குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, December 16, 2018

நுண்ணறிவும் உணர்ச்சிகளும்மனிதன் மனம் இருவகைத்தன்மைகளைக் கொண்டு இயங்குகிறது.

ஒன்று நுண்ணறிவு (Intelligence) மற்றது உணர்ச்சிகள் (emotions).

முனையது மனதை ஏன் இப்படி நடக்கிறது? எதற்காக இப்படி நடக்கிறது? இது சரியா? இது பிழையா? இதன் விளைவு என்ன? இப்படியெல்லாம் சிந்திக்கும். தர்க்க ரீதியாக சிந்திக்கும். இதை சித்தர்களின் தத்துவத்தில் அந்தக்கரணங்களின் ஒன்றான "புத்தி" என்று சொல்லுவார்கள்.


மற்றைய உணர்ச்சி என்ற பகுதி ஹ்ருதயத்தி பகுதி எனப்படுகிறது. இந்த உணர்ச்சி என்ற பகுதியே பிரபஞ்சத்துடன் சம நிலை கொள்ள உதவுகிறது. அன்பு, காதல், கருணை, பாசம், பரிவு, பக்தி, கோபம், பொறாமை, குரோதம், வஞ்சகம் இவை எல்லாம் உணர்ச்சிகளின் கூறுகள்.

மனதின் இயக்கத்தில் இவை இரண்டும் ஒரே நேரத்தில் செயற்பட முடியாமல் இருப்பதாலேயே பலரும் துன்பத்திற்கு ஆளாகிறார்கள்.

நுண்ணறிவின் நல்ல பக்கமே உலகை செழிப்பாக வைத்திருக்கிறது. கெட்ட பக்கம் அசுரத்தனத்தை அதிகரிக்கிறது. நல்ல பக்கத்தை மனித குலத்திற்கு பயனளிக்கும் அறிவியலாகச் சொல்லலாம். கெட்ட பக்கத்தை அந்த அறிவியலை சுய நலத்திற்காக வியாபாரமாக்கும் தந்திரத்தை உதாரணமாக கொள்ளலாம்.

உணர்ச்சிகள் செயற்படும் போது நுண்ணறிவு செயற்படாது. அதனாலேயே பலரும் உணர்ச்சிவசப்பட்டு தவறு செய்து விட்டேன் எனக்கூறுகிறார்கள்.

மனதை இந்த இரண்டு நிலைகளிலும் சரியாக இயக்கத்தெரியாதவர்களே வாழ்வில் இன்பத்தை தொலைக்கிறார்கள்.

நுண்ணறிவு பகுதியை அதிகம் இயக்குபவர்கள் எல்லாவற்றிற்கும் ஏன், எதற்கு என்று கேட்டு மற்றவர்களை சங்கடப்படுத்தும் சந்தேக பிராணிகளாக இருப்பதைக் காணலாம், அதே ஏன் எதற்கு அறிவியல் வளரவும், நல்ல முகாமைத்துவத்திற்கும் உதவுகிறது.

இதைப்போல் நுண்ணறிவு இல்லாமல் வெறும் உணர்ச்சிவசப்படுபவர்களும் வாழ்வில் அடிக்கடி தவறு செய்து விட்டு வருந்தி தன்னை தாழ்த்திக்கொள்பவகளாக இருப்பதைக் காணலாம்.

வாழ்வில் அரசியலில், வியாபாரத்தில், கல்வியில் நுண்ணறிவைக் காட்டும் அதேவேளை உறவுகளில், குடும்பத்தில், சமூகத்தில் சரியான அன்பு, பாசம், பரிவு போன்ற உணர்ச்சிகளை காட்டும்போது சமூகம் வளம் பெறுகிறது.

இன்று அரசியலில் நுண்ணறிவு தேவைப்படும் இடத்தில் உணர்ச்சிகள் தூண்டப்படுகிறது.

