குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, May 12, 2019

ஸ்ரீ காயத்ரி சித்தரின் வழிகாட்டல் - 05

முந்தைய பகுதிகள்:
பகுதி - 01
பகுதி - 02 
பகுதி - 03 
பகுதி - 04 

*****************************************
ஒரு நாள் அதிகாலை 0400 மணியளவில் எனது அம்மா என்னை உலுக்கி எழுப்பினார். தான் ஒரு கனவு கண்டதாகக் கூறினார். கனவில் சுவாமிகளின் காயத்ரி பீடத்திற்கு சென்று பூஜையில் பங்குபற்றியதாகவும், பூஜைமுடிந்த பின்னர் சுவாமிகள் மண்டபத்திலிருந்து ஆசிரமத்திற்கு இறங்கி வரும் மலைப்பாதையில் இடையில் தன்னை அழைந்து கைகள் நிறைய சக்கரைப்பொங்கள் தந்து, நிறைய புது பித்தளைப்பாத்திரங்களைக் காட்டி இது எல்லாம் உங்களுக்குத்தான் எடுத்துக்கொள்ளுங்கள்" என்று ஆசி கூறியதாக கூறினார். 

அம்மா இதற்கு முன்னர் ஒருதடவை மாத்திரமே சுவாமிகளை பார்த்திருந்தார். இவ்வளவு தெளிவாக உரையாடல் நடப்பது கனவாக இருக்குமா என்று மனம் பல கேள்விகளை அடுக்கிக் கொண்டு செல்ல, விடிந்தது நேராக தொலைபேசி அழைப்பு எடுக்கும் கடைக்குச் சென்று சுவாமிகளுக்கு அழைத்தேன். சுவாமிகளுக்கு அம்மாவிற்கு ஏற்பட்ட கனவினைப் பற்றி கூறியவுடன், மிக்க மகிழ்ச்சியுடன் " நல்லது அப்பா, அம்மாவைக்கூட்டிக்கொண்டு என்னைக்காண உடனடியாக வாருங்கள், நல்ல சேதி காத்திருக்கிறது" என்று பௌர்ணமி இல்லாத ஒரு சாதாரண நாளில் வரும்படி கூறினார். 

நாமும் அடுத்த சனிக்கிழமை பள்ளிக்கூடம் விடுமுறை என்பதால் இருவருமாக சாமியைக் காணச் சென்றோம். சாமி அம்மாவை மிகுந்த மரியாதையுடன் வரவேற்று, இருவரையும் அமரச் சொல்லி விட்டு அம்மாவிடம் "உங்கள் மகனை குருநாதர் சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளச் சொல்லியிருக்கிறார், எமது குருபரம்பரை அகத்திய மகரிஷியே மூல குரு, இந்த மார்க்கம் துறவறம் இல்லை, ரிஷிகள் பின்பற்றிய வழி, நீங்கள் விரும்புவது போல் படித்து, தொழில் செய்து, திருமணம் செய்து பிள்ளைகளுடன் வாழுவான், அதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன், ஆனால் அவனது சாதனையில் எந்த இடையூறும் நடக்காமல் அவனை ஆசீர்வதிக்க வேண்டும், நீங்களும் அவனுடன் தீக்ஷை பெற்று சாதனை செய்யலாம்" என்றார். 

அம்மா மறுபேச்சு இல்லாமல் "எனது பிள்ளையை உங்களிடம் ஒப்படைக்கிறேன் சாமி" என்று கூறிவிட்டார். சாமியிற்கு பெரிய சந்தோஷம், என் பக்கம் திரும்பி "அடுத்த பௌர்ணமி வைகாசிப் பௌர்ணமி, இருவருமாக தீக்ஷை வாங்கிக் கொள்ளுங்கள், முதல் நாள் வந்து தங்கி பௌர்ணமி அன்று தீக்ஷை வாங்கிக் கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டு எம்மிருவரையும் மதிய உணவு அருந்தி விட்டுச் செல்லும் படி கூறினார் .

