குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


எமது வலைத்தளத்தினை படிப்பவர்கள் ஸ்ரீ வித்தையின் மூலம் எளிமையான முறையில் தெய்வ சக்தியினை பெற்று ஆன்ம உயர்வும் எல்லா சௌபாக்கியங்களும் பெறும் ஸ்ரீ ஜோதியின் விளக்கமும் பங்கு பெறும் முறையும் இந்த இணைப்பில் காண்க


எளிய ஸ்ரீ வித்யா சாதனை வழிகாட்டி: PDF கோப்பாக தரவிறக்கி கொள்ள

ஸ்ரீ வித்யா சாதனை படிவத்தினை நிரப்ப : படிவம்

மனிதனில் தேய்வ சக்தியை விழிப்பிக்கு காயத்ரி சித்த சாதனை : பயிற்சிக் குறிப்பினை தரவிறக்கி கொள்ள


ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


ங்கள் அகஸ்திய மகரிஷியின், குருமண்டலத்தின் அருள் பெறுவதற்கு உங்கள் பெயர் எமது பிரார்த்தனையில் இணைக்க இந்த இணைப்பில் உள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றவும்.


நீங்கள் ஸ்ரீ ஜோதி இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 08.00 – 08.40 மணி அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


அகத்தியர் யோக ஞானதிறவுகோல் வகுப்பும் மூலகுரு மந்திர உபதேசமும் பெற‌ : இந்த படிவத்தை நிரப்பி தொடர்பு கொள்ளவும்

உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்

இங்கே


-அன்புடன் சுமனன் -

Friday, July 07, 2017

குருப்பூர்ணிமா - குரு சாதனா

அமராத்மாவே,

சித்த வித்யா குருமண்டலத்தால் வழி நடாத்தப்படும் எமது சங்கத்தின் வழிகாட்டலில் உங்கள் மன, உடல் சக்திகளை வலுப்படுத்தி உலக வாழ்க்கையை செம்மைப்படுத்தி இறை அருளை பெற்று ஆன்ம முன்னேற்றமும் பெற வழிகாட்டல் வழங்கப்படுகிறது.

நாளை சனிக்கிழமை காலை 07.02 (Indian Standard Time) தொடங்கி அடுத்த நாள் ஞாயிறு 08.51 வரை பௌர்ணமி திதி கூடுகிறது. இந்த பௌர்ணமி ரிஷிகளால் குருப்பூர்ணிமா என அழைக்கப்படுகிறது.

இந்த நாள் தமது வாழ்க்கையை குருமண்டலத்திற்கு அர்ப்பணித்து தெய்வ சாதனை செய்ய எண்ணும் அன்பர்களுக்கு ஒரு அரிய நாளாகும்.

ஆகவே இத்துடன் இணைக்கப்பட்டுள்ள குரு சாதனை என்ற பாடத்தினை பலமுறை கற்று புரிந்து கொண்டு, வரும் குருப்பூர்ணிமை அன்று உங்கள் குருசாதனையினை தொடங்குங்கள்.

எமது தனிப்பட்ட பிரார்த்தனையில் உங்கள் முன்னேற்றத்திற்காக சித்த வித்யா குருமண்டலத்திடம் தினமும் பிரார்த்திக்கும் அதேவேளை தினசரி உங்கள் முயற் சியே பலன் தருவதை துரிதப்படுத்தும் என்பதை மனதில் கொண்டு உங்கள் சாதனையினை தொடருங்கள்.

சாதனா விபரம் 

Thursday, June 08, 2017

வைகாசிப்பௌர்ணமியும் ரிஷிகளின் மண்ணுலகப் பரிணாமமும்மண்ணுலகப் பரிணாமம்
மண்ணுலகப் பரிணாமத்தை நடாத்த, ஆண்டுக்கொருமுறை எல்லா கேந்திரங்களிலும் உள்ள மகரிஷிகள் சம்பளத்தில் கூடுகிறார்கள். அதில் பிரபஞ்ச நியதிக்கு ஏற்ற விதத்தில் எங்கு ஆக்குவது, எங்கு அழிப்பது என்ற முடிவுகளை ஏற்படுத்துகிறார்கள். அந்த தினம்தான் வைகாசிப் பௌர்ணமி தினமாகும். இந்த கூட்டத்திற்கு தகுந்த ஆன்ம சாதனை புரிந்து பக்குவப்பட்டவர்கள் ஸதூலமாகவும், ஓரளவு பக்குவப்பட்டவர்கள் சூக்கும சரீரத்திலும் அழைத்து செல்லப்படுவர். 

மகரிஷிகள் அனைவரும் கூடும் அந்த சமயம் அவர்களின் கூட்டு காந்தமானது, மண்ணுலக வானப்பரப்பு முழுவது பரவுகின்றது. அதனை பயன்படுத்திக்கொள்ள அன்றைய தினம்  ஆன்மீக கூடங்களில் உள்ளவர்கள் எல்லாம் கூடித் தியான நிலையில் ஆழ்கின்றனர். அந்த காந்த சக்தி பரவும் மாதமாகிய வைகாசி மாதத்தில் உலகின் பல ஆன்மீக  மேதைகள் பிறந்திருக்கிறார்கள். புத்தர்,  வியாசகர், திருவள்ளுவர், கண்ணைய யோகியார் ஆகியோர் இந்த மாதத்தில் பிறந்தவர்களே. 

