மனித மனத்தின் பைத்தியக் காரத்தனங்களை பார்க்கிறோம். எதையும் நேர்கோடாக சிந்திக்க முடியாத படியான பைத்தியக் காரத்தனம்.
எவனோ ஒரு பத்துப் பேர் எமக்கு தொடர்பே இல்லாத நாட்டில் தனது மதத்தின் கொடி ஏற வேண்டும் என்று சம்பந்தமே இல்லாமல் இங்கு குண்டு வைத்து அப்பாவி மனிதர்களைக் கொல்கிறேன். கேட்டால் கடவுள் சுவர்க்கம் தருவார் என்று விளக்கம்.
அட அவன் தான் முட்டாள் தனமானவன் என்றால் அறிவின் ஆழத்தையும், அன்பையும் கருணையையும் போதித்த புத்தபகவானை வணங்குகிறோம் என்று கூறிக் கொண்டு செய்வதோ வன்முறை!
மனித மனதின் ஆழத்தில் பண்புகளும் குணங்களும் மாறாத வரை எதுவும் மாறபோவதில்லை! எமது அடையாளங்கள் அனைத்தையும் வன்முறை ஆக்கிக் கொண்டிருப்போம்!
தமது சுயத்தை அறிய பயன்படுவது மதம் என்பது மாறி தனது சுயம் மதம் என்ற மூடத்தனமும் சிந்தனை வளர்ச்சியும் இல்லாத மனிதக் குழுக்களின் பண்பு இது!
அறிவும் உழைப்பும் ஆற்றலாலும் வெள்ளைக்காரனிற்கு வால்பிடித்து தம்மை உயர்த்தி வைத்திருந்த தமிழ் சமூகம் ஆணவத்தால் சிங்களவன் எல்லாம் மடையன் என்று நடாத்திய மனப் போக்கு, நாங்கள் மடையர் இல்லை உங்களை ஆளுபவர்கள் என்று நிருபிக்கிறோம் என்ற வன்முறை ஆக்கியது!
நாம் தமிழர்கள் இல்லை என்று தமிழர்கள் வருந்தும் போது வருத்துவபனிற்கு சார்பாக நின்று இலாபம் காணலாம் என்ற குறுக்கு புத்தியுடன் தன் சமூகத்தை வழிகாட்டிய முஸ்லீம் அரசியல்வியாதிகள் இன்று அதே வருத்துபவன் தன் சமூகத்தின் மீது வன்முறை கட்டவிழ்க்கும் போது கைகட்டி வாய் பொத்தி நிற்கிறார்கள்.
ஒரு மனிதன் தனது வாழ்க்கையை நிம்மதியாக வாழ சமூக சிந்தனை சரியாக கட்டமைக்கப்பட வேண்டும். நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும். எமது தனிமனித, சமூக அடையாளங்களைப் பேணும் அதே வேளை அந்த அடையாளங்கள் மற்றவர்களை எரிச்சல் படுத்தாமலும், துன்புறுத்தாமலும், ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் நன்மைக்கும் மனித வளசக்தி செலுத்தப்பட வேண்டும்.
பயத்தினாலும், பாதுகாப்பின்மையினாலும் சிறுபுத்தியால் செய்யும் பிழைகள் பெரும் அழிவை ஏற்படுத்தும்!
பணபலம் பெற்றால் எல்லாவற்றையும் சாதித்துவிடலாம் என்று வியாபாரத்தை பெருக்கி, தமது சமூகத்திற்குள்ளேயே வளத்தைப் பெருக்கியது பொறாமையாகி ஒட்டுமொத்த சமூகத்திற்கும் ஆபத்தாக்கும் நிலையில் வந்து நிற்கிறது.
எவர் துன்புறும் போதும் அதில் இலாபங்காண நினைக்கக்கூடாது! துன்புறுத்துபவனிற்கு சரியான புத்தியையும், துன்பப்படுபவனை காக்கும் உணர்வும் இருப்பவனே மனிதன்!
"இலங்கை என்ற தேசம்" என்ற உணர்வை வளர்க்காமல் இனம், மதம் என்ற குறுகிய வட்டத்தினை உருவாக்கி பணம், பணம் என்று வியாபரத்தை விருத்தி செய்து மனிதத்தை அழியச் செய்த அரசியல் வியாதிகள்!
நாம் எல்லோரும் மனிதர்கள், அதன் பின்னர்தான் மற்றவை எல்லாம்!
இங்கு தேவை சரியான சிந்தனை!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.