Posts

Showing posts from March, 2013

அனைவரும் பயன்பெறக்கூடிய திரிபலா காயகற்ப முறைகள்

இந்தப்பதிவில் ஆயுர்வேத நூற்களில் காணப்படும் நான்கு வகையான காயகற்ப முறைகளை கூறுகிறோம்.  இவை ஒருவர் நூறாண்டு காலம் வாழ்வதற்கான கற்பமுறைகள். மேலும் ஒரு விடயத்தினை நினைவில் கொள்ள வேண்டுகிறோம். காயகற்பம் உண்டு விட்டு வாழ்க்கையினை எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொண்டிருந்தால் நூறாண்டு காலம் வாழலாம் என்று நினைக்கும் நபர்  நீங்கள் இல்லை என எண்ணுகிறோம். சித்தர்களது நோய் அணுகா விதியும், பிரணாயாமம், தியான மனச்சாதனையும் உடைய சாதகர் ஒருவரே சித்தர் நூற்களில் கூறப்படும் காயகல்பத்தின் நூறாண்டு வாழ்க்கை எனும் முழுமையான பலனை அனுபவிக்க முடியும். மற்றவர்கள் வாழும் வரை ஆரோக்கியமாக வாழலாம். ஏனெனில் காயகற்பம் என்பது சாதகன் தனது சாதனையினை பிறவிப் பெரும் பயனை அடைவதற்கு பயன்படுத்த பட்ட ஒன்று. இங்கு  கூறப்படும் நான்கு முறைகளில் முதல் இரண்டு முறைகள்  அனைவராலும் பயன்படுத்தக்கூடியது.  
திரிபலா கற்ப முறை - 01 முதல் தடவை உணவருந்தி நன்கு சமிபாடடைந்தவுடன், அடுத்த சாப்பட்டிற்கு ஒருமணி நேரம் முன்னதாக ஒரு கடுக்காயின் அளவு கடுக்காய் பொடி  வெந்நீருடன் அருந்தவும். பின்னர் சாப்பாட்டிற்கு பதினைந்து நிமிடத்திற்கு முன்னர் இரண்டு …

குண்டலினி சக்தி 03: ஆறாதாரங்களும் குண்டலினி சக்தியும்

Image
************************************************************************************ எனது உரை
இதிலிருந்து மூல நூலின் மொழிபெயர்ப்பு தொடங்குகிறது, இந்த மொழிபெயர்ப்பு வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பல்ல, மூல நூலில் உள்ள கருத்தினை மாற்றாமல், எல்லோரும் விளங்க கூடிய அளவிற்கு எளிமைப்படுத்த முயன்றிருக்கிறேன். இந்தத்தொடரிற்கு வாசிக்கும் வாசகர்களிடமிருந்து இயலுமான அளவு பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறேன்.  மற்றும் பேசப்படும் விடயத்தின் புரிதல் விட்டுப்போகாமலும், விளங்கிக்கொள்வதற்காகவும் உபதலைப்புகளை இட்டுள்ளேன். இவை மூல நூலில் இல்லாதவை. 
சிவப்பு நிறத்தில் இலக்கமிடப்பட்டவை மூல நூல் ஆசிரியரின் அடிக்குறிப்புகள், அவை இலக்கத்திற்கேற்றவாறு பதிவுன் முடிவில்  கீழே இணைக்கப்பட்டுள்ளது. 
இந்த பதிவுத்தொடர் குண்டலினி யோகம் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள நினைப்பவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு என எண்ணுகிறோம்
ஸத்குரு பாதம் போற்றி!
அன்புடன்
சுமனன்  ************************************************************************************
அறிமுகம் ஆறாதாரங்களும் குண்டலினி சக்தியும்
ஷட்சக்ர நிருபணம் (ஆறு ஆதாரங்களின் விவரணம்), பாதுகா ப…

