Posts

Showing posts from January, 2013

சித்தர்கள் அருளிய காயத்ரி மந்திரங்கள் சரியானதா?

அண்மையில் நண்பர் ஒருவர் கீழ்வரும் கேள்வியினை கேட்டிருந்தார்; சித்தர்கள் தமது நூற்களில் சில காயத்ரி மந்திரங்களை கொடுத்துள்ளார்கள், அவைதான் உண்மையான காயத்ரி மந்திரங்களா? இப்போது உங்கள் பதிவுகளில் கூறும் காயத்ரி மந்திரமான ஓம் பூர் பூவஹ ஸ்வஹ எனத்தொடங்குவது வடமொழியினருக்கு உரியது, தமிழர்கள், சித்தர்கள் இதனைப்பற்றி கூறவில்லை, ஆகவே எது சரியானது? அத்துடன் மற்றைய தெய்வங்களுக்கும் காயத்ரி மந்திரங்கள் காயத்ரி மந்திரம் உள்ளனவே, அதற்கு என்ன காரணம்? இந்தக்கேள்வி மிக அருமையான கேள்வி, அதற்கு எமது அறிவுக்கு எட்டியவரையில் பதிலினைக் கூறுகிறோம். இதன் அடிப்படைகளை விளங்கிக்கொள்ள சில மந்திர சாஸ்திர அடிப்படைகளை விளங்கவேண்டும். முதலாவதாக காயத்ரி என்பது காரணப்பெயர்; காயம்+த்ரயாதே, காயம் ஆகிய உடலினை காப்பாற்றுவது என்பது பொருள், உடலினை காப்பாற்ற பிராணனினை இரட்சிக்க வேண்டும்.பிராணணின் அசைவு மனதினால், மனதில் எழும் எண்ணங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. மனது சப்தத்தினால், ஒலியினால் தொடர்பு கொள்ளக்கூடியது, அப்படியான ஒரு ஊடகம் தான் மந்திரம். மந்திரங்கள் உச்சரிக்கும் போது ஒரு மட்டிசைவுடன் ஒலிப்பதை சந்தஸ் என்பர், இப்படி …

காம ரகசியம் - 05: காம உணர்வினை அடக்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்

ஓஷோவிடம் எழுபது வயதான வயோதிகர் ஒருவர் வந்து கீழ்வருமாறு முறையிட்டார்,
"அன்பான குருவே, எனக்கு இப்போது எழுபது வயதாகிறது, ஆனால் மனதில் காமஉணர்வுகள் அதிகரித்தவண்ணமே உள்ளது, நான் என்ன செய்யட்டும் என்றார்?
நல்ல கேள்விதானே!
அதற்கு ஒஷோ அளித்த பதிலும் விளக்கமும் பின்வருமாறு;
"அன்பரே அப்படியாயின் அதனை பரிபூரணமாக ஏற்றுக்கொள்ளூங்கள், அதனை மறுக்காதீர்கள், அதனை பெரிதாக கவலைப்பட்டு அடக்க முற்படாதீர்கள், இந்த நிலமை ஏன் ஏற்படுகிறது என்றால் இளமைக்காலத்தில் அதீதமாக காமத்தினை அடக்கியதால் இப்போது வயோதிகத்தில் அவை வலிமை பெற்று உங்களை ஆட்டிப்படைக்கிறது,
இதேபோல் முன்னொரு சம்பவம் ஏற்பட்டது, நான் டெல்லியில் இருக்கும் போது என்னைக்காண‌ முப்பத்திஐந்து வயது மதிக்கத்தக்க இளவயது துறவி ஒருவர் வந்திருந்தார்.அவர் பூரணமான பிரம்மச்சரியத்தினை ஏற்றிருந்தார். அவர் என்னிடம் கேட்க விரும்பியது, " என்னுடைய ஒரே பிரச்சனை கடந்த சில வருடங்களாக நான் எனது மனதில் எழும் காம எண்ணங்களுடன் போராடிக்கொண்டிருக்கிறேன், இது ஏன் என உங்களால் கூற முடியுமா? இன்னும் எவ்வளவு காலத்தில் காம எண்ணம் அடங்கும்? இப்போது நான் 35 வயதுகளில்…

