குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, August 03, 2013

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 31: நாமங்கள் 81 - 88

மஹா-பாசுபதாஸ்ராக்னி-நிர்தக்தாஸுர-ஸைனிகாயை  (81)
மஹா பாசுபத அஸ்திரத்தின் தீயால் அசுரப் படைககளை பொசுக்கியவள்
தேவி அசுரர் கூட்டங்களை மஹா பாசுபதாஸ்திரத்தினால் அழித்தாள். இந்த அஸ்திரம் அக்னியினை கக்கி அசுரர் கூட்டத்தினை பொசுக்கியது.
லிங்க புராணத்தில் பாசுபதம் என்பது எல்லாவித பந்தங்களிலிருந்தும் விடுவிக்கச் செய்யப்படும் தெய்வ காரியமாக விபரிக்கப்பட்டுள்ளது. இது சிவனிற்கு சமர்ப்பிக்கப்படும் காரியமாக கூறப்பட்டுள்ளது. சிவன் பலவித ரூபங்களில் வணங்கப்படுகிறார், அவையாவன சிவா, மஹாதேவா, சதாசிவா, பசுபதி, காமேஸ்வரா, இன்னும் வேறு பல வடிவங்களில் வணங்கப்படுகிறார். இந்த ஒவ்வொருவடிவத்திற்கு ஒவ்வொரு தத்துவார்த்தம் உள்ளது. சிவன் எல்லாப் பிரபஞ்சங்களையும் படைக்கும் போது பசுபதி எனப்படுகிறார். பசு என்றால் உயிர்களைக்குறிக்கும். நாமம் 271 272 களில் இதைப்பற்றி விளக்கப்பட்டுள்ளது.

லிங்க புராணத்தின் படி பாசுபதா மந்திரம் ஆறு அட்சரங்களைக் கொண்ட "ஓம் நமசிவாய" என்பதாகும். பொதுவாக மந்திரங்களில் ஓம் என்பதனை மந்திரத்தின் ஒரு அட்சரமாக எடுத்துக்கொள்வதில்லை. அ + உ + ம ஆகிய மூன்று அட்சரங்களும் பிந்து சேர்ந்து ஓம் உருவாகிறது. இது இறைவனின் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று செய்கைகளையும் குறிக்கிறது. இதனாலேயே எல்லா மந்திரங்களுக்கும் முன்னால் ஓம் சேர்க்கப்படுகிறது. நமசிவய மந்திரம் பஞ்சாட்சர (ஐந்து அட்சர) மந்திரம் என அழைக்கப்படுகிறது. பாசுபதஸ்த மந்திரத்தில் ஓம் ஒரு அட்சரமாக கணக்கெடுக்கப்பட்டு ஆறெழுத்து மந்திரமாக கருதப்படுகிறது. இந்த மந்திரம் சதாசிவனுக்குரியது. சதாசிவன் என்பது சிவனின் மிக உயர்ந்த வடிவம். சிவனின் ஐந்து முகங்களாவன ஈசானா, தத்புருஷ, அகோர, வாமதேவ, சத்யோஜாத என்ற ஐந்துமாகும். இவற்றை அஸ்திரங்களாக கூறப்படுவதன் பொருள் இந்த மந்திரங்கள் மன அழுக்குகளை நீக்கி இருமையில் இருந்து இருமை அழிந்த நிலைக்கு இட்டுச் செல்வதால் ஆகும். இந்த நிலை ஒருவரது தனிப்பட்ட சாதனை பயிற்சி என்பவற்றைப் பொறுத்து அமைவதாகும். எதிரிகளின் கோட்டை என்பது மனதில் எழும் இருமை தொடர்பான மயக்கமாகும். தொடர்ச்சியான பயிற்சியினால்/சாதனையினால் இருமை அகன்ற நிலை உண்டாகும்.