அன்பும், பாசமும், பரிவும் காட்டப்படவேண்டிய குடும்பத்தில் ஏன், எதற்கு என்ற கேள்விகள் சந்தேகத்தை தூண்டுகிறது.

ஆக ஒருமனிதன் தனது மனதின் நுண்ணறிவையும், உணர்ச்சியையும் சரியான விகிதத்தில் எப்படி எங்கே பயன்படுத்துவது என்ற அறிவே ஒருவனுக்கு தேவையான கல்வியாகும்.

Saturday, December 15, 2018

உபாசனை மந்திர ஜெப சாதனையில் ஓர் அறிவுரை


சாதகர்கள் அனைவருக்கும் ஏன் வார அறிக்கை அனுப்ப வேண்டும், உங்கள் ஜெப எண்ணிக்கை கணக்கு வைக்க வேண்டும் என்று கூறுவதற்கு உபாசனா குலபதி ஸ்ரீ துர்க்கைச் சித்தர் அருளியது,

நம்முடைய குருபரம்பரையில் மூல மந்திர உபதேசம் எப்படி செய்ய வேண்டுமென்பதை வழிவழி விளக்கமாக வைத்துக்கொண்டு வருகிறார்கள். அக்ஷர லட்ச ஜெபம் பூர்த்தி செய்தபின்னர் தான் குரு சீடனுக்கு உபதேசம் செய்ய வேண்டும். அப்படிச் செய்தல் தான் அந்த விதையானது நன்கு விளைந்து அந்த உபதேசத்தை பெற்றவருக்கு பரிபூரணமான ஒரு பேரறிவை, நல்லறிவை, பூர்ண அறிவைக்கொடுத்து அவனை முற்ற முழு மனிதனாக்கி வைத்து அவனை தெய்வத்தோடு பேரருள் பெற்றவனாக்கி அவனை முடிவிலே தன்னுடைய திருவடியில் கொண்டுபோய் சேர்த்துக்கொள்ளும். அப்படி ஒழுங்குமுறையில்லாமல் மந்திரத்தை எடுத்துக்கொள் என்று சொன்னால் அந்த மந்திரங்கள் அவ்வளவு தூரம் பலிக்காது ஓரிருவருக்கு அவர்களுடைய பூர்வ புண்ணியத்தின் சாயலில் பலிக்கலாமே தவிர ஒழுங்கு முறைக்கு உட்பட்டதல்ல. இந்த மந்திரங்கள் சமயத்தில் கை நழுவி போய்விடும். அல்லது அந்த மந்திரங்கள் ஜெபித்தால் தனக்கு பலன் எதுவும் இல்லை என சீடனே அந்த மந்திரத்தை விட்டு விடுவான். இல்லை என்றால் சீடனுக்கும் குருவுக்கும் ஒத்து வராமல் சீடன் வேறு ஒரு குருவை தேடி அலைந்து போவான். இதற்காகத்தான் முறைப்படியான மந்திரங்கள் முறைப்படியான மந்திர நெறியில் உபதேசிக்க வேண்டுமென்று சொல்லப்பட்டு இருக்கிறது.

Friday, December 14, 2018

சாதகர்களது வகை

இன்று பலரும் மந்திர சாதனை, யோகம், உபாசனை ஆகியவற்றை தேடி குரு கிடைக்கமாட்டாரா என்று பல முயற்சிகளை செய்த வண்ணம் இருக்கிறார்கள். இவர்களை நான் கு வகையாக சாஸ்திரம் பிரிக்கிறது. 