புராணங்களில் உள்ள உண்மை
மகரிஷிகளின் தலைமை அவ்வப்போது மாறும். கலியுகம் தொடங்கும் வரை தலைமை பொறுப்பினை ஏற்று நடாத்தியவர் வியாச முனிவர் ஆவார். கலியுக ஆரம்பத்தில் மைத்ரேயருக்கு இந்த தலைமை பொறுப்பு வழங்கப்பட்டது. அகத்தியர், மைத்ரேயர், வசிட்டர், புலஸ்தியார் முதலியவர்கள் சப்தரிஷிகள் நிலையில் இருந்து, சிரஞ்சீவிகளாக உலகப் பரிணாமத்தை நடாத்தி வருகிறார்கள். இடையிடையே அவர்கள் வழி நின்று, கடுமையான சாதனையால் தமது உடல் பரிணாமத்தை கட்டுப்படுத்த கூடியளவு வெற்றியடைந்தவர்கள் பலரும், அவ்வப்போது மகரிஷிகள் ஆணையின் பெயரில் செயல்படுபவர்களாய் உலகின் பல கேந்திரங்களில் இருந்து பணியாற்றி வருகிறார்கள். சித்தியடைந்த சித்தர்கள் பலரும் இப்படியிருந்து வருகிறார்கள். சில சமயங்களில் சில குடும்பங்களில் பிறந்து மக்களை  நல்வழியில் திருப்பி விட்டு, பின்னர் மரணத்தினை ஏற்று உடலினை விட்டு விட்டு, தமது பழைய சூக்கும சரீரத்தை ஏற்று கொள்கிறார்கள்.

ஆன்ம வித்தையின் பயன்
-          அற்ப நாட்களில் முடியும், அற்ப நேரத்தில் முடியும் பௌதிக இன்பத்தினை உண்மை என நம்பி வாழ்பவர்களுக்கு,
-          கண்ணுக்கு தெரியும் மனிதனுக்குள், கண்ணுக்கு தெரியாத சூக்கும மனிதன் உண்டென்பதை உணர முடியாதவனுக்கு,
-          பௌதிக இயங்கங்கள் எல்லாம் தானாக நடைபெறுவது என்று கருதிக்கொண்டிருப்பவர்களுக்கு,
-          உண்பதும், உறங்குவதும். மக்களை பெறுவதையும் தவிர மனிதன் செய்ய வேண்டியது எதுவும் இல்லை என்று நம்பி வாழ்பவர்களுக்கு,
இதுவரை நாம் சொல்லி வந்த உண்மைகள் கட்டுக்கதைகளாகத்தான் தெரியும்.

ஆனால் இதை நம்பி பயன் கொள்ளும் ஆன்மீக சாதகர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நம்பாதவர்களை புத்தகங்களை கொண்டும், சொற்பொழிவுகளை கொண்டும் நம்ப வைத்துவிட முடியாது. இந்த உண்மைகள் மகரிஷிகள் மரபிற்கு மாறானவை. அதனால் இதனை அறியாதவர்களுக்கு இவற்றை மெய்பிக்க முடியாது. நாமும் இதை அறியக்கூடியளவு ஆன்ம வித்தையில் பண்பட்டவர்களுக்கு என்றே வெளியிடுகிறோம். அத்தகையவர்கள் எம்முடைய இந்த விளக்கத்தால் உள்ளத்தில் உறுதிபெற்று தமது சாதனையில் வேகமாய் முன்னேறி விரைவில் மாமுனிவர்களை நேருக்கு நேராக தரிசிக்கும் பேற்றைப் பெறுவார்களென நம்புகிறோம். 

இன்றைய தினம் இந்த பதிவினை படிக்க வாய்ப்பு கிடைக்கும் அன்பர்கள் தவறாமல் இரவோ, நாளை காலையோ விளக்கேற்றி சித்த வித்யா குரு மண்டல நாமாவளியும், ஸ்ரீ அகத்திய மூல குரு மந்திரமும் நூற்றியெட்டுதடவையும் ஜெபித்து அருள்பெற பிரார்த்திக்கவும். 

அகஸ்தியர் மூலகுரு மந்திரம்: 
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சிம் வம் அம் உம் மம் மகத்தான அகத்தீசாய நமஹ


Wednesday, May 31, 2017

நவீன வானியலும் ஜோதிடமும்


நவீன வானியலில் ஒளியை தானாக வெளியிடும் ஆற்றல் உள்ளது நட்சத்திரம்,உள்வாங்குவது கிரகம் ஆனால் ஜோதிடத்தில் ஒளியை வெளியிடும் நட்சத்திரமான சூரியனை கிரகம் என்றே கூறப்பட்டுள்ளது மற்றும் துணைக்கோளாகிய சந்திரனையும் கிரகம் என்று கூறப்பட்டுள்ளது.

நண்பர் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன் அவர்களுடனான உரையாடலில் பகிர்ந்த எமது கருத்து.