காமேச்வராஸ்தர-நிர்தக்த-ஸ்பண்டாஸுர-சூன்யகாயை  (82)
காமேஸ்வராஸ்திரத்தால் பண்டாஸுரனையும் சூன்யகம் எனும் அவன் நகரத்தையும் எரித்தவள்
சூன்யகா என்பது பண்டாசூரனது கோட்டை,  பண்டாசூரன் அவனது கோட்டையுடன் காமேஸ்வர அஸ்திரத்தின் அக்னியால் அழிக்கப்பட்டான். முதல் நாமம் பசுபதியின் அஸ்திரம் கூறப்பட்டது, தற்போது காமேஸ்வர அஸ்திரம் கூறப்படுகிறது. இந்த நாமத்துடன் பண்டாசூரனது போரும், பண்டாசூரன், அவனது சேனைகள், அவனது இராஜ்யம் என்பவை அழிக்கப்பட்டு முடிவுக்கு வருகிறது.
சிவனின் காமேஸ்வர வடிவம் பசுபதி வடிவத்தினை விட மிக உயர்ந்தது. காமேஸ்வரன் என்பது பிரம்மத்தின் ஒரு வடிவம். இந்த நாமத்தில் குணங்கள் விபரிக்கப்படுவதால் அவை சகுணப்பிரம்ம வடிவத்தினை குறிப்பவை. பிரம்மம் எனக்குறிப்பிடப்படும் போது  உணர்வின் உயர்ந்த‌நிலையினைக்குறிக்கும். அதியுய‌ர் உண‌ர்வு நிலையான‌நிர்குண‌பிர‌ம்ம‌நிலை வாக்தேவிக‌ளால் இங்கு விப‌ரிக்க‌ப்ப‌ட‌வில்லை. தேவியின் ச‌குண‌ப்பிர‌ம்ம‌நிலையே விப‌ரிக்க‌ப்ப‌டுகிற‌து. 

காமேஸ்வரன் என்பதன் பொருள் எல்லாரையும் விரும்புவன் அத்துடன் எல்லாராலும் விரும்பப்படுபவன். அவனே விரும்புபவனாகவும் விரும்பப்படும் பொருளாகிய இரண்டாகவும் இருப்பவன். பொதுவாக பார்ப்பவன் சிவனாகவும் பார்க்கப்படுவது பொருளாகவும் இருக்கும். வாக்தேவிகள் சஹஸ்ர நாமத்தின் இந்தப்பகுதியில் துறவு பற்றிய மிகச் சூட்சுமமான விடயத்தினை கூறிச்செல்கின்றனர். எல்லாவித துறவும் அதியுயர் நிர்குணபிரம்மத்தினை அடைவதற்காக இருக்க வேண்டும். இது பிருகுதாரண்ய உபநிஷதத்தில் (2.4.5) கூறப்பட்டுள்ளது. " பிரம்மம் உணர்ந்தறியப்படவேண்டும், பிரம்மத்தினை கேட்க வேண்டும், அதில் தியானிக்கவேண்டும், அதனை உணர்ந்து அறிதலால் எல்லாவற்றையும் அறிய முடியும்." இதற்கு மேற்பட வேறொன்றும் இல்லை.

காமேஸ்வரர் என்பது மிக உயர்ந்த பிரம்மம். பண்டாஸுரன் என்பது ஆணவத்தினைக் குறிக்கும். சேனை என்பது சூஷ்ம உடலாகிய மனம். சூஷ்ம உடலாகிய மனதிலிருந்து ஆணவம் அழிக்கப்படும் போது பிரம்மம் மட்டுமே எஞ்சியிருக்கும். பண்டாசூரன் தனது சேனையுடன் அழிக்கப்படும் போது அங்கு எஞ்சியிருப்பது சூன்யம் அதாவது ஒன்றும் அற்ற நிலை மட்டுமே. அதாவது மனதின் இருமை நிலை அழிந்து பிரம்மத்தினை அறிந்து உணரும் நிலையினை நோக்கி நகர்வதைக்குறிக்கும். இந்த நிலையினை தியானத்தின் மூலமும் தன்னை அறியும் ஆய்வின் மூலமும் அடைய முடியும்.

