குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, May 15, 2019

ஸ்ரீ காயத்ரி சித்தரின் வழிகாட்டலில் - 09

முந்தைய பகுதிகள்:
பகுதி - 01
பகுதி - 02 
பகுதி - 03 
பகுதி - 04 
பகுதி - 05 
பகுதி - 06 
பகுதி - 07
பகுதி - 08


*************************************************************

ஆசிரமத்தில் இருந்த காலத்தில் சாமியுடன் நெருங்கித் தொண்டு செய்த அதேவேளை என்னுடன் மிக அன்பாக லலிதா பாலா தம்பதியினர் இருந்தார்கள். அவர்கள் இருவரும் சகோதர சகோதரி என்ற அளவிற்கு என் மீது அன்பும் பாசமும் வைத்திருந்தார்கள். 

லலிதா அக்கா ஒரு நிறுவனத்தில் வேலை செய்துவிட்டு மாலை ஆசிரமம் வந்து விடுவார். பின்னர் ஆசிரம வேலைகள் முடிந்த பின்னர் இரவு உணவிற்கு பின்னர் சிறிது சாதனை ஆன்மீகம், சாமியின் அனுபவம் பற்றிய பேச்சு அவர்கள் இருக்கும் போது நடக்கும். 

இதேபோல் சாமிக்கு நெருக்கமான இன்னொரு சாரார் இருந்தார்கள். அவர்கள் வந்தால் அனேகமாக எவரைப்பற்றியாவது குற்றம் குறை பேசுதல் நடக்கும்.



நான் தனியாக இருக்கும் போது அனேகமாக சாமியுடன் மிக நுணூக்கமான யோக விஷயங்கள் உரையாடல் நடக்கும். 

எனினும் வரும் கூட்டத்தைச் சார்ந்து சுவாமி கண்ணாடி போல் பிரதிபலிப்பார். அவரவர் மன நிலைக்குத் தக்கபடிதான் உரையாடுவாரே அன்றி தன்னுடைய வித்துவத்தன்மையினை எவரிடமும் காட்டுவதில்லை. 

நான் எந்தவித மனச்சலனமும் இல்லாமல் அனைத்தையும் பார்த்துக்கொண்டு எந்தவித மன உணர்ச்சிகளையும் ஏற்படுத்தாமல் அமைதியாக இருக்கும் பண்பு இயல்பாகவே எனக்கு சிறுவயதில் இருந்தது. சாமிக்கு அருகில் இருப்பது என்பது எல்லோருடைய இரகசியங்களும், பிரச்சனைகளும் வெளிப்படையாக தெரியும் வாய்ப்புள்ள ஒரு பதவி! நாட்டின் பிரதமர், அரசியல்வாதிகள் தொடக்கம் குப்பை அள்ளும் தொழிலாளி வரை, ஆனால் எதையும் எனது காதுகள் கேட்பதில்லை! எவராவது தனிப்பட தமது பிரச்சனைகளை உரையாட சாமியிடம் வந்தால் நான் உடனடியாக எழுந்து வந்துவிடுவேன். இது சாமியிடம் இன்னும் ஆழமான அன்பையும், மதிப்பையும் உருவாக்கியது.  எவருடைய பலவீனத்தையும் எனக்குச் சாதகமாக்கிக் கொண்டது இல்லை. மற்றவர்கள் விபரங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லமல் இருந்ததற்கு ஒரு காரணம் இருந்தது. 

சிறுவயது முதல் மற்றவர்களுடைய எண்ணங்கள், உணர்ச்சிகளை என்னால் இலகுவாக புரிந்து கொள்ளக்கூடிய ஆற்றல் இருந்தது, அதுவே எனக்கு பிரச்சனையாகவும் இருந்திருக்கிறது. மற்றவர்களுடன் நெருங்கிப் பழகமுடியாத மாதிரி ஒருவித இடைவெளியை ஏற்படுத்திக்கோண்டிருந்தது. ஏனென்றால் எல்லோருடைய ஆழ்மனத்தில் ஓடும் எண்ணங்கள் எனக்குத் தெரியும் என்பதால் அவர்கள் தவறாக நினைக்கும் போது அடிக்கடி கோபம் வந்தது. ஆனால் உண்மையிலேயே மற்றவர்களின் எண்ணங்களை நான் தெரிந்து கொள்கிறேன் என்ற விஷயம் அப்போது எனக்குத் தெரியவில்லை. நான் ஏதோ மற்றவரைப்பற்றி தவறாக எண்ணுகிறேனோ என்ற பயம் எனக்கு இருந்தது. இது பின்னர் சாமியின் வழிகாட்டலில் குறித்த சில சாதனைகளுக்கு பின்னர் தெளிவு பெற்றேன். 

