குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, March 26, 2019

அகத்தியரும் குடும்ப வாழ்க்கையும்


********************************
குரு நாதர் உரைத்தபடி....
அகத்தியர் என்ற உணர்வு நஞ்சினை வெல்லும் தீமையை வென்று ஒளி நிலையடைய வழிகாட்டும் பேருணர்வு எப்படி செயற்படுகிறது என்ற விளக்கமே லோபாமுத்திரை சமேத அகத்திய மாமகரிஷியாக புராணங்களில் உரைக்கப்பட்டது.
உலகிற்கு, உயிற்கு மங்களம் உண்டாக்கும் ஸ்ரீ வித்யாவினை முதலில் பூவுலக மானிடருக்கு அறியக்கூடிய வகையில் ஈர்த்தவர் அகத்தியர்! பிரம்மாண்டத்தின் ஒழுங்கினை வளத்தினை இயக்கும் உயர் உணர்வை (supra consciousnesses) இனை தனது குருவான ஹயக்ரீவரிடமிருந்து மானிடர்கள் அனைவரும் அறியும் அதிர்வு நிலைக்கு (frequency) இற்கு கொண்டுவந்தவர் அகத்தியர் பெருமான்!
இதை வேறு வகையில் சொல்வதானால் தகுதியுடைய ஒரு உயிரான்மா பூவுலகில் உயர் உணர்வை ஈர்க்க இருப்பதால் அந்த உயர் உணர்வு பூமியில் இறங்கியது. அப்படி பூமியின் உயர் உணர்வை இயக்கத்திற்கு கொண்டுவந்தவர் அகத்தியர்! இதனாலேயே பூமியை சமப்படுத்த தென்னாடு அனுப்பப்பட்டார் என்ற புராணக்கதை கூறப்பட்டது.
பூவுலகம் நச்சு எண்ணங்களால் நிறைய நிறைய அதன் பாரம் அதிகமாகி சம நிலை குழம்ப, அதை சமப்படுத்த சிவனாரால் தென்னாடு அனுப்பப் பட்டவர் அகத்தியர்!
அகத்தியரின் வேலை உலகிற்கு நன்மை செய்யவேண்டும், மனித குலம் மேம்பட வேண்டும் என்று எங்கெல்லாம் பக்குவம் உள்ள ஆன்மா எண்ணுகிறதோ அங்கெல்லாம் தனது தவத்தின் பலத்தை வித்தாக கொடுத்து மரமாக வளர்ப்பது!
தன்னை பிரபஞ்ச பேருணர்வான ஸ்ரீ லலிதையின் வடிவாகி ஸ்ரீ லலிதையை அகஸ்தியமயி என்று அழைக்கும் நிலைக்கு உயர்ந்து, தன்னுடன் ஈருடல் ஓரூயிராய் ஒன்றிய தனது மனைவி லோபாமுத்திரையையும் தான் பெற்ற தவசக்தியை ஊட்டி அவரையும் அந்த பேருணர்வு பெறவைத்து லோபாமுத்திரமயி என்று அழைக்கும் நிலைக்கு உயர்த்தினார்!
எவருக்கு இல்லறத்திலுள்ள நச்சான தீய எண்ணங்களை அகற்றி மகிழ்வான ஒளி மிகுந்த வாழ்க்கை வேண்டுமோ அவர்கள் அன்னை லோபாமுத்திரா ஸஹித ஸ்ரீ அகஸ்திய மாமகரிஷியை எண்ண அந்த உணர்வுகள் அவர்களுக்குள் விளைந்து அவர்கள் வாழ்வை ஒளியாக்கும்!
அகஸ்தியகுலபதி
15/03/2019

சாதனை ஏன் தடைபட்டுப் போகிறது?

