குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, April 30, 2020நம்பிக்கை - மனப்பாங்கு - செயல் - ஒழுங்கு
****************************
Belief - Attitude - Action - Order
No photo description available.

சமஸ்க்ருதத்தில் நம்பிக்கையுள்ளவன் என்பதற்கு ஆஸ்திகன் என்று சொல்லப்படும். பலரும் நம்பிக்கையுள்ளவன் என்பதை கடவுள் நம்பிக்கை என்ற அளவிலேயே இந்தச் சொல்லை பயன்படுத்துகிறோம்.
நாஸ்திகன் என்றால் கடவுள் நம்பிக்கை அற்றவன் என்று கூறுகிறோம், ஆனால் அதன் அர்த்தம் உண்மையில் நம்பிக்கையை இழந்தவன் என்பதாகும். நம்பிக்கை அற்றவன் என்பதற்கு இழந்தவன் என்பதற்கும் மிக நுண்மையான வேறுபாடு இருக்கிறது. கடவுள் என்ற நம்பிக்கையே அற்றவன் வேறு எதையாவது நம்பலாம். இந்தியத்தத்துவத்தில் கூறுவதானால் பெரும்பாலும் லோகாயதவாதியாக இருக்கலாம்; அல்லது பொருள்முதன்மைவாதியாக இருக்கலாம். நாஸ்திகன் என்றால் தான் ஏற்கனவே நம்பிக்கொண்டிருந்ததில் நம்பிக்கையை இழந்தவன்! நாஸ்திகம் என்பது நம்பிக்கை இழப்பு முதல் படி; அதன் பிறகு இதுதான் எனது நம்பிக்கை என்று தனக்கு நம்பிக்கை ஏற்படுத்திக்கொள்வதால் லோகயாவாதியாகவோ - பொருள்முதன்மை வாதியாகவோ மாறுவது கட்டாயம்.
நம்பிக்கை ஏற்பட்டவுடன் அவன் ஆஸ்திகனாகிவிடுவான்; ஆக மனிதனிற்கு நம்பிக்கை முக்கியமாகிறது. ஏன் நம்பிக்கை முக்கியம் என்பதற்கு மனதின் செய்கையைப் புரிதல் அவசியம்.
ஒருவன் தனது நம்பிக்கைக்கு ஏற்றவகையிலேயே தனது மனப்பாங்கினை (attitude) வளர்க்கிறான். பின்பு தனது மனப்பாங்கிற்கு அமையவே செயலைச் செய்வான். இந்த மூன்றும் மிகவும் தொடர்பு பட்ட ஒன்று.
ஒருவன் ஒரு செயலை ஒழுங்காகச் செய்யவில்லை என்றால் அவனதுக்கு அந்தச் செயலின் மீது சரியான மனப்பாங்கு இல்லை; சரியான மனப்பாங்கு இல்லாததற்கு காரணம் தான் செய்யும் செயலில் நம்பிக்கை இன்மை என்பதாக இருக்கும்.
நம்பிக்கையீனனாக இருப்பது மனதினை ஒழுங்காக செயற்படுத்துவதற்கு தடையானது, நம்பிக்கையீனது மனப்பாங்கு செயலை ஒழுங்காகச் செய்ய விடாது.
ஆகவே ஒரு செயல் சரியாக நடைபெற வேண்டுமாக இருந்தால் அந்தச் செயல் மீதான் நம்பிக்கை சரியாகக் கட்டியெழுப்பப் பட வேண்டும், அந்தச் செயலுக்கான சரியான நம்பிக்கை சரியான மனப்பாங்கினை உருவாக்கும், சரியான மனப்பாங்கு உறுதியான செயலினை உருவாக்கும்.

Wednesday, April 29, 2020

மற்றவர்களின் சாதனை அனுபவங்கள் எமக்கு என்ன பலனைத் தரும்?

மற்றவர்களின் சாதனை அனுபவங்கள் எமக்கு என்ன பலனைத் தரும்?
****************************************************
மற்றவர்களது சாதனை அனுபவங்கள் எமக்கு பயனுள்ளதா?
இதற்கு ஆம், இல்லை என்ற இரண்டு பதில்களும் பொருத்தமானது.
எப்படி ஆம் என்பதைப் பார்ப்போம்;
 1. சாதனை பற்றி எமக்கு சரியான நம்பிக்கை இல்லை என்ற நிலையில் இருக்கும் போது மற்றவர்கள் சாதனையின் பலன்களை கூறும்போது எமது மனம் உற்சாகமடையும்.
 2. அவர்களால் இவ்வளவு முடியும் எனும் போது நம்மாலும் முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்கிக் கொள்ளமுடியும்.
பலன் எதுவும் இல்லை என்பது எப்படி என்பதைப் பார்ப்போம்;
 1. நாம் இவ்வளவு நாள் செய்கிறோம் ஒரு முன்னேற்றமும் இல்லை, இவருக்கு மாத்திரம் எப்படி சாத்தியம்? என்ற எண்ணம் உள்ளவருக்கு.
 2. இவர் எதோ இரகசியமான முறைகள் வைத்திருக்கிறார்; அவற்றை நாமும் அறிந்துகொள்ள வேண்டும் என்று பதட்டப்படுபர்களுக்கு
 3. என்னைவிட முன்னேறிய ஒருவர் இருக்கிறாரா என்ற அசூயை தோன்றுபவர்களுக்கு,
சாதனை தொடர்ச்சியாக செய்வதற்குரிய இரகசியம் எவை என்பது பற்றிய சில குறிப்புகளை நிரல் படுத்தியுள்ளோம்;

 1. குரு கூறிய உபதேசத்தை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சிரத்தையாக தினசரி செய்வோம் என்ற மனப்பாங்கு இருந்தால் சாதனை ஒழுங்காக நடைபெறும்.
 2. எம்மை எவருடனும் ஒப்பிடாமல், சாதனையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், ஆனால் சங்கல்பத்திலும் சித்த சாதனையிலும் கூறப்படும் பண்புகளை வளர்ப்பதற்குரிய முயற்சியில் ஈடுபடும் சிரத்தை இருந்தால் சாதனை ஒழுங்காக நடைபெறும்.
 3. குருவிடம் முரண்படாத அகங்காரம் அற்ற ஏற்பு நிலையுள்ள மனம் இருந்தால் சாதனை ஒழுங்காக நடைபெறும்.
 4. வாழ்க்கையின் தினசரி உணவு, உறக்கம் அடிப்படை கடமைகளில் சாதனையும் ஒன்று என்ற உணர்வுப்பூர்வமான எண்ணம், இது இருந்தால் வேலைப்பளுவால் சாதனை செய்யவில்லை, வீட்டு சூழலால் சாதனை செய்யவில்லை என்ற காரணங்கள் வலுவற்றதாகப் போய்விடும்.
 5. எமது நம்பிக்கைகளே (Belief) எமது மனப்பாங்கினை (attitude) உருவாக்குகிறது, மனப்பாங்கு எமது செயலினை (action) உருவாக்குகிறது. சாதனை என்பது செயல் என்றால், அதற்குரிய மனப்பாங்குகள் நாம் சங்கல்பத்திலும், சித்த சாதனையிலும் உள்ள பண்புகள், இவற்றில் எமக்கு நம்பிக்கை இல்லாமல் எமது அகம் இருக்குமானால் சாதனை தடைப்படும்.
 6. நான் இன்ன ஜாதியைச் சேர்ந்தவன், எனது ஜாதி உயர்ந்தது என்ற நம்பிக்கை (Belief) உள்ளவன் மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற மனப்பாங்கினை (Attitude) உருவாக்குவான், இந்த மனப்பாங்கு வலுப்பெற தான் உயர்ந்தவன், மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற செயலில் இறங்குவான். இதே உதாரணம் சாதனையிலும் பொருந்தும். தான் ஒரு லக்ஷம், இத்தனை லக்ஷம் ஜெபம் செய்ததால் சாதனையில் உயர்ந்து விட்டதாக நம்பத் தொடங்கி, மற்றவர்கள் தாழ்ந்திருப்பதாக நினைக்கத் தொடங்கினால் சாதனை செய்யும் மனப்பாங்கு (attitude) போய் விடும், பின்பு சாதனை வெறுமனே ஒரு அகங்கார செய்கையாக, தற்பெருமையாகப் போய்விடும்.
 7. ஆகவே சாதனையில் வரும் அனுபவங்களை நாம் உயர்ந்து விட்டோம் என்ற நம்பிக்கையாக எடுக்காமல் முன்னேறிக்கொண்டிருக்கிறேன் என்ற நம்பிக்கையாக மாத்திரம் கைக்கொள்ள வேண்டும். அப்போது தான் சாதனை தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கும். இந்தப்பிரபஞ்சத்தில் ஒவ்வொரு அணுவும் மற்றொன்றில் இருந்து ஈர்த்து வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது. ஆகவே சாதனை என்பது முடிவுள்ள ஒன்று அல்ல! தொடர்ச்சியான செயல்!
 8. ஆகவே மற்றவர்களின் சாதனா அனுபவங்களைப் படிக்கும் போது அன்னத்தைப் போல் உங்களுக்குத் தேவையானவற்றை மாத்திரம் எடுத்துக்கொள்ளுங்கள், அவை உங்களுக்குப் பயன்படுமா என்பதை உங்கள் குருவிடம் கேட்டு பின்னர் கடைப்பிடிக்க முயலுங்கள்!
 9. சாதனையின் ஆரம்பத்தில் எல்லோருடைய சட்டையும் (சாதனை முறையும்) ஒரே போல் இருப்பதால் எப்போதும் அப்படி இருக்கும் என்று நம்பி குழம்பி விடாதீர்கள்! வளர்ச்சிக் கேற்ற வகையில் வெட்டித்தைக்க வேண்டும் என்பதை தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்! ஆகவே காலத்திற்கு காலம் சட்டையை தையல்காரனிடம் (குருவிடம்) கொடுத்து வெட்டித் தைத்துக்கொள்ளுங்கள்!

