Posts

Showing posts from October, 2016

காயத்ரி சாதனா சித்திக்கான வழிமுறைகள்

காயத்ரி உபாசனை/சாதனை சித்தி பெறுவதற்குரிய வழிமுறைகள் பற்றி யுக ரிஷி பண்டிட். ராம் சர்மா ஆச்சார்யா அவர்கள் தமது வாழ்க்கை குறிப்பில் கூறிய அறிய விடயங்களை எனது வாசிப்பு குறிப்புகளாக குறித்து வைத்திருந்தேன். அவை அனைவருக்கும் பயன்படும்படி இங்கு பதியப்படுகிறது.  இந்த குறிப்புகள் உண்மையாக சாதனா வாழ்வை பயிற்சித்து ரிஷி பரம்பரையில் வாழ விரும்புபவர்களுக்கு ஒரு அறிய வழிகாட்டி.

1.ஆன்மீக வளர்ச்சி அடைய வாழ்க்கை மூன்றுவித சாதனைகளை கொண்டிருத்தல் வேண்டும்; ஒளி a.உண்மையான தெய்வ உபாசனை b.சாதனை அல்லது ஆன்ம சாதனை – அறத்தில் இருந்து வழுவாமல் ஒழுக்கத்திற்கு உட்பட்டு வாழ்க்கையினை வாழுதல். c.ஆராதனை – தான் உதித்த மனித குலம் மேம்பட தகுந்த உதவிகளை செய்தல். 2.மனிதன் தான் உயிர் வாழ உணவு, உடை, உறையுள் எப்படி அவசியமோ, தாவரத்திற்கு மண், நீர், சூரிய ஒளி எப்படி ஒன்றில்லாமல் வளர்ச்சி பூரனமாகாதோ அப்படி ஆன்மீக வளர்ச்சிக்கு மேற்கூறிய மூன்றும் அவசியம். 3.தெய்வ உபாசனை : உபாசனை என்பது அருகில் இருத்தல் என்று பொருள் படும். ஒருவன் பிரபஞ்சத்தை ஆளும் மகா சக்தியின் அருகில் இருக்க வேண்டும் என்றால் அதற்கு தகுந்த தகுதி இருக்க வேண்டும் …

தீபாவளியும் மகாலக்ஷ்மி அருளும்

Image
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!  தீபாவளி என்பது பலகாரம் உண்ணவும், பட்டாசு சுடவும் என்பதை தாண்டி ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் தனது மனதில், உடலில் இருக்கும் இருளை அகற்றி முன்னேற வேண்டும் என்று சங்கல்பிப்பதற்குரிய நாளாக எமது முன்னோர்களால் கொண்டாடப்பட்டிருக்கிறது. தீபாவளி இரவு மனித வாழ்க்கையின் எல்லா வளங்களுக்கும் குறியீடான ஸ்ரீ மகாலக்ஷ்மியை பூஜிப்பதற்குரிய நாளாக குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று மகாலக்ஷ்மியை பூஜித்துவிட்டால் (ஆடம்பரமாக செலவு செய்து லஞ்சம் கொடுத்துவிட்டால்) தமக்கு பணம் வந்து சேர்ந்து விடும் என்று லக்ஷ்மி பூஜை செய்பவர்கள் ஏராளம். இது வெறும் அறியாமை! மகாலக்ஷ்மி என்பது ஒருவன் தனது வாழ்வில் முன்னேற கைக்கொள்ள வேண்டிய தத்துவம். காத்தல் கடவுள் விஷ்ணுவும் மனைவி லக்ஷ்மி என்று கூறுவதன் உள்ளார்ந்த தத்துவ விளக்கம், ஒருவன் தனது வாழ்க்கையின் கடின உழைப்பால் அடையும் நன்மைகளை லக்ஷ்மி என்ற பண்பினை கொண்டு நிலைத்திருக்க செய்ய வேண்டும் என்பதே! மகாவிஷ்ணு என்பது மனிதனின் ஆன்மாவின் ஆற்றல் என்றால் அந்த ஆன்ம ஆற்றலுக்கு இருக்க வேண்டிய பண்பே மகாலக்ஷ்மி தத்துவம். இதனை விளங்கி கொள்ள மகாலட்சுமி எ…