Posts

Showing posts from October, 2014

சனி பெயர்ச்சி - ஸ்ரீ சனீஸ்வரர் உடன் ஒரு குருசிஷ்ய சம்பாஷனை

சனிஸ்வர பகவானே! குருதேவா! கடந்த ஒருவாரமாக இங்கு மக்கள் நீங்கள் இராசி மாறப்போகிறீர்கள் என்று பயந்து போய் இருக்கிறார்கள்!
புத்தரை வழிபடும் சகோதரர்களும் உங்களை கண்டு பயந்து பரிகாரம் என்று ஜோதிடர், கோயில் என்று ஓடியவண்ணம் இருக்கிறார்கள்!
கடவுள் இல்லை என்று நாத்திகமும், கொமினிசமும் பேசும் நண்பர்களும் பின்வாசலால் ஜோதிடரிடம் சென்று விசாரித்துக்கொள்கிறார்கள்!
தன்முயற்சி இல்லா மாணவர்கள் உங்கள் மேல் குற்றம் சாட்டிவிட்டு நீங்கள் இருக்கும் நிலையில் படித்தாலும் தலையில் ஏறாது என்று கூறுகிறார்கள்.
கணவனுக்கும் மனைவியிற்கும் வரும் மனஸ்தாபம் உங்களால் என்று குறை கூறுகிறார்கள்.
ஜோதிடர்களும், கோயில்களும் உங்கள் பாதிப்பினை இவர்கள் எல்லோருக்கும் குறைத்து தருவதாக வாக்குறுதி அளித்து ஸ்பெஷல் பக்கேஜ் அறிவித்துள்ளார்கள்!
இவற்றில் எவை உண்மை? எது பொய் சற்று விரிவாக கூற வேண்டுகிறேன் ஐயனே!  ***************************************************** சித்த யோக மார்க்கத்தில் பயணிக்கும் நன் மனது கொண்ட அன்பனே!
உன் குருநாதர் உனக்கு உபதேசித்த சித்தர்களின் வாக்கான “அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உண்டு” என்பதனை நீ அறிவாய். இது உண்…

சித்தர்களின் பிரணாயாம கோட்பாடு - வகுப்புகள்

Image