Tuesday, April 28, 2020

சாதகர் அனுபவம்; லகு அனுஷ்டானம், லக்ஷ காயத்ரி ஜெப பூர்த்தி

லகு அனுஷ்டானம் - 27 மாலை அனுபவம்

1.முதலில் நான் எப்படி செய்ய போகிறேன் என்ற கேள்வி என்னுள் இருந்தது ஏதுவாக ஆயினும் குரு மண்டலம் இடம் கூறி விட்டோம் அவர்கள் தம்மை வழி நடத்துவார்கள் என்று இருந்தேன். அதே போல் முதல் வாரம் வேலைக்கு எனக்கு மட்டும் சிஸ்டம் விட்டிற்கு வரவில்லை. ஆகையால் அந்த 1 வீக் 27 மாலை செய்து முடிக்க முடிந்தது. அடுத்த வாரம் வேலை வந்தது அப்பயும் முன் வாரம் 27 மாலை செய்த அனுபவம் இருந்ததால் இந்த வாரம் உம் செய்ய முடிந்தது 🙏 

இதனால் குரு மண்டலம் மீதான நம்பிக்கை மிகவும் வந்தது. அவர்கள் இடத்தில் பிராத்தனை செய்ததால் செய்ய முடிந்தது என்று. 

2. ஆரம்ப காலத்தில் நான் செய்து முடிக்க அதிக நேரம் எடுத்தது. சில நாட்கள் பிறகு நான் வேகமா செய்ய தொடங்கினேன் ஒரு சக்தி என்னை இழுத்து கொண்டு போவது போல் உணர்தேண். அவபொழுது காயத்ரி தேவி, லக்ஷ்மி தேவி, காளி தேவி,ஒளி,கண்ணையா யோகி குரு, காயத்ரி முருகேச குரு,Amirthananda ஸ்வாமிகள் அவர்கள் அனைவரும் ஒரு நாள் காயத்ரி சாதனை செய்யும் பொழுது அவர்கள் உருவம் தோன்றியது.

3. நீங்கள் அனுஷ்டானம் முடியும் நாள் அன்று மாலை 6 மணிக்கு தியானத்தில் உட்காரும் படி கூறினீர்கள் வேலை இருந்ததால் என்னால் தியானத்தில் உட்டகார முடியவில்லை அதனால் அன்று சிறிது ஒரு மாதிரி இருந்தது. 


4. அனுஷ்டானம் முடியும் தருவாயில்  எனக்கு வேலை பளு அதிகமா இருந்தது மனதில் ஒரு விதமான பதற்றம் இருந்தது இருந்தாலும் நாம் எடுத்த சங்கல்பம் செய்து முடிக்க வேண்டும் என்று மன உறுதி உடன் செய்து வந்து ஏப்ரல் 14 தேதி அன்று முடித்தேன் குரு 🙏 இனிமேல்  எபோழுது இந்த மாதிரி 27 மாலை செய்ய போகிறேன் என்ற எண்ணம் தோன்றிய பொழுது கண்களில் நீர் வந்தது 🙏 

5. ஒரு லட்சம் முடிக்க வேண்டும் என்று மன உறுதி உடன் செய்து முடித்தேன். ஆனால் அடுத்த நாள் நானா ஒரு லட்சம் காயத்ரி ஜெபம் பூர்த்தி செய்து உள்ளேன் என்று எனலே நம்ப முடியாமல் இன்றும் இருக்கிறேன். 

மறுபடியும் முதலில் இருந்து தொடங்குவது போல் ஒரு உணர்வு. வார அறிக்கை அனுப்பும் பொழுது ஒரு லட்சம் என்று பார்க்கும் போது இன்றும் பிரமிபாக உள்ளது.

ஆனால் இப்பொழுது ஏதோ நான் காயத்ரி ஜபம் செய்ய வேண்டாம் என்று என்னை தடுத்து நிறுத்துவது போல் உணர்கிறேன். அதையும் தாண்டி மன மிடம் நானே இல்லை செய்ய வேண்டும் என்று கூறி கொண்டு செய்து வருகிறேன். இன்று சில நாட்கள் கழித்து மிகவும் ஆனந்தமாக இருப்பதை உணர்கிறேன் 🙏


*********************************************************************************************************************
வணக்கம் குரு,

ஒரு லட்சம் பூர்த்தி செய்த அனுபவம்
(March 25th 2019 to 26th April 2020)

(இது வரை என் வாழ்வில் ஒன்றை இவளோ நாட்கள் தொடர்ந்து செய்து வந்தது இல்லை 🙏

  நான் அன்றும் உங்களை காண வார நேரம் இல்லை என் என்றால் அன்று எனக்கு வேற ஒரு கிளாஸ் இருந்தது நான் என் மாமாவிடம் கேட்டேன் அவர்களை பார்ப்பது மிகவும் முக்கியமாக என்று அவர்கள் அமாம் என்று கூறினார்கள் சரி என்று தங்களை பார்க்க வந்தேன் அப்பொழுது தங்களின் பேச்சில் இர்க்க பட்டேன் முதல் நாள் பின்பு தங்களின் நம்பரை குரு என்று மொபைலில் சேர்த்து கொண்டேன். அடுத்த நாள் நீங்கள் யாகம் செய்யும் முன் ஒரு லேட்சர் குடுதிர்கள் எப்படி யாகம் செய்ய வேண்டும் என்று அப்பொழுது தங்களின் உடலில் இருந்து ஒரு 2cm ஒரு வெள்ளை ஒளியை கண்டேன் அன்று மிகவும் இர்க்க பட்டேன் இப்படி தான் தொடங்கியது தங்களின் மீது உள்ள காதல் 😁)

1. என்ன நடந்தாலும் காயத்திரி ஜெபத்தை அனைத்து நாட்களும் செய்து வர வேண்டும் என்ற எண்ணம்

2. காயத்ரி தேவி மேல் நம்பிக்கை வந்தது

3. நீங்கள் கூறினால் அதை சிரத்தையாக செய்ய வேண்டும் என்ற எண்ணம். 