சில அன்பர்கள் சாதனையை தொடர முடியவில்லை என்று குறைபட்டுக்கொண்டார்கள். இந்தக்காரணத்தால் எம்முடன் தொடர்பு கொள்ளாமல் இருப்பதாகவும் அறிந்தோம். இது பற்றி சில தெளிவுகளைப் பகிரலாம் என்று எண்ணுகிறோம்.
எமக்கு இருக்க வேண்டிய முதலாவது தெளிவு, நாம் ஏன் சாதனை செய்ய விரும்புகிறோம் என்பது, இந்த தெளிவு இல்லாமல் ஏதோ ஒரு மன உந்தலில் தொடங்கிவிட்டு குழப்பமடையக்கூடாது.
இரண்டாவது சாதனையில் குரு வாக்கியப்பிரமாணத்தை தவிர வேறு அதிகமாக நாம் கற்றுக்கொண்ட விஷயங்களை மனதில் ஆராய்ந்து குழப்பிக்கொள்ளக் கூடாது. எப்படி உபதேசம் பெறப்பட்டதோ அதை சிறுக சிறுக நிதானமாக பயிற்சித்து தமது சொந்த அனுபவத்தினை ஆராய்ந்து தம்மில் உறுதியை வளர்த்துக்கொண்டு சாதனையில் தொடர்ச்சியாக ஈடுபடவேண்டும்.
மூன்றாவது சாதனையில் பெறும் உபதேசம் மனித உருவில் உள்ள குருவிடமிருந்து பெற்றாலும் அது மகாகுருவின் மகா காரண சரீரத்திலிருந்து பெறப்படும் உபதேசம் என்ற நம்பிக்கை,
நான்காவது இந்த நம்பிக்கையை அறியாமையால் மனித உடலில் உபதேசம் தரும் குருவை இவர் வெறும் கருவி, நான் நேராக அகத்தியரிடமே உபதேசம் வாங்கிக்கொள்கிறோம் என்ற அறியாமை இறுமாப்பும் தவறானது, இப்படியான அறியாமை மனக்குழப்பங்களை எம்மில் ஏற்படுத்தினால் ஆழ்மனமாகிய சித்தம் நம்பிக்கையிழந்து விடும். ஆகவே உபதேசம் பெறும் குருவின் மீதான அன்பு, சரியான மனப்பண்பு என்பவையும் முக்கியமானவை. குருவிற்கு தரும் மரியாதை என்பது குருவிற்குரியது அல்ல, எமக்கு சாதனைக்குரிய மனப்பண்பை உருவாக்கிக் கொள்ளும் ஒரு பயிற்சி சென்ற உண்மையினை அறிய வேண்டும்.
ஐந்தாவது வாழ்க்கையில் தமக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு தாம் செய்த வினையின் விளைவு என்ற சுய பொறுப்புணர்வு இல்லாததும், தாம் செய்யும் சாதனை, வழிபடும் தெய்வத்தின் கோபம் போன்றவை போன்ற அறியாமை சிந்தனைகள்.
ஆறாவது, சாதனை என்பது சுய சுத்தி, சுய முன்னேற்றம் என்பதைப் புரியாமல் ஏதோ ஒரு அதீத சக்தியை, சித்தியைப் பெறும் முயற்சி என்ற பேராசை. சாதனை மூலம் எம்மை தூய்மையாக்கிக் கொள்ள நாம் உயர்ந்த தெய்வ சக்தியைப் பெறத்தகுதி உள்ளவர்களாக மாறுகிறோம். ஆகவே எம்மை சுத்தி செய்து கொள்வது மட்டுமே எமது முயற்சி அதன் தகுதிக்கு ஏற்ப எம்மில் தெய்வ சக்தி விழிப்படையும் என்ற உண்மையை அறிந்து கொள்ளுதல் அவசியம்.
ஏழாவது சாதனையை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால் தமது இயலாமையை குருவிடம் வெளிப்படுத்தி உதவி பெறும் திறந்த மனப்பான்மை இல்லாமல் தம்மில் தாழ்வுமனப்பான்மையை உருவாக்கி சாதனையை விட்டு விலக்கிச் செல்லல்.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சரியான மனப்பண்புடன் குருவுடன் பழகும் போதும், குருமண்டலத்தின் பணிகளை எமது முதற்பணியாக கொண்டு செயலாற்றும் மனப்பண்பு உள்ளவர்களுக்கு மட்டுமே மிக உயர்ந்த சாதனைகளை கற்கும், அறியும் வாய்ப்புக்களைப் கிடைக்கும் என்ற நுண்மையான அறிவு எப்போதும் இருக்க வேண்டும்.
குருபணி என்பது குருவின் ஆற்றலை நாம் பெறுவதற்கான ஒரு வழி என்பதை அறியாமல் தாம் ஏதோ குருவிற்கு உதவுவதாக எண்ணும் மனப்பாங்கு சாதனையில் உயர்வதற்கு தடையாக அமையும்.
விரக்தி, செயலாற்ற சோம்பல் ஆகியவற்றை துறவு, பற்றின்மை என எண்ணும் அறியாமையில் இருந்து வெளிவர வேண்டும்.
சாதனை தடைபட்டால் எமது கர்ம பிரபாவத்தினாலும், நாம் வாழும் சூழலினாலும் தடைபடுகிறது, இதனை நான் குருவருளுடன் மீண்டும் தொடர்வேன் என்ற சங்கல்பசக்தியால் உடனடியாக தொடங்கி பயிற்சிக்கவேண்டும். நல்ல நாள் பார்த்து சாதனை தொடங்குவதற்கு காத்திருக்கக்கூடாது.
இவை சாதனைக்குரிய சில அடிப்படை மனப்பண்புகள்.