ப்ரஹ்மோபேந்த்ர-மஹேந்த்ராதி-தேவஸம்ஸதுத-வைபவாயை  (83)
பிரம்மா, விஷ்ணு, இந்திரன் முதலானவர்களால் துதிக்கப்பட்டவள்
பிரம்மா, விஷ்ணு (உபேந்திர என்றால் மாகாவிஷ்ணுவைக்குறிக்கும், விஷ்ணு சஹஸ்ர நாமம் 57 பார்க்கவும்) மகேந்திர (சிவனின் வடிவம்) இந்திரன் முதலான மற்றைய கடவுளர்கள் அனைவரும் லலிதையின் வெற்றியால் சந்தோஷமடைந்தனர். தேவியே உயர்ந்த சக்தியாதலால் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் வணங்குகின்றனர். சம்ஸ்துதா என்றால் புகழ்தல் என்றும் மானசீகம் என்றும் பொருள். வைபவா என்றால் எங்கும் வியாபித்திருப்பவள் என்று பொருள் தேவி அனைவராலும் வணங்கப்படுகிறாள், ஆதலால் தேவி உயர் ஆத்மா என அழைக்கப்படுகிறாள். தேவியே எங்கும் வியாபித்திருக்கும் பிரம்மன், அவளுடைய இருப்பு அகமுகமாகவும் (மனதின் ஊடாகவும்) புறவயமாகவும் (புலன் களால்) விபரிக்கப்படுகிறது. இந்த ரூபம் அடுத்த நாமத்தில் விபரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இயக்க சக்தியின் ஆற்றலும் விபரிக்கப்பட்டுள்ளது.

ஹரநேத்ராக்னி-ஸந்தக்த-காமஸஞ்ஜீவ-னௌஷத்யை  (84)
சிவனது நெற்றிக்கண் தீயால் எரிக்கப்பட்ட மன்மதனை பிழைப்பூட்டிய ஸ்ஞ்ஜீவினி மருந்து
காமத்தின் கடவுளான மன்மதன் சிவனின் நெற்றிக்கண் சக்தியால் அழிக்கப்பட்டான். சக்தி மன்மதனை உயிர்ப்பித்தாள். சஞ்ஜீவன என்பது இறந்தவர்களை உயிர்ப்பிக்ககூடிய மூலிகை மருந்து. மன்மதனை உயிர்ப்பித்ததால் தேவியே மன்மதனுக்கு சஞ்சீவனியாகிறாள். மன்மதன் சிவனது சக்தியினதும் மகன், தகப்பன் பிள்ளை மீது கோபம் கொண்டால் தாய் மட்டுமே காப்பாற்றக்கூடியவளாகிறாள். மன்மதன் மீது சிவன் கோபம் கொண்டபோது தேவியே காப்பாற்றுகிறாள். சிவன் மிகுந்த கட்டுப்பாடு உடையவர். பொதுவான பழமொழியில் சிவன் கோபமுற்றால் குரு காப்பாற்றுவார், ஆனால் குரு கோபமுற்றால் சிவனோ வேறு எவருமோ காப்பாற்ற முடியாது. இங்கு லலிதையே குரு என்பது நாமம் 661 இல் விளக்கப்பட்டுள்ளது. சிவன் கோபமுற்று மன்மதனை எரித்தார் ஆனால் குருவாக இருந்து லலிதை மன்மதனைக் காப்பாற்றினார். எவ்வாறாயினும் இந்தக் கருத்து பரமசிவனே ஆதி குரு என்ற என்ற கருத்துடன் முரண்படுகிறது.  ஸ்ரீ சக்கரத்தில் சிவன் குருமண்டலத்தின் ஆதி குருவாக பரமசிவ ஆனந்த நாதராக வணங்கப்படுகிறார்.

ஹர என்பது ஆன்மாவின் உண்மை சொருபத்தினையும் குறிக்கும். நேத என்பது வழிகாட்டலைக்குறிக்கும். அக்னி என்பது எங்கும் நிறைந்திருந்து அழித்தலைச் செய்யும் சக்தி. (ஆக்கம் தவிர்ந்த அக்னியின் மற்றைய தொழில் அழித்தலாகும்). சிவ சூத்திரத்தின் இறுதியில் யோகியின் உணர்வு அகத்திலும் புறத்திலும் நிறைந்திருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. அதுபோல் அக்னியும் அகத்திலும் புறத்திலும் நிறைந்துள்ளது. அக்னி கடவுளின் முத்தொழில்களிலும் பங்குபெற்றுகிறது. ஆகையால் ஹர நேத்ராக்னி என்பது இறைவனை அறியும் பாதையினயும் அந்தப்பாதையில் வரும் தடங்கல்களையும், பற்றுகளை அழிக்கும் சக்தியினைக்குறிக்கும். எங்கும் அக்னி நிறைந்திருப்பதால் அறியாமையும் நிறைந்திருக்கும், ஏனெனில் அக்னியின் தொழில் அறியாமையினை அழிப்பது, ஆதலால் அக்னி இருக்கு இடத்திலெல்லாம் அறியாமையும் இருக்கும். அறியாமை என்பது இருளைக்குறிக்கும், இருளினை அகற்றுவது அக்னி.

