குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, November 30, 2023

நேர்படப் பேசும் தன்மை இல்லாமை

 

மனித உறவுகளில் இருக்கும் மிகப்பெரிய சிக்கல் தன்மை என்னவென்றால் " நேர்படப் பேசும் தன்மை இல்லாமை"

ஓவ்வொரு மனிதனும் மற்றவர்கள் கூறும் கருத்தை செவிமடுத்து பின்னர் தனது கருத்தைத் தெளிவாகச் சொல்லும் ஆற்றலை நாம் எமது பிள்ளைகளிடையே வளர்க்க வேண்டும்.

இன்னொருவர் கருத்துச் சொல்லும் போது அவர் என்னைத் தாக்குகிறார் என்று எண்ணி உணர்ச்சி வசப்படாமல் அவர் சொல்வதில் உண்மை இருக்கிறதா இல்லையா என்று ஆராய்ந்து உண்மையிருந்தால் அவற்றை ஏற்றுக் கொண்டு தம்மை மீளமைத்துக் கொண்டும் இல்லை என்றால் தர்க்கப் பூர்வமாக அவற்றை மறுத்து தனது கருத்தை நிறுவக்கூடிய ஆற்றலை வளர்க்க வேண்டும்.

இல்லாமல் வீணாக உணர்ச்சி வசப்படல், குழம்புதல், ஆக்கிரோஷமடைதல் என்று குழப்பமடைய வைக்கக் கூடாது!

அண்மையில் ஒரு இளைஞர் சமூகக் குழுவிற்கிடையிலான பிரச்சனைகளைத் தீர்க்கலாம் என்று உரையாடிய போது அறிந்து கொண்ட விடயம் ஒவ்வொருவரும் தாம் சிந்திக்கும் நல்ல விடயத்தை தெளிவாக முன்வைப்பதை விட மற்றவர்களை தாழ்த்துவதை அதிகமாகச் செய்யும் போது நல்ல சமூக நோக்கம் இல்லாமல் போய் விடுகிறது.

தாம் நினைப்பதெல்லாம் சரி என்ற ஒருவித பிடிவாதம் ஒருவருடன் ஒருவர் உரையாடும் தளத்தினை இல்லாமல் ஆக்கிவிடுகிறது.

நாம் விவாதிப்பது, தர்க்கிப்பது எல்லாம் எம்மிருவரதும், எமது குழுக்களினதும் நன்மை, ஒத்திசைவிற்காக மாத்திரமே - எனது தனிப்பட்ட அகங்காரங்களினை திருப்திப்படுத்த இல்லை என்ற தெளிவு எல்லோரிடமும் இருக்க வேண்டும்.

சொல்ல வரும் விடயத்தை தனிமனித பிரச்சனையாக்காமல் எல்லோருக்கும் நன்மை பயக்கும் விடயமாக சொல்லத் தெரிய வேண்டும்.

பலரும் நான் நேர்படப் பேசுகிறேன் என்று மற்றவர்களை தாக்கிப் பேசுவதை நினைக்கிறார்கள். மற்றவரைத் தாக்காமல் தனது கருத்தின் நியாயத்தை உரைக்கும் திறன் எமக்கு இருக்க வேண்டும்.

இவற்றையெல்லாம் ஒரு அனுபவக் கல்வி முறையாக கற்கக்கூடிய தளங்களை சமூகத்தில் உருவாக்க வேண்டும்.

Sunday, November 26, 2023

சித்தாந்த தீக்ஷை உடையவர்களுக்கு ஆகாத உணவுப் பொருட்கள்

 

தம்பி Arunachalam Ambalam ஒரு பதிவிட்டிருந்தார்: ஆன்மீகம் என்ற பெயரில் உணவினை உயர்வு தாழ்வு கற்பிப்பது இங்கு பெரும் பிரச்சனை! உண்மையில் நாம் உடலாலும், மனதாலும் செய்யும் காரியத்திற்கு உகந்த உணவு என்பதே அடிப்படை விதி!