எப்போதும் வரைவிலக்கணம் என்பது அந்த சொல்லை பாவிக்கும் அறிஞர்களின் குழுவைச் சார்ந்தது, ஜோதிடத்தில் நட்சத்திரம் உண்மையில் நக்ஷத்திரம் என்பதை "நக்ஷ்" என்றும் "க்ஷேத்திரம்" என்றும் இரண்டு சொற்களாக பிரிக்கலாம். "நக்ஷ்" என்றால் "ஆகாயம்" என்று பொருள்."க்ஷேத்திரம்" என்றால் "இடம்" என்று பொருள்.எனவே நக்ஷ்சத்திரம் என்றால் ஆகாயத்தில் இருக்கும் இடம் எனப்பொருள்படும். இந்த இடத்தில் இருந்து சக்தியை கௌவ்வும் (ஈர்க்கும்) வானியல் பொருட்கள் கிரகம் எனப்படும். ஜோதிடம் என்பது மனிதன் வாழும் பூமியை மையமாக கோண்ட கணிதம். ஆகவே பூமிக்கும் ஆகாயத்தில் இருக்கும் சக்தி மையங்களான நக்ஷத்திரங்களில் இருந்து சக்தியை கௌவ்வி வழங்கும் பொருட்கள் எல்லாம் கிரகங்கள். ஆகவே எமது வானியல் அறிவியல் விளக்கப்படி சூரியன், சந்திரன், சூரியனும் சந்திரமும் தமது ஓட்டப்பாதையில் வெட்டும் புள்ளிகளன ராகு கேது இவையெல்லாம் பூமிக்கு சக்தியை வழங்குவதால் கிரகங்கள் என எமது ரிஷிகளால் வரைவிலக்கணப்படுத்தப்பட்டது. எனவே எம்மைப் பொறுத்த வரையில் நவீன வானியலின் வரைவிலக்கணங்களையும் எமது ரிஷிகளின் வானியல் விளக்கங்களையும் குழப்பிக்கொள்ளக் கூடாது.

சித்தர்களின் யோக இரசவாதம்

இரும்பைப் பொன்னாக்குவது, திரவமாக ஓடும் இரசத்தை கட்டுவது இரசவாதம் எனப்படுகிறது. 

எனினும் உண்மை இரசவாதம் என்பது மனிதன் தனது அந்தக்கரணம் எனப்படும் மனம், புத்தி, சித்தம், அகங்க்காரம் என்ற நான்கு சூக்ஷ்ம தேக புலன் களிலும் இருக்கும் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் போன்ற தீய உணர்வினை அன்பு, கருணை, பக்தி போன்ற தூய தெய்வ உணர்வாக மாற்றி, பின்னர் ஸ்தூல உடலில் வாதம், பித்தம், கபம் என தோஷ்மாக பிரகோபித்து உடலில் நோயை உண்டாக்கி தாதுக்களை க்ஷீணிக்கும் குற்றங்களை நீக்கி வலுப்படுத்தி தெய்வ சக்தியை ஈர்த்து அழியும் இந்த ஸ்தூல உடலின் துணையுடன் அழியா ஒளி சரீரம் பெறும் வித்தையே உண்மையான இரசவாதம். 

தாழ்ந்த உலோகத்தை உயர்ந்த உலோகமாக மாற்றுதல் போல் அழியும் ஸ்தூல சரீரத்தில் இருந்து அழியா ஒளிசரீரமான மகாகாரண சரீரம் பெறுதல் இரசவாதம் என சித்தர்களின் யோகசாதனையில் கூறப்படும்.

மனிதனின் உடலில் இருந்து பிராணன் வீணாகும் சந்தர்ப்பங்கள்

மனிதனின் உடலில் இருந்து பிராணன் வீணாகும் சந்தர்ப்பங்கள்
1) இனப்பெருக்க உறுப்புகளின் மூலம்
2) மனதில் தீய உணர்ச்சிகளான காமம், குரோதம், பயம், பொறாமை போன்றவற்றை கொண்டிருத்தல்.
3) மனதை தொடர்ச்சியாக உலக விடயங்களில் செலுத்துதல்.
4) உடலின் சப்த தாதுக்களை வளர்க்கும் உணவினை கொள்ளாதிருத்தல்.
5) ஆழமான, சீரான மூச்சு இழுக்காதிருத்தல்,

ஆகிய ஐந்தும் பிராண செலவிற்கான காரணங்கள். இவற்றை கட்டுப்படுத்தத் தெரிந்தவன் சேமிக்கிறான், சேமிக்கத்தெரிந்தவன் யோகத்தில் முதலீடு செய்து அறுவடை செய்யலாம்.

சப்த தாதுக்களும் சுக்கிலமும்சப்த தாதுக்கள் என்பவை ரச, ரக்த, மாமிசம், மேதா, அஸ்தி, சுக்கிலம் என்ற ஏழாகும். இந்த ஏழுமே சித்த ஆயுர்வேத தத்துவத்தின் படி உடலில் அடிப்படை கட்டமைப்பு அலகாகும். 