4. அமைதியாக மூச்சை கவனிக்க வேண்டும் என்ற எண்ணம். கண் முடி அமைதியாக இருக்க வேண்டும் என்ற உணர்வு

5. மாமிச உணவு ஐபொழுது எல்லாம் உண்பது இல்லை. (From August 2019 to Today - 4 முறை மட்டுமே உண்டு இருப்பேன் அதுவும் நண்பர்கள் வீட்டிற்கு சென்ற பொழுது அவர்கள் செய்து விட்டதால் சாப்பிட நேர்ந்தது. இந்த வருடம் முதல் நாள் சாப்பிட்டேன் அவளோ தான்)

6. ஒளி தெரிவதை உணர முடிகிறது சில தருணங்களில்.

7. ஒரு வேளை செய்ய தொடங்கினாள் அதில் முன்பை விட இபொழுது அதிகம் ஈடுபாட்டுடன் செய்கிறேன்.

8. வீட்டில் அம்மா கோவத்தில் ஏதோ கூறினார்கள் என்றால் நானும் அவர்களுக்கு ஏதோ குறி கொண்டு இருந்தேன் ஆனால் இப்பொழுது அவ்வாறு கூர வேண்டாம் என்று எண்ணம் தோன்றியது பின்பு அவர்கள் கூறும் கருத்தை ஏற்று அதை சரி செய்ய வேண்டும் அவர்கள் கூறும்படி இனி நடக கூடாது என்ற எண்ணமும் தோன்றியது.

9. நம்மை சுற்றி நடபதை கவனிக்கும் திறன் முன்பை விட இபொழுது வளர்ந்து உள்ளது.

10. குரு மண்டலம் மீது உள்ள நம்பிக்கை மிகவும் அதிகம் ஆகி உள்ளது.

11. சாதனை அல்லது மற்ற தருணங்களில் தேவி உருவம் மனதில் தோன்றும் பொழுது அல்லது ஒருவர் மற்ற நபர்கு உதவி செய்யும் பொழுது,கடவுள் படத்தை பார்கும் பொழுது கண்களில் நீர் வருகிறது.அதுவும் சட்டு என்று வருகிறது 🙏 

12. படம் பார்ப்பதில் ஆர்வம் மிகவும் குறைந்து விட்டது. 

13. தேவையில்லாத பேச்சில் போவதில் இடுபாடு இல்லை.

14. மற்றவர்களை காய படுத்தி விட கூடாது என்ற எண்ணம் முன்பே என்னிடம் இருக்கும் இப்பொழுது மிகவும் அதிகமா இருப்பதை எனொட எண்ணம் மற்றும் செய்யலில் உணர முடிகிறது.

14.முன்பை விட இப்பொழுது ஏற்படும் பாதிபில் இருந்து மீண்டு வந்து உள்ளேன்.

15. உடலை பற்றியும் மனதை பற்றியும் தெரிந்து புரிந்து கொள்ள வேண்டும் மற்றும் சித்த மருத்துவம் பற்றியும்  ஆர்வம் வந்து உள்ளது.

16. ஆன்மிகத்தில் ஆர்வம் மற்றும் யார் வாழ்க்கையை புதிதாக பார்க்க வேண்டும் என்று எண்ணம் உள்ளர்களோ (அதாவது எபோழுதும் கஷ்டமா இருகிரார்களோ அல்லது  வாழ்க்கை மேல் வெறுப்பு உணர்வு உள்ளவர்களாக இருக்கிறார்களோ) அவர்களிடம்  காயத்ரி சாதனை புத்தகத்தை குடுத்து வருகிறேன். 
என் அப்பாவும் இபொழுது செய்ய தொடங்கி உள்ளார்கள் 😁🙏இது வரை அம்மா அப்பா தம்பி நான் செய்து வருகிறோம். அதாவது ஒரு குடும்பமாக செய்து வருகிறோம். இது அனைத்து குடும்பத்திற்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றி எனது  தோழின் அப்பா இடத்தில் குடுத்தேன் அவர்களும் செய்து வருகிறார்கள் ஆனால் சில நாட்கள் விட்டு விடுகிறார்கள்.இது அனைத்திற்கும் நான் தங்களை சந்தித்து இர்க பட்டதே காரணம்  ஆகையால் தங்களுக்கும் குரு மண்டலத்திற்கு காயத்ரி தேவிகும் நன்றி குரு 🙏

சாதகர் அனுபவம்: அனுஷ்டானம் -லக்ஷப்பூர்த்தி

கீழ்வரும் சாதனா அனுபவம் குருமண்டலத்திடம் சாதனை பயின்ற ஒரு சாதகர் தனது காயத்ரி அனுஷ்டானத்தின் அனுபவத்தை எழுதி அனுப்பியுள்ளார். மற்ற சாதகர்களுக்கு ஒரு உத்வேகமாக இருப்பதற்காக இங்கு வெளியிடுகிறோம். 

ஸ்ரீ ஸக்தி சுமனன்

*************************************************************************

இந்த முறை வசந்த நவராத்திரி காயத்ரி அனுஷ்டானம் Lockdown Period இல் சரியாக  March 24,,2020 (செவ்வாய் கிழமை ) அன்று  மாலை  10 மாலை அகத்தியர் மூல குரு மந்திரத்துடன் ஆரம்பித்தது. குரு ஏற்கனவேய குழுவில் இந்த காயத்ரி லகு அனுஷ்டானத்தை முடிந்த அளவு அனைவரும் பயன்படுத்திக்கொள்ள சொல்லி இருந்தார்.

நான் எனது இச்சா சக்தியை   என்னுடைய அனுஷ்டான நோக்கங்களை நிறைவேற   எனது இலக்குகளை நிர்ணயிய்துகொண்டு உறுதியுடன் அந்த இலக்குகளை நோக்கி பயணிக்க Lockdown  எவ்வளவு நாள் நீடிக்க்கீறதோ அத்தனை நாட்களும் தினமும் 27 மாலை காயத்ரி சாதனை செய்யவேண்டும் என்று குருமண்டலத்தையும், மூலகுரு அகஸ்தியரையும், காயத்ரி தேவியையும் வேண்டி எனது அனுஷ்டானத்தை தொடங்கினேன்.

உண்மையில் எனது சங்கல்பம் மலைப்பாக தான் இருந்தது. ஆனால் எனது இச்சா சக்தி உன்னால் முடியும் என்று சொன்னது  .

