடிந்தபின்னர் எனது கையப்பிடித்து வாங்கப்பா என்று கோயிலில் இருந்து ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றார். சாமி உள்ளே சென்றது ஆசிரமக் கதவு அடைக்கப்பட்டது.

என்னை அமரும் படி கூறிவிட்டு ஒரு அறைக்குள் சென்று கைகளில் சாப்பாட்டு பார்சல் எடுத்துக்கொண்டு வந்து அமர்ந்திருந்தவர்களுக்கு கொடுத்தார். எனது முறை வரும்போது எனக்கும் ஒரு பார்சல் தந்தார். நான் சாப்பிட்டு விட்டு எனக்காக வெளியே காத்திருந்த நண்பனைக் காண வந்தேன். சிறுவர்களான எமக்கு ஒன்றும் செய்ய முடியவில்லை. சற்று நேரத்தில் சாமி வெளியே வந்து வெளியில் காத்திருந்த எல்லா பிச்சைக்காரர்களுக்கும் பணமும், சாப்பாட்டு பார்சலும் தனது கைகளால் கொடுத்துக்கொண்டிருந்தார். எல்லாம் முடியும் வரை காத்திருந்து சாமிகளிடன் சென்று சென்று வருகிறேன் என்று சொல்ல, "அடுத்த பௌர்ணமிக்கு கட்டாயம் வாங்கப்பா" என்றார். 

அதன் பின்னர் இருவருமாக பஸ் ஏறி வீடு வந்து சேர்ந்தோம். அன்று என்னை சாமியிடம் கூட்டிச்சென்ற நண்பன் தான் எதிர்காலத்தில் எனது மைத்துனன் ஆனார். ஆம் அவரது தங்கைதான் எனது மனைவி! 

பௌர்ணமிப் பூஜை மிகுந்த அமைதியாகவும், ஆனந்தமாகவும் இருந்தது! அடுத்து எப்போது வருவோம் என்ற மன நிலையை ஆக்கியிருந்தது. 

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...