கிரணாகமத்தின் படி சித்தாந்த தீக்ஷை உடையவர்களுக்கு ஆகாத உணவுப் பொருட்களாக சிலதைப் பட்டியலிட்டிருந்தார்.

வெங்காயம்

வெள்ளிப்பூண்டு

சுரக்காய்

மாமிசம்

மச்சம்

இதை நாம் சரியாக அர்த்தப்படுத்திக் கொள்வதென்றால் கிரணாகமம் விதித்த வகையில் ஒருவன் தீக்ஷை பெற்று சாதனை புரிந்து அந்த ஆகமம் கூறும் உயர் சித்தி பெற விரும்புவன் மேற்குறித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதாகும்! இது எல்லோருக்கும் பொதுவாகச் சொல்லப்பட்டதாகக் கருதிக்கொண்டு குழம்பக்கூடாது.

அதில் வெங்காயமும், வெள்ளிப்பூடு, சுரக்காய் மிக முக்கியமானது. பல ஆன்மீக சாதனை செய்பவர்கள், தியான மார்க்கிகள் இதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டாலும் இதற்குரிய காரணம் என்னவென்பது பலருக்கும் விளங்குவதில்லை.

இதை நாம் ஆயுர்வேத திரவிய குண விஞ்ஞானத்தின் மூலம் அணுகினால் இதன் விடை கிடைக்கும்.

வெங்காயம் முத்தோஷங்களில் வாதத்தையும், கபத்தையும் அதிகரிக்கும்; ஆனால் பித்தத்தைக் கூட்டாது;

இதேபோன்ற செய்கைதான் வெள்ளைப் பூடும் செய்யும்.

ஒருவன் தனது ஆன்ம சாதனையில் நீண்ட நேரம் மனதை ஒருமுகப்படுத்த அக்னியாகிய பித்தத்தின் துணை தேவை; உடலில் தேவையான அளவு அக்கினி இருந்தால்தான் ஒருவன் நீண்ட நேரம் மனதை ஒருமுகப்படுத்தி தாரணை, தியான, சமாதி நிலைக்குள் செல்ல முடியும். உடலில் கபம் அதிகமாக இருந்தால் சோம்பலும், வாதம் அதிகமாக இருந்தால் மனதிலும், உடலிலும் பதட்டம் அதிகமாக இருப்பதால் அதிக நேரம் தியானம் செய்ய முடியாமல் உடல் தடுக்கும்.

சுரக்காய் கசப்புச் சுவையுடன் உதான வாயுவைத் தூண்டக்கூடியது; இது வாந்தியை ஏற்படுத்தி ஹிருதயத்திற்கு நெருக்கத்தைக் கொடுக்க கூடியது. தியானம் செய்பவர்கள் பஞ்சப்பிராணன் களான பிராண, அபான, உதான, சமான, வியான வாயுக்களில் பிராண அபானக் கலப்பையே தமது கும்பகம், தாரணை, தியானத்தில் செய்கிறார்கள். இவை இரண்டும் கலக்கும் போது மற்றைய வாயுக்கள் அடங்கி இந்த பிராண அபானக் கலப்பிற்கு ஒத்துழைக்க வேண்டும். சுரக்காய் சாப்பிட்டு விட்டு தியானம் செய்யும் போது உதான வாயுக் கிளர்ச்சியால் நீண்ட நேரம் தியானம் செய்ய முடியாது என்பதால் இங்கு சுரக்காய் விலக்கப்பட்டிருக்கிறது.

இங்கு வாசிப்பவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் உயர் ஆன்ம சாதனையில் குருமுகமாய் தீட்சை பெற்று தியான சித்தி, சமாதி ஸித்தி பெற விரும்புவர்களுக்கே இந்த உணவு விதிகள் எல்லாம்!

உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுபவர்கள் எதையும் அளவாக உங்கள் ஜீரண சக்திக்கு தக்க உண்ணலாம்! எந்த தீங்கும் வராது!