Lock down முதல் ஸ்டேஜ்  April 14,2020 வரை அறிவித்து இருந்தார்கள். முதலில் மனம் பல கேள்விகளை கேட்டு கொண்டு இருந்தது. உன்னால் முடியுமா ? 9 நாட்கள் அனுஸ்டானமே முதலில் கடினம் ? எப்படி   21 நாட்கள் (stage 1) முடியும் வரை இந்த சாதனையை தொடரமுடியும். மேலும் வீட்டில் அனைவரும் இருந்தனர். சாதனை செய்யும் பொழுது பலவித தடங்கல் வரும் கட்டாயம் 21 நாட்கள் சாதனையை முடிப்பதே கடினம்  என மனது கேள்விகளை கேட்டுக்கொண்டு இருந்தது   .Work From Home  என்றுதான் பெயர். ஆனால் ஒரு நாளைக்கு எனது வேலை 12 மணிநேரம் வேறு  மறுபுறம் நீண்டு கொண்டிருந்தது . இரவு பகல் என எப்பொழுதும் நேரம் பார்க்காமல் பல Office telephones calls வேறு வரும் சூழல்.
மனதை முதலில் 9 நாள் அனுஷ்டானத்தை எந்தவித தடங்கலும் இன்றி நிறைவேற்றலாம் பிறகு  பார்த்துக்கொள்ளலாம் என்று அனுஷ்டானத்தை தொடங்கினேன்.
தினமும் அதி காலை 4 மணிக்கு எழுந்து குளித்துவிட்டு அனுஷ்டானத்தை மிகச்சரியாக 4:30 தொடங்கினேன். எப்பொழுதும் என்னுடைய சாதனையின் பொழுது காயத்ரி தேவியின் பஞ்சமுக படமும் , மூலகுரு அகஸ்தியர் படமும் , கண்ணைய யோகி குருவின் படமும், காயத்ரி சித்த முருகேச குருவின் படங்களின்  முன்னாள் மெல்லிய விளக்கு ஒளியில் சாதனை செய்வது வழக்கம் . மேலும் நான் சாதனையை கண்ணை மூடிக்கொண்டு புருவ மத்தியை பார்த்து செய்வது வழக்கம்
 முதல்நாள் அனுஷ்டானம் (25 Mar 2020)  முடிக்க 5.30 மணிநேரம் ஆனது. உடல் வலித்தது , முதுகு வலித்தது, கால்கள் மரத்து போனது  மனம் . ஆனால் ஓரளவு அமைதியுடன் இருந்தது. ஆனால் 27 மாலை எப்பொழுது முடியும் என மனம் பரபரத்துகொண்டே இருந்தது. இரண்டாம் நாளும் மூன்றாம் நாளும் இதே மனநிலையுடன் சாதனை தொடர்ந்தது.

3 வது நாள் காலையில் சாதனை முடிந்தவுடன் ஒரு போன். எனது மாமா  பாத்ரூமில் வழுக்கி விழுந்துவிட்டார். சுயநினைவு சரியாக இல்லை. அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தாகவேண்டும் என்று. எல்லா ஆஸ்பத்திரியிலியும் கொரோன காரணமாக எந்தவித நோயாளிகளையும் அனுமதிக்காத சூழல். Lockdown என்பதால் CAR ஓட்ட கூட அனுமதியில்லை. மேலும் ஆம்புலன்ஸ் வேறு கிடைக்கவில்லை. எனது மாமா இருந்தது ஒரு 20 KM தொலைவில். CAR ஓட்ட தெரிந்த ஒரே நபர் நான் மட்டும்தான். குருமண்டலத்தையும் , ஈஸ்வர பட்ட குருவையும் மனதார வேண்டிக்கொண்டு எனது CAR ஐ எடுத்துக்கொண்டு அவரை காப்பாற்றிட வேண்டும் என்ற நம்பிக்கையில் கிளம்பினேன்

அரசு மருத்துவமனை மட்டும் தான் இயங்கி கொண்டு இருந்தது அங்கு  செல்வதில் உள்ள கடினம் என்னவென்றால் சிறிது காய்ச்சல் அவருக்கு இருந்தாலும் கொரோன வார்டில் போட்டு விடுவார்கள் ஏற்கனவேய அவருக்கு சிறுநீரக கோளாறு மற்றும் இரத்த அழுத்தம் வேறு.. மிகப்பெரிய டாக்டர்கள் கூட நோயாளிகளை பார்க்க வர இயலாத சூழல்
வழியில் பலத்தடைகளை தாண்டி அவரை அவசரமாக அழைத்து கொண்டு  ஒரு Private Multi Specialty ஆஸ்பத்திரியை அடைந்தேன். அங்கு முதலில் அவரை அனுமதிக்க மறுத்தனர். அவர் நிலைமை வேறு மோசமாகி கொண்டு இருந்தது. எவ்ளவு சொல்லியும் கேட்காமல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கூறிக்கொண்டே இருந்தனர். யாராக இருந்தாலும் நாங்கள் இங்கு ADMIT செய்ய மாட்டோம் என்று கூறிவிட்டனர்

நேரம் இவ்வாறு கடந்து கொண்ட நிலையில் திடீரென ஒரு எண்ணம் உதித்தது. எனது மாமா கடந்த 7 வருடங்களாக  தனது சிறுநீரக சிகிச்சைக்கு அதே மருத்துவமனைக்கு தான் சென்றுகொண்டு இருந்தார். எனவேய அவருக்கு எப்பொழுதும் சிகிச்சை தரும் உயர் மருத்துவர் அனுமதி அளித்தால் அவரை ஒருவேளை அனுமதிப்பார்கள் எனவேய அவர் பெயரை சொல்லி அவரிடம் பேசிப்பார் என்று தோன்றியது. அந்த கடினமான சூழலில் அந்த எண்ணம் தோன்ற காரணம் கட்டாயம் காயத்ரி தேவிதான்.

அவருடன் பேசியவுடன் அவர் சொன்னார் அவர் வீட்டிற்கு யாரும் வெளிநாடுகளில் இருந்து வராமல் இருந்தால் அவருக்கு காய்ச்சல் இல்லாமல் இருந்தால் அவரை நான் இங்கு ADMIT செய்ய சிபாரிசு செய்கிறேன் (With Exception). ஒருவேளை இதில் எதாவது ஒன்று உண்மை என்றால் கட்டாயம் அனுமதி கொடுக்கமாட்டேன் என்று சொன்னார் But  நீங்கள் இதில் எந்தவித பொய் சொன்னால் கூட பாதிப்பு அனைவருக்குமே ஏன் என்றால்  கொரோன அப்படிப்பட்டது என்று சொன்னார்.

நான் இரண்டும் இல்லை என்று உறுதி  செய்த பிறகு (நம்பிக்கை தான் ). அவரை EMERGENCY Ward இல் ADMIT  செய்தனர். அவர்கள் டெஸ்ட் எடுத்து காய்ச்சல் இல்லை என்று உறுதி படுத்தி, பிறகு பிளட் டெஸ்ட் செய்து CCU vil அனுமதித்தனர். ஒரு 6 மணி நேரம் கழித்து அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார் இன்னும் CCU மூன்று நாட்கள் கண்காணிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். நான்தான் அவருக்கு அட்டெண்டர்(His son and daughter unable to come due to un availability of buses , absence of rental cars from home town)  .

அவரது மகளுக்கும் மகனுக்கும்  தகவல் சொல்லி இனி பயப்பட ஒன்றும் இல்லை என கூறிவிட்டு இரவு முழுவதும் HOSPITAL இருந்தேன். மறுநாள் காலை எப்படி காயத்ரி அனுஷ்டானம் செய்யமுடியம் என்பதை பற்றி சிந்தித்து கொண்டே சரியான தூக்கம் இல்லாமல் இரவு இருந்தேன். அபாயகட்டத்தை தாண்டி நன்றாக உள்ளார் என டாக்டர்கள் சொல்லிவிட்டனர். காலை 8 மணியளவில் அவரது மகள் ஊரிலிருந்து வந்துவிட்டார். இதன் பிறகு தான் இனி பார்த்துக்கொள்வதாக கூறவே நான் 10 மணி அளவில் வீடு திரும்பினேன்.

தூக்கம் இல்லாததால் உடல் தூங்க கெஞ்சியது. மனைவி மற்றும் மகனிடம் அடுத்த 4மணிநேரம் என்னை தொந்திரவு செய்யாதீர்கள் என கூறிவிட்டு நான் எனது தனி  ரூமிற்க்கு சென்று படுத்தேன். ஒரு நொடி எனது காயத்ரி லகு அனுஸ்டான சங்கல்பம் நினைவிற்கு வந்தது.உள்ளிருந்து ஒரு குரல்” எழுந்து குளித்துவிட்டு சாதனையில் உட்க்கார் என்று. எதைப்பற்றியும் யோசிக்காமல் குளித்து விட்டு குருமண்டலத்திற்கும் காயத்ரி தேவிக்கும் எனது மாமாவை காப்பாற்றியதற்கு நன்றி சொல்லிவிட்டு 4 வது  நாள் சாதனைக்கு  சுமார் காலை  10:30 மணி அளவில் அமர்ந்தேன்  .