  1. ஆர்த்தன் : தன்னுடைய அறியாமையாலும் கர்ம வினையாலும் , நோயாலும், துன்பப்பட்டுக்கொண்டு அதிலிருந்து மீளவேண்டும் என்று முயல்பவன். 
  2. ஜிக்ஞாஸூ: ஞானம் அடைய விரும்புவன்
  3. ஞானி: ஆத்ம ஞானம் ஏற்பட்டவன்
  4. அர்த்தார்த்தீ: தனது வாழ்க்கையில் பொருள், இன்பம் முதலியவற்றை அடைய விரும்புபவன். 
இந்த நால்வரும் உபாசனை மார்க்கத்தை தேர்வு செய்யலாம். ஆனால் தாம் எதற்காக உபாசனை செய்ய விரும்புகிறோம் என்பதில் நேர்மை இருக்க வேண்டும். 

பலரும் ஆர்த்தனாகவும், அர்த்தாத்தீயாகவும் இருந்துகொண்டு தம்மை ஜிக்ஞாஸூ, ஞானிகளாக காட்டிக்கொள்வதால் உண்மை முன்னேற்றம் பெறத்தவறி விடுகிறார்கள். 

தாம் கஷ்டத்திலிருக்கும் ஆர்த்தனாக இருந்தால் குருவிடம் தனது கஷ்டங்களைச் சொல்லி இறையுதவியுடன் மீண்டு வரவேண்டும். அதுபோல் தான் பெரும் செல்வந்தனாக வேண்டும், எல்லா போக  பாக்கியங்களுடம் அடைய வேண்டும் என்ற எண்ணமுள்ள அர்த்தாத்தீயாக இருந்தால் அவற்றை அடையவேண்டும். இப்படி தனது மன வாஞ்சைகள் பூர்த்தியானதால் வந்த திருதியின் பயனாகவே ஜிக்ஞாஸூவாக முடியும். 

Saturday, December 08, 2018

மந்திர சித்திக்கு ஒரு இலகு வழி

நாம் ஒரு தேவதையின் மந்திரத்தினால் தெய்வ உதவி பெறவேண்டுமானால் சில அடிப்படைகளைப் புரிய வேண்டும். 

எமது கர்ம பிரபாவங்களாலும், மனதின் தவறான பழக்க வழக்கங்களாலும் எமது மனம் தெய்வ சக்தியுடன் தொடர்பு கொள்ளும் சக்தியை இழந்து விடுவதால் எம்மால் எது சரி எது பிழை என்பதை அறிந்துகொள்ளும் ஆற்றலை இழந்து விடுகிறோம். 

இந்த ஆற்றலை மீளப்பெறும் செய்முறைதான் மந்திர சாதனை.

மந்திர் அதிர்வுகள் குறித்த தெய்வசக்தியை எமது மனதிலும் பிராணனிலும் உருவாக்கி எம்மில் அந்த தெய்வ சக்தியை செயற்பட வைக்கும்.

இப்படி பலன் பெறவேண்டுமானால் தினசரி ஒரு நாளும் தவறவிடாமல் நாமாக நிர்ணயித்துக்கொண்ட ஜெப அளவினை செய்து கொண்டு ஒரு இலட்சம் பூர்த்தி செய்யும் போது எமது மனதிலும் பிராணனிலும் குறித்த தெய்வ சக்தி விழிப்படையத்தொடங்கும். 

இப்படி நடப்பதற்கு உடனடியாக நான் ஒருமாதத்தில் ஒரு இலட்சம் பூர்த்தி செய்கிறேன் என்று மனக்கிளர்ச்சி அடையாதீர்கள். ஏனென்றால் இயல்பிலே அவ்வளவு சக்தியை தாங்கும் தன்மை உங்கள் மன, பிராண, உடலிற்கு இருக்காது. ஆகவே அந்த பக்குவத்தை பெறுவதற்கு மெதுவான, சீரான முயற்சி அவசியம்!

ஆகவே தினசரி சாதனை செய்யும் மனப்பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு மெதுவாக குறித்த காலம் தொடர் ச்சியாக சாதனை செய்து ஒரு இலட்சம் காயத்ரி பூர்த்தி செய்யுங்கள்.