குண்டலினி சக்தி 02: ஆர்தர் ஆவலோன் (Arthur Avalon) முன்னுரை

Image
முன்னுரை
எனது "சக்தியும் சாக்தமும்" நூல் முதன்முறையாக குண்டலினி யோகத்தின் தத்துவம் பற்றி விவரித்திருந்தது. சில பகுதிகளில் அதிகம் பேசப்பட்டிருந்தாலும் அது பற்றிய தெரிதல் மிகக்குறைவே.
இந்தப்புத்தகம் குண்டலினி யோகம் பற்றிய முழுமையான விளக்கங்களையும் விபரிப்புகளையும் கொண்டிருக்கின்றது, இந்த யோகத்தினூடாக பேசப்படும் விடயங்கள் தந்திராவின் அதிமுக்கியமான கோட்பாடுகளாகும். சிலவருடங்களுக்கு முன்னர் இந்த இரண்டு நூற்களினதும் சமஸ்க்ருத மூலம் எனது தந்திர நூற்களை வெளியிடும் தொகுதியில் வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் மொழிபெயர்க்கப்படவில்லை. முதலாவது நூலான "ஷட்சக்ர நிருபணம்" (உடலில் உள்ள ஆறு சக்கரங்களின் விளக்கமும் ஆதாரமும்) தாந்திரீகரான பூர்ணாணந்த ஸ்வாமி அவர்களால் எழுதப்பட்டது. அவரைப்பற்றிய விபரங்கள் பின்னர் வெளியிடப்படும். இந்த நூலானது அவரது வெளியிடப்படாத "ஸ்ரீ தத்துவசிந்தாமணீ" என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்ட பகுதியாகும். இந்த நூல் தாந்திரீக நூற்தொகுதி வெளியீடு பகுதி - 02 இல் சங்கரா மற்றும் விஸ்வ நாதா ஆகியவர்களால் மேற்கோள்காட்டப்பட்டுள்ளது. அந்த பதிப்பே இந்த மொழிபெயர்ப்பிற்கு…

குண்டலினி சக்தி 01: யாழ்ப்பாணத்து யோகர் சுவாமிகளும் குண்டலினி யோகமும்

இந்தப்பதிவுத்தொடர் Sir John Woodrouf ஆங்கிலத்தின் எழுதிய Serpent Power  நூலின் தமிழ் மொழியாக்கமாகும். இதனை எழுதத்தூண்டிய யாழ்ப்பாணம் யோகர் சுவாமிகளின் சீடர் செல்லத்துரை சுவாமிகளுக்கும், எனது குருநாதருக்கும் முதற்கண் வணக்கத்தினைக்கூறி இந்த மொழியாக்கத்திற்கான காரண காரிய தொடர்பு முதற்பதிவாக வெளியிடப்படுகிறது.இதன் தூணடல் என்னை அறியாமல் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் விதைக்கப்பட்டிருந்தது, தற்போது தளிர் விடுகிறது. இனி விடத்திற்குள் வருவோம்! 
இலங்கையில் வாழ்ந்த சித்தர்களில் உலகம் அறிந்த சித்தராக வலம்வந்தவர் யோகர் சுவாமிகள், சுவாமிகளால் இலங்கை மக்கள் பலரும் இன பேதமின்றி பயன்பெற்றார்கள் என்பது மறுக்க முடியாத ஒன்று. சுவாமிகளது வரலாற்றினை அவரது சீடர்கள், பக்தர்கள் வெளியிட்டுள்ளார்கள். அந்த வகையில் இந்தப்பதிவின் நோக்கம் சுவாமிகளின் வரலாற்றினை பற்றியதல்ல. சுவாமிகளின் சீடர்கள் பலர், ஹவாய் சுப்பிரமணிய சுவாமிகள், சோல்பரிப்பிரவுவின் மகன் சாந்தாசுவாமிகள், மார்க்கண்டு சுவாமிகள், செல்லத்துரை சுவாமிகள் எனப்பலர். எந்த ஒரு சித்தரும் தமது ஆத்ம சித்திக்கு என்ன சாதனைகள் செய்தார்கள் என்பதனை வெளிப்படையாக எடுத்துரை…