காம ரகசியம் - 04: ஆண்களிலும் பெண்களிலும் காமசக்தி செயற்படும் முறை

ஆண்களிலும் பெண்களிலும் காமசக்தி செயற்படும் விதம்

வசந்த காலத்தில் ஆண் குயில் கூவுகிறது. அது எதற்காக என்று நீங்கள் நினத்துப்பார்ட்ததுண்டா? அது தனது காமத்திற்கான இணையினை தேடுகிறது.   குயில் இவ்வாறு செய்வதனை யாரும் தவறு என்று கூறுவதில்லை.  பூக்கள் ஏன்  மலர்கின்றன? வாசத்தினை பரப்புகின்றன? அவை தம்மை விளம்பரபடுத்திக்கொள்கின்றன, " நான் மலர்ந்து விட்டேன், என்னிடம் தேன் உண்டு, வாசம் உண்டு, வண்ணத்தி பூச்சிகளும், தேனீகளும் வரும்படி அழைக்கிறது. ஏன் அது தன்னிடம் உள்ள மகரந்ததினை பரப்பவேண்டும். 
இதைப்போல் மயில் தோகை விரித்தாடுவது எதற்காக? அப்படி வானவில் நிறமுடைய மயில் தோகை விரித்தாடும் மயில் ஆண் மயில் என்பதினை உணர்ந்திருக்கிறீர்களா? அது ஏன் ஆடுகிறது? பெண் மயிலினை கவர்வதற்காகவே! இயற்கையில் ஆண் இனம் எல்லாம் அழகானவையே, இயற்கையில்  ஆண்தான் தன்னை நிரூபித்து பெண்ணை கவர வேண்டி உள்ளது. ஆனால் மனித இனத்தில் இந்த நிலை தலைகீழாக உள்ளது. பெண்ணே  ஆணைக் கவர்கின்றாள். உண்மையில் பெண் தன்னை வேறுவிதத்தில் அழகு படுத்த தேவையில்லாதவள். அவள் பெண்ணாக இருக்கும் போதே அழகாகி விடுகிறாள்.  ஆக மனிதகுலத்திலும் இயல்பில் ஆணே அழ…

இறை சாதனைகள் (தியானம், ஜெபம், பிரார்த்தனை) ஒவ்வொரு நாளும் குறித்த நேரத்தில்தான் கட்டாயம் செய்ய வேண்டுமா?

இறை சாதனைகள் (தியானம், ஜெபம், பிரார்த்தனை) ஒவ்வொரு நாளும் குறித்த நேரத்தில்தான் கட்டாயம் செய்ய வேண்டுமா?

இந்தக் கேள்விக்கான பதிலினை ஒரு உதாரணம் மூலம் விளங்க்கிகொள்வோம்.

உங்களுக்கு நாட்டு ஜனாதிபதியின் நட்பு, அதன் மூலம் உதவி தேவைப்படுகிறது என ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். அவருக்கு  நெருக்கமான நண்பர் ஒருவர் ஜனாதிபதியின் தனிப்பட்ட அலைபேசி இலக்கத்தினை தருகிறார், இதுவே இறை சாதனையில் தீட்சை எனப்படுகிறது. பெறப்படும் மந்திரம் குறித்த   தெய்வ சக்தியின் தனிப்பட்ட அலைபேசி இலக்கம் போன்றது.  அதனைத்தரும் குரு ஏற்கனவே அந்த தெய்வ சக்தியுடன் பரீட்சயமான நண்பர்.
முதன் முறையாக ஜனாதிபதியிற்கு அழைப்பினை ஏற்படுத்தும் போது அவரது ஓய்வு நேரம் அறிந்து அந்த வேளையில் அழைப்பினை ஏற்படுத்தினால் மட்டுமே நாம் ஓய்வாக அறிமுகப்படுத்திக்கொள்ளவேண்டும். பின்னர் நன்கு பழக்கமாகி மிக நெருங்கிய நட்பாகிய பின்பு ஏதும் அதிஅவசரம் என்றால் நினைத்த நேரத்தில் உரையாடி உதவி கேட்கலாம், ஆனால் நினைத்தபடி அவரை எந்த நேரமும் தொல்லை செய்யமுடியாதல்லவா?
இதைப்போலவே இறைசாதனைகளும் ஆரம்ப சாதனையில் நேரக்கட்டுப்பாடு, மற்றைய கட்டுப்பாடுகளை கட்டாயம் …

