குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, May 04, 2019

தலைப்பு இல்லை

இந்த சிறு கட்டுரை Dr. Sampadananda Mishra அவர்கள் எழுதிய ஆங்கிலக் குறிப்பின் தமிழ் வரைபு! வேத மந்திரங்களில் மறையியல் பற்றி கற்க விரும்பும் ஆர்வமுள்ளவர்களுக்காக இங்கு எம்மால் தமிழில் மொழிப் பெயர்க்கப்பட்டு பகிரப்படுகிறது. 

- ஸ்ரீ ஸக்தி சுமனன் -

This is a concise Tamil translation of Dr. Sampadananda Mishra of Sri Aurobindo foundation for Indian Culture, Sanskrit Scholar! Intention of this Tamil translation is purely learning purpose for Tamil readers. 

அதிதி - ஆத்மாக்னி

*********************************

अतिथिदेवो भव - atithidevo bhava

அதிதிதேவோ பவ

அதிதிதேவோ பவ என்பதற்கு எமக்கு கற்பிக்கப்பட்ட அர்த்தம் “விருந்தினரை தெய்வமாக போற்று” என்பது. நாம் எப்போதும் எவராவது ஒருவரை அதிதியாக உபசரிக்கிறோம். இந்த அதிதி வெளியில் இருந்து வரும் விருந்தாளியா? சமஸ்க்ருத சொற்பிறப்பியல் படி அதிதி என்ற சொல்லைப் பார்த்தால் அ (अ )என்பது இல்லை என்று பொருள், திதி (तिथि) என்பது நாள் என்று பொருள், இதன்படி இந்த நாளில் தான் வருபவன் என்று அனுமானிக்க முடியாமல் திடீரென வருபவன் அதிதி, ஆக வெளியிலிருந்து வரும் விருந்தினர் என்ற பொருள் சரியானது. 

இன்று காலை, யஜுர் வேத மந்திரம் (3.1) இனைப் படிக்கும் போது அதிதி என்பதற்கு புதியதொரு அர்த்தம் புலப்பட்டது. அந்த மந்திரம்

समिधाग्निं दुवस्यत घृतैर्बोधयतातिथिम्।

आस्मिन् हव्या जुहोतन स्वाहा। इदमग्नये इदन्न मम॥

samidhāgniṁ duvasyata ghṛtairbodhayatātithim|

āsmin havyā juhotana svāhā| idamagnaye idanna mama||

ஸமிதாக்நிஂ துவஸ்யத கஹ்ரதைர்போதயதாதிதிம்।

ஆஸ்மிந் ஹவ்யா ஜுஹோதந ஸ்வாஹா। இதமக்நயே இதந்ந மம॥

இந்த மந்திரத்தின் பொதுவான பொருள்: அக்னியே, அதிதியே, சமித்துடன், சுவாலையில் நெய்யுடன், ஹவிஸுடன் வணங்குகிறேன், இவை அனைத்தும் அக்னியுடையவை என்னுடையவையல்ல. 

இந்த மந்திரத்தை சிந்தித்த போது, இதன் பல சொற்களுக்குரிய ஆழமான பொருள் வெளிப்பட்டது. இந்த மந்திரத்தில் அதிதி என்ற சொல் அக்னியைக் குறிக்கிறது. நாம் அதிதி என்பதற்குரிய வழமையான பொருளான “அறிவித்தல் இன்று வருபவன்” என்பதை எடுத்துக்கொண்டால் இந்த மந்திரத்திற்குரிய பொருள் தெளிவாக வராது. 

