உழைப்பு மனித ஆற்றலைக் கொண்டு உலகை மாற்றும் செயல்!
எதற்காக உழைக்கிறோம் என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபட்டது!
தானும் தன் குடும்பமும் வயிற்றுப்பசி தீர்க்க....
தானும் தன் குடும்பமும் செல்வச் செழிப்பாய் வாழ..
தானும் தன் குடும்பமும் அதிகாரத்தை தக்க வைக்க..
இப்படிப் பல நோக்கங்கள்...
எதும் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
அது போல் உபரி உழைப்பால் வரும் தீமை மனமும் உடலும் சுரண்டப்பட்டு ஆரோக்கியம் கெடும்!
உபரி உழைப்பால் வரும் உபரிச் செல்வத்தால் நிம்மதி கெடும்!
இயற்கை தான் வேலை செய்வதற்கு ஆகக் குறைந்த உழைப்பையும், உபரி அற்ற தன்மையையுமே கொண்டிருக்கும்.
உபரியாக வரும் எதுவும் இன்னொன்றை வளர்க்க மட்டுமே பயன்படும்!
ஆக உபரி உழைப்பின்றி இன்பமாக வாழ உழைக்கும் வர்க்கத்திற்கு உழைப்பு நேரத்தை எட்டு மணி நேரமாக்கியவர்கள் அனைவருக்கும், உபரி உழைப்பு உழைக்காமல் நிம்மதியாக வாழுபவர்களுக்கும்,
உபரி உழைப்பு உழைத்தால் அதை மற்றவர்கள் வாழ பயன்படுத்தும் அனைவருக்கும் இந்த தொழிலாளர் தின வாழ்த்துக்கள் !
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.