உடலில் பலம், காம உணர்வு விருத்தி, தோல் நோய் உள்ளவர்கள் வெங்காயம், வெள்ளைப்பூடு நன்றாகச் சேர்த்துக்கொள்ளலாம்.

Monday, November 20, 2023

குமார தந்திரம் கூறும் ஸுப்ரமண்யரின் சோடஷ (பதினாறு) தியான ரூபங்கள் - 14: பால ஸ்வாமி தியானம்

{கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, விசாகம், ஒவ்வொரு மாத சஷ்டியிலும் முருக உபாசகர்கள் தியானிக்கத் தக்க ரூபங்கள் பால ஸ்வாமி தியானம்}
______________________________________________
பதினான்காவது மூர்த்தம் பாலஸ்வாமி தியானம் 

பரம்பொருளை வாத்ஸல்யத்துடன் குழந்தையாக கருதி தியானிக்க சிறந்த வடிவம்; பூரண ஸத்வ வடிவம்! புதிதாக திருமணமாகி நற்குழந்தைகள் வேண்டுபவர்கள் உபாசிக்க வேண்டிய தியான ரூபம்.  

இன்று திருமணமாகி குழந்தைகள் இன்றி இருக்கும் பலர் உடலியல் ரீதியாக பிரச்சனை இன்றி இருந்தாலும் மனதில் உணர்ச்சியளவில் சத்துவமும், வாத்ஸல்யமும் இல்லாததால் குழந்தைப் பேறு இன்றி தவிக்கிறார்கள். அவர்கள் மன நிலையே அவர்களுக்கு குழந்தைப் பேற்றை தருவதில்லை! அவர்கள் இந்த பாலஸ்வாமியினை தியானித்து வந்தால் நிச்சயம் ஸத்புத்திரப் பேறு கிடைக்கும். 

பலருடைய திருமண உறவு எரிச்சலும், குரோதமும், சண்டையும் நிறைந்த தாமஸ வாழ்க்கையாகத்தான் இருக்கிறது; இந்த ஸ்வாமியினுடைய ரூபம் ஸத்துவ குணத்தை வளர்க்க வல்லது. 

மேலும் இந்த பாலஸ்வமியைத் தியானிக்கும் யோகி எப்போதும் மனதளவில் இளமையாக இருப்பான்! ஸ்ரீ லலிதை உபாசனையில் ஏன் பாலை அவசியமோ அதுபோன்றதே பரமேச்சுவரரை உபாசனை செய்பவர்களுக்கு பாலஸ்வாமி! எமது மனதைக் கள்ளம் கபடம் இல்லாமல் குழந்தை போல் வைத்திருக்க உதவும் உபாசனை இந்த திருவுருவம். 

தியான ஸ்லோகம் 

*****************************

பத்ம ஸவ்ய கடிஸம் யுத வாமம்

பத்ம காந்தி நிபமேக முகஞ்ச

பால விருத்திகர மீச்வர சூநும்

பால முந் நத புஜம் ப்ரணதோஸ்மி

வலது கரத்தில் தாமரையும், இடது கை இடுப்பிலுமாக வைத்துக்கொண்டு, தாமரை போன்ற செந் நிற உடல், இளைமையை அபிவிருத்தி செய்பவரும், உயர்ந்த கையை உடையவரும், பரமேஸ்வரரின் குழந்தையான பால ஸ்வாமியை நமஸ்கரிக்கிறேன்.





குமார தந்திரம் கூறும் ஸுப்ரமண்யரின் சோடஷ (பதினாறு) தியான ரூபங்கள் - 13 : வள்ளி கல்யாண சுந்தர ஸ்வாமி தியானம்

{கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, விசாகம், ஒவ்வொரு மாத சஷ்டியிலும் முருக உபாசகர்கள் தியானிக்கத் தக்க ரூபங்கள் வள்ளி கல்யாண சுந்தர ஸ்வாமி தியானம்}
______________________________________________
பதின்மூன்றாவது ரூபம் வள்ளீ கல்யாண சுந்தர ஸ்வாமி தியானம்

குமார தந்திரம் வள்ளீ தேவியை மகாவிஷ்ணுவின் மகளாகக் குறிப்பிடுகிறது. இந்த ரூபத்தில் வள்ளியை விஷ்ணுவின் க்ருஷ்ண வர்ணத்திலும், சுப்பிரமணியரை செம்மை நிறமாகவும் தியானிக்க வேண்டும். 