இப்படிச் செய்யும் போது உங்கள் எண்ணத்தில், மனதில் நீங்கள் உபாசிக்கும் தெய்வ சக்தி வழிகாட்டத்தொடங்கும். இதனால் உங்கள் முடிவுகள் சரியானதாக அமையும். 

Friday, December 07, 2018

திருமணம் ஒரு புனித பிணைப்பும் உறுதிமொழியும்

திருமணம் ஒரு புனித பிணைப்பும் உறுதிமொழியும்

ஒரு மனிதனின் உண்மையான வளர்ச்சி என்பது தனது சுய நல மையத்திலிந்து வெளிவந்து மற்ற மையங்களிலிருந்து செயற்படும் தன்மை ஒருவனுக்கு திருமணத்திலிருந்து ஆரம்பமாகிறது. ஒரு குழந்தையின் நேர்மையும், தர்மமும், ஒழுக்கத்திற்குமான விதை அதனுடைய ஆழ்மனத்தில் விதைக்கப்படுவது அதனுடைய குடும்பத்திலிருந்து, பின்னர் அது மலர்ந்து விரைவாக வளர்வது திருமணத்தின் பின்னர்.

அன்பு, பக்தி, சுய கட்டுப்பாடு, தியாகம், மென்மை, பொறுமை ஆகிய குணங்கள் வளவதற்கன தகுந்த களம் திருமணம்.

திருமணவாழ்க்கை என்பது ஒருவன் தன்னை முழுமையாக செம்மைப்படுத்திக்கொள்வதற்கான அனைத்து வழிகளையும் தருவதாகும்.  திருமணம் இதற்கு அனுமதி தரும் ஒரு செயலாகும்.

ஒருவன் பாலர் வகுப்பு படித்து பின்னர் உயர்கல்வி பெறுவது போல் திருமணத்தின் மூலம் ஒருவன் உலக ஞானத்தை விருத்தி செய்கிறான்.

"அன்பே, இந்த புனிதமான தருணத்தில், இங்கு எழுந்தருளியுள்ள தெய்வசக்திகளின் முன்னிலையில் உனது கரங்களை என்னுடன் பற்றிக்கொண்டுள்ளேன், ஆசீர்வதிக்கப்பட்ட பெண்ணே! நீ என்னுடன் அதிஷ்டமயமான நீண்ட வாழ்க்கையை தொடர்வோமாக, நான் எனது குடும்பத்தை உனது கரத்தில் சமர்ப்பித்துள்ளேன், உனது கடமையை மனமகிழ்வுடன் செய்வாயாக!

மனைவி என்பவள் உண்மையில் மகாலக்ஷ்மியின் அமிசமானவள், ஒருவனது வாழ்க்கை இன்பமயமாக இருப்பதற்கு மகாலக்ஷ்மியின் அருள் அவசியமானதாகும்.

இதையே ஒரு வேத மந்திரம் இவ்வாறு கூறுகிறது;

அழகிய பெண்ணே! நீயே லக்ஷ்மி, நீயில்லாமல் நான் ஏழ்மை மிக்கவனாகிறேன். நீ இல்லாமல் வாழ்வில் எந்த இன்பமும் இல்லை,