காம ரகசியம் - 03: காமத்தின் மீதான வெறுப்பு சரியா?

காமத்தின் மீதான வெறுப்பு சரியா?

ஓஷோவிடம் ஒருமுறை ஒரு பெண் " நான் எனது கணவரை மனதார நேசிக்கிறேன், ஆனால் காமத்தினை வெறுக்கிறேன், இதனால் எனக்கும் கணவருக்குமிடையில் முரண்பாடு உண்டாகிறது இது ஏன்?" என வினாவினார், அதற்கு ஓஷோவின் பதில் இவ்வாறு இருந்தது. 
நீங்கள் வார்த்தையினால் விளையாடுகிறீர்கள், அது எப்படி உங்கள் கணவரை விரும்பிக்கொண்டு காமத்தினை வெறுக்கமுடியும். முதலில் இதன் அடிப்படையினை புரிந்து கொள்ள வேண்டுகிறேன், ஒரு ஆணை விரும்பும் போது நீங்கள் அவனது கையினை பிடித்துக்கொண்டு நடக்க விரும்புகிறீர்கள், அவனை அடிக்கடி காண விரும்புகிறீர்கள், அவனை கட்டியணைத்துக்கொள்ள விரும்புகிறீர்கள், அவனது குரலை அடிக்கடி கேட்க விரும்புகிறீர்கள், அதுமட்டுமல்ல அவனை பார்க்கத் தவிக்கிறீர்கள், அவன் தூர இடத்திற்கு செல்லும் போது அவனது குரலை மட்டும் கேட்பதில் திருப்தி இல்லாது அவனைக் கண்டவுடன் மட்டுமே மனம் அமைதி பெறுகிறது. 
அவனை தொடுவதன் மூலம், அவன் உங்களை தொடுவதன் மூலம்  உங்களுக்கு இன்பம் உண்டாகிறது, அதைவிட முத்தமிடும்போது இன்னும் இன்பம் உண்டாகிறது. ஆக காமம் என்பது இரு எதிர்துருவங்கள் ஆழமாக தமது சக்திகளை கலக்கு…

காம ரகசியம் - 02

அடக்கப்பட்ட காமமும் காமத்தின் மீதான வேறுப்பும்
காமம் மிருகத்தனமானது என்ற கருத்து மீதான ஓஷோவின் பார்வை பற்றி இந்தப்பதிவில் பார்ப்போம். 
மனிதனும் ஒரு மிருக வகையினை சார்ந்தவன் தான், ஆனால் அவனை மிருகம் என்று மட்டும் சொல்லமுடியாது, அவன் ஒரு முடிவான் மிருகம் அல்ல, அவன் மேலும் மிருகமாகவும் முடியும், அல்லது மேல் நோக்கி தெய்வமாகும் வழியிலும் செல்லமுடியும். அவன் எதையும் தேர்வு செய்யும் உரிமையினை பெற்றுள்ளான். நாய் என்பது கடைசிவரை நாய் எனும் மிருகம்தான், ஆனால் மனிதம் புத்தர் என்ற புனிதராகவும் முடியும், ஹிட்லர் என்ற கொடுங்கோலனாகவும் முடியும். அவன் இருபக்க தேர்வு சுதந்திரம் உடையவன். 
இங்கு காமம் மிருகத்தனமானது என்ற கருத்தில் மிருகத்தனம் என்பதனை வரவிலக்கணப்படுத்த வேண்டும், உலக வரலாற்றில் மனிதனைத்தவிர எந்த மிருகங்களூம் அதிகளவு போர் செய்ததில்லை, தமது இனத்தையே கொடுரமாக கொலை செய்ததில்லை, இப்படியிருக்க மிருகத்தனம் என மனிதன் தனது தவறான செய்கைகளுக்கு வரைவிலக்கணப்படுத்துவது மிகவும் தவறானது. மனிதன் தனது தேர்வு செய்யும் உரிமை மூலம் மிருகத்தினை விட அதிகமாகவே முன்னேறிவிட்டான், அதனை சுட்ட மிருகத்தனம் என்கின்றா…

