Posts

Showing posts from April, 2014

ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் நீக்கி கிரக பலம் பெற நவக்கிரக காயத்ரி சாதனைகள்

இன்றைய உலகில் ஜோதிடத்தினை நம்பி விதியினை பழி கூறாதவர்கள் இருக்க முடியாது. கிரகங்கள் எவ்வாறு செயற்படுகிறது என்ற உண்மைகளை மறைந்து சனி உன்னை பார்க்கிறான், கெட்டகாலம் என்று கிரகங்களை பயம் கலந்த எண்ணத்தோடு ஆயிரக்கணக்கான ரூபாய்களை செலவழித்து பரிகாரம் செய்கிறோம், சாந்தி செய்கிறோம் என்று நேரத்தையும், பணத்தையும் செலவழிக்கின்றார்கள்.
எங்கும் அலையாமல் இப்படிப்பட்ட பிரச்சனையில் இருந்து மீண்டுவர வழி உள்ளதா என்றால் ஆம் உள்ளது. அந்த வழியினைத்தான் பலன் பெறவேண்டும் என்று எண்ணும் அன்பர்களுக்காக கூறப்போகிறோம். இதில் கூறப்பட்ட வழியில் நீங்கள் முயற்சித்து வேறெதனாலும் பெறமுடியாத பலன்களை துரிதமாக பெறமுடியும். இதற்குரிய தகுதி உங்கள் முயற்சியும் சிரத்தையும் மட்டுமே ஆகும்.
யாருக்கு இவை உபயோகப்படும்? யாருக்கு துன்பங்கள், தொல்லைகள் இருக்கின்றனவோ, ஜாதகத்தில் கிரக தோஷங்கள் இருக்கின்றது எனக்கூறப்படுகிறதோ, எந்தவிதமான ஜாதகக் கோளாறுகள், எந்தக்கிரங்களாவது பலமிழந்து, நீச்சமடைந்து இருப்பின் அவற்றால் நல்ல பலன்கள் பெறவேண்டி இருப்பின், வேலை கிடைக்காமை, தீராத நோய்கள், பணப்பிரச்சனை, இன்னும் பல நன்மைகள் 
எப்படி சாதனையினை தொடங்குவ…

காயத்ரி சித்த சாதனை – எளிய வடிவம்

காயத்ரி மந்திரம் உலகபொது மறை மந்திரம், இதனை ஜெபிப்பவர்களுக்கு பல அற்புத சக்திகளையும் நலனையும் தரக்கூடியது. அவற்றை நீங்கள் பெறுவதற்குரிய சித்தர்களின் ஒரு இரகசிய முறையினை இங்கு வெளிப்படுத்துகிறோம். இந்த முறையினை தினசரி பின்பற்றி வருவீர்களேயானால்  உலகில் வேறு எதனாலும் பெறமுடியாத நன்மைகளை பெறுவீர்கள். இந்த முறையினை பின்பற்றுவதற்கு எந்தவித கட்டுப்படும் இல்லை. தரப்பட்ட முறையினை உங்கள் வசதிப்படி செய்துவரலாம். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் அனைவரும் ஒவ்வொரு நாளும் அவரவர்களுக்கு வசதிப்படும் நேரத்தில் செய்து வரவேண்டும். குருமண்டல வணக்கத்தினை கட்டாயம் செய்யவேண்டும். இதுவே இந்த சாதனைக்கு கடவுச்சொல் (password) போன்றது. இதை தொடர்ச்சியாக செய்து வர உங்கள் உடலிலும், மனதிலும் தெய்வ சக்தி நிறைந்து ஒவ்வொரு அட்சரத்திற்கும் கூறப்பட்ட பண்புகளை பெற்று பேரின்ப பெருவாழ்வு வாழ்வீர்கள். ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்து கீழ்வரும் படிமுறைகளை தரப்பட்ட அறிவுறுத்தல் படி தினசரி செய்து வரவும். குருமண்டல் வணக்கம் : மூன்று தடவை கூறி மனதில் ஒளிவடிவில் தியானித்து வணங்கவும் ·ஓம் தாயே போற்றி ·ஓம் தந்தையே போற்றி ·ஓம்ஸ்ரீகாமேஸ்வரியம…

காயத்ரி மந்திர அட்சர தெய்வ சக்தி விழிப்பு சாதனை

காயத்ரி மந்திரத்தின் ஒவ்வொரு அட்சரமும் பிரபஞ்ச பிராணனிலும், மனித சூக்ஷ்ம ஸ்தூல உடலிலும் குறித்த தெய்வ சக்தியை விழிப்பித்து மனிதனுக்கு பல போக பாக்கியங்களை அளிக்க வல்லது என்பதை எமது முன்னைய கட்டுரையில் விளக்கியுள்ளோம்.
இந்தபதிவில் எமது பதிவுகளை வாசித்து, குருமண்டலத்துடன் தொடர்பு கொண்டு சாதனை புரியும் அன்பர்கள் தமது சாதனையின் பலனை துரிதமாக பெறவைக்கும் ஒரு அரிய சித்த சாதனையினை வெளியிடுகிறோம்.
இதனை பயிற்சித்து பலன் பெற  தினசரி 108 காயத்ரி ஜெபம் செய்பவராக இருக்கவேண்டும்.
இந்த சாதனை படிப்படியாக காயத்ரி மந்திர சக்திகளை உங்கள் மனதிலும், உடலிலும் விழிப்படைந்து உங்கள் உலகவாழ்க்கையின் தேவைகள் பூர்த்தியாகி ஆன்ம பாதையில் இட்டுச்செல்லும்.
இதனை பயிற்சிக்கும் முறை: முதலில் சித்தவித்யா மண்டல பத்து குருநாமம், பின்னர் 108 காயத்ரி மந்திர ஜெபம், அதன் பின்னர் காலை மாலை  மூன்றுதடவை ஆறுதலாக கீழ்வரும் சித்த சாதனையினை வாசித்து மனதில் பாவித்து வரவேண்டும், ஓம் அட்சரம் எனது ஸ்தூல சூக்ஷ்ம உடலிலும் உள்ள சஹாஸ்ரார  சக்கர சக்தியை விழிப்படைய செய்து பரப்பிரம்ம நிலையினை உண்டாக்கி தெய்வ சக்திய உடையவன் ஆக்குகிறது. நான் பரிபூரண…