இதன் இரகசியார்த்தம் முக்தியினை அடைவது ஒருவன் தன்னில் நிறைந்திருக்கும் அறியாமையினை அல்லது அவித்தையினை நீக்கு தனது உண்மை ஸ்வரூபத்தினை தெரிந்து கொள்வதனால் மட்டுமே ஆகும் எனபது விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. அறியாமை அகன்றவுடன் அறிவு மட்டுமே நிறைந்திருக்கும். இதனாலேயே லலிதையினை வழிபடும் மார்க்கம் ஸ்ரீ வித்தை எனப்படுகிறது. மன்மதனை அழித்தல் என்பது அவித்தையினை அழித்தல் அவனது உயிர்ப்பு அறியாமை அகன்ற வித்தை மட்டும். மன்மதன் சிவனினால் அழிக்கப்படுவதற்கு முன்னர் நான் என்ற ஆணவம்/அவித்தை கொண்டிருந்தான். லலிதையால் உயிர்ப்பிக்கப்பட்ட பின்னர் மன்மதம் தூய வித்தை வடிவினனாக புதுவடிவம் பெற்றான். அவனது ஆணவம் சிவனால் அழிக்கப்பட்டு அறிவு சக்தியால் வழங்கப்பட்டது,

மேலும் இந்த நாமம் மூன்றாவது கண் எனப்படும் ஆக்ஞா சக்கரத்தின் செய்ன்முறை பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. இந்தச்சக்கரம் விழிப்படைந்தால் மட்டுமே ஆதி குருவான சிவனுடன் தொடர்பு கொண்டு ஞானத்தினைப் பெறமுடியும். இந்த சக்கரம் விழிப்படையும் போது மட்டுமே ஒருவன் நேரடியாகவோ, மஹான், குருமார் ஊடாகவோ உண்மை அறிவைப்பெற்று இறைவனை அடைய முடியும். இந்த ஆக்ஞா சக்கரத்திலேயே உடலின் முதன்மையான நாடிகளான இட, பிங்கலை நாடிகள் சுழுமுனையுடன் சந்திக்கின்றன. சுஷும்னா நாடி பிரம்ம நாடி எனப்படும், இட, பிங்கலை ஜீவனைக்குறிக்கும். ஜீவன் பிரம்மத்துடன் இணையும் நிலையே தன்னை அறிந்த ஜீவன் முக்த எனப்படும். ஆக்ஞாவில் இந்த நிலை ஏற்படும்.

சௌந்தர்ய லஹரி கீழ்வரும் சுலோகத்துடன் ஆரம்பமாகிறது, “ சிவன் சக்தியுடன் இணைந்திருக்கும் போது மட்டுமே இந்த பிரபஞ்சத்தினை ஆக்கும் வல்லமையுடையவனாகிறான், இல்லாவிட்டால் அவன் அசைவதற்கு கூட சக்தி இல்லாதவனாகிறான். (ஸ்லோகம் – 01)

இந்த நாமத்துடன் பண்டாசூரனுடனான தேவியின் போர் பற்றிய வர்ணணை முடிவுறுகிறது.

அடுத்த நாமத்திலிருந்து லலைதையின் உயர்ந்த மந்திரமான பஞ்சதசியின் வர்ணனை ஆரம்பமாகிறது.

ஸ்ரீமத்வாக்பவ-கூடைக-ஸ்வரூபமுக-பங்க்கஜாயை  (85)
ஸ்ரீமத் வாக்பவ கூடமே தேவியின் திருமுகத்தாமரை
இந்த நாமத்துடன் தேவியின் பஞ்சதசி மந்திரம் ஆரம்பமாகிறது. இந்த மந்திரம் விபரமாக அறிமுகத்தில் கூறப்பட்டுள்ளது.

