Posts

Showing posts from July, 2011

சித்த வைத்தியத்தில் பாஷாணம், இரசவாதம் பற்றிய உண்மை விளக்கம் - 01

இந்தக்கட்டுரை வாசகர்களிடையே விழிப்புணர்வு நோக்கம் கொண்டு எழுதப்படுகிறது. ஏனெனில் தற்காலத்தில் சித்தர் பாடல்களை படித்துவிட்டு தமக்கு தெரிந்த பொருளில் விளக்கம் கூறி வருகின்றனர். உண்மையில் பாஷாணங்கள் சித்தர்கள் எப்படி பயன் படுத்தினார்கள் என்பது பற்றிய  விஞ்ஞான விளக்கம் பற்றி இதில் பார்ப்போம். 
சித்தர்கள் பாடலில் வைத்தியத்திற்காக பல உலோகங்களும், உலோக உப்புகளும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இவற்றைத்தான் பாஷாணங்கள் என்று கூறுகிறார்கள். பாஷாணங்கள் என்றால் "விஷம்" என்று பொருள் படும். அதாவது தகுந்த சுத்திகரிப்பு முறையின்றி உட்கொள்ளப்பட்டால் பல்வேறு கொடிய வியாதிகளையும், மரணத்தையும் ஏற்படுத்தவல்லது. இவற்றிற்கு சித்தர் பாடல்களில் சுத்திமுறை கூறப்பட்டுள்ளது. இதனை நேர்பொருளில் பார்க்கும் பல (தற்காலத்து) புரவலர்கள் அதன் படி சுத்தி செய்ததாக கூறி தம்பட்டம் அடித்துக்கொள்கின்றனர். யாராவது எடுத்துக்கூறமுற்பட்டால் அதே சித்தர் பாடல்களில் தமக்கு சாதகமான பாடல்கள் ஒன்றிரெண்டை எடுத்துக் கூறி ஆணவம் கொள்கின்றனர். ஆனால் உண்மையில் சித்தர்கள் ஆணவம் மனதுக்கேறிய மனிதர்கள் இது போன்ற விடயங்களில் மனதினை செலுத்…

சித்ரகுப்தன் கதை சூட்சுமமும் பௌர்ணமி தினமகிமையும்

சித்ரகுப்தன் என்பவர் நம் வாழ்வில் நாம்  செய்த பாவ, புண்ணிய பலன்களைக் கணக்கிட்டு நமது வாழ்நாள் மற்றும் வாழ்க்கை முடிந்தபின் சொர்கவாழ்வா? நரக வாழ்வா? என தீர்மானித்து எமனுக்கு சொல்பவர். சுருங்கச்சொன்னால் எமதர்மராஜனின் கணக்குப்பிள்ளை. இவரைப்பற்றிய கதைகளை கீழ்வருமாறு வகைப்படுத்தலாம். 
பார்வதி தேவி வரைந்த சித்திரம் அவராலேயே உயிர் கொடுக்கப்பட்டது, சித்திரத்தில் இருந்து உயிர் பெற்றதினால் சித்திரகுப்தா என பெயர் பெற்றார்.
சித்திரை மாதத்தில் பிறந்த புத்திரன் ‘சித்திரபுத்திரன்’ சித்ரகுப்தன் எனப்பட்டார். 
இவற்றை விட இவரது பெயர் கூறும் இன்னொரு விடயம் என்ன வெனில் "சித்ரம்" என்றால் வரையப்பட்டது என்று பொருள், குப்தம் என்றால் மறைக்கப்பட்டது என்று பொருள். 
இனி இவர் பற்றிய மேற்கூறிய புராணக்கதை பற்றிய சூட்சுமத்திற்கு வருவோம்; 
முதலாவது பார்வதி தேவி வரைந்த சித்திரத்திற்கு உயிர் கொடுக்கப்பட்டார் என்பது, பார்வதி தேவி உலகினை படைத்த சக்தி, அந்த சக்தியின் ஒருபகுதி தான் மனச்சக்தி, மனச்சக்தி தெய்வமனம் (divine mind), ஆகாய மனம் (Cosmic mind), மனித மனம் (Human mind) என இயங்குகிறது. தெய்வமனத்தின் ஒரு கூறுதான் ஆக…

ஏகலைவன் கதையின் சூட்சுமம்

ஏகலைவன் என்பவன் வேடர் இனத்தைச் சேர்ந்தவன். வித்தையில் ஆர்வமுள்ள இவன் துரோணரிடம் வந்து தன்னைச் சீடனாக ஏற்று மன்னர்களுரிய சகல வித்தைகளையும் கற்றுத் தர வேண்டுகிறான். ""க்ஷத்தியர்களுக்குரிய வித்தையை வேடனான உனக்கு கற்றுத் தரமாட்டேன், என மறுத்து விட்டார் துரோணர். வேடனுக்கு தேவை விலங்குகளை வேட்டையாடும் அம்பெய்யும் கலை தான். மற்றவை எதற்கு என்பது துரோணரின் வாதம். ஏகலைவனுக்கு மிக்க வருத்தம். ஆனாலும், முயற்சியுடையவன் எதிலும் வெற்றி பெற்றே தீருவான். தன்னை துரோணர் ஜாதி துவேஷம் காட்டி ஒதுக்கி விட்டாரே என அவன் அவர் மீது கோபப்படவில்லை.
மரங்களுக்கு தீ வைக்கவில்லை. அவரது ஜாதிக்காரர்களை அடித்து உதைக்க வேண்டும் என்று எண்ணவில்லை. அவன் துரோணரைப் போலவே ஒரு மெழுகு சிலை செய்தான். அந்த சிலையை உயிருள்ள துரோணராகக் கருதி, அவரைத் தன் மானசீக குருவாக ஏற்று, துரோணர் அவரது சீடர்களுக்கு கற்றுக் கொடுக்கும் அத்தனை வித்தையையும் கற்றுத் தேறி விட்டான். பல ஆண்டுகள் கடந்தன. ஏகலைவனை மறந்தே போய் விட்டார். துரோணரின் முகமும் இவனுக்கு மறந்து விட்டது. ஒருநாள் நாய் ஒன்று வாயைத் திறக்க முடியாமல் அங்கே வந்து நின்றது. அதன் வ…

ஓம் அகஸ்திய மகரிஷியே நமஹ

Image
ஓம் அகஸ்திய மகரிஷியே நமஹ

குருவணக்கம்

உடல்தந்துநல்வழிப்படுத்தியஎன்னைபெற்ற அன்னையின்திருவடிபோற்றி
ஞானகுருவாம்அகஸ்தியமாமகரிஷியைசிறுவயதுமுதல்வழிபடவழிகாட்டிய தந்தையின்திருவடிபோற்றி
ஆதிகுரு அகத்திய மகரிஷி குருவின் பாதம் போற்றி!
குலகுருவாய் வித்தை அளித்திட்ட மௌனகுரு சித்தர் பாதம் போற்றி
மானச குருவாய் ஆத்ம யோக ஞான வித்தைகளின் சூட்சுமங்கள் புரிவித்த ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர தேவரின் பாதம் போற்றி!
சித்த நெறியில் தீட்சை அளித்திட்ட காயத்ரி சித்த முருகேசுகுருவின் பாதம் போற்றி!


ஸ்ரீ வித்தையினை பூரண தீட்சை தீட்சை அளித்திட்ட

ஸ்ரீ அன்னப்பூர்ணா அம்பா ஸஹித அமிர்தானந்த நாதர் பாதம் போற்றி