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

இதனுடன் தொடர்புடைய மற்றைய பகுதிகள் 

பகுதி - 01
பகுதி - 02
பகுதி - 03
பகுதி - 04
பகுதி - 05
பகுதி - 06
பகுதி - 07

*******************************************************************************************************************************
இந்தப்பகுதியில் ஆயுர்வேதம் சுக்கிலம் எனப்படும் விந்தினைப்பற்றி என்ன கூறுகிறது என்று பார்ப்போம்.
சுக்கில தாதின் உற்பத்தி:
கோடிக்கணக்கான எலும்பு மஞ்ஞை/மற்றும் நரம்புக் கலங்கள் சேர்ந்து சுக்கிலம் உருவாகிறது. ஆயுர்வேத சித்த உடல் தத்துவங்களின் படி உண்ணும் உணவிலிருந்து ஏழுவித உடலில் அடிப்படை தாதுக்கள் உருவாகின்றன. இந்த ஏழும் ரச,ரக்த,மாம்ச,மேதா, அஸ்தி, சுக்ல என்பனவாகும். நாம் உண்ணும் அன்னத்திலிருந்து இந்த தாதுக்கள் ஒன்றிலிருந்து ஒன்றாக உருவாக்கமடைகின்றன. இவற்றில் ஏழாவது தாது சுக்ல தாது எனப்படுவது. இது மற்றைய ஆறுதாதுக்களினதும் சுருக்கி, வலிமைப்படுத்தப்பட்ட தாது. இதனாலேயே இதன் பெறுமதி அதிகம்!
ஆயுர்வேத நூலாரின் படி சுக்கிலம் உடல் பூராகவும் பரவியுள்ளது. (சர்வ சரீர கதஹ)சுக்கிலமானது பாலில் நெய் கலந்திருப்பதுபோலும், கரும்பில் சக்கரைகலந்திருப்பதுபோலும் சுக்கிலம் உடலிற்…

காம ரகசியம் 07: விந்து/சுக்கிலம் என்பதன் பொருளை விளங்கிக்கொள்ளுதல்

எமது பதிவுகளில் நாம் எழுதும் இந்தப்பதிவுகள் காமத்தினை அடக்கி உடல் மன நோய்கள் அடையாமல் எப்படி யோகமாக்கி உயர்ந்த சக்தியாக பயன்படுத்துவது என்ற அறிவினை இந்தத்துறையில் ஆர்வம் கொண்டவர்கள் அறிவதற்காக வேண்டி எழுதுகிறோம். அந்த வகையில் இன்றைய சமூகத்தில் சரியாக படிக்காத சித்த வைத்தியர்களாலும், மேலைத்தேய சிந்தனையாலும் எமது முன்னோர்கள் கூறிய ஒழுக்கங்களை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அதில் சித்தர்கள் கூடிய விந்து, பித்தம் என்ற‌ வார்த்தைகள் தற்கால நவீன மருத்துவக் கருத்துகளுடன் ஒப்பிட்டு பின்னர் அதன் மூலம் சித்தர்பாடல்களின், மருத்துவத்தின் பொருளினை நோக்கும் போது குழம்பி வந்த பெருங்குழப்பமே எஞ்சுகிறது.
உதாரணமாக பித்தம் என்றால் சித்த ஆயுள் வேதத்தில் கருதும் பொருள் வேறு, அதே தற்காலத்தில் கல்லீரலினால் சுரக்கப்பட்டு கொழுப்பினை சமிபாடடைய செய்யும் பித்தம் என்ற பொருளில் மட்டும் நோக்கினால்  ஏற்படும் புரிதல் வேறு.
இப்படி தவறாக விளங்கிக்கொள்ளப்பட்ட பொருள்தான் விந்து/சுக்கிலம் என்ற வார்த்தைகளும். இந்ததவறு தமிழர்களை குழப்பிய புண்ணியம் தமிழ் நாட்டில் இருந்த தனித்தமிழ் புரட்சியாளர்களுக்கும் பங்கிருக்கிறது. எமக்…

