Posts

Showing posts from February, 2013

கடையிற் கிடைக்ககூடிய சித்தர்களின் அரிய காயகற்பமுறை - 04

தான்றிக்காய் பற்றிய அறிவியல் தகவல்கள்
இது சித்தவைத்திய மருந்துகள் பலவற்றில் சேர்க்கப்படுவது. இது முத்தோஷங்களையும் கட்டுப்படுத்தும் தன்மையுடையது. எனினும் கபத்திற்கெதிராக சிறப்பான முறையில் செயற்படும். பொதுவாக கபக்குற்றமுடைய நோய்களுக்கான மருந்தில் அதிகமாக பயன்படுத்தப்படும்.
அறிவியல் ஆய்வுகளின் படி கீழ்வரும் பதார்த்தங்களை உடையதாக அறியப்பட்டுள்ளது. Main chemical constitutes are tannins mainly include ß- sitosterol, gallic acid, ellagic acid, ethyl gallate, galloyl glucose and chebulaginic acid. linoleic acid -31 % respectively ( இது உடலில் உள்ள கொலஸ்ரோல் அளவினை சரியாக வைத்திருக்க உதவும் ஒரு பதார்த்தமாகும். கொழுப்பினை HDL (high density lipoprotein) ஆக வைத்திருந்து கொலஸ்ரோல் ஆக மாறுவதை கட்டுப்படுத்துகிறது.  Tannin உடலில்   தான்றிக்காயில் உள்ள இரசாயனப் பதார்த்தங்களின்செயற்பாடு Tannins: 1. It shows scavenging activity against mitochondrial lipid peroxidation. (lipid peroxidation என்பது பொதுவாக நச்சுப்பதார்த்தம் உடலில் சென்றவுடன் உடலில் உள்ள லிப்பிட்டு கொழுப்புகளை அழிக்க முனையும் செயற்பாடு, …

கடையிற் கிடைக்ககூடிய சித்தர்களின் அரிய காயகற்பமுறை - 03

Image
கடுக்காய்  பற்றிய அறிவியல் தகவல்கள்!
திரிபலாவில் உள்ள கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் என்பவற்றினைப்பற்றிய சித்தர்கள் கூறிய கருத்தினைப் பாத்தோம், இந்தப்பதிவில் இவை மூன்றினதும் விஞ்ஞான ஆய்வு முடிவுகளைப் பற்றிப் பார்ப்போம். 
முதலாவது கடுக்காய்
இது தாவரவியலில் combretaceae குடும்பத்தினை சேர்ந்தது. இது ஆயுர்வேத தத்துவத்தின்படி அறுசுவைகளில் ஐந்து சுவைகளை உள்ளடக்கியது. கசப்பு சுவை அதிகம் உடையது. நவீன விஞ்ஞான ஆய்வின்படி இது ஈரலின் செயற்பாட்டினை தூண்டி பாதுகாப்பதுடன், குடலில் உள்ள அழுக்குகள், பழைய மலங்களை வெளித்தள்ளுகிறது. அத்துடன் நரம்புகளை வலிமைப்படுத்தி நரம்புதளர்ச்சியினை குணப்படுத்துகிறது. அதனால் ஐந்து புலன் களினால் பெறும் உணர்வுகள் மேம்படுகின்றன. சிறு நீர்கல், சிறு நீரில் யூரியா, சிறு நீர் வெளியேறுவதில் உள்ள தடைகள், மற்றும் உடலில் உள்ள ஒட்டுண்ணிப்புழுக்களினை அழிக்கும் செயன்முறையினையும் அதிகரிக்கிறது. இரத்ததினை சுத்திகரிக்கிறது. தொண்டை கரகரப்பு, தசைப்பிடிப்பு போன்றவற்றினையும் நிவர்த்தி செய்கிறது. மன அழுத்ததினையும் குறைக்கும் தன்மை வாய்ந்தது. 
கடுக்காயினைப்பற்றி பல்வேறு மருந்தியல் ஆய்வ…