Tuesday, December 04, 2018

மன பிராண உடல் ஆற்றல் வேண்டுமா?Image may contain: 1 person

சித்த வித்யா குருமண்டல எமது குருமார்களில் ஒருவரான பண்டிட் ஸ்ரீ ராம் சர்மா ஆச்சார்யா அவர்கள் சாதகர்களுக்கு கூறிய அறிவுரை ஒன்று;
உங்களுக்கு உடல், மன, ஆன்ம ஆற்றல்கள் அதிகமாக தேவைப்படுகிறதா? அவை எங்கிருந்து வருகின்றன. அவற்றை எவரிடமும் இறைஞ்சி பிச்சை கேட்கத்தேவையில்லை. எல்லா ஆற்றல்களும் உங்களுக்குள்ளேயே இருக்கின்றது. மனிதன் என்பவன் ஆற்றலின் தொகுப்பு. ஆனால் உங்களது தவறான பழக்க வழக்கங்களாலும் அறியாமையினாலும் ஆற்றல்கள் பொதுவாக உறை நிலையில் இருக்கின்றது அல்லது இழக்கப்பட்டிருக்கிறது. இப்போது ஆற்றலைப் பெற நீங்கள் இதுவரை கொண்டிருந்த பழக்கவழக்கங்களை தலைகீழாக மாற்றி சரியானதால் நிரப்புங்கள்.
உங்களை மன, உடல், ஆன்ம வளர்ச்சியில் வளர்த்துக்கொள்ள அர்ப்பணியுங்கள். முதலில் உயர்ந்த ஆற்றல்கள் விழிப்படைவதற்கு உங்கள் மனம், உடலினை சுத்தப்படுத்தி தயாராக்குங்கள். அவை இயற்கையாகவே உங்களில் விழிப்படைய ஆரம்பிக்கும்.
முதலில் உங்கள் முயற்சியை ஆரம்பியுங்கள், உங்களுக்கு உதவ நானிருக்கிறேன். நான் உங்கள் ஆற்றலை விழிப்படைய வைப்பேன். எனது குரு மற்றவர்களுக்கு தரக்கூடிய அளவு என்னில் தேவையான அளவு சக்தியை தந்துள்ளார். இது உங்கள் அனைவரது நன்மைக்காகவும் தரப்பட்டுள்ளது. அதைப்பெறுவதற்கு உங்கள் தகுதியை வளர்த்துக்கொண்டீர்கள் என்றால் ஆற்றலை விழிப்படையவைப்பதற்கு நான் உறுதி கூறுகிறேன்.

Sunday, December 02, 2018

ஸ்ரீ அரவிந்தரின் சூக்ஷ்ம உலக விளக்கம்

ஸ்தூல சூக்ஷ்ம உலகங்களைப் பற்றிய புரிதலைப்பற்றி இப்படிக் கூறலாம்.
எல்லா உலகங்களும் ஒன்றுடன் ஒன்று கலந்த இயக்கமாக காணப்படுகிறது. உயர்ந்த உலகங்கள் கீழ் உலகங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது. கீழ் உலகங்கள் மேலுலகங்களின் ஆதிக்கத்திற்கேற்ற எதிர் விளைவுகளின் மூலம் தமது உலகின் இயக்கத்திற்குரிய சூத்திரத்தை உருவாக்கிக் கொள்கிறது. உதாரணமாக ஸ்தூல உலகத்தின் இயக்கத்திற்கான விதிகள் பிராண உலகின் ஆதிக்கத்தால் உருவாக்கப்படுகிறது. மனதின் இயக்கம் மானச உலகின் ஆதிக்கத்தால் உருவாக்கப்படுகிறது.
தற்காலத்தில் அதிமன (விஞ்ஞான மய) உலக ஆதிக்கத்தால் புவியில் அதிமன விதிகள் உருவாக்கப்படுகிறது.
இப்படி புவியில் உருவாகும் அனைத்தும் புவிக்கு அப்பாற்பட்ட சூக்ஷ்ம உலகின் ஆதிக்கத்தாலும் அதன் விளைவுகளாலும் உருவாக்கப்படுகின்றது.
இதைப்போல் சூக்ஷ்ம உலகசக்திகள் தம்மை புவிக்கு இறக்கிக் கொள்வதன் மூலமும் புவியின் இயக்கத்தில் மாற்றங்கள் ஏற்படுகின்றது. இங்கு உருவாகும் அனைத்தும் சூக்ஷ்ம உலகத்துடன் தொடர்பு பட்டிருக்கும்.
மனிதனானவன் தனது ஸ்தூல உடல் தவிர்ந்த மற்றைய உடல்களினால் இந்த சூக்ஷ்ம உலகங்களுடனும் அதன் உணர்வுகளுடன் தொடர்பு கொண்டு அதன் ஆற்றல்களை, இயக்கங்களை அறியக்கூடியவன்.