காம ரகசியம்: 06 கட்டுப்படுத்தப் பட்ட பிரம்மச்சரியம்

இன்றைய இளைஞர்களில் குறிப்பாக ஆன்மீக நம்பிக்கையுடையவர்கள், யோகம் பழகவேண்டியவர்கள், சாதனை செய்து இறை அருள் பெறவேண்டும் என நினைப்பவர்களுக்கு உள்ள விடைதெரியாத பிரச்சனை "பிரம்மச்சரியம்",மிக அதிகமாக தவறாக விளங்கிகொள்ளப்பட்ட விடயம் பிரம்மச்சாரியம், இதனை விந்தடக்கம் என்று கூறிகிறார்கள், இது முற்றாக தவறான விடயம். பிரம்மத்தினை ஆச்சரிக்க (சார்ந்திருக்க) எதுவித முயற்சியும் இல்லாமல் நடப்பதே விந்தடக்கமே அன்றி வலிந்து விந்து வீணாகிவிடும் என அடக்குவது பிரம்மச்சரியம் ஆகாது. ஆக இந்தப்பதிவில் பிரம்மச்சரியம் பற்றிய ஒரு சில கருத்துக்களைப் பார்ப்போம்.
பிரம்மச்சரியம் என்பது இயல்பாக வரவேண்டியது, வலிந்து அடக்குவதல்ல,அப்படி அடக்கப்பட்ட காம உணர்வு எந்தவிதத்திலும் மனிதனுக்கு பயன்படமுடியாது. ஒரு அழுத்தமாக ஆழ்மனதில் பதிவுற்று வேறு ஒரு வழியில் வெளிப்படவே முயலும். இதனால் உள/மனப்பிரச்சனைகள் அதிகரிக்குமே அன்றி எதுவித ஆன்ம மன முன்னேற்றம் இருக்காது.
சித்தர் இலக்கியத்தில் விந்து விட்டான் நொந்து கெட்டான் என்று உள்ளதே அப்படி என்றால் அது பிழையா என்று கேட்பவர்களுக்கு அதே சித்தர்கள் அடக்ககூடாத உடலின் 14 வேகங்களி ர…

திரிபலாவின் மகிமை - 06

*****************************************************************************************************
இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்

பகுதி 01
பகுதி 02
பகுதி 03
பகுதி 04
பகுதி 05
*****************************************************************************************************

சித்தர்களின் கருத்துப்படி எல்லா நோய்களுக்கும் காரணம் வயிறு, வயிறு சுத்தமாக இருந்தால் நோய்வராது என்பது சித்தர்களின் நோயணுகாவிதிகளில் ஒன்று, சாதாரண நிலையில் சரிவர இயங்கும் வயிறு நோயுற்ற நிலையில் வயிற்றில் சேரும் நச்சுப்பொருட்கள் நோயினை தோற்றுவிக்கும், இதனை ஆமம் என்பார்கள், இந்த ஆமத்தினை ஒவ்வொரு நாளும் வெளியேற்றுபவர்களுக்கு நோய் அண்டாது, அப்படி வந்தாலும் விரைவில் குணமாகி விடும். இந்த ஆமம் தோன்றுவதற்கு காரணம் சரியாக சீரணிக்காத உணவுகள் ஆகும். இந்த ஆமம் வாத, பித்த கபத்தின் சமனிலையினை கெடுக்கும். இதனால் நோய் உண்டாகும். இந்த தோஷ சமனிலை இன்மையினால் உடலில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை வாசகர்கள் எளிதாக விளங்கிக்கொள்ளக்கூடிய வகையில் ஆங்க்கிலத்தில் தருகிறோம்;  Indigestion - அஜீரணம்Flatulence - வாய்வுக்கோளாறுConstipation - மலச்ச…