காம ரகசியம் - 01

Image
மனிதனால் அதிகமாக விரும்பப்படும், மனதினை ஆட்டிப்படைக்கும் விடயம் "காமம்", இன்றை உலகில் இதுபற்றி பலவித விழிப்புணர்வு இருந்தாலும் இதனை சரியான முறையில் வெளிப்படையாக அணுகும் வழிமுறையினை உலகிற்கு தந்தவர் ஓஷோ, ஏனெனில் காமத்தினைப் பற்றிய ரகசிய விஞ்ஞானம் இந்தியாவில் தாந்திரீகத்தின் ஊடாகவும், சீனாவில் தாவோவியலின் ஊடாகவும், மேற்கத்தைய நாகரீகத்தில் ரொசிகிருஷேஷியன் போன்ற இரகசிய சங்கங்களினாலும் தமது குழுக்களூக்கிடையில் மட்டுமே வெளிப்படுத்தி வந்தனர், இதனை மாற்றி அமைத்து வெளிப்படையாக கூறியவர் ஓஷோ மாத்திரமே எனலாம். இந்த தொடரில் ஓஷோவின் காமம் - தாந்திரீகம்-பாலுணர்வு தொடர்பான தகவல்களை தொகுத்து தரலாம் என எண்ணுகிறோம்.

இதனை வாசிப்பவர்கள் ஒரு வெளிப்படையான திறந்த மனதுடன் இவற்றை அணுகும்படி வேண்டப்படுகின்றனர், அல்லாது கீழ்ப்படுத்தப்பட்ட பாலுணர்வு தொடர்பான ஆக்கங்களோ அல்லது அப்படியான உணர்வினை இட்டுச்செல்லும் வகையிலான தகவல்கள் எதுவும் இங்கு இருக்காது. எல்லாவற்றிற்கும் ஊற்றாக இருக்கும் காமத்தினை பற்றிய வெளிப்படையான,ஆழமான புரிதலைப்பெறுதலே இந்த கட்டுரைத்தொடரின் நேக்கமாகும், இதனை ஒத்த மனதுள்ளவர்கள் இதனை வாச…