சித்த ஆயுர்வேத தத்துவங்களின் படி நாம் உண்ணும் உணவு பிராணனின் உதவியுடன் முதலில் ரச தாது வாகிறது, இது உணவு உடலுக்குள் அகத்துறிஞ்சப்படும் நிலை, இப்படி உறிஞ்சப்பட்டு உருவாகிய தாது இரத்தமாக மாறுகிறது, பின் இரத்தம் சுத்தியாக வலிமையாக இருக்க அது மாமிசம் எனும் சதைத்தொகுதியாக மாறுகிற, இப்படி வலிமைப்படுத்தப்பட்ட சதைத்தொகுதி மேதா எனும் ஹர்மோன் தொகுதியைனை வலுப்படுத்துகீறது, அதன் பின்னர் அது எலும்பாக மாறி இறுதியாக இவை எல்லாம் சரிசெய்யப்பட்ட பின்னர் மிகுதியே சுக்கிலம் எனும் விந்தாக மாறுகிறது. சுக்கிலம் என்பது உடல் பரிபூரண ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே மேற்குறித்த ஒழுங்கினூடாக உணவும் பிராணனும் பிரயாணித்து சாரமாக இறுதியில் உருவாகும். இதனாலேயே ஆணிற்கு உடல் பரிபூரண வளர்ச்சி ஏற்படும் வரை, பருவம் அடைதல் என நாம் கூறும் வயது வரும் வரை சுக்கில சுரப்பு ஏற்படுவ்தில்லை. பால்ய வயதில் உடலின் மற்ற ஆறு தாதுக்களை பூர்த்தி செய்வதிலேயே உடலின் ஆற்றல் செயற்படுத்தப்படுகிறது. இது பூர்த்தியாகும் போது அடுத்த உயிரை உருவாக்கும் ஆற்றல் மனித உடலுக்கு தரப்படுகிறது.

Thursday, April 27, 2017

நேற்றைய (27/04/2017) சித்த வித்யா விஞ்ஞான வகுப்புகள் - இராஜயோக விளக்கம்


இன்று மாலை 08.00 - 09.00 வரை வழமைபோல் கொழும்பு - 04 ரிட்ஜ்வே ப்ளேஸில் அமைந்துள்ள அஷ்டாங்க யோக மந்திரில் சித்த வித்யா விஞ்ஞான வகுப்பு நடைபெற்றது.
தாய், தந்தை, குரு வணக்கம், சித்த வித்யா குருமண்டல வணக்கம், உடலில் ஆறு சக்கரங்களில் ஓம்கார ஜெபம் மற்று ஹ்ரீம்கார ஜெபம், சக்தி பஞ்சாட்சரம், காயத்ரி மந்திரம், ம்ருத்யுஜெய மந்திர ஜெபம் என்பவற்றுடன் வழமை போல் ஆரம்பமாகியது.
ஸ்ரீ ஸக்தி சுமனன் அவர்கள் இராஜ யோகத்தின் அறிமுகத்தை பற்றி கீழ்வரும் விடயங்களை விளக்கினார்.

Saturday, April 22, 2017

சித்த வித்யா விஞ்ஞான வகுப்புகள் - (19/01/2017)


(19/01/2017) மாலை 06.00 - 07.30 வரை வழமைபோல் கொழும்பு - 04 ரிட்ஜ்வே ப்ளேஸில் அமைந்துள்ள அஷ்டாங்க யோக மந்திரில் சித்த வித்யா விஞ்ஞான வகுப்பு நடைபெற்றது. 

தாய், தந்தை, குரு வணக்கம், சித்த வித்யா குருமண்டல வணக்கம், உடலில் ஆறு சக்கரங்களில் ஓம்கார ஜெபம் மற்று ஹ்ரீம்கார ஜெபம், சக்தி பஞ்சாட்சரம், காயத்ரி மந்திரம், ம்ருத்யுஜெய மந்திர ஜெபம் என்பவற்றுடன் வழமை போல் ஆரம்பமாகியது. 

ஸ்ரீ ஸக்தி சுமனன் அவர்கள் சங்கம் முறையான பதிவுபெற்ற அமைப்பாக விரைவில் இயங்க இருபதையும், சங்கத்தினால் கீழ்வரும் மூன்று பிரசுரங்கள் ஆர்வமுள்ள சாதகர்களுக்காக வெளியிடப்படும் என்பதையும் அறிவித்தார்.
1) சித்த வித்யா விஞ்ஞான‌ சங்கத்தின் ஆன்மீக கொள்கை விளக்கம்
2) குருசாதனா
3) காயத்ரி சாதனா

பின்னர் குண்டலினி யோகம் என்பது முறையான சாதனையால் ஏற்படும் அனுபவத்தை மனதின் துணை கோண்டு உணர்வால் அறிவதா அல்லது மனதினால் சக்கரங்களை கற்பனை செய்வதா என்ற விளக்கமும் இவற்றின் நன்மை தீமைகள் என்ன? என்பது பற்றியும் விளக்கம் கூறப்பட்டது.

மனிதன் எப்படி தொன்னூற்றாறு தத்துவங்களாக விரிவுபெற்றான் என்ற விளக்கமும், யோக சாதனை தியான சாதனை பற்றிய விளக்கமும் கூறப்பட்டது.