Wednesday, March 13, 2019

அகத்தியர்

Related image

நண்பர் ஒருவர் அகத்தியரின் சரித்திரம் என்று நூல் ஒன்று பகிர்ந்திருந்தார், பலரும் அகத்தியர் எந்தக்காலத்தில் வாழ்ந்தவர் அகத்தியர் என்று பாடல்களில் இருப்பதெல்லாம் பிற்காலத்தமிழில் இருக்கின்றனவே என்றெல்லாம் பல்வேறு சந்தேகங்கள் கேட்டிருந்தனர்.

அகத்தில் உள்ள ஈசனுக்கு எப்படி காலக்கோட்டில் பகுத்த சரித்திரம் எழுதுவது.

அகத்தில் உயிரான ஈசனை அறிவிக்கும் பேருணர்வு அகத்தியம்,

அந்தப் பேருணர்வை ஈர்த்தால் அகத்தில் உருவாகும் தீ அகத்தியம்

அகத்திலுள்ள தீ - அகத்தீ - எல்லாத்தீமைகளையும், நஞ்சுகளையும் எரித்து நஞ்சை வென்ற பேரொளி நிலை தரும் உணர்விற்கு பெயர் அகத்தியம்

அகத்தியர் என்பது ஒரு பேருணர்வு - Supra conciousnesses, இந்த உணர்வை எம்மில் ஈர்க்க எம்மை தூய்மைப்பட்டுத்தும் அற்றல் அகத்தியம்.

இந்த உணர்வை பலரும் பல்வேறு காலத்தில் ஈர்த்து பெற்று அகத்தியராகவும், பல்வேறு பெயர் தாங்கியும் வெளியிட்டும் உள்ளனர்.

இந்தப்பிரபஞ்சத்தில் எதுவெல்லாம் நஞ்சை வென்று தீமையை வென்று அம்ருதத்துவத்தில் செலுத்துகிறதோ அந்த உணர்வுகளெல்லாம் அகத்தியம்.

Monday, March 11, 2019

சாதனையில் கணவன் மனைவியின் மனப்பண்புகள்ஒரு இல்லற சாதகன் தனது குருவை அண்டி காயத்ரி சாதனை பயின்று தியானத்தில் முன்னேறினான். தற்போது மனதை ஒழுங்குபடுத்தி ஏகாக்கிர சித்தியடையும் நிலையினை அடைகிறான். இப்படி மனம் ஏகாக்கிரமடைய ஒருவித சந்தோஷம் தன்னில் உருவாவதை அவதானிக்கிறான். தனது குருவுடன் பயிற்சிக்கும் போது தனது முன்னேற்றம் வேகமாக இருக்கிறது என்று உணர்ந்து கொண்டான். சிறிது நாள் பயிற்சியின் பின்னர் குரு சாதகனை வீட்டிற்குச் சென்று மனைவி பிள்ளைகளுடன் அவனது பயிற்சியை வீட்டிலிருந்தவாறு செய்யச் சொல்லுகிறார்.

குரு, நீ இந்தப்பயிற்சியால் அடைந்த நன்மையினை உனது மனைவியிடம் பகிர்ந்து கொண்டு அவளிற்கு கற்பிப்பாய் என நம்புகிறேன் என்றார்.

அதற்கு அந்த சாதகன், இல்லை குருவே அவள் என்னை திட்டுவாள், எனது சொந்த மன நிம்மதிக்காகவும், சுய நலத்திற்காகவும் தன்னை விட்டுப் பிரிந்து இந்தப்பயிற்சிகளை நான் செய்வதாக எண்ணுகிறாள், பிள்ளைகள் நான் தொழிலையும் தங்களையும் ஒழுங்காக கவனிப்பதில்லை என்று எண்ணுகின்றார்கள் என்றான்.