மந்திர யோகம் (04): மந்திரத்தின் பண்பு

சென்ற பதிவில் மந்திரம் ஒன்றின் அமைப்பு எப்படி இருக்கும் என்று பாத்தோம், இந்தப்பதிவில் மந்திரம் ஒன்றின் பண்பு எப்படி இருக்கும் என்று பார்ப்போம். மந்திரத்திற்கு ஏழு பண்புகள் இருக்கும். அவையாவன் ரிஷி, சந்தஸ், தேவதை, பீஜம், சக்தி, கீலகம், நியாசம் என்பன. இந்த ஏழைப்பற்றிய தத்துவார்த்த விளக்கம் பற்றி கீழே பார்ப்போம்.
ரிஷி: பிரம்மம் என்ற பேரொளியின் அதிர்வுகளில் இருந்தே இந்த பிரபஞ்சம் தோற்றம் பெறுகிறது, ஒவ்வொரு பொருளிற்கும், எண்ணத்திற்கும் பிரபஞ்ச சக்தியின் குறித்த அதிர்வு காணப்படும். அந்த சக்தி அதிர்வினை தமது தியான சக்திமூலம் உணரக்கூடியவர்களையே பழங்காலத்தில் ரிஷிகள் எனப்பட்டனர். அவர்கள் பிரபஞ்சிலுள்ள தெய்வ சக்தியினை முதலில் உணர்வின் மூலம் அறிந்து பின்னர் சப்தத்திற்கு மாற்றி மந்திரங்களை அமைத்தனர். உதாரணமாக வானொலியினை எடுத்துக்கொண்டால் ஒலிபரப்பு நிலையத்திலிருந்து சப்த அலைகள் மின்காந்த அலைகளாக வானப்பரப்பில் பரப்பப்படும், இந்த அலைகள் தகுந்த வாங்கிகள் மூலம் வானொலியினை மட்டிசைப்பதன் (Synchronizing)  மூலம் வானத்தில் உள்ள மின்காந்த அலைகள் மீண்டும்  சப்த அலைகளாக மாற்றப்படும், இதைப்போல் பிரம்மம் என்ற ப…

மந்திர யோகம் (03): மந்திரங்களின் அமைப்பு

சென்ற பதிவில் மந்திரம் என்றால் என்ன? என்று பார்த்தோம், இந்தப்பதிவில் மந்திரத்தின் பகுதிகள் என்ன என்று பார்ப்போம், இவை எல்லா மந்திரங்களிலும் காணப்படும் பொதுவான அமைப்புகளாகும், சிலவற்றில் சிலது இல்லாமல் இருக்கும், ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒரு உடல் இருக்கும், அதாவது மந்திரம் என்றால் மனித உடல் போன்று கருதினால் அதன் தலை போன்றது "ஓம்' என்ற பிரணவம், தலை அல்லது மூளை இல்லாமல் எந்தவொரு செயலும் உடலில் நடைபெறாது என்பது போல் எல்லா மந்திரத்திற்கு முன்னும் ஓம் சேர்க்க வேண்டும். சில  தாந்திரிக மந்திரங்களில் இவற்றிற்கு விதிவிலக்கு உண்டு, பொதுவான மந்திரத்தின் அமைப்பு கீழ்வருமாறு காணப்படும். அந்த மந்திரத்திற்குரிய தேவதை, ஓம் ஐ தொடர்ந்து ஸ்ரீ என்பதுடன் தொடங்கும், உதாரணமாக  ஓம் கணபதி.... என்றவாறு, இருக்கும். அத்துடன் சில சக்தியலைகளை ஈர்க்க   பீஜட்சரங்களும் சேர்ந்து வரும்.   அடுத்த பகுதி சாதகரின் மனவிருப்பத்தினை, சங்கல்பத்தினை குறிப்பதாக இருக்கும்.  பொதுவாக ஸர்வ சித்திப்ப்ரதாய, மனோவாஞ்சிதம் போன்ற வார்த்தைகள் இவற்றை குறிக்கும். கடைசிப்பகுதி பல்லவம் எனப்படும், அதாவது முடிவுப்பகுதி, இது எழு வகை…

மந்திர யோகம் (02): மந்திரம் என்றால் என்ன?