ஆரோக்கிய வாழ்விற்கான இரகசியம்

ஓம் கிரியா பாபாஜி யோக ஆரண்யம் - 10 வது ஆண்டு விழா "ஆரண்ய பிரசாதம்" இதழில் எமது "ஆரோக்கிய வாழ்க்கைக்கான இரகசியம்" கட்டுரை.

**************************************************************** 

இன்றைய நவீன மக்களின் அடிப்படைப்பிரச்சனை என்னவென்று கேட்டால் உடல் மன ஆரோக்கிய குறைவே என்பதே முதல் விடை. இன்று எமக்கு நோய் இருக்கிறது என்று கூறுவது ஒரு அடிப்படை தகுதிபோல கருதப்படும் அளவிற்கு சமூகத்தில் நோய் ஒரு அந்தஸ்தாக வளர்ந்துள்ளது.

நல்ல உடல் ஆரோக்கியம், மற்றும் தெளிவான எதையும் புரிந்து கொள்ளும் மனம் ஆகிய இரண்டும் வாழ்வின் மிகச்சிறந்த ஆசீர்வாதங்கள்

உடல் நலம் மனதின் தெளிவிற்கு அடிப்படை. உடல் பாதிக்கப்பட்டால் மனம் குழப்பமடையும் என்பது அடிப்படை விதி. ஆரோக்கியமான உடலில்தான் உறுதியான மனம் உருவாகும். உடல் நலமற்று இருந்தால் அவனில் மனம், புத்தி போன்ற அந்தக்கரணங்கள் முழுமையாக வளர்ச்சி அடையாது.

இதுபோல் நன் நடத்தையும் தெளிவான மனமும் உடையவர்கள் நல்ல உடல் ஆரோக்கியம் உடையவர்களாகவும், வலிமையானவர்களாகவும், வியாதியற்றவர்களாகவும் இருப்பார்கள்

மனமும் உடலும் ஒன்றுடன் ஒன்று இரண்டறக்கலந்த இரட்டைகள். மனதின் ஆரோக்கியமே உடல் ஆரோக்கியமாக மிளிர்கிறது. உடலின் ஆரோக்கியமே மனதின் ஆரோக்கியமாக மிளிர்கிறது.  ஆக உடல் ஆரோக்கியம் விரும்பும் ஒருவன் தனது மனதையும் உடலையும் சம அளவு முக்கியத்துவம் கொடுத்து செம்மைப்படுத்த வேண்டும். இப்படி மனதையும் உடலையும் செம்மைப்படுத்தியவர்களுக்கே உயிர்வாழ்க்கைக்கு ஆதாரமான பிராணன் எனும் உயிர்சக்தி வசப்படும்

இன்று உடல் ஆரோக்கியத்தை கெடுத்துக்கொள்ளும் பலரிற்கு ஆரம்ப புள்ளியாக விளங்குவது மனதின் கட்டுப்பாடற்ற குழப்பமும் பேராசை நிலையுமே. நாம் எதற்காக தொழில் செய்கிறோம்? அதனால் பெறும் வருமானம் வாழ்க்கையை இன்பமாக வாழ்வதற்கா? அல்லது வாழ்வின் உண்மை நோக்கத்தை அறிந்து புரிந்தா வாழ்கிறோம் என்று சிந்திப்பது ஒருவன் ஆரோக்கியமாக இருப்பதற்கான முதல் வழி

ஆரோக்கியத்திற்கான சீர்கேடு உண்மையில் மனதில்தான் ஆரம்பமாகிறது. மனதினைக்கட்டுப்படுத்துவது புத்தி என்ற பாகம் என்று சித்தர்கள் கூறுகிறார்கள். ஒருவனுக்கு இந்த புத்தி என்ற பாகம் எவ்வளவு தெளிவாக இருக்கிறதோ அந்த அளவிற்கு மனமும் கட்டுப்பாட்டில் இருக்கும்

