குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, May 16, 2018

எம்மை மாற்றும் இரசவாதம் - நல்ல நூற்கள் படித்தல்

மனித மனம் எதையும் ஈர்த்து பதிவித்து அதை பின்னர் கதிர்ப்பிக்கும் ஆற்றல் உடையது. இது எந்த சூழலில் இருக்கிறதோ அந்தச்சூழலை எண்ணமாக தன்னில் பதிப்பித்து பின்னர் அதன் அடிப்படையில் செயற்படும் தன்மை வாய்ந்தது. ஒருவன் அறிவாளியாகவோ, முட்டாளாகவோ சிந்திப்பதின் பெரும்பகுதி அவன் எந்தசூழலில் இருந்து தனது மனதிற்கு எதைப்பதிவித்தான் என்பதில் தங்கியுள்ளது. 

இந்ததாக்கத்தின் பெரும்பகுதி அவன் வாழும், பார்க்கும், தனது புலன் களை செலுத்தும் சூழலில் தங்கியுள்ளது. இந்த சூழல் செதுக்கும் சிலையாகவே மனிதனின் மனம் மாறுகிறது. ஒருவனின் ஆளுமையை வளர்ப்பதில் பெரும்பங்கு அவனது சிந்தனை முறை. இந்த சிந்தனை முறை அவன் தனது மனதிற்கு எதை உணவாக இடுகிறான் என்பதில் இருந்து உருவாகிறது. 

ஆக ஒருவன் தனது மனதின் ஆற்றலை உயர்த்த விரும்பினால் அவனிற்கு இரண்டு தெரிவுகள் இருக்கிறது. தான் விரும்பும் அல்லது தனக்கு நன்மை பயக்கும் துறையில் நிபுணத்துவம் பெற்ற ஒருவருடன் நீண்டகாலம் அனுபவ பயிற்சி பெறுவது. இதையே பழங்காலத்தில் குருகுலம் என்றும் இன்றைய கல்விமுறையில் M.Phi, PhD இல் தமது வழிகாட்டியுடன் நேரத்தை செலவிடுவதும், தொழில் சார் கல்விகளில் தொழில் முறை பயிற்சிக்காலம் (Internship) என்றும் பயிற்சிக்கிறார். 

ஒருவனுக்கும் தான் விரும்பும் துறையில் இப்படி அனுபவஸ்த்தருடன் பயிற்சி பெற முடியாவிட்டால் எப்படி இதைப்பெறுவது! இதற்குரிய வழிதான் அத்தகைய நிபுணர்கள் எழுதிய நூற்களை படிப்பது. 

ஆல்பேட் ஐன்ஸ்டீன் " இந்த உலகம் என்பது எமது சிந்தனையால் படைக்கப்பட்டது, ஆக உலகை மாற்ற எமது சிந்தனையை மாற்றவேண்டும்" என்ற கூற்றிற்கு நூல் படித்தல் பெரும் உபயோகமாக இருக்கும். 


Tuesday, May 15, 2018

மேகம் போன்றிருத்தல்தரையில் மனிதன் அழுக்காக்கும் நீரை சூரியன் துணைகொண்டு சுத்தி செய்து நுண்மையாக்கி வானுயர்த்தி பின்னர் குளுமையான நீராக தரும் மேகம் போன்ற பண்பு மனதிற்கு இறையாற்றலால் அமையவேண்டும்! 

உலகிலுள்ள தீமைகளை அறிவுச் சூரியன் கொண்டு சுத்தி செய்து நல்லெண்ண வித்துக்களாய உலகில் விதைத்திட அருள்வாய் அம்மா!

இயற்கையை புரிதல்

இயற்கையின் இயங்கியல் உணர்ந்த காட்டுவாசிக்கு காட்டில் முள்ளில்லை!
இயற்கையுடன் வாழும் விவசாயிக்கு களத்தில் களையில்லை!
இயற்கையின் தத்துவம் உணர்ந்த மனிதனிற்கு வாழ்வில் துன்பம் இல்லை!
இயற்கையின் படைப்பில் ஒவ்வொன்றும் அதன் பணியை செய்கையில் மனித மனமும் அதன் தன்முனைப்பும் அறியாமையில் இயற்கையை குழப்பும்!

காலச்சக்கரம் - மனம் - புரிதல்


காலனவன் காலத்தை காலி செய்ய
பிரபஞ்சத்தில் அணுவின் இருப்பைவிட சிறியோன் நீயோ
உன் மனச்சிறையில் அகப்பட்டு புரியாமல் தவிக்கிறாய்!
இயற்கையின் காலச்சக்கரம் அதன் ஒழுங்கில் இயங்க,
உன் மனம் படைத்த காலச்சக்கரத்தில் நீ வசிக்கிறாய்!
உன்மையத்தில் நீ இருக்க பூமியை சூரியன் சுற்றுகிறது!
பிரபஞ்ச மையமாக நீ உயர பூமியோ சூரியனை சுற்றுகிறது!
மனதின் மையமே உனது புரிதல்!