வைகாசிப் பௌர்ணமி மிக அரிய ஒரு நாள். அன்றைய தினத்தில் சம்பளா பள்ளத்தாக்கு அல்லது சித்தாஸ்ரமம் என்று சொல்லப்படும் சூக்ஷ்ம ஆஸ்ரமத்தில் ரிஷிகள் கூடி உலக பரிணாமத்தைத் தீர்மானிக்கும் நாள். அன்று பூவுலகு முழுவதும் அவர்களது அருட்காந்தம் பரவும். உலகை மறைமுகமாக ஆளும் மகரிஷிகளில் அகத்திய மகரிஷியே தென்னாட்டின் பரிணாமத்திற்கு பொறுப்பானவர். அவரது ஆணையின் கீழே எமது குருமண்டலம் வருகிறது, இத்தகைய நாளில் உங்கள் தீக்ஷை அமைந்திருப்பது நீங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று வைகாசிப்பௌர்ணமியின் சிறப்பினை எடுத்துக் கூறினார். 

எனக்கோ அளவிடமுடியாத மகிழ்ச்சி! நான் இதுவரை வணங்கிய அகத்திய மகரிஷியின் குருபரம்பரையிலேயே தீக்ஷை கிடைக்கிறது என்று! அடுத்த பௌர்ணமியை எண்ணிக் காத்திருந்தேன். 

அடுத்த பௌர்ணமி, வைகாசிப் பௌர்ணமி தினத்தில் காயத்ரி பூஜை, யாகம் முடிந்த பின்னர் எனக்கும் அம்மாவிற்கும் தீக்ஷை தந்து , காயத்ரி யந்திரமும் தந்து தொடர்ச்சியாக ஒரு மண்டலம் இடைவிடாமல் உபாசனை செய்யச் சொன்னார். அதற்குரியவிதிமுறைகளையும் சுருக்கமாக கூறினார். 

வீட்டிற்கு வந்ததும் பூஜையறையில் யாக குண்டம் ஸ்தாபித்து, காயத்ரி படம், யந்திரம் ஸ்தாபித்து எனது உபாசனையைத் தொடங்கினேன். அதிகாலை 0400 மணிக்கு எழுந்து குளித்து விட்டு ஜெபம் செய்யத்தொடங்கினால் சரியாக 0645 வரை சாதனை செய்து விட்டு பாடசாலைக்கு செல்வேன். 

பாடசாலை விட்டு வந்து மதிய உணவு அருந்தி விட்டு சற்று உறங்கி விட்டு எழுந்து மாலையாகிவுடன் ஆற்றுக்குச் சென்று நீராடி ஜெபம் செய்து விட்டு பின்னர் வீட்டிற்கு வந்து முறையான காயத்ரி பூஜை, சஹஸ்ர நாம அர்ச்சனை, பின்னர் ஹோமம் இது முடியும் போது இரவு எட்டு மணியாகிவிடும். 

மிக ஆனந்தமான சாதனை நாட்கள் கழிந்தது. தினசரி 20 - 30 மாலை ஜெபம், பூஜை, யாகம் என 06 - 07  மணித்தியாலம் சாதனையில் கழிந்தது. படிப்பில் சுத்தமாக ஆர்வம் இல்லாமல் போய்விட்டது. ஆனால் எதையும் படித்தால் உடனே கிரகித்து ஞாபகப்படுத்தும் ஆற்றல் அதிகரித்திருந்தது. 

இப்படி மண்டல சாதனை நடந்து கொண்டிருக்க சிறிது நாட்களில் ஜெபம் செய்ய அமர்ந்து கண்களை மூடினால் சூரியனைப் போன்ற பிரகாசம் தெரிய ஆரம்பித்தது. மிக ஆனந்தமாகவும் நேரம் கழிவது தெரியாத அளவிற்கு அதிக  நேரம் சாதனையில் அமர முடிந்தது. 