அதற்கு குருவோ, நல்லது, அப்படியானால் இங்கு என்னுடன் நீ சாதனையின் மூலம் பெற்ற நன்மைகளின் பெறுமதி பற்றி சரியாக உனது மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் எடுத்துச் சொல்லவில்லை என நினைக்கிறேன் என்றார்.

நான் வீட்டிற்கு சென்றவுடன் எனது மனைவி என்னை திட்ட ஆரம்பித்துவிடுவாள், ஆகவே இதன் நன்மைகளை எடுத்துச் சொல்ல எனக்கு நேரம் கிடைப்பதில்லை என்றான் சாதகன்.

 நல்லது, பயிற்சிக்கு முன்னர் என்ன சங்கல்பம் சொல்கிறோம்? புத்தியைத் தூண்டும் ஒளி மிகுந்த அந்தப்பரம்பொருள் எம்மில் உறைந்து ஞானத்தை விழிப்பித்து எனது புத்தியையும், எனது குடும்பத்தவர்கள் புத்தியையும், என்னுடன் தொடர்பு கொள்பவர்கள் புத்தியையும் தூய்மை அடையச்செய்து சரியான வழியில் செலுத்தட்டும் என்று கூறுகிறோம் அல்லவா? இப்படி எமது புத்தியை ஒளிமிகுந்ததாக்கி, சரியான ஒழுங்கினை எமது வாழ்க்கையில் கடைப்பிடிக்கும் போது எம்மில் 28 வகையான தெய்வீக பண்புகள் எமது சித்தமாக்கிய ஆழ்மனதில் விழிப்படைந்து எமது வாழ்க்கையை சீராக்குகிறது. யார் இந்த 28 வகையான தெய்வீகப்பண்புகளை தம்மில் பூரணமாக விழிப்படையச் செய்கிறார்களோ அவர்களே காயத்ரி சித்தி பெற்றவர்கள், பூரணமானவர்கள்.

இப்படிப்பயிற்சிப்பதில் எமது சாதனையின் நோக்கம் நாம் மட்டும் முன்னேறுவதல்ல, எமது குடும்பம், எம்மைச் சூழ இருக்கும் சமூகம் என அனைவருக்கும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதே சாதகர்களின் பண்பாக இருக்க வேண்டும்.

நீ தற்போது வீட்டிற்கு செல்லப்போகிறாய், இவ்வளவு நாட்களும் சாதனையினால் பெற்ற மன தெளிவும் இன்பத்துடனும் செல்லும் அதே வேளை உனது மனைவியின் மேல் அன்பும், பாசமும், பரிவும், கருணையும் உடைய மனதுடன் உணர்ச்சியுடன் வீட்டிற்குச் செல்ல வேண்டும். மனதின் ஆழத்தில் அத்தகைய பாவத்தை இருத்த வேண்டும். உனது ஒவ்வொரு பயிற்சியின் முடிவிலும் நீ பெறும் முன்னேற்றம் உனது மனைவியும், பிள்ளைகளும் பெறவேண்டும் என்று கருணையுடன் எண்ண வேண்டும். பயிற்சி முடிந்து அவளைச் சந்திக்கும் போது அத்தகைய பாவத்தில் எதிர் நோக்க வேண்டும். அவளுக்கு புரிந்துகொள்ளக்கூடிய ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் சாதனையின் பலன்களை எடுத்துச் சொல்லவேண்டும். அவள் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் அதை எடுத்துச் சொல்லுவது உனது கடமை என்பதைப் புரிந்து கொண்டு, நீ பெற்றிருக்கும் மன அமைதியும், ஆனந்தமும் அவளும் பெறவேண்டும் என கருணையுடன் பாவிக்கவேண்டும்.

இப்படி இல்லாமல் நான் ஏதோ ஒரு உயர்ந்த விஷயத்தை அறிந்து கோண்டேன், அதற்குரிய தகுதி உனக்கு இல்லை, நீ அந்தளவுக்கு புண்ணியம் செய்யவில்லை போன்ற மன நிலைகளை உருவாக்குவாயானால் நீ கூறுவது போல் உனது மனைவி புரிந்துகொள்ளாமல் உன்னைத் திட்டுவாள் என்றார் குரு.