இந்த புத்தியை தெளிவாக்குவதற்கு ரிஷிகள் கண்டுபிடித்த அற்புத தொழில் நுட்பம்தான் ஸ்ரீ காயத்ரி மந்திரம். காயத்ரி மந்திரத்தின் சுருக்கமான அர்த்தம் "புத்தியை தூண்டும் அந்தப்பேரொளியை எம்மில் இருத்தி தியானிப்போமாக என்பதாகும். காயத்ரி மந்திரத்தை பொருளறிந்து தியானத்துடன் சாதனையாக செய்துவருபவர்களது புத்தி தெளிவுற்று மனம் ஒளிபெறும். இதனால் படிப்படியாக உடல் ஆரோக்கியம் பெறும்பெறுவார்கள். உடல் மன ஆரோக்கியத்தின் முதல் படி தினசரி காயத்ரி ஜெபம்.

இன்று பலரும் தமது உணவுப்பழக்கங்களை பெரும் வியாபார நிறுவனங்கள் ஏற்படுத்தும் விளம்பரங்களின் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கிறார்கள். உடலின் ஆரோக்கியத்திற்காகவும் பசிக்காகவும் உணவு என்பதிலிருந்து விலகி நாவின் சுவையும், அந்தஸ்திற்காகவும் உணவு அருந்தும் காலத்தில் நாம் வாழ்கிறோம். பயிற்றம் கஞ்சி, பழைய சோற்று நீராகரம், குரக்கன் பிட்டு என்பவை ஏழ்மையின் அடையாளங்களாக சித்தரிக்கப்பட்டு, அறியாமையினால் உடல் ஆரோக்கியம் தரக்கூடிய மேற்கூறிய உணவுகளை தவிர்க்கிறோம்

இப்படி தவறான நம்பிக்கை, தாழ்ந்த எண்ணங்கள், சுவையுணர்விற்கான அதியாசை, உலகிற்கான ஆடம்பரமான வாழ்க்கை போன்ற முட்டாள்தனங்களால் ஆரோக்கிய சீர்கேடு உருவாகத்தொடங்குகிறது.

இதைத்தடுப்பதற்கு நாம் கீழ்வரும் பத்து பொன்மொழிகளை எமது குருமண்டலத்தின் ஆலோசனையாக தருகிறோம்.
1.     ஒருவன்/ஒருத்தி தமது காம இன்பத்தில் எப்போதும் மிதமாக கட்டுப்பாடாக இருத்தல் உடல் ஆரோக்கியத்தின் முதல் படி
2.     மனதில் மற்றவர்கள் மீது எழும் வெறுப்பு, காழ்ப்புணர்ச்சி, அசூயை, பொறாமை எதிர்ப்பாலார் மீது காம எண்ணம், கோபம், அவநம்பிக்கை, வன்மம் போன்ற எண்ணங்கள் மனதில் தோன்றும்போது விழிப்புணர்வுடன் அவதானித்து மனதில் அனுமதிக்ககூடாது. இவை எமது உண்மையான பண்புகள் அல்ல, இவையே எமது பிராணனை வீணாக்கி நோயை உண்டாக்குகிறது என்பதை ஆராய்ந்து உணரவேண்டும்
3.     குறித்த நேரத்தில் படுக்கைக்கு சென்று குறித்த நேரத்தில் தினசரி துயிலெழ வேண்டும்
4.     உடல், உடை, வீட்டுச்சூழலில் சுத்தம் பேணல்
5.     மிதமான உடல் உழைப்பு
6.     எப்போதும் மகிழ்ச்சியான மனமும், புன்னகையுடனும் இருக்கப் பழக வேண்டும்
7.     உடலை வெப்பம், குளிரைத்தாங்கக்கூடியவாறு பழக்க வேண்டும்
8.     மனம் எந்தவிதமான மோசமான புகை, குடி, தீய நட்பு, மோசமான புத்தங்கள் வாசித்தல் போன்ற அடிமைப்பழக்கங்களிலிருந்தும் உங்களை காப்பாற்றிக்கொள்ளுங்கள்
9.     எளிமையான திருப்தியான வாழ்க்கை நடாத்துங்கள். ஆசை எனும் நெருப்பில் பொசுங்கிவிடாதீர்கள்.
10. உங்கள் மன, உடல் அளவிலான முயற் சிகளை புத்திசாலித்தனமாக உபயோகியுங்கள். நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொண்ட பாதையில் தனியாக துணிவுடன் நடக்க தைரியத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்
இன்று பலரும் நோய்களை தீர்த்துக்கொள்ள யோகா செய்கிறோம், தியானம் செய்கிறோம் என்கிறார்கள். நோயின் அடிப்படை இந்த நவ நாகரீக வாழ்க்கையால் வந்த உணவும் பற்றியதும் வாழ்க்கை முறை பற்றியதுமான தவறான கொள்கைகளால், நம்பிக்கையால் வந்தவை

