குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Showing posts with label மெய் ஞானத் தேடல். Show all posts
Showing posts with label மெய் ஞானத் தேடல். Show all posts

Wednesday, December 20, 2023

காலபைரவ தியானம் 19

 

இந்த தியானம் சாதகனை புலனடக்கி மெய் ஞானத் தேடலில் செலுத்தி, நுண்மையான புலனறிவினைக் கொடுத்து அதனால் அறிவு சிறப்படைந்து புகழ் தரக்கூடிய காலபைரவ தியானம் இது.!

ஒருவன் ஒரு விஷயத்தில் சிறப்பறிவு பெறவேண்டும் என்றால் அவன் தன் புலன் களை அடக்கி கவனத்தைக் கூட்டி மன ஏகாக்கிரமடையச் செய்து தவம் செய்யும் ஆற்றல் பெறவேண்டும். தவம் என்றவுடன் கண்களை மூடி பட்டையும், ருத்திராட்சக் கொட்டையும் போட்டுக்கொண்டு வேஷங்கள் தரித்து காட்டில் சென்று கண்மூடி இருப்பதல்ல!

மனதின் எண்ணச் சுழல்களைக் குறைத்து, கவனத்தை நாம் ஒரு விடயத்தின் மீது செலுத்தி அதில் பரிபூரண அறிவும் அந்த அறிவால் பெறும் ஆற்றலும், இதனால் பெறும் புகழும் தவத்தால் கிடைப்பதாம்.

இத்தகைய ஆற்றல் நமக்குள் விழிப்புணர்வு ஏற்பட்டால் மாத்திரமே நடக்கும்! இந்த விழிப்புணர்வு நிலையைத் தருவது பைரவரே! நீண்ட தவம் புரியும் ஆற்றல் ஒருவனுக்கு பைரவரின் அருளாலேயே கிடைக்கிறது.

நெறியும் பொறியுந் தவமுமெய்ஞ்

ஞானமும் நீடறிவும்

பொறியும் புகழுங் கொடுத்தருள்

வாய்புரங் காய்ந்தவனே

குறியுங் குணமுங்க் கடந்தவனே

குழக்கன்று கட்டுந்

தறியின் கண்வந்தயவனே

காழி யாபதுத் தாரணனே

மனதை நேறிப்படுத்தும் ஆற்றலும்

பொறிகளை அடக்கி தவஞ்செய்யும் ஆற்றலும்

அந்த தவத்தால் கிடைக்கும் மெய் ஞானமும், ஆழமான அறிவும்

இவற்றால் வரும் புகழும் கொடுக்தருள்வாய்

முப்புரங்களைக் காய்த்தவனே எரித்தவனே!

இந்த வடிவம் என்று குறிப்பிட முடியாமலும்

முக்கணங்களைக் கடந்த நிலையில் இருப்பவனே

இளம் கன்று தறிகெட்டு ஓடுவதுபோல் இருக்கும் என்னைக் காத்து அபயம் தருவாய்!

சீர்காழிப்பதி உறையும் ஆபத்து தாரண பைரவ மூர்த்தியே

உம்மை நான் தியானிக்கிறேன்!

{ஸ்ரீலஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள் அருளிச் செய்த ஆபதுத்தாரண மாலை பாடல் 06}

இன்றைய காசிகாபுராதி நாத காலபைரவரின் மங்கள அலங்காரம் அனைவரது தரிசனத்திற்காகவும்!

கந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் - 12

******************************************* களவு வெல்ல - சித்தவிருத்தி அடங்கி யோக சித்தி பெற  பன்னிரெண்டாவது பாடலிற்கு சித்தர் பிரான் இட்ட ம...