கலாச்சாரம் - பண்பாடுகளை புரிதல்


இன்றைய சுதந்திர உலகம் அனைவருக்கும் எதைப்பற்றியும் உரையாடும் உரிமையை தருகிறது, இதனால் நாம் கற்பனை செய்யும் அர்த்தத்தை ஒவ்வொரு சொல்லுக்கும் ஏற்றி விளக்கும் சந்தர்ப்பமும் கூடிக்கொண்டு செல்கிறது. ஆகவே சொல்லாடலில் ஒவ்வொருவரும் என்ன அர்த்தத்தில் பிரயோகிக்கிறோம் என்பது முக்கிய பங்காற்றுகிறது.
இதுதொடர்பாக எனது சிறுவயதில் கோகுலம் (சிறுவர் மாத இதழ்) இதழில் வாசித்த துணுக்கு ஒன்று ஞாபகம், ஒரு முறை வீட்டிற்கு விருந்தினர் வந்தபொழுது சோற்றுடன் சேர்த்து தொட்டுக்கொள்ள "விக்ஸ்" கொடுங்கள் என்று வீட்டுக்காரர்கள் சொல்ல, விருந்தாளி யாராவது விக்ஸ் சாப்பாட்டுக்கு சேர்த்துக்கொள்வார்களா என்று பதட்டப்பட, அம்மா ஊறுகாய் பாட்டிலை எடுத்துவர அனைவருக் கொல் என சிரித்து விட்டோம் என்பது அந்தக்கதை.
இப்படி வீட்டில் நகைச்சுவையாக ஊறுகாயை விக்ஸ் என்று அழைத்ததை அடியும் தெரியாமல் நுனியும் தெரியாமல் வீதியல் சென்ற ஒருவன் அந்த வீட்டில் விக்ஸ் சேர்த்துத்தான் சோறு சாப்பிடுறாங்கா என்று வதந்தி பரப்பிய கதை தான் இன்று நாம் பார்க்கிறோம்!
இது கலாச்சாரங்களை, பண்பாடுகளை அறிந்துகொள்வதில் குழப்பத்தையும் தெளிவின்மையையும் ஏற்படுத்துகிறது.
மேலும் இன்றைய சமூகத்தில் எதையும் ஆழ்ந்து கற்று, ஒப்பிட்டு நோக்கி ஆய்ந்து புரிவதற்கு பொறுமை இல்லை!
இலகுவாக தம்மை அறிவாளியாக காட்ட எல்லோரை நோக்கியும் கேள்வி கேட்டு புரட்சியாளனாக தம்மை நிலை நிறுத்தப்பார்க்கிறார்கள்.

Monday, May 14, 2018

ஸக்தி சாதனாஉலகில் உள்ள உயிர்ப்புள்ள உயிரினங்கள், உயிர்ப்பற்ற ஜடப்பொருட்கள் அனைத்தும் சக்தியின் புறவெளிப்பாடே. சிலபொருட்களில் ஸக்தி விழிப்படைந்து வெளிப்படுகிறது. சிலபொருட்களில் சக்தி உறை நிலையில் காணப்படுகிறது. எல்லா உயிரினங்களும் இந்த சக்தியிலிருந்தே தோன்றுகிறது. இந்த சக்தியே “உணர்வாக” (உணர்ச்சி அல்ல) தாவரங்களிலும் விலங்குகளிலும் காணப்படுகிறது.  சக்தியே உலகின் செயல், வளர்ச்சி, விரிவு ஆகியவற்றிற்கு மூலமாக காணப்படுகிறது. முழுப்பிரபஞ்சமும் சக்தியின் விளையாட்டாகவே வெளிப்படுகிறது.

இந்த சக்தியின் விளையாட்டு மனித வாழ்க்கையில் மிக்க புதிர்கள் நிறைந்தது.  ஸ்தூல, சூக்ஷ்ம, காரண சரீரங்களை வலுப்படுத்தி விழிப்படையச்செய்வதும், பஞ்சகோசங்களை வலுப்படுத்துவதும் சக்தியே!
ஆறாதாரங்களை விழிப்படையச்செய்து அதி ஆற்றல்களையும் சித்திகளையும் தரும் குண்டலினி மகா சக்தியே மனித வாழ்வின் ஆதாரம்.  உலகைப்படைத்த மகா சக்தி மனித உடலில் குண்டலினியாக உறங்குகிறது.
எவர் இந்த மகாசக்தியின் விளையாட்டை உணராதவர்களோ அவர்கள் குளத்தில் வசிக்கும் தாகமுள்ள மீன் போன்றவர்கள். தமக்குள்ளேயே அந்த சக்தி செயல்புரிகிறது என்ற அறியாதவர்கள்.

ஸக்தியின் செயலை எப்படி உணர்வது? அதற்கு சாதனா ஒரு வழி! ஆதிசக்தியின் ஆற்றலை தன்னில் ஈர்க்கத்தகுந்தவன் மெதுவாக தனது சூக்ஷம் காரண சரீரத்தில் ஆற்றலை விழிப்படையச்செய்து, உயர் ஆற்றல் பெறுகிறான்.

குரு அகத்திய காயத்ரி சாதனா அனுபவம் - வாழ்க்கை எப்படி சீராகியது என்று ஒரு சாதகியின் அனுபவம்

சாதனை அனுபவம்   இரண்டரை வருடங்களுக்கு முன் என்னிடம் காயத்ரி சாதனை செய்வதற்கு சுமனன் அண்ணா வழிகாட்டுகிறார் நீங்களும் சாதனை செய்ய விண்ணப்பியுங...