Posts

Showing posts from June, 2016

நூல் மதிப்புரை 03 - அகத்தியர் யோக ஞானத் திறவுகோல்

Image
உயரிய சிந்தனைகளும் அவற்றின் வழியமைந்த செயல்களும் இடம்பெற்று வருவதனாலேயே இந்த உலகம் இன்றளவும் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஞானியர்களும் சித்தர்களும் மகரிஷிகளும் இடையறாது வழங்கிக்கொண்டிருக்கின்ற அருளுபதேசங்களும் அவற்றை அடைந்து நன்மை பெறுவதற்கான வழிகாட்டல்களும் எமக்கு என்றென்றும் துணைநிற்கின்றன. இத்தகைய உயரிய உபதெசங்களைத் தேடியறிவதற்கு முயற்சிப்போர் எத்தனை பேர் எம்மத்தியில் உள்னர்? ஆயினும் அவற்றை அறிந்தோர் தாம் அறிந்த விடயங்களை மற்றவர்களின் நன்மைக்கும் மேன்மைக்குமாக எடுத்துரைக்க முற்படுவது இன்றியமையாத ஒரு பொறுப்பாகும்.
இன்று எமது கைகளிலே கிடைத்துள்ள அகத்தியர் யோக ஞானத் திறவுகோல் என்னும் விளகக நூலை ஸக்தி சுமனன் அவர்கள் எழுதியுள்ளார். இத்தகையதொரு அரும்பெரும் பொக்கிசத்தை வழங்கியமைக்கு முதற்கண் எனது மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அகத்தியரின் ஞானப்பாடல்களுக்கு விளக்கவுரை தருவது ஒரு சாமான்யனால் இயலக்கூடிய விடயமல்ல. இதற்கு ஆன்ம ஞானத் தொடர்பு இருத்தல் வேண்டும். சுமனன் அவர்கள் உயர் ஞானியரோடும் மகரிஷிகளோடும் சித்தர்களோடும் பிறப்பால் தொடர்புபட்டுள்ளார். அன்றேல் அகத்தியர் பாடல…

நூல் மதிப்புரை 02 - அகத்தியர் யோக ஞானத் திறவுகோல்

Image
சித்த பாரம்பரிய மிக்க ஸ்ரீ ஷக்தி சுமணன் அவர்கள் எழுதிய 'அகத்தியர் யோக ஞானத் திறவுகோல்' ஆதார நூலுக்கான பொழிப்புரை, விரிவுரை, கருத்துரை கொண்ட தெளிந்த நூல் மருத்துவ கலாநிதி. விக்னவேணி அவர்கள் மூலம் கிடைக்கப்பெற்றது. 

முதலில் நூலின் வடிவமைப்பை பற்றி சொல்லியே ஆக வேண்டும். முப்பது பாடல் கொண்ட ஆதார நூலின் பாடலுக்கு ஒரு அத்தியாயம் அமைத்து முதலில் ஆதார பாடலை சொல்லி, பின்னர் அதன் பொருளைச் சொல்லி, விவரணம் கொடுத்து, அனுபவரீதியான விளக்கம் தந்து இறுதியில் நினைவிலிருத்த வேண்டியவைகளை வினாவாக அமைத்துள்ளது சிறப்பாக உள்ளது. நூலாசிரியர் தனக்கு புரிந்ததை மட்டும் தொகுத்து எழுதாமல் 'சங்க மரபு' போல் பிறருடன் கலந்துரையாடி அதில் பெற்ற தெளிவுடன் தன குரு, பிற அனுபவறிவு மிக்க சான்றோர் ஆகியோரின் கருத்தையும் பெற்று எழுதியுள்ளார். பெரும்பாலான சித்த மருத்துவம், மரபு சார்ந்த நூற்கள் அகத்தியர் பெயரிலேயே எழுதப்பட்டிருக்கின்றன. அகத்தியர் யோக ஞானத் திறவுகோல்' ஆதார நூலும் அது போலவே அமைந்திருக்கிறது. மொழி நடை பிற்க்காலத்தை சேர்ந்த எளிய நடையில் இருந்தாலும் அதில் உள்ள பொருளை சித்த மரபில் கற்றுணர்தவர்களாலேயே…

நூல் மதிப்புரை 01 - அகத்தியர் யோக ஞானத் திறவுகோல்

Image
அகத்தியர் ஞானம் 30 என்ற பாடல்களுக்குத் திரு. சக்தி சுமனன் அவர்கள் எழுதியுள்ள விளக்கவுரை, தமிழ் சித்தர் யோகம் மற்றும் தத்துவங்களில் ஆர்வமுள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு நூல் ஆகும். பொதுவாக சித்தர் பாடல்களில் பல முக்கிய தத்துவங்கள் மறைப்பாக எழுதப்பட்டிருக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. இதனால் இப்பாடல்களுக்குப் பல்வேறு விதமான விளக்கவுரைகள் நம்மிடையே உலாவுகின்றன. 
இந்த விளக்கவுரைகளில் பெரும்பான்மையானவை சித்த மார்க்கத்தில் பயிற்சியில்லாதவர்களால் எழுதப்பட்டிருப்பதால் பல தவறுகளைக் கொண்டவையாக உள்ளன. திரு. சுமனன் அவர்கள் குருமண்டலத்தின் ஆசியுடனும், வழிகாட்டுதலுடனும் இப்பாடல்களுக்கு அனுபவபூர்வமாக விளக்கவுரை எழுதியிருப்பதால் இந்த தவறுகள் விலக்கப்பட்டு சித்த மார்க்கத்தின் சரியான வழிமுறைகள் நம் அனைவருக்கும் கிட்டுகின்றன. 
இந்த நூலில் சாகாக்கால், வேகாத்தலை, வாசி, வாலை, பிராணாயாம வழிமுறைகள், மந்திரங்களின் முக்கியத்துவம், பஞ்சாட்சர மந்திர தத்துவம் போன்ற பல அரிய விஷயங்கள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாடலின் முடிவிலும் கொடுக்கப்பட்டுள்ள கேள்விகள் நாம் அதுவரை கற்ற தத்துவங்களை நினைவுபடுத்த…

சென்னை புத்தக கண்காட்சியில் அகத்தியர் யோக ஞானத்திறவு கோல் கிடைக்கிறது

Image