பகவான் ஸ்ரீ ரஜனீஷ் என்ற தத்துவப் பேராசிரியர் உலகப்புகழ் பெற்ற ஓஷோ என்ற குருவாக மாறக் காரணமாக இருந்த அவரது மேடைப் பேச்சு சம்போகத்திலிருந்து சமாதிக்கு (Sambhog Se Samadhi Ki (संभोग से समाधि की ओर) என்ற ஹிந்தியில் 1968ம் ஆண்டு ஆற்றிய உரை. இது தமிழில் கண்ணதாசன் பதிப்பகம் காமத்திலிருந்து கடவுளுக்கு என்று வெளியிட்டுள்ளது என நினைக்கிறேன்.
ஹிந்தியில் ஓஷோவின் தலைப்பான சம்போகத்திலிருந்து சமாதிக்கு என்பதே சரியான மொழிப் பெயர்ப்பாக இருக்கும்.
இந்த நூலில் முதல் பகுதி மிகவும் சுவாரசியமானது.
அன்பின் அடிப்படை காமம் என்கிறார்.
எப்படி சேற்றிலிருந்து சூரியனை நோக்கி தாமரை மலர்கிறதோ அப்படி காமமாகிய சேற்றிலிருந்து மலரும் செந்தாமரை தான் அன்பு என்கிறார்.
தெய்வங்கள் தாமரையின் மேல் அமர்ந்திருக்கின்றன என்று குறிப்பிடப்படும் உருவங்களின் விளக்கங்களும் இது தான்.
குறித்த ஒரு தாழ் உணர்ச்சி உயர்ந்த ஒரு சக்தியாக - உணர்சியாக மாறும் செயலே தெய்வங்களாக குறிக்கப்படுகிறது. இன்னும் விளக்கமாகச் சொல்வதானால் அடிப்படையில் எம்மை துன்புறுத்தும் negative உணர்ச்சிகள் எனப்படுபவற்றை சரியாக மடை மாற்றினால் உயர்ந்த உணர்ச்சிகளாக மாறும் என்ற உண்மைகளையே தெய்வங்கள் தாமரையில் இருப்பதாக குறித்துக் காட்டியுள்ளார்கள்.
கோபத்தினை சரியாக மடை மாற்றினால் வீரம்
காமத்தினை சரியாக மடை மாற்றினால் அன்பு
இப்படி நாங்கள் தவறு என்று நினைக்கும் ஒவ்வொன்றும் சரியான வழி முறைகளுக்கூடாக உயர்ந்த ஆற்றலாக மாற்றப்படக் கூடியது.
இதுவே உருவ வழிபாட்டின் குறியீட்டு விளக்கமும் கூட, குறிப்பாக நீங்கள் ஒரு தெய்வத்தை உபாசிக்கிறீர்கள் என்றால் அந்த தெய்வத்தின் உருவ அமைப்பு நீங்கள் உங்கள் தாழ் உணர்ச்சிகளை எப்படி தெய்வ உணர்ச்சிகளாக மாற்றுவது என்ற உத்தியைச் சொல்லும் குறியீட்டு விளக்கம்.
கவனிக்க: எல்லோரின் கற்பனையில் உதித்த தெய்வ உருவங்களுக்கெல்லாம் இப்படி விளக்கம் இருக்கும் என்பதில்லை. ஆகம தந்திர சாஸ்திரங்களுக்கு அமைய உருவாக்கப்பட்டவற்றிற்கு மேற்கூறிய அடிப்படை இருக்கும்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.