சித்தர்களின் சர்வரோகங்கள் நீக்கும் புருவமத்திசாதனை முறை விளக்கம்(4448 நோய்களும் குணமாக‌)))))))

இன்று எங்குபார்த்தாலும் நோய், நோயின்றி வாழதலே வாழ்வின் பெரும் சிறப்பு, சித்தர்கள் கூறிய மருத்துவத்திலிருந்து இன்று நாம் பல லட்சம் செலவு செய்யும் ஆங்கில மருத்துவத்திற்கு சென்று விட்டோம். இன்று மருத்துவத்துறை பெரும் வியாபாரத்துறை ஆகிவிட்டது. இன்றைய நிலையில் உலகின் அதிகூடிய வருமானம் தரும் வியாபாரத்துறை மருந்துகளும் ஆயுதங்களும் என ஆய்வுகள் சொல்லிகின்றன. சாதாரணமாக நகர்புறத்தில் சிறு சளி, காய்ச்சம் என்றால் மருந்தெடுக்கச் சென்றால் 5000.00 ரூபாய் இன்றி திரும்பி வர இயலாது. வருமானம், அதற்கு மேற்பட்ட பொருளாதரச் சுமை இத்துடன் நோயும் என்றால் சொல்லவே வேண்டியதில்லை. அதிலிருந்து மீள்வது குதிரைக்கொம்புதான்! இந்த நிலை தமிழ் - இந்திய பாரம்பரியத்தில் வந்தவர்களுக்கு வரக்கூடாதா நிலை! ஏனென்றால் வருமுன் காக்கும் நிலையினையும் சொல்லி, வந்தாலும் எல்லோரும் இலகுவாக குணமாக்கிக் கொள்ளக்கூடிய வழிமுறைகளை சித்தர்கள் வகுத்துவிட்டுத்தான் சென்றிருக்கிறார்கள். ஆனால் அவற்றை படித்து பயன்படுத்துபவர்களோ எவருமிலர்! 
சித்தர்களது மருத்துவம் எளிமையானது, எல்லோருக்கும் பயன்படவேண்டும் என்று சொல்லிவைத்தார்கள், எம்மவர்களுக்குத்தான் எ…

கடையிற் கிடைக்ககூடிய சித்தர்களின் அரிய காயகற்பமுறை - 05

Image
நெல்லிக்காய் பற்றிய அறிவியல் தகவல்கள்

திரிபலாவில் மூன்றாவது சரக்கான நெல்லியின் மகத்துவன் பற்றி இந்தப்பதிவில் பார்ப்போம். 
நெல்லியில் உள்ள இரசாயன இயல்புகள் பின்வருமாறு; The phytochemicals of this plant include hydrolysable tannins (Emblicanin A, Emblicanin B, punigluconin, pedunculagin)[35], flavonoids (Kaempferol 3 O alpha L (6” methyl) rhamnopyranoside, Kaempferol 3 O alpha L (6” ethyl) rhamnopyranoside), alkaloids (Phyllantidine and phyllantine). Gallic acid, ellagic acid, 1‐Ogalloyl‐ beta‐D‐glucose, 3,6‐di‐O‐galloyl‐D‐glucose, chebulinic acid, quercetin, chebulagic acid, corilagin together with isostrictinnin, were isolated from the fruit of Phyllanthus emblica.
A new acylated glucoside was isolated from the methanolic extract of the leaves of P.emblica. Their structures were named as apigenin 7‐O‐(6”‐butyryl‐beta)‐glucopyranoside, along with four known compounds gallic acid, methyl gallate, ,2,3,4,6‐penta‐Ogalloylglucose and luteolin‐4'‐Oneohesperiodoside. 
The seeds of P. emb…