முப்பது நாட்கள் கழிந்தவுடன் எனது அனுபவத்தை சுவாமிகளிடன் சொல்ல வேண்டும் என்று தொலைபேசியில் அழைத்தேன், கண்களை மூடி அமர்ந்தால் சூரியபிரகாசம் தெரிவது பற்றிக் கூற, எவ்வளவு நேரம் சாதனை செய்கிறீர்கள், எவ்வளவு ஜெபம் செய்கிறீர்கள் என்று கேட்டார். நானும் 06 - 07  மணித்தியாலம் செய்கிறேன், குறைந்தது 20 - 30 மாலை தினசரி செய்கிறேன் என்றவுடன், இல்லை அப்பா, ஒரு மாலைக்கு மேல் இனிமேல் செய்ய வேண்டாம், கர்ம பிரபாவங்களை சரிப்படுத்தாமல் துரித முன்னேற்றத்தினை ஏற்படுத்தினால் மீண்டும் கீழே வரவேண்டி வரும், ஆகவே இனிமேல் தினசரி 108 (ஓரு மாலை) க்கு மேல் ஜெபம் செய்ய வேண்டாம். பூஜை, யாகத்தினைத் தொடருங்கள், என்று கூறிவிட்டார்.  

தீக்ஷையின் பின்னர் மண்டல சாதனையின் போது


எனக்கோ அதிக நேரம் சாதனையில் அமர்ந்த போதையில் இருந்து வெளிவர முடியவில்லை. எனினும் குருவாக்கை மீறமுடியாமல் அவர் கூறியபடி தினசரி ஒரு மாலை காயத்ரி ஜெபம் செய்யத் தொடங்கினேன். 

தீக்ஷை பெற்று ஒரு மண்டல சாதனையின் போதே காயத்ரி சாதனையின் உயர் சித்தியான சவிதா மண்டலத்தின் பேரொளி வடிவம் கிடைத்துவிட்டாலும் ஏதோ ஒரு காரணத்திற்காக எனது பரிணாமத்தை சரிப்படுத்த குரு நாதர் அந்த அளவிற்கு மேல் செல்ல வேண்டாம் என்று கூறிவிட்டார். இதற்குரிய காரணங்கள் பிற்காலத்தில் தெளிவாக விளங்கியது. 

எப்போது ஆர்வக்கோளாறால் எதையும் சொல்லுவதை மீறி செய்து பார்க்க வேண்டும் எண்ணும் எனக்கு சாதனை விஷயத்தில் குரு வாக்கை மீறிச் செய்யவேண்டும் என்ற எண்ணம் தோன்றவில்லை.



ஆகவே சாதனையை தினசரி தொடர்ந்து கொண்டு,பள்ளி வாழ்க்கையை நடாத்திக்கொண்டு பௌர்ணமிக்கு சுவாமியிடம் சென்று வந்தேன். தீக்ஷை பெற்ற பின்னர் பௌர்ணமி அன்று அல்லது முதல் நாள் சென்று இரண்டொரு நாட்கள் ஆசிரமத்தில் தங்கி வரத்தொடங்கினேன். 

நான் தங்கி வருவதை சுவாமிகள் மிகவும் விரும்பினார். எனக்கு ஆசிரமத்தில் கட்டிலும் தங்குமிடமும் தந்தார். பௌர்ணமிப் பூஜை முடிந்தால் அடுத்த நாளில் இருந்து ஆசிரமத்தில் இரண்டொருவரைத் தவிர வேறு எவரும் இருக்க மாட்டார்கள். ஆகவே சுவாமிகளுடன் உரையாட நல்ல சந்தர்ப்பம். ஆகவே நானும் விரும்பி தங்கினேன். 

இப்படி இருக்கும் போது ஒரு நாள் சாமியிடம் " சாமி சித்தி மனிதன் பயிற்சி, யோக வித்யா, காயத்ரி குப்த விஞ் ஞானம் என்றெல்லாம் கற்பிக்கப்படும் என்று புத்தகங்களில் போட்டிருக்கிறது, எப்போது கற்பிப்பீர்க்கள்? என்று கேட்டேன். 

அதற்கு "அதெல்லாம் இங்கு வந்து குருசேவை செய்து நிரந்தரமாக தங்கினால் மட்டும்தான் முடியும், இப்படி இரண்டொரு நாட்கள் வந்து தங்கி அவசரமாக ஓடிக்கொண்டிருந்தால் படிக்க முடியாது" என்று விட்டார். 

எனது உயர்ந்தரப்பரீட்சை முடிய இன்னும் சில மாதங்களே இருந்தது. பரீட்சையின் பின்னர் இங்கு வந்துவிடலாம் என்று எண்ணிக்கொண்டேன். 

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...