வள்ளி என்பதன் பொருள் நிலத்தினையும், நிலத்தில் விளையும் கிழங்கு, அதன் கொடி இவற்றைக் குறிக்கும் சொல்! மகாவிஷ்ணு நீடித்து நிலைத்திருக்கும் காக்கும் சக்தி! பூமியில் உணவுப் பஞ்சம் வந்தால் எக்காலத்திலும் நிலைத்து நின்று எம்மைப் போஷிக்கக் கூடியது வள்ளிக் கிழங்கு! அத்தகைய ஆற்றல் மகாவிஷ்ணுவின் அருளால் கிடைப்பது! உடலைப் போசிப்பது வள்ளிக் கிழங்கு! 

வள்ளியைக் கைப்பிடிப்பது என்பது பெரும் யோக இரகசியம் அடங்கிருக்கிறது; ஒரு யோகி தனது அசுர குணங்களை வென்று தேவேந்திரனின் தெய்வ மனதை முதற்படியில் அடைந்து விடலாம்; ஆனால் உடலாகிய பிருத்வி தத்துவத்தை சித்தி செய்ய மூலாதாரத்து கணபதி உதவி செய்ய, மணிப்பூரகத்து மகாவிஷ்ணு தன் பெண்ணாம் வள்ளியை – என்று நிலைத்து நிற்கும் யோக சித்தியை – கைப்பிடித்துத் தந்தால்தான் ஆறு இதழ் சுவாதிஷ்டான ஆறறிவு ஆறுமுகன் பூரண சக்தி அடைய முடியும். 

தெய்வானையைக் கைப்பிடித்தல் தெய்வ மனம் பெறுதல் எனும் முதல் தெய்வ சக்தி! 

வள்ளியை மணம்புணரல் என்பது உடலை யோகத்திற்கு சித்தி செய்யும் காய சித்தி! காய சித்திக்கு வேண்டிய மூலிகைகள் எல்லாம் தெரிந்த வேட்டுவப் பெண் என்பதும் இதனால்தான்! 

வள்ளீ கல்யாண சுந்தரர் என்ற இந்த ரூப தியானம் யோகத்தில் மணிபூரக சித்தியடைந்து மகாவிஷ்ணுவின் அருளைப் பெறுதலைக் குறிக்கும்! இந்த ரூப தியானம் பூரண லக்ஷ்மி கடாக்ஷத்தையும், உடல் உறுதியையும் சாதகனில் உருவாக்கும். 

ஹஸ்த த்வந்த்தேக்ஷமாலா 

மபய மபித்ருதம் குண்டிகாச்ரோணி பந்தம்

ஸ்வ்யே வாமே நிஷண்ணம்ஸ்ருவ 

த்ருத விதி நா ஹூய மாநேந யுக்தம் 

ஸர்வாலங்கார் யுக்தம் ஜலகலச த்ருதா விஷ்ணுநா சாருணாபம்

வள்ளீ கல்யாண மூர்த்திம் 

ஸகலசுரகணை ஸ்தூய மாநம் ப்ரபத்யே 

வலது இரண்டு கைகளில் அக்ஷமாலை, அபயம் தரித்து, மற்ற இடது இரண்டு கைகளில் கெண்டியும், இடுப்பில் கை வைத்தவராகவும்,

வலது பக்கத்தில் ஸ்ருவத்தை தரித்து ஹோமம் செய்து கொண்டு இருப்பவருமான பிரம்மாவுடன், 

ஜலகலசத்தைத் தரித்துக்கொண்டு இடது பக்கத்திலுள்ள விஷ்ணுவுடன் கூடியவரும், வள்ளிதேவியை கைப்பிடிக்க ஆபரணங்களொடு பீதாம்பரங்களோடு வீற்றிருக்கும், எல்லா தேவர்களாலும் துதிக்கப்படுபவரான வள்ளி கல்யாண மூர்த்தியை தியானிக்கிறேன்.