இறுதியாக இன்றைய காலத்தின் தமது உலகியல் பிரச்சனையை தீர்க்க கடவுளை தேடுவதில் பயன் இல்லை என்பது இறைவன் மனிதனிற்கு அளித்த சக்திவாய்ந்த கருவி மனம், அதன் மூலம் ஒருவன் தனக்கு வேண்டியதை பெற்றுக்கோண்டு இன்ப வாழ்க்கை வாழலாம் என்பதும் விளங்கப்படூத்தப்பட்டது.

இறுதியா பதினாறு பேறுகளை வழங்கும் தேவியில் ஆசீர்வாதப்பாடலுடன் வகுப்பு நிறைவுபெற்றது.

மீண்டும் அடுத்த புதன் கிழமை வகுப்பு தொடரும்.

Friday, April 14, 2017

புதுவருட ஆசிகள்

இன்று காலை எமது சித்த வித்யா விஞ்ஞான‌ சங்கம் வலைத்தளத்தில் (http://yogicpsychology-research.blogspot.in/
) பிரார்த்தனைக்காக, ஸ்ரீ காயத்ரி சாதனை, ஸ்ரீ வித்யா சாதனை பதிவுசெய்துகொண்ட அனைத்து அன்பர்களுக்காகவும் இன்று புதுவருடத்தை இட்டு நிகழ்த்தப்பட்ட சிறப்பு மஹாகணபதி சதுராவர்த்தி தர்ப்பணத்திலும், ஸ்ரீ காயத்ரி பூஜையிலும் பிரார்த்திக்கப்பட்டது. 
 
அனைத்து அன்பர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அருளோடு செல்வம் ஞானம் ஆற்றலும் அன்பும் பண்பும் பொருள் நலம் பொறுமை ஈகை ஆயுள் ஆரோக்கியம் வீர்ம் அசைந்திடா பக்தி அன்பு தேயுறா செல்வம் கீர்த்தி தேவியே அருள்வாய் அம்மா என்று அன்னையை பிரார்த்தித்து,

எமது குருமண்டலத்தில் இணைந்து தமது யோக சாதனையை தொடரும் அன்பர்கள் சரியான பாதையில் பயணித்து சித்தி பெறவும், உடல் மனத்துன்பங்களுடையோர் அதிருலிருந்து மீண்டு போக பாக்கியங்கள் பெறவும் ஸ்ரீ குரு நாதர் அகத்தியர், விஸ்வாமித்திர மகரிஷி, வஷிஷ்ட மகரிஷி, பிரம்ம மகரிஷி, ஈஸ்வரப்பட்ட மகரிஷி, போக நாத மகரிஷி, ஸ்ரீ கோரக்க நாத சித்தர், மௌனகுரு சித்தர், ததிஷி மகரிஷி, ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர், ஸ்ரீ காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகள், ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித ஸ்ரீ அம்ருதானந்த நாதர், ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர நாதர் ஆகிய குருமண்டலத்திடம் பிரார்த்திக்கப்பட்டது.

அனைவருக்கும் இனிய ஹேவிளம்பி புதுவருட வாழ்த்துக்கள்!

Monday, April 10, 2017

சித்த வித்யா விஞ்ஞான‌ சங்கம்

எனது ஆத்ம யோக ஞான‌ எழுத்து வாசகர்கள் அனைவரும் இந்த Facebook account இ்ன் நட்பில் இணையும் படி எதிர்பார்க்கப்படுகின்றனர். 

எதிர்வரும் வைகாசிப் பௌர்ணமி தினத்திலிருந்து சித்த வித்யா விஞ்ஞான சங்கம் என்ற பதிவு பெற்ற அமைப்பாக எமது அறிவுப் பகிர்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டு வரவிருக்கின்றது. 

இந்த சங்கத்தின் நோக்கம் "ஞான தர்ம தானம்"

சித்தர்களின் ரிஷிகளின் ஆத்ம யோக ஞான மருத்துவ விஷயங்களை இக்கால மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிய தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிப்படுத்துதல்.

வைகாசிப் பௌர்ணமி தினத்தில் இருந்து அங்கத்தவராகும் முறை, விரிவான திட்ட விளக்கம் என்பவை வெளியிடப்படும்.

சித்த வித்யா விஞ்ஞான‌ சங்கம்
ஆன்மீக கொள்கை விளக்கம்

எமது சித்த வித்யா விஞ்ஞான‌ சங்கத்தின் ஆன்மீக கொள்கை விளக்கம் வெகுவிரைவில் வெளியிடப்படவுள்ளது.

இந்த கொள்கை விளக்கங்கள் சங்கத்தில் மாணவர்களாக கற்கையில் இணைந்து ஆத்ம யோக ஞான தெளிவு பெறவிரும்புவபர்களுக்கு மாத்திரம் உரியது.