பிறகு என்ன நடந்தது எப்படி நடந்தது தெரியவில்லை. 27  மாலை காயத்ரி யுடன்  சாதனை  முடித்துவிட்டு கண் திறந்தேன் . மணி நண்பகல் 1:30 ஆகி இருந்தது. அந்த 3 மணிநேரம் 3 நிமிடங்களாக கடந்தது போன்று உணர்வு.. சரியாக சாதனை முடிந்தவுடன் எனது மகன் அறைக்கதவை தட்டி சாப்பிட வரசொன்னான்.

பிறகு அடுத்த நாளில் இருந்து இருந்து 5th day to 8 th day. சாதனை வழக்கம் போல் அதிகாலை 4:30 மணியில் தொடங்கிவிடும்.

சிலநாட்கள்
1.      4.5 மணிநேரம் 4 நிமிடங்கள் முடிந்தது போல் இருக்கும். சாதனை முழுவதும் உணர்வில்லாமல் சலனம் இல்லாமல் இருப்பேன் சாதனையின் போது என்ன நடந்தது என்றேய் தெரியாது. அன்று முழுவதும் மனம் மிக அமைதியாக இருக்கும்.
சில நாட்கள் பல புதிய அனுபவங்கள் .
1.      என்னுடைய பூத உடல்  லேசாக இருப்பது போன்று உணர்வு  பிறகு என்னுடைய சூட்சும உருவத்தில் வானில் பள்ளத்தாக்குகளில் பறந்ததை போல உணர்வுகள்
2.      நான் அமர்நாத் கோவிலுக்கு சென்று அந்த இடத்தை  நேரில் பார்த்து தரிசனம் செய்தது போன்ற காட்சிகள்.
3.      இருட்டு ஒளிவெள்ளம் மாறிமாறி மஞ்சள் பச்சை வெண்மை என்ற ஒளிவெள்ளம் சூழலில் சிக்கி தவித்த உணர்வு.
4.      கண்களில் மின்னலை போன்று ஒளி பட்டு தெறித்து சிதறிய நிகழ்வுகள்
5.      சாதனையின் போது ஒவொரு 20 நிமிடத்திற்கும் உடல் முழுவதும் மின்சாரம் பாயும் உணர்வுகள்
6.      சில விசித்திர உருவங்கள் பிராணிகளை (இதற்கு முன் பார்த்திராத உருவங்கள்) பார்த்த காட்சிகள் அந்த உருவங்களை எப்படி சொல்வதென்று விளக்குவதென்று தெரியவில்லை
7.       பிறகு கண்ணைய யோகி குரு என்னை பார்த்து கண்சிமிட்டிய கைவிரல் அசைத்த  நிகழ்வுகள்
 அன்று முழுவதும் மனம் மிக உற்சாகமாக  இருக்கும்.

இந்த அனுபவங்கள் அனைத்தையும்  குருவிடம் சாதனையின் நடுவில் பகிர்ந்து கொண்டிருதேன். April 1 ,2020 அன்று மேற்க்கூறிய எனது அனுபவங்களை கேட்டு குரு என்னிடம் பேசினார்.

1.      எனது மனதில் விகற்ப ஆற்றல் உள்ளதாகவும் அதனை ஒருமுக படுத்த பழக வேண்டும் என்று அறிவுறுத்தினார்
2.      மேலும் சித்த சாதனையின் குணங்கள் மற்றும் பண்புகள் உங்களுள் எவ்வாறு பிரதிபலிக்கின்றன என்பதை கூர்ந்து கவனியுங்கள் என்றும் கூறினார்।
3.      உங்களுடைய மேற்கூறிய அனுபவங்கள் அனைத்தும் மாயை அல்ல எனினும் உங்களுடைய சாதனையின் முன்னேற்றத்தை அவை தடுக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.
4.      மேலும் நீங்கள் தேவை இல்லாத முன்ஜென்ம நினைவுகளை அவசியமில்லாத விடயங்களை தெரிந்து கொள்வீர்கள். இவை உங்களுடைய சாதனையின் பாதையில் இருந்து உங்களை  விலகி போக செய்யும்.

உங்களுடைய முக்கிய நோக்கம் சித்த சாதனையின் பண்பு மற்றும் குண மாற்றங்கள். எனவேய இவைகளில் இருந்த்து விலகி சாதனையை மட்டுமே Focus செய்யுங்கள் என்று கூறினார் . மேலும் என்னிடம் நீங்கள் எவ்வாறு சாதனை செய்கிறீர்கள் என்று கேட்டார் ?

கண்ணை மூடிக்கொண்டு செய்கிறேன் என்று சொன்னதற்கு இனிமேல் நீங்கள் கண்ணை மூடாமல் காயத்ரி தேவியின் பஞ்சமுக உருவங்களையும் ஆதங்களையும் பார்த்து சாதனை செய்ய நாளையில் இருந்து பழகுங்கள் பிறகு  அதன் அனுபவங்களை பற்றி பேசலாம் என்று வழிகாட்டினார்

பிறகு 9 வது நாளிலிருந்து எனது சாதனை பின் வருமாறு மாறியது. பஞ்ச முக காயத்ரியின் உருவப்படத்தை பார்த்தும் குருமார்களின் உருவங்களை பார்த்தும் சாதனை செய்ய ஆரம்பித்தேன்

1.      குருமண்டல நாமாவளி – 1 சுற்று
2.      அகஸ்தியர் மூல குரு மந்திரம் – 1 மாலை
3.      லகு அனுஸ்டான சங்கல்பம் - 1 முறை
4.      காயத்ரி மந்திர ஜபம் – 27 மாலை
o   காயத்ரியின் பஞ்ச முகங்கள்  - 5 மாலை
o   காயத்ரி தேவியின் பாதம் – 1 மாலை
o   காயத்ரி தேவியின் 10 கைகள்( வரம், அபயம், ஆயுதங்கள்) – 10 மாலை
o   காயத்ரி தேவியின் முழு உருவம் – 2 மாலை
o   காயத்ரி சித்த முருகேசகுரு உருவப்படம் பார்த்து – 3 மாலை
o   கண்ணைய யோகி குரு உருவப்படம் பார்த்து – 3 மாலை
o   மூல குரு அகத்தியர் உருவப்படம் பார்த்து -3 மாலை
5.      காயத்ரி சித்த சாதனை – 3 முறை
6.      அருளோடு செல்வம் ஞானம் பிரார்த்தனை -3 முறை
7.      மேற்கூறிய  அனைத்தும் முடிந்த பிறகு
·        உடலின்  சக்கர இதழ்களை கொண்டு காயத்ரி தியானம் – 1 மாலை
·        காயத்ரி யின் 28  அட்சரங்களுக்கு உரிய – 28 உடல் பாகங்களுக்கு ஒளி பாய்வதை போல் பாவனை/ தியானம்
·        முக்த வித்ரும பஞ்சமுக தியானம் – 2 முறை

இன்றுடன் எனது 35 வது நாள்  சாதனை முடிந்தது இந்த வசந்த நவராத்திரி லகு அனுஷ்டானத்தில் மட்டும் 100,000(1 லட்சம்) காயத்ரி மந்திரத்தை முடித்துள்ளேன்