அடுத்தது பால ஸ்வாமி தியானம்


Sunday, November 19, 2023

குமார தந்திரம் கூறும் ஸுப்ரமண்யரின் சோடஷ (பதினாறு) தியான ரூபங்கள் - 12 : ப்ரம்ம சாஸ்தா தியானம்

{கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, விசாகம், ஒவ்வொரு மாத சஷ்டியிலும் முருக உபாசகர்கள் தியானிக்கத் தக்க ரூபங்கள் ப்ரம்ம சாஸ்தா தியானம்}
**********************************************************************************பன்னிரண்டாவது ரூபம் ப்ரம்ம சாஸ்தா தியானம்

பிரம்மா என்பது பௌதீக உலகைப் படைக்கும் சக்தி; ஆரம்பத்தில் ஐந்து தலைகளுடன் சதாசிவருக்கு சமமான படைப்பாற்றலுடன் இருந்து வீண் ஆணவத்தினாலும் பொய்மையினாலும் காலபைரவரிடம் ஒரு தலையை இழந்து, பின்னர் பிரணவப் பொருளின் உண்மை விளக்கம் அறியாமல் சுப்பிரமணியரிடம் மாட்டிக்கொண்டு குட்டு வாங்கியவர். 

ஒவ்வொரு மனிதனிடமும் படைப்பு ஆற்றல் (creativity) அவனது மனதில் கற்பனைத் திறனாக இருக்கிறது; ஆனால் அது சிவத்தை நோக்கி இல்லாத போதும், இந்த படைப்பின் இரகசியமான பிரணவ இரகசியம் அறியாமல் இருக்கும் போது அது விகல்பம், விபர்யம் என்ற பொய்யறிவாகிப் போகிறது. இதனால் நாம் வீண் ஆணவங்களை ஏற்படுத்திக்கொண்டு துன்புறுகிறோம். 

இப்படி மனம் விகல்பம் என்ற வீண் கற்பனையும், விபர்யம் என்ற பொய்யறிவாலும் வீண் ஆணவம் கொண்டிருக்கும் போது நாம் பிரம்ம சாஸ்தா ரூபத்தினை தியானிக்க வேண்டும். சாஸ்தா என்றால் குரு, தலைவன், அரசன் என்று பொருள். நாம் வலிமையற்று, பொய்யான அறிவினால், ஆணவத்தினால் கலக்கமுறும் போது நாம் பிரம்ம சாஸ்தாவை தியானித்தால் அவர் எமக்கு சரியான வழியில் எமது படைப்பாற்றலை வழிப்படுத்துவார். 

ஆணவம் அழிக்கும் பூரண சத்துவ மூர்த்தி இவர்! 

வாமே கரே ச யுகளே வரகுண்டி கேச 

ஸவ்யேக்ஷ ஸுருத்ரமபயம் தததம் விசாகம் 

வல்யாயுதம் வனகலோசன மேக வக்த்ரம் 

வந்தாமஹே வனஜன ஸம்பவ சாஸிதாரம்

 இடது கரத்தில் வரதம், கெண்டிகையும் 

வலது கரத்தில் அபயம் அக்ஷர மாலையைத் தரித்தவரும் 

விசாகன் என்ற பெயருடையவரும் வள்ளி தேவியுடன் கூடிய, 

அலர்ந்த செந்தாமரை போன்ற கண்கள் உடையவரும் அழகிய முகமுடையவரும், 

பிரம்மாவின் ஆணவத்தைக் குட்டி தண்டித்தவருமான பிரம்ம சாஸ்தாவை வணங்குகிறேன்.



