Posts

Showing posts from July, 2014

தெய்வ சாதனையில் தத்துவங்களை புரிதலின் அவசியம்

சித்தர்பாடல்கள் படிப்போர், யோக சாதனை புரிபவர்கள், குண்டலினி சாதனை புரிபவகள், உபாசனை செய்பவர்களுக்கு, வேதாந்தம் கற்பவர்களுக்கு மிக அவசியமான ஒரு புரிதல் தத்துவங்களை விளங்கி கொள்ளுதல். பொதுவாக இந்திய தத்துவ மரபில் தத்துவங்களின் எண்ணிக்கை இருபத்தி நான்கில் தோடங்கி சித்தர்பாடல்கள் தொண்ணூற்று ஆறாக முடிகின்றது. இன்று சித்தர் மார்க்கம், ஆயுர்வேதம், சித்த மருத்துவம், யோகசாதனை பயின்ற அனைவரும் இவற்றை விளங்கி பிரயோகிப்பதில்லை. விஞ்ஞானம் மட்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று கற்பிக்கப்பட்ட மனதினை உடைய செயற்கை சமூகம் இயற்கையின் தத்துவங்களை விளங்கும் ஆற்றலை இழந்து விட்டது. ஆகவே எமது ரிஷிகளின் மரபில் நிற்க விரும்புபவர்கள் அவர்களது தன்னறிவால் உணர்ந்த ஞானத்தின் அடிப்படைகளை புரியாமல் முயற்சிப்பது வீண் முயற்சியே,
தத்துவம் என்பது படைப்பின் அடிப்படை அலகுகள். இதன் குறைவு, இணைவு, கூடுதலால் இந்த பௌதீக உலகம், மனித உடலும் படைக்கப்படுகிறது. இதன் அளவு வேற்றுமையினால் பல்வேறு வேற்றுமைகளில் பொருட்கள் உண்டாகின்றன.
உபநிடதத்தின் மகாவாக்கியங்களில் ஒன்றான “தத்துவமசி” எனும் வாக்கியம் இதன் பொருளினை நன்கு விளக்கும். இதன் பொருள்…

ஸ்ரீ அரவிந்தரின் சாவித்திரி காவியம் பற்றிய குறிப்பு

ஸ்ரீ அரவிந்தரின் யோகப்பாதை அனுபவங்களின் மூலம் சாவித்திரி காவியத்தில் காணலாம். சத்தியவான் – இறப்பை எதிர் நோக்கியுள்ள மனித உடலில் சிக்கியுள்ள ஆன்மா, அசுவபதி – பரம்பொருளான (சூரியனிடமிருந்து) கடும் தபஸ் மூலம் பராசக்தியான சாவித்ரியை பூமிக்கு கொண்டு வருகிறார், சாவித்திரி – பராசக்தியின் பூவுலக செயல் அமிசம், இந்த கதையில் சாவித்திரி தனது கணவனாக சத்தியம் தவறாத சத்தியவானாக வரிக்கிறாள் என்பது யோகப்பாதையில் சித்தி எப்படி வரும் என்பதற்கான குறியீடு, இதை விபரிப்பதாயின் ஒழுக்கத்தையும், சத்தியத்தையும் ஒருவன் கைக்கொள்வான் என்றால் பராசக்தி தானே அவனை வரித்துக்கொள்வாள் என்பது உட்பொருள், சாத்தியவான் – சாவித்திரி திருமணம் என்பது ஒழுக்கத்தில் நின்ற சத்தியம் தவறாத மனித ஆன்மா பராசக்தியின் அருளை, அன்பை பரிபூரணமாக பெறல், அப்படி பெற்றபின்னர் உடல் கூட்டில் பிறப்பு இறப்பு சுழலில் சிக்கும் ஆன்மா நித்தியமாய் பராசக்தி அருளை பெற்று இன்னும் பல உலகங்களை சிருஷ்டிக்கிறது. இதுவே சத்தியவான் – சாவித்திரி நீண்ட ஆயுளுடன் பிள்ளைகள் பெற்று வாழ்ந்தார்கள் என்பதன் தத்துவம். 
இந்தக் காவியம் ஸ்ரீ அரவிந்தரின் யோகப்பாதை அனுபவங்களின் தொகு…

ஈஸ்வரப்பட்ட மகரிஷி உபதேசம்

கண்டொன்று கதைப்பார் காணாமல் பல கதைப்பார்  உண்டென்ற உண்மையை உன்னுள்ளே ஊன்றிப்பார்  விண்ணுலகம் சென்றுதான் விளங்க வேண்டும்  பலவேன்றால் பக்திஎன்ற வழிதனை படித்ததன் பொருள் என்ன? 
--- ஸ்ரீ ஈஸ்வர பட்ட மகரிஷி ---

