இன்று பலரும் காமத்திலிருந்து கடவுளுக்குச் செல்லும் வழியை ஓஷோ என்ற பகவான் ரஜனீஷ் தான் கூறினார் உலகிற்கு முதலில் கூறினார் என்று நினைக்கிறார்கள்.
அது உண்மையில்லை! ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மாணிக்கவாசகர் இதைப் பற்றி கூறியுள்ளார். திருவாசகம், புணர்ச்சிப் பத்தில்....
அடிப்படையில் காமத்தை நோக்கிய கவர்ச்சி காமத்திற்கான கவர்ச்சி இல்லை என்கிறார் ரஜனீஷ்!
காமத்தை அனுபவிப்பதில் ஏற்படும் சமாதி அனுபவத்தை உணர்ந்த மனம் அந்த இன்பத்திற்கு அடிமையாகி மீண்டும் மீண்டும் விழிப்புணர்வு இல்லாமல் அதை நோக்கி ஓடும் ஓட்டமே சாதாரண காமற்கான ஏக்கம்!
காமத்தின் போது நான் என்ற ஆணவமற்ற நிலையும், காலமில்லா நிலையும் தோன்றுவதால் பெறும் இன்பமே மனிதனை காமத்தினை நோக்கி ஆழத்தில் ஈர்க்கிறது.
இந்த ஆணவமற்ற நிலையையும், காலமற்ற நிலையை பேறும் வழிகள் தான் தியானமும், சமாதியும், யோகமும்!
இந்த நிலையை பைரவம் என்ற விழிப்பு நிலையாக விஞ்ஞான பைரவ தந்திரம் கூறும்,
இதை மாணக்கவாசகர்,
சுடர்பொற் குன்றைத் தோளா முத்தை
வாளா தொழும்புகந்து
கடைபட் டேனை ஆண்டு கொண்ட
கருணா லயனைக் கருமால் பிரமன்
தடைபட் டின்னுஞ் சார மாட்டாத்
தன்னைத் தந்த என்னா ரமுதைப்
புடைபட் டிருப்ப தென்றுகொல் லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே
சுடர்பொற் குன்றைத் தோளா முத்தை - ஒளிவிடுகின்ற பொன்மலையைப் போன்றவனும், துளைக்கப்படாத முத்தைப் போன்றவனும், என்ற வரிகள் ஒருவன் தனது தியானத்தின் உச்சத்தில் கிடைக்கக் கூடிய சமாதி நிலை அனுபவங்கள்!
கருணா லயனைக் கருமால் பிரமன்
தடைபட் டின்னுஞ் சார மாட்டாத் - கரிய நிறமுடைய திருமாலும் பிரமனும் செருக்கில் அகப்பட்டு இன்னும் அடைய முடியாதவன் என்கிறார், ஆணவமழிந்த நிலையில் மட்டும் அறியப்படக் கூடியவன், காமத்தின் உச்சத்தில் ஆணவமழிந்த நிலை உண்டாகிறது.
அரிய அமுதம் போன்றவனும், செதுக்கப்படாத மாணிக்கம் போன்றவனுமாகிய இறைவனை எப்போது புணர்ந்தே என்கிறார்.
மாணிக்க வாசகரின் பாடல்களை ஆய்வு செய்வோர் அவர் இறைவனைத் தலைவனாகவும் தன்னை தலைவியாகவும் பாவித்து படித்துள்ளார் என்று கூறுவார்கள்.
ஆனால் அவர் சாதாரண மனிதன் புணர்ச்சி என்ற காமத்தில் அடையும் சமாதி நிலையைப் பற்றியும் ஆணவமழிந்த நிலையிலும் சாதாரண காமத்திற்கு அப்பாலுள்ள சிவத்தை அடையவே புணர்ச்சி தேவைப்படுகிறது என்பதைக் குறிக்கிறார்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.