அடுத்தது வள்ளீ கல்யாண சுந்தர ஸ்வாமி தியானம்


குமார தந்திரம் கூறும் ஸுப்ரமண்யரின் சோடஷ (பதினாறு) தியான ரூபங்கள் - 11 : தேவ ஸேநாநி தியானம்

{கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, விசாகம், ஒவ்வொரு மாத சஷ்டியிலும் முருக உபாசகர்கள் தியானிக்கத் தக்க ரூபங்கள் தேவ ஸேநாநி தியானம்}
***********************************************************************************
பதினொன்றாவது ரூபம் தேவ ஸேநாநீ ஸ்வாமி தியானம் 

இந்த மூர்த்தம் தேவ ஸேனைக்கு தலைமை தாங்கி அசுர குணங்களை அழிக்க வழிகாட்டும் மூர்த்தம்; தன்னில் உள்ள தெய்வ குணங்களை விழிப்பிக்க விரும்பும் சாதகன் இந்த மூர்த்தத்தை தியானிப்பதன் மூலம் தேவ ஸேநாநீ ஸ்வாமியின் அருளால் அசுர குணங்களை வென்று தெய்வ குணத்திற்கு அதிபதியாகலாம். 

அபய மஸிரதாங்கம் அங்குசம் சக்தி சூலம் 

வரத குலிச பாசம் பத்ம தண்டௌ கதாஞ்ச

ததத முபய பக்ஷ த்வாதசாயாம ஹஸ்தை :

த்விதச கமல நேத்ரம் தேவஸ நான்ய மீடே 

1. அபயம்

2. கட்கம் 

3. சக்ரம் 

4. அங்குசம்

5. சூலம்

6. சக்தி

7. வரதம் 

8. வஜ்ரம் 

9. பத்மம் 

10. பாசம் 

11. தண்டம் 

12. கதை 

என்ற பன்னிரு ஆயுதங்களை பன்னிரு கைகளில் தரித்தவரும் தேவ சேனைக்கும் தலைமை தாங்கும் தேவ ஸேநாநி ஸ்வாமியை நான் தியானிக்கிறேன்.



அடுத்தது ப்ரம்ம சாஸ்தா தியானம்

குமார தந்திரம் கூறும் ஸுப்ரமண்யரின் சோடஷ (பதினாறு) தியான ரூபங்கள் - 10 : தாரகாரி ஸ்வாமி தியானம்

{கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, விசாகம், ஒவ்வொரு மாத சஷ்டியிலும் முருக உபாசகர்கள் தியானிக்கத் தக்க ரூபங்கள் தாரகாரி ஸ்வாமி தியானம்}
______________________________________________
பத்தாவது ரூபம் தாரகாரி ஸ்வாமி தியானம்

இந்த ரூபம் தாராகாசூரனை வதம் செய்த கோலம்; இது எமக்குள் இருக்கும் பிறவிக்கு காரணமான அசுரகுணங்களை, வினைகளை அழித்து பிறவிப் பிணியில் இருந்து நீக்க வல்ல தியானஸ்வரூபம் என்று சொல்கிறது குமார தந்திரம்

வரத மங்குச த்வஜேச கட்க சாப வஜ்ரகம் 

அபய பாச சக்ர கட்க முஸல் சக்தி மன்வஹம் 

த்விதச பாணிபிர் ததா நமருண கோடி ஸந்நிபம்

பஜஹ்ட தாரகாரி மத்ர பவ வி நாச காரணம் 

1. வரத கரம் 

2. அங்குசம்

3. கொடி

4. கேடயம்

5. வில்

6. வஜ்ரம் 

7. அபயம் 

8. பாசம் 

9. சக்ரம் 

10. கட்கம் 

11. உலக்கை

12. சக்தியாயுதம் 

ஆகிய பன்னிரெண்டு ஆயுதங்களைப் பன்னிரெண்டு கரங்களில் தரித்தவரும், 

கோடி சூரியப் பிரகாஸமானவரும்

ஸம்ஸார துக்கத்தை அழிக்க வல்லவரும் 

தாரகாசுரனை வதம் செய்தவருமான தாரகாரி ஸ்வாமியை தியானிக்கிறேன்.