 என்னுடைய மாற்றங்கள்
1.      இச்சாசக்தி
·        இச்சா சக்தி யின் உண்மையை மேன்மையை உணர்ந்து அனுபவிக்க முடிந்தது
·        மனது எவ்ளவோ மறுத்தாலும் உங்களுடைய மனதை அடக்கி சாதனையை செய்ய தொடங்கினால் ,எந்தவித தடங்கலும் இல்லாமல் உங்களுடைய சாதனை தொடரும். பிறகு சாதனையே உங்களை வழி நடத்தி உங்களுடைய சாதனையை தடங்கல் இல்லாமல் பார்த்து கொள்ளும்.
·        சாதனைக்கு சிறு தடங்களோ, சாதனையின் போது குடும்பத்தினரின் குறுக்கீடுகளோ, சாதனையின் போது ஒரு ஆபீஸ் போன் கால்களோ கூட குறுக்கிடவில்லை
2.      ஒழுங்குமுறை நேர மேலாண்மை
·        தினமும் இந்த 35 நாட்களும் மாலை 6 மணிக்கு பிறகு, தடங்கல் இல்லாமல் ஸ்ரீவித்யா சாதனை செய்ய முடிந்தது
·        24 மணி - நேர மேலாண்மையில் பின்வரும் நேர்த்தியான ஒழுங்குமுறை வந்தது
o   6 மணி நேரம் சாதனை,  (காலை & மாலை)
o   8 மணி நேரம் ஆபீஸ் வேலை,  
o   3 மணி நேரம்  புத்தகங்கள் வாசிப்பு,
o   1 மணி நேர மதிய ஓய்வு
o   6 மணி நேர கனவுகள் இல்லாத ஆழ்ந்த உறக்கம்
·        தினமும் அதிகாலை 4 மணிக்கு எந்தவித அலாரமும் இல்லாமல் தானாகவே விழிப்பு வந்துவிடுகிறது

3.      எண்ணங்கள்
·        சாதனையின் போது எண்ணங்கள் எவ்வாறு வருகின்றது, அதன் மூலம் என்ன,  ஏன் வருகிறது என்பதை பற்றி ஆராய முடிந்தது.
a. பெரும்பாலான(80%) - என்னுடைய எண்ணங்களுக்கு காரணம் அன்றாட நடக்கும் ஆபீஸ் நிகழ்வுகள் , மற்றும் என்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடைய செயலினால் பேசுவதால் வரும் எண்ணங்கள்.
b.சில எண்ணங்களின் (20 %) - மூலத்தை புரிந்து கொள்ள முடியவில்லை.. அது ஏன் வந்தது என ஆராய்ந்த போது சித்தத்தின் பதிவுகளில் இருந்த வாசனைகளை உணர்ந்துகொள்ள முடிந்தது
c. சாதனையின் போது உருவாகும் எண்ணங்களை (எரியும்  அக்னியில் நெய்யில்  தோய்த்த  சமித்து போட்டு எரிப்பது மாதிரி) எனது எண்ணங்களின் மூலத்தை பிராணனுடன் கலந்து நெற்றிக்கு மையத்தில் அக்னி குண்டம் எரிவதாக பாவித்து அந்த எண்ணங்களை சமித்து போல் குருவை நினைத்து எரித்ததாக பாவித்து சாதனை செய்ததால் அந்த எண்ணங்கள் மீண்டும் உருவாக வில்லை.
d.அந்த நிலைகளில் மனம் சலனமற்று நீண்ட நேரம் விழிப்புணர்வுடன் உணர்வில்லாமல் இருந்தது.
e. அதை மீறி சில சமயங்களில்  உருவாகும் எண்ணங்கள் சித்தத்தில் இருந்த்து உருவாகின்றது என்பதை உணர முடிந்தது ।பிறகு சித்தத்தை முழுவதுமாக லாக் செய்வது மாதிரி பாவித்ததால் அந்த எண்ணம் மீண்டும் உருவாக முடியாமல் அங்கேயே மறைவதை உணர முடிந்தது இதன் பேர்தான் சித்த விருத்தி நிரோதம் என்று சித்தம் சொல்லாமல் சொல்வது போல் இருந்தது.
f.  எண்ணங்கள் உருவாகும் விதத்தை  அதன்  இயல்புகளை மிக நெருக்கத்தில் இருந்து ஆராய்ய முடிந்தது.
g.எண்ணங்களின் தாக்கம் மனதில் இருந்தும்  சித்தத்தில்  இருந்தும் குறைந்தால், மனது  சலனப்படாமல் இருந்ததால்   சாதனை செய்யும் கால அளவு வெகுவாக குறைந்தது ( Reduced from 4.5- 5 hours to 3-3.5 Hours)

உடல் மாற்றங்கள்
·        சித்த லகு அனுஷ்டானம் ஆரம்பிக்கும் முன்  இருந்த சாதனை ஆரம்பிக்கும் போது இருந்த உடல்வலியோ கால் மரத்து போவது  போன்ற உடல் வலிகள் மறைந்துவிட்டன
·        முதுகுதண்டினை  நேராக  நீண்ட நேரம் வைக்கும் முயற்சிகள் வெற்றிபெற்றன
·        நீண்ட சாதனையின் போது இயற்க்கை உபாதைகளை வெளியேற்றும் நிகழ்வுகளோ உடல் சோர்ந்து போனதுமாதிரி நிலைகளோ வரவில்லை
·        பிராணன் அதிகம் இருந்ததால் அவ்வளவாக பசிக்கவில்லை . ஒருநாளைக்கு சிறந்த மதிய உணவும், இரவு இலகுவான எளிய உணவுகளோடு (பால் வாழைப்பழம் )உடல் திருப்தி பெற்றது.
·        எந்த வித உடல் உபாதைகளும் ஜீரண கோளாறுகளும் வரவில்லை.
·        முகம் மிக பொலிவுடன் காணப்பட்டது .சோம்பல் ,விடயங்களை தள்ளிப்போடும்  உணர்வுகள் வரவே இல்லை.

பண்பு மாற்றங்கள் 
·        எண்ணங்களின்   இயல்பு கடந்த  காலம் மற்றும் எதிர்காலம் ஆகிவைதான் என்பதை உணரமுடிந்ததால் மனதை நிகழ்காலத்திலே  வைத்துக்கொள்ள  முடிந்தது.  மூச்சு போக்கினை கவனித்ததில் மனது நிகழ் காலத்திலே இருந்தது. எண்ணங்களின் உற்பத்தி வெகுவாக குறைந்தது
·        கோபம் சுயநலம் ஆணவம் பகை போன்ற உணர்வுகள் உருவாகவில்லை
·        மிக சிறந்த  ஆன்மிக புத்தகங்களை படித்ததால் அதை மனது அசைபோட்டு கொண்டு இருந்தது ஏன் நல்லவற்றை பற்றிஎஹ் எண்ணவேண்டும் என்ற உண்மை புரிந்தது 
·        சந்தோஷங்களையும்  துன்பங்களும் ஒரேய மாதிரியாக பார்க்க  முடிந்தது மனதின் உடலின் பரபரப்பு குறைந்தது நடப்பதை காட்சிப்பொருளாக பார்த்து அதனை ரெபிளெக்ட் செயும்ம்  தன்மை அதிகரித்தது.
·        வெட்டி பேச்சு வீண்கதை போன்றவைகளுக்கு இடமே இல்லாமல் நாட்கள் சென்றது
·        தைரியமும் தன நம்பிக்கையும் அதிகரித்தது
·        ஏதன் மேலும் பற்றில்லாமல் அதே சமயம் பற்றுஅற்று இருக்கும் தன்மை உருவானது  . 
The Things I can use are only for my convenient,  but me never gonna have association and those Belongs to me , With and without also my mind have same kind of feelings ..these kind of thoughts were started to flow
·        Conflict handling became very efficient.
·        Never hurted any in these days.
·        Happily able to accept criticism about me without any hesitations and justifications
·        Well balanced positive mindset .Calm and composed.
Able to travel with the things directions rather than how I wish it should h