அதிதி என்பதன் சமஸ்க்ருத அடிச் சொல்லை ஆராய்ந்தால் அது தொடர் பயணி என்ற பொருளில் வரும். அதாவது அதிதி என்பதை அத (अत्) என்று பிரித்தால் அதன் பொருள் தொடர்ச்சியாக நகர்ந்து கொண்டிருப்பது என்று பொருள், இதன் பின்னொட்டுப் பகுதியான இதின் (इथिन्) என்ற சொல் (अतति सततं गच्छति इति अतिथिः அததி ஸததஂ கச்சதி இதி அதிதிஃ), ஆத்மன் (आत्मन् ātman) என்ற சொல்லும் இந்த அடிச் சொல்லில் இருந்து பிறந்த சொல்லே (अत् at + मनिन् manin = அத் + மநிந் ). ஆத்மன் நிரந்தர பயணி, பிறப்பிற்கு பிறப்பு பல உடல்களில் பயணித்து அனுபவங்களை சேகரிப்பதை ஆத்மன் என்கிறோம் (அததி ஸததஂ கச்சதி தேஹாத் தேஹாந்தரம் இதி ஆத்மந்). 

ஆக ஆத்மனும் அதிதியும் ஒரே கருத்துள்ள ஒத்த சொல், அனுபவமடைந்த பெரியோர்கள் ஆத்மனை தரிசித்தவர்கள் ஆத்மனைப் பற்றிக் கூறிய அனுபவம் அது ஜோதி ஸ்வருபத்தில் எல்லோருள்ளும் ஒளிருகிறது என்பது. (अङ्गुष्ठमात्रपुरुषः ज्योतिरिवाधूमकः = அங்குஷ்டமாத்ரபுருஷஃ ஜ்யோதிரிவாதூமகஃ) 

ஆக இந்த மந்திரத்தின் உட்பொருள் ஒருவன் ஸ்தூல அக்னியின் ஊடாக தனது ஆத்ம அக்னியை தரிசிப்பதைக் கூறுகிறது. இந்த அதிதிக்கு (ஆத்மாக்னி) எல்லாச் செயல்களையும், செயல்களின் பலன்களையும், மனதின் எண்ணங்களையும், வாழ்வையும், உடலையும் அர்ப்பணித்து தன்னுடையது எதுவுமில்லை என்ற பாவத்தை (உணர்ச்சியைப்) பெறுவதற்கு சொல்லப்படுகிறது. க்ஹரத என்ற சொல் ஒருவன் இதனால் அவன் மனதில் பெறும் ஒளியைக் குறிக்கும். தன்னுடையது இது இல்லை என்ற எண்ணம் எப்போது இல்லையோ அப்போது மட்டுமே ஒரு தானம் பூர்த்தியாகும். ஆகவே இறுதியில் இது என்னுடையது அல்ல அக்னி – அதிதி - ஆத்மனுடையது என்று முடிக்கிறோம். நான் என்ற ஆணவம் உருவாகிவிடக்கூடாது என்பதால். 

மேலும் இந்த மந்திரம் ஒருவன் தான் எப்போதும் அதிதி என்பதை நினைவில் நிறுத்தி தான் ஆத்மன் தெய்வீகன் என்று காரியங்களைச் செய்ய வேண்டும் என்பதைக் குறிக்கிறது, ஒரு கதை ஞாபகம் வருகிறது; ஒரு நாடோடி ஒரு ஆன்மீக குருவைப் பார்க்கச் சென்றான், குருவின் ஆசிரமத்தில் எந்தவொரு நாற்காலி வசதிகள் எதுவும் இருக்கவில்லை, அவன் அந்தக்குருவிடம் சென்று தனது பிரச்சனையை முறையிட்டான், அதற்கு அந்த குரு அவனை நோக்கி உன்னுடைய பொருட்கள் எங்கே என்று கேட்டார், அதற்கு அவன் நான் ஒரு விருந்தாளி, பயணி எப்படி என்னிடம் இவை இருக்க முடியும் என்றார், அதற்கு அந்த குரு அப்படியானால் நான் ஒரு அதிதி, பயணி இல்லை என்று நினைக்கிறாயா என்றார். 

இந்த மந்திரத்தின் பொருளை சிந்திக்கும் போது அதிதி தேவோ பவ என்ற வார்த்தைக்கு நாம் நினைப்பதை விட இன்னும் ஆழமான பொருள் இருக்கிறது என்று எண்ணுகிறேன்.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...