கடையிற் கிடைக்ககூடிய சித்தர்களின் அரிய காயகற்பமுறை - 02

Image
பொதுவாக காயகற்பம் என்றவுடம் மலைகள் பல ஏறி மூலிகை சேகரித்து அவற்றை சித்தர்கள் முறைப்படி சுத்தி செய்து செய்யும் மருந்துகள் என எண்ணப்படுகிறது. இதில் ஓரளவு உண்மை என்றாலும் இந்த மாயையினால் பலர் தமது கையில் கிடைக்கும் எளிய பொருட்களையே பயன்படுத்துவதில்லை. தம்மிடம் தான் சித்தர்கள் கூறிய இரகசியங்கள் இருப்பதாக மக்கள் மனதினை நம்பச்செய்வதற்காக, இப்படியான தோற்றத்தினை பல சித்தமருத்துவர்கள் உருவாக்கி விடுகிறார்கள், 
அந்த வகையில் எல்லோருக்கும் ஆயுர்வேத/சித்த மருத்துவ கடைகளில் கிடைக்கக்கூடிய சூரணம்தான் திரிபலா சூரணம், பெரிய விலைவராது, ஆனால் குணம் பெரியது. இந்தப்பதிவில் திரிபலா சூரணத்தினை பற்றிய முழுமையான அலசலினை பார்ப்போம். அதில் கீழ்வரும் தகவல்களை நீங்கள் தெளிவாக அறிந்து கொள்ளலாம். திரிபலா சூரணத்தில் உள்ள மூலிகைகள் பற்றி சித்தர்கள் என்ன சொல்கிறார்கள்?திரிபலா சூரணத்தில் உள்ள மூலிகைகளினைப்பற்றி நவீன அறிவியல் என்ன சொல்கிறது?திரிபலா சூரணம் எப்படி உடல் செயற்படுகிறது? காயகற்பமாகிறது?திரிபலா சூரணத்தினை எப்படி எல்லோரும் பயன்படுத்துவது?அவ்வாறு பயன்படுத்தும் போது ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன? அவற்றினை எப்படி சம…

சித்தர்களின் அரிய கற்பமுறை - அறிவியல் ஆதாரங்களுடன்

"இது எமது 200 ஆவது பதிவு, இதிலிருந்து பலகாலமாக எழுதுவதற்கு எண்ணியிருந்த வைத்தியம் சார் குறிப்புகளை தரலாம் என எண்ணுகிறோம். எமது மற்றைய பதிவுகள் மன, ஆன்ம முன்னேற்றத்தினையே கூறுவதாக இருந்து வந்துள்ளது. இனிவரும் மருத்துவக்குறிப்புகள் பலருக்கும் அன்றாட தேவைகளில் உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம். படித்து பயன் பெற குருதேவரை பிரார்த்திக்கிறோம். "


சித்தர்களின் அரிய கற்பமுறை - அறிவியல் ஆதாரங்களுடன் இன்று சித்தமருத்துவம் என்பது "பாட்டி வைத்தியம்" என்று நம்பப்பட்டு விளக்கமில்லாமல் அனுபவத்தின் மூலம் நம்பிக்கையில் குணமாகும் வைத்தியம் என்று பலர் கருதி வருகின்றனர். அதேபோல் கற்ற சித்தவைத்தியர்கள் கூட தாங்கள் சித்தவைத்தியர் என்பதனை காட்டுவதற்கு பழம் பாடல்கள் இரண்டை கூறி சித்தர்கள் கூறியது என மழுப்பி அதனை தற்கால மொழியில் விளக்க முடியாமல் இருப்பதால்  தற்கால கல்வி முறையில் கற்றவர்கள் அவர்களை அறிவியல் பின்புலமின்றி ஏதோ நம்பிக்கையில் செயற்படுகின்றார்கள் என எண்ணி விடுகிறார்கள். இதன் பயனாக தூய அறிவியல் கலையான சித்தமருத்துவம் இன்று பாட்டி வைத்தியமாகிவிட்டது. இந்த கட்டுரை தொடரின் நோக்கம…