அமிர்த உபதேசம் - 02: வியாதிகள் நீக்கம்

தம்மிடம் உள்ள நோய்கள் நீங்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு!
எனக்கு வியாதியில்லை என்பதனை தொடர்ச்சியாக மந்திரம் போல் கூறி வரவேண்டும், (இதன் அர்த்தம் மருத்துவர் தந்த மருந்துகளை நிறுத்த வேண்டும் என்பதல்ல! நோயை மனத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பது மட்டுமே!) வியாதி குறைந்து மறையும். 
உடலில் வலி எங்காவது வந்தவுடன், வைத்திய பரிசோதனையின் பின்னர் மனம் வியாதி வந்துவிட்டதாக நம்ப ஆரம்பிக்கிறது! இது வியாதிக்கு உயிர் கொடுக்கும் செய்முறையாகும். மனம் எனக்கு வியாதியில்லை என்று திரும்ப திரும்ப சொல்வதால் மனம் வியாதியை நம்பாதே என்று உடலுக்கு கூறுகிறது. உடல் மனம் கூறுவதை ஏற்றால் வியாதி குணமாகிறது. 
மனம் விலகினால் வியாதி குணமாகும்!

அமிர்த உபதேசம் - 01: சரணாகதி

தெய்வ நம்பிக்கை உள்ள பலர் தாம் வாழ்க்கையில் வெற்றிபெற பலவித சாதனைகள், மந்திர ஜெபங்கள், பூஜை, புனஸ்காரங்கள் செய்வார்கள், ஆனால் அதனால் பெறும் பலன் சிறிய அளவாகவே இருக்கும். இதேவேளை இவை ஒன்றையும் செய்யாதவர்கள் எல்லா நன்மைகளையும் பெற்று வாழ்வார்கள், இதற்கான காரணம் என்ன? இறைவன் படைத்த பிரபஞ்சம் ஒரு நியதியுடன் படைக்கப்பட்டுள்ளது, அதன் விதிகளை மதிப்பவர்களுக்கு இறைவனின் அருள் உதவுகிறது! மனம் எங்கு நிற்கிறதோ அதிலிருந்து இறைவனின் அருள் சுரக்க தொடங்குகிறது! இதையே "பக்தி" "சரணாகதி" என்று கூறுகிறார்கள், குருவிடம் செல்லும் சீடர்கள் பலரும் தமது மனதில் பலவித கேள்விகளை எழுப்பிக் கொண்டு இருக்கும் வரை குருவின் அருள் அவர்களில் வேலை செய்வதில்லை! எப்போது உண்மை சரணாகதி நிகழ்கிறதோ அக்கணம் முழு அருளையும் பெறுகிறான்!

தேவாரம் திருவாசகங்கள் மூலம் குண்டலினி சக்கரங்களை விழிப்படைய வைத்தல்

கீழ் வரும் வரைவிலக்கணம் தொல்காப்பியத்தில் காணப்படுவதாகும், 
உந்தி முதலா முந்து வளி தோன்றி,  தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ,  பல்லும் இதழும் நாவும் மூக்கும்  அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான்  உறுப்புஉற்று அமைய நெறிப்பட நாடி,  எல்லா எழுத்தும் சொல்லுங் காலை  பிறப்பின் ஆக்கம் வேறுவேறு இயல  திறப்படத் தெரியும் காட்சி யான  (தொல்காப்பியம் .எழுத்து.83)
கொப்புளில் இருந்து உருவாகும் உதானன் (பஞ்ச பிரானங்களில் ஒன்று) தலை (சகஸ்ராரம்) கண்கள் (ஆகஞ்), மிடறு (விசுத்தி) நெஞ்சு (அனாகதம்) ஆகியவற்றை தாக்கி, பல், உதடு, நா, மூக்கு, அண்ணம் ஆகிய ஐந்துடன் கலந்து ஒலியினை எழுப்பி மீண்டும் தலை (சகஸ்ராரம்), மிடறு (விசுத்தி), நெஞ்சு (அனாகதத்தினை) இனை சென்றடைகின்றன என்கிறார் தொல்காப்பியர். இவற்றை யோக மார்க்கத்தில் குண்டலினி விழிப்பு எனக்கூறுவதுடன் ஒப்பீட்டு தெரிந்து கொள்ளுங்கள். 
யாப்பிற்குள் வரும் பாடல்களில் இந்த ஒலி குறித்த ஒழுங்கில் தொடர்ச்சியாக அசையும், (அறுசீர் விருத்தப்பாவில் எப்படி ஒலியமை வருகிறது என்பதனை ஒப்பிட்டு விளங்கலாம்) இப்படி மேலே கூறப்பட்ட சக்கரங்களை அடிப்படையாக தாக்கி பிரபஞ்ச சக்தியினை விழிப…