புணருதல் என்றால் சேருதல் என்று அர்த்தம். யோகம் என்றாலும் இணைதல் என்றே அர்த்தம். ஒரு யோகி தனக்குள் இறை சக்தியை ஈர்த்து சேர்த்து வளர்த்தால் அதுவே யோகம்.
தருவது ஆண்
பெறுவது பெண்
தருவது சிவம் என்றால்
பெறுவது சக்தி
இனி மூன்றாவது பாடல், இந்தப் பாடலில் சுருக்கப் பொருள், மாணிக்க வாசகர் பொல்லா மணி என்ற அக்கினி மயமான சிவ ஜோதியை புருவமத்தியில் அறிந்து அதில் கலந்து அமுதத்தைப் பெற்று இன்புறாமல் மாலும் அயனும் எனது மனதைத் தூண்டி மணிப்பூரக, சுவாதிஷ்டான சக்கரங்களால் ஏற்படுத்தும் தூண்டலில் சிக்கிவிடுவேனோ என்று பயந்து, இந்த அடியவர்கள் போல புலம்பி பூத்தூவி ஏன் வழிபட்டுக் கொண்டு இருக்கிறேனோ என்கிறார்?
நீண்ட மாலும் அயனும் வெருவ
நீண்ட நெருப்பை விருப்பி லேனை
ஆண்டு கொண்ட என்ஆ ரமுதை
அள்ளூ றுள்ளத் தடியார்முன்
வேண்டுந் தனையும் வாய்விட் டலறி
விரையார் மலர்தூவிப்
பூண்டு கிடப்ப தென்றுகொல் லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே
பொல்லா மணி என்ற புருவமத்தியில் ஒளி காணுதலே யோகியின் இலட்சியம், அந்த ஒளியைக் கண்டு அதுனுடன் கலந்தால் அது சமாதி! பொல்லா மணியை புணர்தலை இலட்சியமாகக் கொண்டு பாடியவை தான் புணர்ச்சிப்பத்து!
உன்னை புருவ மத்தியில் ஒளியாக கண்டு அந்த ஒளியில் கலப்பதைத் தவிர வேறு விருப்பம் இல்லாத என்னை சுவாதிஷ்டானத்து பிரம்மன் உயிரைப் படைக்க காமத்தில் செலுத்தி விடுவானோ, மணிப் பூரக்கத்தில் உறையும் விஷ்ணுவும் உன்னை அடையவிடாமல் தடுத்து விடுவார்களோ என்பதை நினைத்து நான் அச்சப்படுகிறேன். இது சாதகன் யோகத்தில் சுவாதிஷ்டானத்தையும் மணிப் பூரகத்தையும் கடக்க முடியாமல் கீழ்பரிணாமத்தில் சிக்கிவிடுவோம் என்ற அச்சத்தை மாணிக்க வாசகர் வெளிப்படுத்தும் வரிகள்!
புருவமத்தியில் ஒளியை அடையும் பாதை முழுவதும் சிவம் அக்கினியாக அடிமுடி காணாத படி உடலில் சுழுமுனை நாடியில் முள்ளந் தண்டியோ பரவி மிகசூக்ஷமமாக நிற்க என்பது நீண்ட நெருப்பை என்ற வரி குறிக்கிறது,
இந்தப் பாதை வழி சென்று பொல்லாமணி என்ற சிவ ஜோதியில் கலந்தால் புணர்ந்தால் அமுதம் சுரக்கும்,
நேரடியாக பொருள் கூறுவது என்றால் பொல்லா மணியாகிய சிவ ஜோதியைப் புணர்ந்து கலந்து அள்ள அள்ளக் குறையாத அமுதத்தைப் பருகி இன்பம் உற்று இருக்காமல் ஏன் சுவாதிஷ்டானத்து பிரம்மன் உயிரைப் படைக்க காமத்தில் செலுத்தி விடுவானோ, மணிப் பூரகத்தில் உறையும் விஷ்ணுவும் சிவத்தை அடையவிடாமல் தடுத்துவிடுவார்களோ என்பதை நினைத்து நான் அச்சப்படுகிறேன்? இந்த உயர் நிலைக்கு முயலாமல் ஏன் உன் அடியார்களுக்கு முன்னால் வாய்விட்டு அலறிக் கொண்டு, நறுமணம் வீசும் மலர்களை ஏன் தூவிக் கொண்டு கிடக்கின்றேனோ? என்கிறார்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.