Saturday, April 25, 2020

யோகசாதனையும் சூரிய சந்திர இயக்கமும்

யோகசாதனையும் சூரிய சந்திர இயக்கமும்
**************************************************************
குறிப்பு: இந்தப்பதிவு ஜோதிடப்பதிவு அல்ல, யோகத்தில் எப்படி பிரபஞ்ச இயக்கத்தின் துணை பெறுவது என்பதற்கான ஒரு சிறு பரிந்துரை
**************************************************
Image may contain: possible text that says 'Phases of the Moon Moon First Quarter Quarter Waxing Waxing Gibbous Crescent RTH Full Moon Moon New Moon Moon Waning Waning Gibbous Gibbous Crescent Last Quarter The earth and moon spin and orbit together around the sun.'
ஒரு யோக சாதகரின் கேள்வி,
அமாவாசை, பௌர்ணமி தினங்கள் விடுமுறை தினங்களாக சில யோகா நிறுவனங்கள் அறிவிக்கின்றன. இதற்கான காரணம் பௌர்ணமி மூச்சின் நிறைவு என்றும் அமாவாசை மூச்சற்ற நிலை என்றும் கூறுகிறார்கள், ஆனால் சம்பிராதாயப்பூர்வமாக அமாவாசை பௌர்ணமி தினங்கள் பொதுவாக சடங்கு ரீதியாக திருவிழாக்களாக கொண்டாடப்படுகிறது, ஆகவே இந்தத்தினங்களில் என்ன யோகப்பயிற்சிகளை செய்யலாம்?
பொதுவாக எமது கலாச்சாரத்தில் நாம் இரண்டு வகை பிரபஞ்ச இயக்கங்களை நாட்காட்டியாக பயன்படுத்துகிறோம்.
1) சூரிய நாட்காட்டி : தமிழ் மாதப்பிறப்பு, சூரியன் ஒரு இராசியிலிருந்து இன்னொரு இராசிக்கு செல்வது
2) சந்திர நாட்காட்டி: அமாவாசை தொடங்கி அடுத்த அமாவாசை வரை, அமாவாசை என்பது சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்வது, அதாவது 0 பாகையில் இருக்கும் நிலை.
இனி இந்த சூரிய சந்திரனாகிய இரண்டு கிரகங்களும் மனித உடலில் உயிரினதும், மனதினதும் பிரபஞ்ச கூறுகள். அதாவது எது எமது சூரிய மண்டலத்தில் மையமாக சூரியனாக இருக்கிறதோ அது மனித உடலில் உயிராகவும், எது பிரபஞ்ச சக்தியை பூமிக்கு கொண்டுவரும் regulator ஆக பிரபஞ்சத்தில் சந்திரனாக இருக்கிறதோ அது மனித உடலில் மனமாக இருக்கிறது என்பதையும் எமது ரிஷிகளும் சித்தர்களும் தமது அனுபவத்தில் உணர்ந்திருக்கிறார்கள். இவை இரண்டினது இயக்கம் மனிதனைப் பதிப்பதில் முதன்மையானது.
ஆகவே எமது செயலை பிரபஞ்ச இயக்கத்திற்கு ஒத்திசைவாக (harmony with solar system) ஆக அமைத்துக்கொண்டால் நாம் அதிகமாக பிரபஞ்ச சக்தியை கவர்ந்து பயன்பெறலாம் என்று சாத்திர சாங்கியங்களை வகுத்தார்கள்.
இது எப்படி என்றால் நாம் ஒருஊரிலிருந்து இன்னொரு ஊருக்குப் போகிறோம், அதற்கு அரசாங்கத்தின் இரயில் சேவை இருக்கிறது, அது நேரத்திற்கு செல்கிறது, அது செல்லும் நேரத்திற்கு எமது பயணத்தை ஒத்திசைய வைத்தால் எமக்கு செலவும் குறைவு, பயணமும் இலகுவாக இருக்கும்! இரயிலில் போவது சாலையில் போவதை விட பாதுகாப்பாகவும் இருக்கும்.
இப்படி ஒத்திசையாமல் எமது மனம் போன போக்கில் பயணம் செல்வதானால் செலவும் அதிகம், சிலவேளை விபத்தும் நடக்கலாம்! ஆனால் பணக்காரனும், திறமையானவனுக்கும் இந்த பயணம் இலகுவாகவும், வசதியானதாகவும் இருக்கும்.
இனி கேள்விக்கு வருவோம்,
சூரியன் - உயிர்
சந்திரன் - மனம்
பூமி - உடல்
யோகம் என்பது உடலை ஒழுங்கு படுத்தி, மனதை ஒழுங்குபடுத்தி, பிராணணை (உயிரை) ஒழுங்கு படுத்தி ஒரு நேர்கோட்டில் இணைப்பது.
இந்த இணைப்பு பிரபஞ்சத்தில் ஒரளவு அமாவாசை, பௌர்ணமி தினங்களிலும், கிரகணகாலத்தில் மிகச்சரியாகவும் நடக்கிறது. ஆகவே ஒரு யோக சாதகன், குறிப்பாக ஆரம்ப நிலை சாதகன் பிரபஞ்ச இயக்கத்தை தந்து முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்.
அமாவாசை அன்று சூரியனும், சந்திரனும் , பூமியும் ஒரளவு நேர்கோட்டில் வரும், இது கிரகணகாலத்தில் மிகச் சரியா நேராக வரும். பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் நிற்கும். இதை உடலில் ஒப்பிட்டுப்பார்ப்பதானால் இந்த நாட்களில் உடல், மனம் , உயிர் என்பவை ஒருவித சம நிலை அடையும். அமாவாசையில் உடலிற்கும் உயிரிற்கும் நடுவில் மனம் சிக்கிக்கொள்ளும்! உண்மையில் ஆன்ம சாதனைக்கு மிக உகந்த நாள்! மனம் ஒடுங்கக் கூடிய வாய்ப்புக்கு பிரபஞ்சம் ஒத்துழைக்கும் நாள்! இந்த நாட்களில் மனதினூடாக செய்யும் காரியங்களுக்கு பூரண மனச் சக்தி இருக்காது. ஆகையால் மனதை ஒடுக்கும் பிரத்தியாகாரம் போன்ற பயிற்சிகளுக்கு உகந்த நாள்! எனினும் மனம் ஏற்கனவே தான் பெற்ற பதிவுகளால் உயிரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகுவதால் ஏற்கனவே சித்தத்தில் பதிந்த பதிவுகள் கட்டுப்பாடு இல்லாமல் கொந்தளிக்கச் செய்யும்! ஆகவே ஏற்கனவே உங்கள் சித்ததில் என்ன பதிப்பித்தீர்களோ அவை உயிரின் கட்டுப்பாடு சற்றுத் தளர்வதால் அறிவு தளர்ந்து மனம் கொந்தளிக்கும்.
பௌர்ணமி அன்று சந்திரன் சூரியனுக்கு 180 பாகை எதிரில் நின்று பூமிக்கு சக்தியை வீசும், இந்த நாளில் மனம் அதிக பலம் பெற்றிருக்கும், மனதிற்கு உயிரின் ஆற்றல் பூரணமாக கிடைக்கும். எனினும் மனதில் உள்ள எண்ணங்களை ஒழுங்கு படுத்தி தாரணை, ஏகாக்கிரம் பயில உகந்த நாள்.
இந்த அடிப்படையில் மற்றவற்றைச் சிந்தித்து அறிந்து கொள்ளுங்கள். ஆசனப்பயிற்சி என்பவை உடலுடன் தொடர்புடையவை, பூமி தினசரி சுற்றுகிறது, ஆகவே தினசரி ஒரு ஒழுங்கில் ஆசனப்பயிற் சி செய்வது சரியானது!
ஆனால் மன, பிராணப்பயிற்சிகள் சந்திர சூரிய சுற்றுடன் தொடர்புடையவை! மனம் சுத்தியான நிலையில் உள்ளவர்கள் இந்த சூரிய சந்திர சுற்றினால் பாதிக்கப்படுவதில்லை! இதனால் தான் பதஞ்சலியும், திருமூலரும் இயம நியமத்தைப் பின்பற்றச் சொன்னார்கள். இயம நியமம் பின்பற்றி மனச்சுத்தி உள்ள எவரும் இந்த விஷயங்களை எடுத்துக்கொள்ளத் தேவையில்லை!
ஆகவே இயம நியமப் பயிற்சியில் முறையாக யோகம் பயிலும் எவரும் இவற்றை பேரிதாக எடுத்துக்கொண்டு குழம்பத்தேவையில்லை!
எமது அனுபவத்தில் சாதனையின் ஆரம்ப காலத்தில் பயிற்சியை இலகுவாக்க இந்த விதிகளைப் பயன்படுத்தலாம்! உயிரின் ஆற்றல் இவை எல்லாவற்றையும் supersede செய்யும்.
எந்த சாதனையாக இருந்தாலும் மூன்று மண்டலங்கள் (45x3= 135) நாட்கள் விடாமல் பயிற்சிக்க இந்த சுற்றின் தாக்கத்திலிருந்து வெளிவந்து குறித்த சாதனை எமது இயல்பாக மாறும்! இது ஒரு பொதுவிதி தமது ஆழ்மனமாகிய சித்தத்தை அளவிற்கு மீறிக் கெடுத்து வைத்திருப்பவர்கள் இதற்கு மேலும் சிலகாலம் முயற்சி செய்யவேண்டியிருக்கும்
ஆகவே இந்த விதிகள் ஆரம்ப சாதகர்களுக்கு பொருத்தி, தொடர்ச்சியாக மூன்று மண்டலங்கள் செய்வித்து, அவர்கள் முன்னேற்றத்தை ஆராய்ந்து ஒருவர் யோக சாதனை தனது இயல்பாகி முன்னேறுவார்கள்!