மந்திர யோகம் என்பது மந்திர சாதனை மூலம் மனதினை வசப்படுத்தி இறையான பிரம்மத்திடம், சிவத்திடம் ஆன்மா ஒன்ற உள்ள ஒரு எளிமையான  வழியாக எமது முன்னோர்கள் ஏற்படுத்தி கொடுத்துள்ளார்கள்.   அதாவது மனதில் மந்திரத்தின் மூலம் சித்த விருத்திகளை குறைத்து படிப்படியாக எண்ணம் ஒடுங்கி மனம் அடங்கி சாதகர் தெய்வத்துடன்/தெய்வ சக்தியுடன் ஒன்றும் நிலையினை ஏற்படுத்துவது தான் மந்திர யோகம் எனப்படும்.
மந்திரங்கள் குறித்த ஒலிகளை உருவாக்க கூடிய சொற்களின் கோர்வைகளால் ஆக்கப்பட்டிருக்கும். இந்த ஓவ்வொரு ஒலியும் பிரபஞ்சத்தில் உள்ள சக்தியுடன் பரிவுறும் (Resonance) ஆற்றல் உள்ளதாக இருக்கும். மனித வாழ்க்கையினை அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு புருடார்த்தங்களாக எமது முன்னோர்கள் வகுத்திருக்கிறார்கள். இந்த நான்கினையும்  அடைந்து வாழ்பவனே உண்மையில் பூரண இன்பமுடைய  மனிதனாக பூமியில் வாழ்ந்து இறைவனை அடைகிறான். இந்த நான்கும் பிரபஞ்சத்தில் உள்ள சக்திகளால் பாதிப்படைகிறது. இந்த அளவினை கூட்டவோ குறைக்கவோ மந்திரங்களை பாவிக்கலாம்.
மந்திரங்கள் என்றால் என்ன என்று மேலும் சில விளக்கங்களை பார்க்கலாம். சமஸ்கிருதத்தில் மந்த்ர என்றால் என்ன எ…

மந்திர யோகம் (01): தமிழர்கள் மந்திரம் சொல்லலாமா?

இந்த தொடர்பதிவுகளில் மந்திர யோகம் பற்றிய அடிப்படைகளை விளக்கலாம் என்று எண்ணி உள்ளோம்.

தமிழர்கள் மந்திரம் சொல்லலாமா? சமஸ்கிருதம் தெரிய வேண்டுமல்லவா? அது வடமொழி தெரிந்தவர்கள் தானே சொல்லலாம்!

மேற்கூறிய கருத்துக்கள் அண்மையில் ஒரு நண்பர் ஆதங்கத்துடன் எம்மிடம் வினாவினார், அதற்கு விளக்கமாக எமது மனதில் எழுந்த கருத்துகளை தொகுத்த வடிவமே இந்த கட்டுரை தொடர்!

இதற்கு முதலாவது பதில் "அடேயப்பா அப்படியென்றால் தமிழர்கள் தண்ணீர் குடிக்கலாமா? காற்றினை சுவாசிக்கலாமா? என்று கேட்பது போலல்லவா இது இருக்கிறது?" மந்திரம் மனித மனதையும், உணர்வையும்,ஆன்மாவினையும்,உடலினையும் ஒன்றிணைக்கும் சாதனமல்லவா? அவற்றை பயன்படுத்துவது மனிதனின் அடிப்படை உரிமை! அதனை அறியாமையினால் காரணமே தெரியாத ஒன்றால் மறுக்கின்றோம் என்றால் அது எமது மடமை என்பதனை அறிந்து கொள்ளவேண்டும் நண்பா!

அடுத்து எமக்கு ஒருவிடயத்தினை பற்றி தெரியவில்லை என்றால் அதனை குதர்க்க புத்தியுடன் அணுகாமல் அவை பற்றி அறிந்தவர்களிடமோ அல்லது நல்ல நூற்களை கற்றோ தெரிந்து கொள்ள வேண்டும், பொறுமையாக சீர்தூக்கி ஆராய வேண்டும், இப்படி அணூகுவீர்களானால் உண்மை விளங்கும். அதற்கான …

காயத்ரி மந்திரம் ஜெபிக்கும்போது மனதில் ஏதேனும் நினைக்க வேண்டுமா அல்லது கவனிக்க வேண்டுமா?

