Posts

Showing posts from December, 2016

கொழும்பில் ஸ்ரீ ஸக்தி சுமனனின் யோக வகுப்புகள்

Image
கொழும்பில் ஸ்ரீ ஸக்தி சுமனனின்  யோக வகுப்புகள்


அகத்திய மகரிஷி அருளிய சோடச சூத்திரம் {பாடல்கள் 01 - 04 வரை}

Image

அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் ‍

Image
ஆர்வமுள்ளவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்


குரு உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்

முற்காலத்தில் ஒருமாணவன் தன்னை அறிய, மானச, யோக விடயங்களை கற்க ஒரு குருவை அண்டி பன்னிரெண்டு வருடங்கள் அவருடன் வாழ்ந்து தகுந்த மன, உடல் பண்புகளை உருவாக்கி உபதேசம் பெற்று இறை சாதனைகளை செய்து சித்தி பெற்றார்கள்.

இன்றைய சூழலில் இப்படி பன்னிரெண்டு வருடங்கள் குருவுடன் வாழ்வது என்பது சாத்தயமற்ற ஒன்றாகிவிட்டது. அப்படியானால் ஒருவரும் சாதனை செய்து சித்தி பெறமுடியாதா? இல்லை நிச்சயமாக முடியும்.

எப்படி சாத்தியம்? அக்காலத்தில் பன்னிரெண்டு வருடம் சாதனை செய்வதற்குரிய சூழல் குருவால் உருவாக்கப்பட்டது, இன்று அது மாணவர்களது கைகளில் இருக்கிறது. அவர்கள் தாமாக உருவாக்கிக் கொள்ள முடியும். அக்காலத்தில் தொழில்நுட்ப வசதிகள் இல்லாமையால் சாதனை நுட்பங்களை கற்பதற்கு பன்னிரெண்டு வருடங்கள் தேவைப்பட்டது. அக்காலத்தில் குருவுடன் வாழ்வதால் அவருடைய தெய்வ காந்த சக்தி எம்முடன் கலந்து எமது சாதனைக்கு உதவும். குருவுடன் வாழ்ந்தாலும் தகுந்த பக்குவம் இல்லாமல் அவருடைய சக்தியை ஏற்றுக்கொள்ள முடியாது.
இதன் உண்மை விளக்கம் என்னவென்றால்; ஒருவன் தான் பெற்ற சாதனையினை தகுந்த ஒழுக்க விதிமுறைகளுடன் பன்னிரெண்டு வருடங்கள் சாதனை செய்யவேண்டும் என…

அகத்தியர் யோக ஞானதிறவுகோல் வகுப்பும் மூலகுரு மந்திர உபதேசமும்

Image
அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் எனும் நூல் அகத்தியர் ஞானம் முப்பது என்ற அகத்திய மகரிஷியின் கிரியா ‍வாசி சிவ யோக விளக்கங்களை கூறும் அரிய பாடல் தொகுப்பு.

இந்த நூலின் சிறப்பு ஒரு மானிடனாக பிறப்பெடுத்தவன் தான் அடையக்கூடிய மிக உயர்ந்த இறை நிலையை (சித்தர்கள் கூறும் மகாகாரண சரீரம், திருச்சிற்றம்பலம், இறவா நிலை, சொருப சமாதி) அடைய விருப்பம் கொண்ட மாணவனை ஆரம்பம் நிலை முதல் இறுதி நிலை வரை அவன் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்களை படிப்படியாக எடுத்துரைக்கும்.

இன்று யோகம் பயில விரும்பும் பலர் அதன் முழுமையான வரை படத்தை அறிந்து கொண்டு பயிலத் தொடங்குவதில்லை. தமது வாழ்க்கையில் ஏற்படும் ஏதாவது ஒரு பிரச்சனைக்கு உகந்த தீர்வாக எடுத்துக்கொண்டு ஆரம்பிப்பதால் அந்த பிரச்சனை தீர்ந்தவுடன் அவர்களது பயணம் நின்று விடுகிறது. ஆனால் முழு வரை படத்தையும் அறிந்தவன் ஆர்வத்துடன் விரிந்த பிரபஞ்ச உண்மைகளை அறியும் ஆர்வத்துடன் முன்னேறுகிறான்.

இப்படி முன்னேறுவதன் பயனாக அவனது மன, பிராண சக்திகள் அதிகரித்து தனது உலக வாழ்க்கையிலும் அரிய சித்திகளை பேற்று இன்பத்தை அனுபவித்து அதைவிட உயர்ந்த இன்பத்தை அனுபவிக்கும் நோக்குடன் உ…