ஆசிரமவாசிகளுக்கு யாரோ ஒரு பையன் பாடசாலையை படிப்பை விட்டுவிட்டு சாமியிடம் ஓடிவந்தவிட்டானாம் என்ற அளவில் பேச்சுப் போய்க்கோண்டிருந்தது. 

இன்னும் சிலர் இவன் யார் என்று தெரியவில்லை? எதாவது களவு எடுத்துக்கொண்டு ஓடப்போகிறான் என்று பேச்சு! 

இவை எல்லாம் எனது காதுகளில் விழுந்தாலும் அவை எதுவும் பெரிதாக என்னைப் பாதிக்கவில்லை.  

பாடசாலையில் படிக்கும் போது படிக்க வேண்டும் என்று தீரா ஆவல் இருந்த விஷயங்கள், உத்வேகம் எதுவும் இப்போது மனதில் இல்லை, வெறுமனே சாமியின் அன்பு பிடித்திருந்தது. எதையும் ஆர்வமாக சாமியிடம் படிக்க வேண்டும் என்று கேட்பதில்லை. சந்தர்ப்பத்தில் சாமி ஏதாவது தானாக அல்லது வந்திருக்கும் எவராவது கேட்டால் அதில் ஏதாவது மனதில் தோன்றினால் கேட்பதுடன் சரி! சாமி என்னை சரியாக வழி நடாத்துகிறார் என்பதில் நான் நம்பினேன். சாமி என்னை ஒரு நாளும் சாதனை செய்தீர்களா என்று கேட்டதில்லை, கவனிப்பதில்லை! ஆனால் நான் ஒரு நாளும் சாதனை செய்யாமல் இருந்ததில்லை! 

இப்படி இருக்கும்போது சாமி என்னைப்பற்றி மற்றவர்களிடன் ஏதோ கூறிக்கொண்டிருக்கிறார் என்பது மட்டும் மற்றவர்களது நடவடிக்கையில் இருந்து தெரிந்து கொண்டேன். ஒரு நாளும் எனது காது பட என்னைப் பற்றி எதுவும் சொன்னதை நான் கடைசிவரை கேட்கவில்லை. ஆனால் எனது மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே சென்றது. மற்றவர்கள் என்னை மதிப்பதை வைத்து சாமி ஏதோ என்னைப்பற்றி சொல்லுகிறார் என்பது மட்டும் தெரிந்தது. ஆனால் நான் கடைசி வரைக்கும் அது என்ன என்பது பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை. 

காலங்கள் உருண்டோடி சாமி சமாதியாகி லலிதா அக்காவை பலவருடங்களின் பின்னர் சந்தித்தபோது எனது அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் வெளியாகி இருந்தது. அப்போது அவர் கூறிய வார்த்தை " தம்பி, நீங்கள் இல்லாத போது சாமி அடிக்கடி உங்களைப் பற்றி கூறுவார், சுமனன் ஏதோ ஸ்கூலை விட்டுவிட்டு ஓடிவந்து இங்க நிற்கிறார் என்று சாதாரணமாக நினைத்து விடாதீங்கப்பா, உருவம்தான் சின்னப்பையன் அவர் சின்னப்பையன் இல்லை, அவருக்குள் பல சக்திகள் மறைந்திருக்கு, எதிர்காலத்தில் பலருக்கு வழிகாட்டியா வருவார்" என்று மிக மரியாதையாகச் சொல்லுவார் என்றார். 

இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த விஷயம் பல்லாண்டு கால சாதனைக்குப் பின்னர் பலர் என்னை வழிகாட்டியாக தாங்களாகவே (ஏனென்றால் இன்றும் நான் எவருக்கும் வழிகாட்டுவதாக எண்ணுவதில்லை) கருதத் தொடங்கிய பின்னர்தான் சாமி என்னைப்பற்றி இப்படி ஒன்று சொன்னார் என்பதே எனக்கே தெரிந்தது. 

குருநாதர் சொன்னது போல் தவிர்க்க முடியாமல் இன்று பலருக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய சூழலில் இருந்து கொண்டுதான் இதை எழுதுகிறேன் என்பது ஆச்சர்யமான உண்மை!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...