Image
வலைபின்னலினை தொடர்ச்சியாக வாசித்து சாதனை செய்யும் ஆர்வமுள்ள அன்பர் ஒருவர் கேட்ட கேள்விக்கான பதிலினை இங்கு கூறுகிறோம்.காயத்ரி மந்திரம் ஜெபிக்கும்போது மனதில் ஏதேனும் நினைக்க வேண்டுமா அல்லது கவனிக்க வேண்டுமா?
ஆம், மனது குறித்த பாவனையில் இருக்க வேண்டும், அப்பொழுதே நீங்கள் ஜெபிக்கும் மந்திர சக்தியின் அலையினை மனது ஏற்று உங்கள் சூஷ்ம உடலும், ஸ்தூல உடலும் பலன் பெறும். இவை பற்றி ஏற்கனவே எமது பதிவுகளில் குறிப்பிட்டுள்ளோம், 
எப்படி ஜெபம் செய்யவேண்டும்? முதலாவது மந்திரத்தினை உச்சரிக்கும் முறையினை தெரிந்தவர்களிடம் கேட்டுக் கொள்ளலாம், சரியான முறை காயத்ரி மந்திரம் ஐந்து இடங்களில் நிறுத்தி ஜெபிக்க வேண்டும். முதலாவது நிறுத்தல் "ஓம்"; இரண்டாவது நிறுத்தல் "பூர் புவ ஸ்வஹ"; மூன்றாவது நிறுத்தல் "தத் ஸவிதுர்வரேண்யம்"; நான்காவது நிறுத்தல் "பர்கோ தேவஸ்ய தீமஹி"; ஐந்தாவது நிறுத்தல் "தியோ யோ நஹ ப்ரசோதயாத்", காயத்ரியினை ஜெபிக்கும் போது மேற்கூறிய ஒவ்வொரு பதத்திலும் நிறுத்தி ஜெபிக்கவேண்டும்.
மனதில் பாவனைக்கு கீழ்வரும் முறையினை நீங்கள் பின்பற்றலாம்; 
தியானம்: கீழ்வர…

மந்திரங்களை வாய் விட்டு சொல்வது மனதிற்குள்ளே சொல்வது எது சிறந்தது?

Image
வலைபின்னலினை தொடர்ச்சியாக வாசித்து சாதனை செய்யும் ஆர்வமுள்ள அன்பர் ஒருவர் கேட்ட கேள்விக்கான பதிலினை இங்கு கூறுகிறோம். 
இங்கு இரண்டு கேள்விகளை கேட்டுள்ளீர்கள்,  முதலாவது; மந்திரங்களை வாய் விட்டு சொல்வது மனதிற்குள்ளே சொல்வது எது சிறந்தது? 
இரண்டாவது காயத்ரி மந்திரம் ஜெபிக்கும்போது மனதில் ஏதேனும் நினைக்க வேண்டுமா அல்லது கவனிக்க வேண்டுமா?

முதலாவது கேள்வியிற்கான பதிலினை இந்த பதிவில் பார்ப்போம்!
முதலில் மந்திரங்கள் என்றால் என்ன? என்று பார்ப்போம், மந்திரங்கள் பிரபஞ்சத்தில் உள்ள தெய்வ சக்தியின் அதிர்வலை குறியீடுகள், ஒவ்வொரு வகை தெய்வ சக்தியிற்கு ஒவ்வொரு அதிர்வலைகள் உண்டு, உதாரணமாக ரேடியோ வில் எப்.எம் மீற்றரில் சூரியன் எப்.எம் இற்கு ஒரு அதிர்வு, மற்றைய வானொலிகளிற்கு இன்னொரு அதிர்வு இருப்பது போல் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு அதீத ஆற்றல் அல்லது தெய்வ சக்திக்கும் ஒவ்வொரு அதிர்வு உண்டு. இயல்பாக பிரபஞ்ச அலைகள் மூலமும், நவகோள்கள் (இவை சட்டலைட்) மூலமும் பூமியில் வந்து எமது சுவாசத்தினூடாக சூஷ்ம உடலில் சேர்ந்து பின் ஸ்தூல உடலில் செயல்கொள்கிறது. இவை ஒவ்வோருவரும் செய்யும் நன்மை தீமை கர்மங்களுக்கு ஏற்ப உடலில…