இந்த கொள்கைகளும் கடவுள் யார்? உருவவிளக்கம், ஆன்மா, சக்தி, விக்கிரக வழிபாடு, உபாசனா தீட்சை, பூஜை ஏன்?, தியானம், சாதனையில் மனம், சித்தம் ஆகியவற்றின் செயற்பாடு, உண்மை யோகியின் தன்மை, யோகவிஞ்ஞானம், ஆன்மீகத்திற்கான வெளிவேடங்கள், குண்டலினி, சாதனைக்கான தயாரிப்புகள்,எமது துன்பத்திற்கான காரணங்கள் என்ன?, கடவிளின் காட்சி பெறுவதின் விளக்கம், சித்தி பெற்றபின்பு அதை பயன்படுத்துதல், தற்போதைய சடங்குகள் அவசியமானதா?, உண்மையான சித்தயோகியின் பண்புகள் என்பன சுருக்கமாக ஆனால் விளக்கமாக தரப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஸக்தி சுமனன்

Thursday, March 02, 2017

யோக ஆன்மீக பாடங்கள் கற்பதற்க்கான வழிகாட்டி - 01
எமது குருதேவர் காயத்ரிசித்தர் தனது உரைகள் மூலம் ஒரு மனிதன் தனது ஆரம்ப நிலைச் சாதனையை தொடங்குவதற்க்கான அடிப்படைப்பண்பான “குருபக்தி” பற்றி நிறையவே விளக்கியிருக்கின்றார். தனது குருசேவையை பூர்த்தி செய்த மாணவன் மேலே எவற்றைக்கற்க வேண்டும் என்பவற்றை இலகு படுத்தி தான் தன்னுடைய குருநாதராகிய ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர் அருளிய வித்தைகளை நூல்களாக்கி அனைவரும் கற்று தமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளக்கூடிய அளவில் கிட்டத்தட்ட அரிய ஆன்மீக விளக்கங்களடங்கிய பல நூற்களாக வெளியிட்டுள்ளார். இவற்றை எப்படி பயன் படுத்துவது என்பது அனைவரது மனத்திலுமிருக்கின்ற மிகப்பெரிய கேள்வி! குருதேவரது ஆன்மீக ஆற்றல்கள், மனோசக்தி, தெய்வீக தேஜஸ் என்பவற்றிற்க்கு அவர் இவற்றை உண்மையாக பயிற்சி செய்து சித்தி பெற்றமையே காரணம். இங்கு “சித்தி” என்ற வர்த்தை ஒருவன் ஒரு விடையத்தில் தேர்ச்சி பெறுதலையே குறிக்கும் அன்றி பலரும் நினைப்பது போல் அற்புதங்கள் செய்யும் ஆற்றல்கள்களையல்ல!  

அந்தவழியில் இந்தக்கட்டுரையின உண்மையாக ஆன்மீக வழியைப் பின்பற்றி அவரது படைப்புகளை படித்து, விளங்கி, பயிற்சி புரிந்து சித்தி பெற வேண்டும் என்பதற்க்காக ஏங்கும் சாதகர்களுக்கும், மாணவர்களுக்குமாக வெளியிடப்படுகிறது.  

சாதகன் ஆன்மீக தாகம் கொண்டு தன்னை யார் என்றும், தனக்கு மேலிருக்கும் சக்தி எதுவென்றும், அன்றாட வாழ்க்கையில் ஏன் பிரச்சனைகள் ஏற்ப்படுகின்றது என குழப்ப நிலையில் இருக்கும்  ஆரம்ப நிலை சாதனிகன் இவற்றிற்க்கான விளக்கங்களை பெறுவதற்க்கும், சித்தம் எனப்படுகின்ற ஆழ்மனதில் உயர் வாழ்க்கைக்கான விதையினை விதைப்பதற்க்கான செயல்முறையே இந்தப் பாடங்களாகும். இந்த பயிற்ச்சியினை சரியாக பூர்த்தி செய்யும் சாதகன் மட்டுமே ஆன்மீகப்பாதையில்  தொடர்ந்து இடைவிடாமல் பயணிக்க முடியும்.

இதை தகுந்த உதாரணம் மூலம் விளக்குவதானால் கணணிப்பொறியின் செயற்ப்பாட்டுடன் ஒப்பிடலாம். நீங்கள் குறிப்பிட்ட கட்டளை சரியாக இயக்க வேண்டுமானால் அதில் அதற்க்குரிய மென்பொருள் (software) இருக்க வேண்டும். அது போல் நாம் எமது மனதினை கணணியாக எடுத்துக்கொண்டால் ஆன்மீக வாழ்வு எமது புரோகிராமாக இருந்தால் இந்த ஆரம்ப நிலை பாடங்கள் தான் அதற்க்கான மென்பொருட்கள். இவற்றை சரியாக மனதில் பதிக்காமல் யாரும் சரியான ஆன்மீக வாழ்க்கையில் பயணிக்க முடியாது. அப்படிச் சென்றாலும் சரியாக நிறுவப்படாத மென்பொருள் கணணியை தடுமாறச் செய்வது போல் இடை வழியில் தடுமாறுவார்கள்.  ஆகவே இது ஒரு முக்கியமான விதியாகும். 