அடுத்தது 
தேவ ஸேநாநி தியானம்


குமார தந்திரம் கூறும் ஸுப்ரமண்யரின் சோடஷ (பதினாறு) தியான ரூபங்கள் - 09 : ஷண்முக ஸ்வாமி த்யானம்

{கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, விசாகம், ஒவ்வொரு மாத சஷ்டியிலும் முருக உபாசகர்கள் தியானிக்கத் தக்க ரூபங்கள் ஷண்முக ஸ்வாமி 
த்யானம்}
______________________________________________
ஒன்பதாவது ஷண்முக ஸ்வாமி தியானம் 

இந்த ரூபம் ஆறுகரங்களும் பன்னிரு கைகளும் உடைய ரூபம்; இரு கைகளிலும் உள்ள ஆயுதங்களின் வேறுபாட்டிற்கு அமைய ஆறுவகை சண்முக வடிவங்கள் உள்ளது; இந்த வேறுபாடுகள் அந்த ரூபத்தினை மந்திர தந்திர சாதனைகளால் தியானித்துப் பெறப்படும் பயன் களுக்கு அமைய வேறுபடும் இரகசியம் உள்ளது; அதை குருமுகமாக அறிய வேண்டும்; இங்கு குமார தந்திரம் சொல்லும் பொது வடிவம் கூறப்படுகிறது. 

அதுபோல் வள்ளி, தேவானை அம்மையார் நின்ற திருக்கோலத்தில் அருகில் இருப்பதாக தியானிக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.

வன்தே ஸிந்தூர காந்திம் சரவிபிந 

பவம் ஸ்ரீ மயூராதிருடம்

ஷடட்வக்த்ரம் தேவ நாதம் மதுரி 

புத நயா வல்லபம் த்வாதசாக்ஷம் 

சக்திம் பாணம் க்ருபாணாம் 

த்வஜமபி ச கதா சாபயம் ஸவ்ய ஹஸ்தை:

சாபம் வஜ்ரம் ஸரோஜம் கட்கமபி 

வரம் சூலமந் நையர் ததாநம் 

செந்தூர பொரி போல் சிகப்பானவரும், சரவணப் பொய்கையில் உண்டானவரும், மயிலின் மேல் அமர்ந்தவரும் தேவர்களை சேனையாகப் பெற்றவரும், 12 கண்களை உடையவரும் 

வலது கரங்களில்

1. சக்தியாயுதம்

2. அம்பு

3. கட்கம் 

4. கொடி

5. கதை

6. அபயமுத்திரை தரித்திருப்பவரும்

இடது கரத்தில்

1. வில்

2. வஜ்ரம் 

3. தாமரை

4. கடக முத்ரை

5. சூலம் 

6. வர முத்திரை தரித்திருப்பவருமான 

ஆறு முகங்கள் உடைய ஷண்முகப்பெருமானை வணங்குகிறேன்.

 


அடுத்தது தாரகாரி ஸ்வாமி தியானம்

குமார தந்திரம் கூறும் ஸுப்ரமண்யரின் சோடஷ (பதினாறு) தியான ரூபங்கள்- 08 : மூர்த்தம் குமார ஸ்வாமி

{கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, விசாகம், ஒவ்வொரு மாத சஷ்டியிலும் முருக உபாசகர்கள் தியானிக்கத்தக்க ரூபங்கள் குமார ஸ்வாமி தியானம்}
______________________________________________
எட்டாவது மூர்த்தம் குமார ஸ்வாமி

இந்த மூர்த்தம் “கல்யாணதா நிரதீம்” வள்ளி தேவியுடன் வணங்குபவரக்ளுக்கு எல்லாவித மங்களங்களையும் தரக்கூடிய மூர்த்தம் என்கிறது குமார தந்திரம். 