அதற்கு சாதகன் ஆம் குருவே, நான் வீட்டிற்குச் சென்றவுடன் எனது மனது அவர்களை விட நான் உயர்ந்த நிலை பெற்றதாகவும், சாதனை செய்யும்போது கடுமையாக அவர்களைப் பார்த்து சிரிப்பதோ, ஏற்கும் மன நிலையிலோ இருப்பதில்லை, நான் எனது சாதனையை பூட்டிய அறையில் தனியாக செய்து விட்டு அதுபற்றி எதுவும் உரையாடாமல் இருந்து விடுகிறேன் என்றான்.

நல்லது, இந்தப்பண்பு சாதகனாக நீ தவறு செய்கிறாய் என்பதை நான் மேற்கூறிய உதாரணத்திலிருந்து விளங்கியிருப்பாய் என நம்புகிறேன். நீ உளமார மேற்குறித்த பாவனையுடன் அவளை மதித்துக் கூறும்போது அவள் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தைப் பெறுகிறாள், அப்படி  நீ முயற்சி செய்யும் போது அவள் தனது நீண்டகால மனப்பண்பால் எதிர்த்துக்கொண்டு இருந்தாலும் ஒரு சாதகனாக நீ எப்போதும் குறைவடைவதில்லை! ஏனெனில் காயத்ரி சாதகனின் மிக முக்கிய பண்பு எம்மைச் சார்ந்தவர்களின் ஆன்ம முன்னேற்றத்தில் பாடுபடுவது, ஆகவே உனது தர்மத்தில் நீ இலாபமடைந்தவனாகிறாய். ஆகவே நீ உனது முயற்சியில் வெற்றியடையும் வரை விடாமல் முயற்சி செய்யவேண்டும். நன்றாக புரிந்து கொள் முதல் மாற்றம் உன்னிலிருந்து வரவேண்டும், கோபமோ, சலிப்போ, எரிச்சலோ இன்றி உன்னை முன்னேற்ற எப்படி நீ பாடுபடுவாயோ அப்படி அவளது ஆன்ம முன்னேற்றத்திற்கு பாடுபடவேண்டும்.

இறுதியாக, பலருக்கும் பயன்படவேண்டிய ஒரு நீர்ச் சாடி இருந்தால் அது எவ்வளவுக்கு நிரம்பியிருக்கிறதோ, அந்த அளவுக்கு அதிகமானவர்களுக்குத் தாகத்தை தீர்க்கும், அதற்கு அதன் விளிம்பு வரை நீரை நிரப்பி வைத்திருக்க வேண்டும். தாகமுள்ளவர்கள் கட்டாயம் அருந்துவார்கள், எவருக்கும் தாகமில்லை என்ற எண்ணத்தை சாடி நினைத்துக்கொண்டு தன்னை நிரப்பாமல் இருக்கக் கூடாது. இதுபோலவே ஒரு சாதகன் மற்றவர்களுக்கு தகுதியில்லை, அவர்கள் சாதனையைப் புரிந்து கொள்கிறார்கள் இல்லை போன்ற எண்ணங்களை உருவாக்கி தம்மை வெற்றுப்பாத்திரமாக வைத்திருக்கக் கூடாது. எப்போது சாடியின் விளிம்பு வரை தம்மை கருணையாலும், பண்பாலும் நிரப்பி வைத்திருக்க வேண்டும், தாகம் வரும் நேரத்தில் குறைவில்லாமல் கொடுக்கக்கூடியவாறு, எப்போது நீ வாழ்த்தும்போது உனது மனைவி புன்னகையுடன் ஏற்றுக்கொள்கிறாளோ என்று அவளது மனமாகிய பாத்திரம் நிரம்ப ஆரம்பிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும், அதுவரை உனது முயற்சி இருக்க வேண்டும் என்றார் குரு!
சாதகனும் மன மகிழ்வுடன் தனது வீட்டிற்கு பயணமானான்!

வள்ளலார் கூறிய சடாட்சர மந்திர விளக்கம்

 வள்ளளார் கூறிய சடாட்சர மந்திர விளக்கம்;  ச -  உண்மையே சகரமாய்,  ர - விஷயநீக்கமே ரகரமாய்,  வ - நித்திய திருப்தியே வகரமாய்,  ண - நிர்விஷயமே ண...