வாழ்க்கை முறை பற்றியும் உணவு பற்றியும் தவறான நம்பிக்கை எனும் குப்பையை உங்கள் மனதிலிருந்து அகற்றுவதன் மூலம் ஆரோக்கியத்தை பெறலாம். உணவு பற்றிய ஒப்புக்கொள்ளப்பட்ட பொன்னான விதிகள் பத்தினை இங்கே தருகிறோம்
1.     நாம் உண்பதற்காக வாழவில்லை, மாறாக வாழ்வதற்காக உண்கிறோம்
2.     ருசிக்காக ஆரோக்கியம் தராத உணவை எக்காரணம் கொண்டும் உண்ணாதீர்கள். ஒருவனுக்கு தேவையான ஊட்டச்சத்தை தரக்கூடிய உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்
3.     பசிக்காமல் ஒருபோதும் புசிக்காதீர்கள்.
4.     உணவு உண்ணும்போது அரைபகுதி உணவாலும், காற்பங்கு நீராலும், காற்பங்கு வாயுவாலும் நிரம்பியிருக்க வேண்டும். வயிறு முட்ட உண்ணுதல் என்பது ஆரோக்கிய கேட்டினை உண்டாக்கும்
5.     உணவில் அதிக மசலா, காரம், இனிப்பு போன்றவற்றால் பதப்படுத்திய உணவுகளை தவிருங்கள்.
6.     எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்ணுங்கள்.
7.     அதிக காய்கறிகளை சேர்த்துக்கொள்ளுங்கள்
8.     இரண்டு வேளை உணவு ஆரோக்கியமானது.
9.     காலை உணவு மோர், பால் கொண்ட மிதமான நீராகாரமாக இருக்கட்டும்
10. உணவு நன் கு மென்று உண்பதுடன், உண்ணும்போது மகிழ்ச்சியாகவும், சரியான தர்ம வழி வந்த உணவாகவும் இருத்தல் அவசியம்

ஒருவன் மேற்கூறிய ஆலோசனைகளை கடைப்பிடிப்பதன் மூலம் தனது உடல் மன ஆரோக்கியத்தை சிறப்பாக பேணுவான் என்பதில் எந்த ஐயமும் இல்லை


குரு அகத்திய காயத்ரி சாதனா அனுபவம் - வாழ்க்கை எப்படி சீராகியது என்று ஒரு சாதகியின் அனுபவம்

சாதனை அனுபவம்   இரண்டரை வருடங்களுக்கு முன் என்னிடம் காயத்ரி சாதனை செய்வதற்கு சுமனன் அண்ணா வழிகாட்டுகிறார் நீங்களும் சாதனை செய்ய விண்ணப்பியுங...