ஸ்வ்யத்வயேனிசி சக்த்ய ஸிமாததா நம் வாமத்வயேபிமகு குகுட கேடகஞ்ச
வல்லீபதிம் விபுத லோச ந பூர்ண சந்த்ரம் 
கல்யாணதா ந நீரிதம் கலயே குமாரம

வலது கையில் சக்தியாயுதமும், கட்கமும், இடது கையில் குக்குடமும், கேடயமும் தரித்துக்கொண்டு வள்ளியம்மையாருடன் பூர்ண சந்திரனைப் போன்ற கண்களை உடையவருமான மங்களத்தை அருளும் தன்மையுடைய குமார ஸ்வாமியை வணங்குகிறேன்.


அடுத்தது ஷண்முக ஸ்வாமி த்யானம்


Saturday, November 18, 2023

குமார தந்திரம் கூறும் ஸுப்ரமண்யரின் சோடஷ (பதினாறு) தியான ரூபங்கள்- 07 : கார்த்திகேய ஸ்வாமி

{கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, விசாகம், ஒவ்வொரு மாத சஷ்டியிலும் முருக உபாசகர்கள் தியானிக்கத் தக்க ரூபங்கள் கார்த்திகேய ஸ்வாமி 
தியானம்}
______________________________________________
ஏழாவது ரூபம் கார்த்திகேய ஸ்வாமி

இந்த மூர்த்தி வரத ஹஸ்தம்கரத்திற்கு மேல் வஜ்ராயுதமும், கேடயமும் உடையவராகவும், அபய ஹஸ்தத்திற்கு மேல் சக்தியாயுதமும், கட்கம் கத்தி உடையவராகவும் ஸாதுக்களால் தியானிக்கப்படுபவராகவும் குமார தந்திரம் சொல்கிறது

ஸாது என்றால் நன்மையான நெறியை உறுதியாகப் பின்பற்றுபவர் என்று அர்த்தம். கட்கம் என்பது எமது பந்தங்களை அறுத்து விவேகத்தைத் தருவது; கேடயம் தீய எண்ணங்களிலும், செயல்களிலும் இருந்து பாதுகாப்பினைத் தருவது; சக்தியாயுதம் எம்மில் உள்ள அசுரத்தனங்களை அழிக்கும். வஜ்ராயுதம் எமது உறுதிபெற்ற மனம். ஆறுமுகங்கள் எம் உடலில் இருக்கும் ஆறு ஆதாரங்களையும் வலுப்படுத்தும் தெய்வ சக்தி

கார்த்திகேய சுவாமி தனது கட்கத்தால் விவேகத்தைத் தந்து, கேடயத்தால் தீமைகளிலிருந்து பாதுகாத்து, அசுரத்தனத்தை சக்தியாயுதத்தால் அழித்து, வஜ்ராயுதம் போன்ற உறுதியான மனத்தை, தனது ஆறு முகங்களால் அனுக்கிரகித்து ஸாது என்ற நன்னெறியை வாழ்க்கையில் வேண்டும் என தியானிக்கும் சாதகனுக்கு அளிப்பார் என்பது இதன் விளக்கம்.

இனித் தியான சுலோகம்

 வரத குலிச கேடம் வாமஹஸ்த த்ரயேச 

தததமபய சக்திம் கட்க ந்யத்ரேயேச

தருண ரபி ஸமாபம் ஸாதுபி: பூஜ்யமாநம் 

கமல வதந ஷட்கம் கார்த்திகேயம் நமாமி

இதன் பொருள்

வரதம், வஜ்ரம், கேடயம் இவை மூன்றும் இடது கையிலும் 

அபயம், சக்தியாயுதம், கத்தி இவை மூன்றும் வலது கையிலும் தரித்து

இளஞ்சூரியன் போல் பிரகாசிப்பவரும் 

சாதுக்களால் பூஜிக்கப்படுபவரும் 

ஆறுமுகங்கள் உடைய கார்த்திகேயரை நமஸ்கரிக்கிறேன்.

அடுத்தது குமார ஸ்வாமி தியானம்

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...