அமைச்சர் Mano Ganesan இன் இந்தக் கருத்து ஆழமாக சிந்திக்கப்பட வேண்டியது!
அரசியல் என்பது மக்களின் நலனிற்காக அதிகாரத்தை எப்படிப் பயன்படுத்துவது என்ற அறிவு! மக்களின் நலன் எது என்பது காலத்திற்கு காலம் மாறும்!
ஒரு காலத்தில் சாதிய அடக்கு முறையை எதிர்ப்பது!
இன்னொரு காலத்தில் பொருளாதாரத்தை சீர் செய்வது!
வாழ்வதற்கு தேவையான உட் கட்டுமானங்களை பெருக்குவது என்று காலத்திற்கு காலம் தேவைகள் மாறும்!
ஒன்றிணைந்து வாழாமல் உயர்வு இல்லை!
ஆனால் பலர் தாம் நம்பும் தத்துவங்களான மார்க்ஸிஸம், கம்யூனிசம், தீராவிடம் அங்கு இருக்கிறதா என்று ஆராய்ந்து அவை இல்லை என்றவுடன் ஏதாவது ஒரு போலிக் காரணங்களைக் கற்பித்து புலம்புகிறார்கள்!
சிலவேளை அவர்கள் நம்பும் காரணங்களுக்கான அரசியல் தேவை தற்போது இல்லாமல் இருக்கலாம்!
யதார்த்தத்தைப் புரியாமல் தாம் கற்ற தத்துவங்களை வைத்துக் கொண்டு அரசியல் பேசுபவர்கள் அரசியலினூடாக தமக்கு பெயர், புகழ், பணம் என்ற அடையாளம் தேடுபவர்கள்! இவர்கள் மக்களுக்கோ, சமுகத்திற்கோ எந்த நன்மையும் செய்யப் போவதில்லை!
தெற்காசியாவின் மிகப் பெரிய ஜனநாயக குடியரசில் மிக வலுவான அரசு அமைவது என்பது பிரதேச நலனிற்கு மிக அவசியமானது!
எங்கோ இருக்கும் அமெரிக்கவும் ஐரோப்பாவிற்கு தலையையும் வாலையும் காட்டி ஏமாறுவதை விட இலங்கை கலாச்சாரத்தின் ஆணிவேருடன் ஒன்றி நம்பிக்கையையும் உறவையும் வளர்ப்பது அவசியமானது!
இந்தியா என்ற தேசத்தின் நலன் சாராமல் இலங்கை இயங்க முடியாது, இயங்கவும் கூடாது!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.