இந்த விதியை சரியாக கடைப்பிடிப்பதற்க்கு என்ன செயற்பாடுகள் அவசியம் என்பதை அடுத்து பார்ப்போம். யார் இதனைக்கற்க வேண்டும் என ஆர்வம் கொள்கின்றனரோ அவர்கள் கீழ் வரும் வழிமுறைகளை ஏற்ப்படுத்திக்கொள்ளும் படி வேண்டிக்கொள்கிறோம். 
1.      உங்களது ஆன்ம முன்னேற்றக் கல்விக்கென வாரத்தில் குறித்த தினத்தில், குறித்த ஒரு மணி நேரத்தினை ஏற்ப்படுத்திக்கொள்ளுங்கள். இதனை மாறாமல் கடைப்பிடித்து வாருங்கள்.
2.      இங்கு நாம் குறிப்பிடும் நூற்களை, பாடங்களை வாரந்தோறும் குறிப்பிட்ட அளவு அமைதியாக வாசித்து அதிற்க்குறிப்பிடப்படும் விடயங்களை சிந்தித்து மனதிற் பதித்து ஆரய்ந்து வாருங்கள்.
3.      பாடங்களை வாசிக்கும் போது சாதாரண செய்தித்தாள் வாசிப்பது போலல்லாது மனதினை முழுமையாக ஈடுபடுத்தி வாசிக்கவேண்டும். 
4.      நீங்கள் பாடங்களை வாசிப்பதற்க்கு முன் சித்த வித்யா குருமண்டல குருமார்களை மானசீகமாக வணங்கி அவற்றின் உண்மைப்பொருளை விளங்க அருள் புரியுமாறு பிரார்த்திக்கவும்.

இவ்வாறு நீங்கள் தொடர்ச்சியாக கற்று வரும் போது உங்கள் மனதில் ஆன்மீக சாதனைகள் புரிவதற்க்குரிய ‘சித்த சம்ஸ்காரங்கள்’ விழிப்படையும். அதன் பின் படிப்படியாக சாதனை புரிவதற்க்குரிய ஆற்றல் மனதில் வளர்ந்து வரும். 

சாதகர்கள் இங்கு ஒருவிடயத்தை நன்கு விளங்கிக்கொள்ள வேண்டும், இது விவசாயம் செய்வதைப் போன்றது, நிலத்தை சரியாக பண்படுத்தி, உழுது, விதைத்து, உரம் இட்டு, களை பிடுங்கி விளைச்சல் பெறுவதைப் போன்றது. அவசரப்பட்டால் எதுவும் நடந்து விடாது. மனதினையும், சித்தத்தினையும் பண்படுத்தாமல் ஆயிரக்கணக்கில் மந்திரம் ஜெபித்தாலும், மணிக்கணக்கில் தியானம் இருந்தாலும் எதுவும் கிட்டிடாது.

குருதேவரது ஆன்ம சேவையில்,
ஸ்ரீ ஸக்தி சுமனன்

Wednesday, March 01, 2017

முதல் நிலை காயத்ரி உபாசனை பாடங்கள்

முதல் நிலை காயத்ரி உபாசனை பாடங்களை சிறு பாட நூலாக தொகுத்து வெளியிட எண்ணுறோம், தேவைப்படுபவர்கள் அறியத்தரவும், செலவுகளை ஏற்றுக்கொள்ளுபவர்களுக்கு எமது கையொப்பத்துடன் தபாலில் அனுப்பி வைக்கப்படும். வசதி உள்ளவர்கள் நூலாக அச்சிடுவதற்கு நிதி உதவி செய்யாலாம்!  Tuesday, February 28, 2017

நிர்வாண ஷடகம்


மனோபுத்த்யஹங்காரசித்தாநி நாஹம் ந ச ச்ரோத்ரஜிஹ்வே ந ச க்ரணநேத்ரே |ந ச வ்யோம பூமிர்ந தேஜோ ந வாயுச்சிதானந்தரூப: சிவோ(அ)ஹம் சிவோ(அ)ஹம் ||௧||

பொருள்:

நான் மனமில்லை, புத்தியில்லை, ஆங்காரமில்லை, நான் கேட்கும் செவியுமில்லை, சுவைக்கும் நாவுமில்லை, நுகரும் நாசியுமில்லை, காணும் கண்களுமில்லை, நான் ஆகாயமுமில்லை, பூமியுமில்லை, தேயுவுமில்லை, வாயுமில்லை

நான் என்றும் ஆனந்தமான தூய சிவம் (சிவோஹம்) 
***************************************************************

நான் என்றும் ஆனந்தமான தூய சிவம் (சிவோஹம்) ந ச ப்ராணஸம்ஜ்ஞோ ந வை பஞ்சவாயுர்ந வா ஸப்ததாதுர்ந வா பஞ்சகோசா: |
ந வாக்பாணிபாதம் ந சோபஸ்தபாயூ சிதானந்தரூப: சிவோ(அ)ஹம் சிவோ(அ)ஹம் ||௨||

நான் பிராணன் இல்லை, பஞ்ச வாயுக்களில்லை, சப்த தாதுக்கள் இல்லை, பஞ்ச கோஸங்கள் இல்லை, நான் பேசும் நாவுமில்லை, நான் பற்றும் கையுமில்லை, நகரும் கைகளுமில்லை, நான் மலத்தை வெளியேற்றும் எருவாயுமில்லை,

நான் என்றும் ஆனந்தமான தூய சிவம் (சிவோஹம்)


**************************************************************

ந மே த்வேஷராகௌ ந மே லோபமோஹௌ மதோ நைவ மே நைவ மாத்ஸர்யபாவ: |
ந தர்மோ ந சார்தோ ந காமோ ந மோக்ஷச்சிதானந்தரூப: சிவோ(அ)ஹம் சிவோ(அ)ஹம் ||௩||

