Posts

Showing posts from June, 2013

யோகசாதனைக் குறிப்புகள் - மனதின் ஆறு சக்திகள்

Image
பொதுவாக எமது யோக தாந்திரீக  மரபில் மூன்று வகையான சக்தி இருப்பதாக குறிப்பிடப்படுகிறது, அதாவது இச்சா சக்தி (ஆன்ம பலம் அல்லது எடுத்த கரியத்தை எண்ணியவாறு முடிக்கும் ஆற்றல்) கிரியா சக்தி (செயல்புரியும் ஆற்றல்), ஞானாசக்தி (அறிவு சக்தி) என்பதே அவை மூன்றும்.   
இந்த மூன்று சக்திகளும் எங்கோ பரலோகத்தில் இருப்பதாக எண்ணி குழம்ப வேண்டாம், மனிதன் கடவுளின் சிறிய மாதிரி, ஆகவே பிரபஞ்ச மகா சக்தி மனிதனிலும் உண்டு, இதனையே சித்தர்கள் அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உண்டு என்றார்கள். மனிதனில் உள்ளது என்றால் எங்கு உள்ளது? மனதில்தான் இந்த சக்திகள் உள்ளது. இறைவன் தனது பிரபஞ்ச மனதில் உள்ள இந்த சக்திகள் மூலம் பிரபஞ்சத்தில் காரியங்கள் நடத்துவது போல இறைவனின் சிறிய மாதிரியுருவான மனிதன் தனது மனது கொண்டு இந்த சக்திகளை பாவிக்க முடியும், அறிந்தோ அறியாமலோ இவற்றை நாம் அன்றாடம் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறோம். யோக சாதனை தாந்திரீகம் என்பன சாதாரண நிலையில் சிறப்பாக எப்படி பயன்படுத்துவது என்பதற்கும் மேல் சென்று அதீத சக்தியினை பெறும் முறைகளை கூறுகின்றன. இங்கு மனித மனதின் ஆறுசக்திகளும் பற்றி சுருக்கமாக பார்ப்போம். 
மன…

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 28: நாமங்கள் 70

Image
கிரிசக்ர –ரதாரூட-தண்ட-நாதா-புரஸ்க்ருதாயை (70) கிரிச்சக்கரமென்னும் தேரில் வீற்றிருக்கும் தண்ட நாதா (வராஹி) வால் வழிகாட்டப்படுபவள்


கிரிசக்ரம் என்பது தண்ட நாதா எனப்படும் வாராஹியின் தேர் ஆகும். இந்த தேவி மிகுந்த சக்திவாய்ந்தவளாகும், இவளைப்பற்றி ஏற்கனவே நாமம் 11இல் விபரிக்கப்பட்டுள்ளது. கிரி என்பது வராஹத்தினை குறிக்கும். வராஹம் என்பது காட்டுபன்றியினைக் குறிக்கும். தேவியின் முகம் வராஹ முகம். தேவியின் தேரும் காட்டுப்பன்றி வடிவுடையது. கையில் தண்டத்தினை கொண்டிருப்பதால் தண்ட நாதா எனப்படுகிறாள். கிரி என்பதற்கு ஒளிக்கற்றைகள் என்றும் ஒரு பொருள் உண்டு, இங்கு ஒளிக்கற்றை என்பது படைப்பின் ஒளியினைக்குறிக்கும். இது படைப்பின் ஆரம்பத்தில் வெளிப்பட்ட ஒளியினைக் குறிக்கும். இது பற்றி புனித பைபிளிலும் கீழ்வருமாறு கூறப்பட்டுள்ளது (Genesis.I.3)  “ கடவுள் கூறினார் அங்கே ஒளியிருந்தது, ஒளி வெளிப்பட்டது என்று. சக்ர என்பது படைத்தல், காத்தல், அழித்தல் என்ற சுழற்சியினை குறிக்கும். யோகியானவன் இந்த கிரிசக்ரத்தின் மேலே அமர்ந்திருக்கிறான் என்பதன் பொருள் அவன் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற செய்முறையினூடாக செல்கின்றான் என்…