Posts

Showing posts from April, 2017

நேற்றைய (27/04/2017) சித்த வித்யா விஞ்ஞான வகுப்புகள் - இராஜயோக விளக்கம்

Image
இன்று மாலை 08.00 - 09.00 வரை வழமைபோல் கொழும்பு - 04 ரிட்ஜ்வே ப்ளேஸில் அமைந்துள்ள அஷ்டாங்க யோக மந்திரில் சித்த வித்யா விஞ்ஞான வகுப்பு நடைபெற்றது. தாய், தந்தை, குரு வணக்கம், சித்த வித்யா குருமண்டல வணக்கம், உடலில் ஆறு சக்கரங்களில் ஓம்கார ஜெபம் மற்று ஹ்ரீம்கார ஜெபம், சக்தி பஞ்சாட்சரம், காயத்ரி மந்திரம், ம்ருத்யுஜெய மந்திர ஜெபம் என்பவற்றுடன் வழமை போல் ஆரம்பமாகியது. ஸ்ரீ ஸக்தி சுமனன் அவர்கள் இராஜ யோகத்தின் அறிமுகத்தை பற்றி கீழ்வரும் விடயங்களை விளக்கினார்.

சித்த வித்யா விஞ்ஞான வகுப்புகள் - (19/01/2017)

(19/01/2017) மாலை 06.00 - 07.30 வரை வழமைபோல் கொழும்பு - 04 ரிட்ஜ்வே ப்ளேஸில் அமைந்துள்ள அஷ்டாங்க யோக மந்திரில் சித்த வித்யா விஞ்ஞான வகுப்பு நடைபெற்றது. 
தாய், தந்தை, குரு வணக்கம், சித்த வித்யா குருமண்டல வணக்கம், உடலில் ஆறு சக்கரங்களில் ஓம்கார ஜெபம் மற்று ஹ்ரீம்கார ஜெபம், சக்தி பஞ்சாட்சரம், காயத்ரி மந்திரம், ம்ருத்யுஜெய மந்திர ஜெபம் என்பவற்றுடன் வழமை போல் ஆரம்பமாகியது. 
ஸ்ரீ ஸக்தி சுமனன் அவர்கள் சங்கம் முறையான பதிவுபெற்ற அமைப்பாக விரைவில் இயங்க இருபதையும், சங்கத்தினால் கீழ்வரும் மூன்று பிரசுரங்கள் ஆர்வமுள்ள சாதகர்களுக்காக வெளியிடப்படும் என்பதையும் அறிவித்தார்.
1) சித்த வித்யா விஞ்ஞான‌ சங்கத்தின் ஆன்மீக கொள்கை விளக்கம்
2) குருசாதனா
3) காயத்ரி சாதனா

பின்னர் குண்டலினி யோகம் என்பது முறையான சாதனையால் ஏற்படும் அனுபவத்தை மனதின் துணை கோண்டு உணர்வால் அறிவதா அல்லது மனதினால் சக்கரங்களை கற்பனை செய்வதா என்ற விளக்கமும் இவற்றின் நன்மை தீமைகள் என்ன? என்பது பற்றியும் விளக்கம் கூறப்பட்டது.

மனிதன் எப்படி தொன்னூற்றாறு தத்துவங்களாக விரிவுபெற்றான் என்ற விளக்கமும், யோக சாதனை தியான சாதனை பற்…

ராஜயோக விளக்க வகுப்புகள்

Image

புதுவருட ஆசிகள்

இன்று காலை எமது சித்த வித்யா விஞ்ஞான‌ சங்கம் வலைத்தளத்தில் (http://yogicpsychology-research.blogspot.in/
) பிரார்த்தனைக்காக, ஸ்ரீ காயத்ரி சாதனை, ஸ்ரீ வித்யா சாதனை பதிவுசெய்துகொண்ட அனைத்து அன்பர்களுக்காகவும் இன்று புதுவருடத்தை இட்டு நிகழ்த்தப்பட்ட சிறப்பு மஹாகணபதி சதுராவர்த்தி தர்ப்பணத்திலும், ஸ்ரீ காயத்ரி பூஜையிலும் பிரார்த்திக்கப்பட்டது.  அனைத்து அன்பர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அருளோடு செல்வம் ஞானம் ஆற்றலும் அன்பும் பண்பும் பொருள் நலம் பொறுமை ஈகை ஆயுள் ஆரோக்கியம் வீர்ம் அசைந்திடா பக்தி அன்பு தேயுறா செல்வம் கீர்த்தி தேவியே அருள்வாய் அம்மா என்று அன்னையை பிரார்த்தித்து,

எமது குருமண்டலத்தில் இணைந்து தமது யோக சாதனையை தொடரும் அன்பர்கள் சரியான பாதையில் பயணித்து சித்தி பெறவும், உடல் மனத்துன்பங்களுடையோர் அதிருலிருந்து மீண்டு போக பாக்கியங்கள் பெறவும் ஸ்ரீ குரு நாதர் அகத்தியர், விஸ்வாமித்திர மகரிஷி, வஷிஷ்ட மகரிஷி, பிரம்ம மகரிஷி, ஈஸ்வரப்பட்ட மகரிஷி, போக நாத மகரிஷி, ஸ்ரீ கோரக்க நாத சித்தர், மௌனகுரு சித்தர், ததிஷி மகரிஷி, ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர், ஸ்ரீ காயத்ரி சித்தர்…

சித்த வித்யா விஞ்ஞான‌ சங்கம்

எனது ஆத்ம யோக ஞான‌ எழுத்து வாசகர்கள் அனைவரும் இந்த Facebook account இ்ன் நட்பில் இணையும் படி எதிர்பார்க்கப்படுகின்றனர். 
எதிர்வரும் வைகாசிப் பௌர்ணமி தினத்திலிருந்து சித்த வித்யா விஞ்ஞான சங்கம் என்ற பதிவு பெற்ற அமைப்பாக எமது அறிவுப் பகிர்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டு வரவிருக்கின்றது. 
இந்த சங்கத்தின் நோக்கம் "ஞான தர்ம தானம்"
சித்தர்களின் ரிஷிகளின் ஆத்ம யோக ஞான மருத்துவ விஷயங்களை இக்கால மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிய தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிப்படுத்துதல்.

வைகாசிப் பௌர்ணமி தினத்தில் இருந்து அங்கத்தவராகும் முறை, விரிவான திட்ட விளக்கம் என்பவை வெளியிடப்படும்.

சித்த வித்யா விஞ்ஞான‌ சங்கம்
ஆன்மீக கொள்கை விளக்கம்
எமது சித்த வித்யா விஞ்ஞான‌ சங்கத்தின் ஆன்மீக கொள்கை விளக்கம் வெகுவிரைவில் வெளியிடப்படவுள்ளது.

இந்த கொள்கை விளக்கங்கள் சங்கத்தில் மாணவர்களாக கற்கையில் இணைந்து ஆத்ம யோக ஞான தெளிவு பெறவிரும்புவபர்களுக்கு மாத்திரம் உரியது.

இந்த கொள்கைகளும் கடவுள் யார்? உருவவிளக்கம், ஆன்மா, சக்தி, விக்கிரக வழிபாடு, உபாசனா தீட்சை, பூஜை ஏன்?, தியானம், சாதனையில் மனம், சித்தம் ஆகி…