நான் வெறுப்புமன்று, நான் பற்றுமன்று, நான் பேராசையுமன்று, நான் மோகமுமன்று, நான் பெருமையுமன்று, நான் போறாமையுமன்று, நான் அறம், பொருள், இன்பம் , வீடு என்ற நான்கு புருடார்த்தங்களால் கட்டுண்ட வஸ்துவும் அன்று,

நான் என்றும் ஆனந்தமான தூய சிவம் (சிவோஹம்)


****************************************************************
ந புண்யம் ந பாபம் ந ஸௌக்யம் ந து:கம் ந மந்த்ரோ ந தீர்தம் ந வேதா ந யஜ்ஞா: |
அஹம் போஜனம் நைவ போஜ்யம் ந போக்தா சிதானந்தரூப: சிவோ(அ)ஹம் சிவோ(அ)ஹம் ||௪||
 
நான் புண்ணியத்தால் கட்டுண்டவனுமன்று, நான் பாவத்தால் கட்டுண்டவனுமன்று, நான் இன்பமும் அன்று, நான் துன்பமுமன்று, நான் மந்திரத்தால் கட்டுண்டவனுமன்று, நான் புண்ணிய தீர்த்த்த்தில் உறைவபவனுமன்று, நான் வேதங்களுமன்று, நான் யக்ஞமுமன்று, நான் போகமும் அன்று, நான் போகிக்கும் இன்பமும் அன்று, நான் போகிப்பவனுமன்று,

நான் என்றும் ஆனந்தமான தூய சிவம் (சிவோஹம்)*******************************************************
ந ம்ருத்யுர்ந சங்கா ந மே ஜாதிபேத: பிதா நைவ மே நைவ மாதா ந ஜன்ம |
ந பந்துர்ந மித்ரம் குருர்நைவ சிஷ்யச்சிதானந்தரூப: சிவோ(அ)ஹம் சிவோ(அ)ஹம் ||௫||

நான் இறப்பால் கட்டுண்டவனுமன்று, நான் பயத்தால் பீடிக்கப்பட்டவனுமன்று, நான் ஜாதியில் அகப்பட்டவனுமன்று, எனக்கு தாயும் இல்லை, தந்தையுமில்லை, பிறப்புமில்லை, எனக்கு உறவுமில்லை, நட்புமில்லை, குருவுமில்லை, சீடனுமில்லை,

**********************************************

நான் என்றும் ஆனந்தமான தூய சிவம் (சிவோஹம்)
அஹம் நிர்விகல்போ நிராகாரரூபோ விபுத்வாஞ்ச ஸர்வத்ர ஸர்வேத்ரியாணாம் |
ந சாஸங்கதம் நைவ முக்திர்ந மேயச்சிதானந்தரூப: சிவோ(அ)ஹம் சிவோ(அ)ஹம் ||௬||

நான் எங்கும் படர்ந்தவன், நான் குணங்கள் அற்றவன், நான் ரூபம் அற்றவன், நான் உலகத்துடன் பற்று அற்றவன், நான் எங்கும் நிறைந்தவன், நான் அனைத்துக்கும் மூலமானவன், நான் அனைத்து புலன் அனுபவங்களுக்கும் ஆதாரமானவன், நான் எதனுடனும் பந்தப்படுபவனுமன்று, நான் எதனிலும் விலகி இருப்பவனுமன்று!

நான் என்றும் ஆனந்தமான தூய சிவம் (சிவோஹம்)


Wednesday, February 15, 2017

திருமந்திர விளக்கம்ஆறெழுத்தாவது ஆறு சமயங்கள்
ஆறுக்கு நாலே இருபத்து நாலென்பர்
சாவித் திரியில் தலையெழுத்து ஒன்றுள
பேதிக்க வல்லார் பிறவியற் றார்களே
-திருமந்திரம் 994-

ஆறு எழுத்துக்கள் ஓம் ந ம சி வ ய ஆகும். ஆறு சமயங்கள் என்பது மனிதன் மீண்டும் பிறவா நிலை அடைய, இருக்கும் பாதைகளாகும். இது சிவ தத்துவம் ஐந்தும் அதற்கு மூலமான பிரணவமும் சேர்ந்த ஆறு பாதைகள். 

இந்த மூலமான பிரணவமும் ஐந்து சிவ தத்துவங்களும் ஆக ஆறு சமயங்கள் அந்தக்கரணம் நான்கினால் சலனமுற்று இருபத்து நான்கு ஆன்ம தத்துவமாக விரிகிறது. இந்த ஆன்ம தத்துவத்தை சுத்தி செய்யும் சாதனமே ஐந்து முகம் கொண்ட தேவியின் உருவாக வர்ணிக்கப்படும் சாவித்ரி, இந்த சாவித்ரிக்கு கூறப்படும் 24 எழுத்து மந்திரத்தால் ஆன்ம தத்துவத்தை சுத்தித்து, பின்னர் தலையெழுத்தாகிய ஓம் காரத்தால் பேதிக்க மகாகாரண சரீரமான சிகாரத்தில் ஒன்றி மானிடன் பிறவி அற்றவனாவான். 

இதுவே இந்த மந்திரத்தின் உட்பொருள்