யோகப்பயிற்சிகள் எப்படி உடலுக்கு ஆரோக்கியம் தருகிறது? - ஓர் அறிவியல் பார்வை
மனிதனது தொற்றா நோய்க்கான காரணங்களில் முதன்மையானது மன அழுத்தம், மன அழுத்தம் உடலில் தாக்கும்போது தலைவலி, வயிற்றுப்புண், வயிற்றுக்குழப்பம் என்பவற்றினூடாக உடலில் சம நிலையை ஆரம்பத்தில் குழப்பி நீண்டகாலத்தில் இதய நோய், நீரிழிவு, எலும்பு வலுவிழத்தல், சில ஆய்வுகள் தகவல்படி புற்று நோய் என்பவற்றை உருவாக்குகிறது.


உடலின் கட்டுப்பாடு தன்னியக்க நரம்பு மண்டலத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. இதுவே இதயம், கல்லீரல், குடல் முதலிய அக உறுப்புக்களை கட்டுப்படுத்துகிறது.

இந்த தன்னியக்க நரம்பு மண்டலம் இரண்டு பிரிவுகளாக அதன் செயற்பாட்டிறு ஏற்ப பிரிக்கப்பட்டுள்ளது.

முதலாவது பரிவு நரம்புத்தொகுதி (sympathetic nervous system) இது உடலை வேகமாக இயக்குவதற்குரிய பொறிமுறையை கொண்டிருக்கிறது.

மற்றையது பரபரிவு நரம்புத்தொகுதி (parasympathetic nervous system) இது முன்னையதற்கு மறுதலை வேலையை செய்கிறது. அதாவது உடலை ஓய்வுபடுத்தப்படுத்த தேவையானவற்றை செயற்படுத்துகிறது.

பரிவு நரம்புத்தொகுதியின் செயற்பாடு வடிவமைக்கப்பட்டுள்ள நோக்கம் மனிதன் ஆபத்து சூழ் நிலையில் விரைந்து செயற்படுவதற்குரிய உடலியக்கங்களை ஏற்படுத்துவதற்காகும். தன்னைச்சூழ ஒருவித ஆபத்து, சண்டை இருக்கிறது என்று மனம் உணர்ந்தவுடன் அது மூளையின் ஹைபோதலமஸும், ப்ரிட்யூடரி சுரப்பியும் இதை உணர்ந்துகொண்டு அதரினல் சுரப்பியை தூண்ட அது Cortisol எனும் ஹோர்மோனை வெளிவிடுகிறது. இந்த ஹோர்மோன் உடலை சூழ் நிலைக்கு தகுந்த வாறு அதிக இரத்த ஓட்டத்தையும், உடலின் இயக்கத்திற்கு தேவையான சக்கரை அளவையும் தற்காலிகமாக உயர்த்தி உடலை ஒருவித அவசர நிலவரத்திற்குள் கொண்டு வருகிறது.

இந்த அவசர நிலவரம் முடிந்த பின்னர் பரபரிவு நரம்புத்தொகுதியினூடாக (parasympathetic nervous system) உடலை ஓய்வுக்குள் கொண்டுவருகிறது. அதிகமாக பாய்ச்சப்பட்ட இரத்தம் மீள்பெறப்பட்டு உடல் சீராக்கப்படுகிறது.

இனி மன அழுத்தம் பற்றிப் பார்த்தால் சரியான ஒழுக்கமில்லாத, மனதைப்பயிற்றுவிக்காதவர்கள் பிரச்சனை வரும்போது மனதை இயக்கிய அவசர நிலவரத்திலேயே எப்போதும் தம்மை வைத்திருப்பார்கள். உண்மையான புறச்சூழல் ஆபத்தோ, அவசரமாக இல்லாவிட்டாலும் தாமாக, சுயமாக பரிவு நரம்புத்தொகுதியை தூண்டி தம்மை ஒருவித அழுத்தத்திற்குள் வைத்திருப்பதால் அவர்கள் உடல் எப்போதும் Cortisol இனை அதிகளவு கொண்டிருக்கும். இப்படி தொடர்ச்சியாக உடலிற்கு ஓய்வு தராமல் உடலை வைத்திருக்கும் போது அதனால் ஏற்படும் தொய்வு நிலை தொற்றா நோய்களாக உருப்பெறுகிறது.

யோகப்பயிற்சியில் உள்ள அனைத்து இயம நியமம் நாம் பரிவு நரம்புத்தொகுதியை பாவிப்பதில் ஒருவித ஒழுங்கை கொண்டுவருகிறது.

ஆசனம் உடலில் இரத்த ஓட்டம், தசை, நரம்பு என்பவற்றினை சம நிலைக்கு கொண்டு வருகிறது.

பிரணாயாமம் மூச்சின் மூலம் பரபரி நரம்புத்தொகுதியை செயற்படுத்தி உடலை ஓய்விற்குள் கோண்டுவந்து பிராணவாயுவின் சம நிலையை உருவாக்குகிறது.

பிரத்தியாகாரம் நாம் சூழ் நிலையால் புலங்கள் வழி மனதை தூண்டி, அது மூளையை தூண்டி பரிவு நரம்புத்தொகுதி இயக்கத்தை தூண்டுவதை கட்டுப்படுத்துகிறது.

தாரணை பரிவு நரம்புத்தொகுதியை துண்டாமல் பரபரிவு நரம்புத்தொகுதியில் இருந்தவாறு மனதை இயக்கும் ஆற்றலை தருகிறது.

தியானம் பூரண ஓய்வினை மனதிற்கும் உடலிற்கும் தந்து உடலை புத்துயிர்ப்பு செய்கிறது.

இதுவே யோகத்திற்கான நவீன அறிவியல் விளக்கம்!

ஒரு லக்ஷம் ஸ்ரீ காயத்ரி ஜெபம் பூர்த்தி செய்த சாதகரின் அனுபவம்

சாதனை அனுபவம் -------------- குரு ஸ்ரீ ஸக்தி சுமனன் அண்ணாவின் வழிகாட்டலில் சாதனை செய்ய ஆரம்பித்து இந்த ஆண்டோடு 7 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. ...