இதிலிருந்து தேவியின் சூஷ்ம ரூபம் விபரிக்கப்படுகிறது. தேவியின் சூஷ்ம ரூபம் மூன்று வடிவில் காணப்படுகிறது. அது சூஷ்மம், அதிசூஷ்மம், பராதிசூஷ்மம் என்பனவாகும். தேவியின் சூஷ்ம வடிவம் பஞ்சதசி மந்திரம், அதிசூஷ்ம வடிவம் காமகலா (332 வது நாமத்தில் விபரிக்கப்பட்டுள்ளது), பராதி சூஷ்மம குண்டலினி சக்தியாகும் (நாமம் 110), இந்த நாமத்தில் தேவியின் முகம் பஞ்சதசி மந்திரம் முதற் கூடமான வாக்ப கூடம் என்பது கூறப்படுகிறது. மந்திரத்தின் இந்தப்பகுதி அறிவினையும் ஞானத்தினையும் தரும். ஸ்ரீமத் என்ற முன்னடைச் சொல் சேர்க்கப்பட்டுள்ளமை பஞ்சதசி மந்திரத்தின் முழுமையான சக்தியினை குறிக்க சேர்க்கப்பட்டுள்ளது. ஸ்ரீமத் என்பது மந்திரத்திற்கு கொடுக்கப்பட்ட உயர்ந்த மரியாதையினையும் குறிக்கும். இந்தக் கூடம் முதலில் விபரிக்கப்பட்டுள்ளமையால்  இந்த முன்னடை கூறப்பட்டுள்ளது.

கண்டாத:-கடிபர்யந்த-மத்ய-கூட-ஸ்வரூபின்யை  (86)
மத்ய கூடமே கழுத்துக்கு கீழ் இடுப்பு வரையுள்ள வடிவம்
பஞ்சதசி மந்திரத்தின் மத்ய கூடமான நடுப்பகுதி தேவியின் கழுத்திலிருந்து இடுப்பு வரையிலான பாகத்தினைக்குறிக்கிறது. முன்னைய நாமம் ஞானாசக்தியினை குறித்தது, இந்த நாமம் இச்சாசக்தியினை குறிக்கிறது, அடுத்த நாமம் கிரியாசக்தியினைக் குறிக்கிறது.

சக்தி-கூடைகதாபன்ன-கட்யதோபாக-தாரிண்யை  (87)
சக்தி கூடமே இடுப்புக்கு கீழேயுள்ள பாகமானவள்
சக்தி கூடம் பஞ்சதசி மந்திரத்தின் கடைசி கூடம், இது தேவியின் இடுப்பிற்கு கீழான பகுதியினை குறிக்கும்.

மூலமந்த்ரத்மிகாயை  (88)
மூல மந்த்ரத்தின் உட்பொருளே தானாகி நிற்பவள்

மூலம் என்பது வேரினைக் குறிக்கும். மூல மந்திரம் என்பது எல்லா மந்திரத்திற்கும் வேராக இருப்பது. இங்கு மந்திரம் எனப்படுவது பஞ்சதசி மந்தரத்தினை குறிக்கும். இதுவே அனைத்து மந்திரங்களுக்கும் வேராக இருப்பது. எனினும் காமகலாவே பஞ்சதசிக்கு மூலமாக இருப்பது. இது பற்றி 322 வது நாமத்தில் விபரிக்கப்பட்டுள்ளது.


இந்த மூன்று நாமங்களிலும் பஞ்சதசி தேவியின் ரூபத்துடன் பொருத்தப்பட்டு தியானிக்கும் முறை குறிப்பிடப்படுகிறது. 

ஒரு லக்ஷம் ஸ்ரீ காயத்ரி ஜெபம் பூர்த்தி செய்த சாதகரின் அனுபவம்

சாதனை அனுபவம் -------------- குரு ஸ்ரீ ஸக்தி சுமனன் அண்ணாவின் வழிகாட்டலில் சாதனை செய்ய ஆரம்பித்து இந்த ஆண்டோடு 7 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. ...