Posts

Showing posts from May, 2014

காயத்ரி கவச பிரயோகம்

Image

காயத்ரி சாதனை பெண்கள் செய்யலாமா?

இன்று காலை எம்மை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நண்பர் ஒருவர் தான் ஒரு சாஸ்திரங்கள் கற்றறிந்த பண்டிதர் ஒருவருடன் உரையாட நேர்ந்ததாகவும் அவர் பெண்கள் காயத்ரி சொல்லவே கூடாது என்று கூறியதாகவும், அதற்கான எமது பதில் என்ன என்பதனையும் கேட்டிருந்தார். 
என்னய்யா கேள்வி! நீங்கள் வணங்கும் காயத்ரி என்ற பிரபஞ்ச சக்தியையே பெண்ணாகத்தானே வணக்குகிரீர்கள்! தெய்வ சாதனையின் அடிப்படையினை விளங்கி கொண்டால் இந்த சந்தேகத்திற்கான விடை கிடைத்துவிடும். தெய்வ சாதனை குறித்த ஒரு ஜாதியினருக்கோ, ஆண் அல்லது பெண் என்ற பாலின வேற்றுமைகோ உட்பட்ட ஒன்று அல்ல! எவர் தேவை என நினைக்கிறாரோ அவர் அதன் பயனை பெறலாம். காயத்ரி என்பது மனித இனம் அனைத்துக்கும் பொதுவானது.
புராண காலத்தில் கார்கீ, மைத்ரேயி, அனுசூயா, அருந்ததி, தேவயானி, குந்தி தேவி, அகல்யா, மண்டோதரி, லோபாமுத்ரா, சகுந்தலா சாவித்திரி முதலான ரிஷி பத்தினிகள் காயத்ரி சாதனையினை பயின்று பலன் பெற்றிருக்கின்றனர்.
எமது குருநாதர் காயத்ரி சித்தர் டாக்டர் முருகேசு சுவாமிகளிடம் பல்லாயிரக்கணக்கான குடும்பத்தினர் கணவன் மனைவியாக தீட்சை பெற்று காயத்ரி ஜெபம் செய்து பலன் பெற்று உள்ளார்கள்.
ஹரித்துவார் …

வீடுகள், கிராமங்கள் தோறும் தமிழில் காயத்ரி உபாசனை

சித்த வித்யா காயத்ரி உபாசனை மண்டலி

எளிய தமிழில் அன்னை பராசக்தியினை உபாசித்து தெய்வ சக்தியினை கவர்ந்து எமது அன்றாட துன்பங்களை தீர்த்து இன்ப வாழ்வினை பெற சித்த வித்யா விஞ்ஞான பிரசுரம் சித்தர்களின், குருமண்டலத்தின் ஆசியுடன் வழிவகை செய்துள்ளது.
இதன் படி ஆர்வம் உள்ள எவரும் காயத்ரி உபாசனையினை கற்று தமது குடும்பத்தவர்களுடனோ, நண்பர்களுடனோ வாரம் ஒரு முறை பூஜையாகவும், சிறிய யாகமாகவும் செய்யலாம்.
தியான ஸ்லோகம், காயத்ரி மந்திரம், யாக மந்திரங்கள் சிலது தவிர்ந்து மற்றைய அனைத்தும் தமிழில் இருக்கும்.
இது தொடர்பான சில அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் பதில்களும் கீழே;
சந்தேகம் தெளிதல்: காயத்ரி என்பது பிராமணர்கள் மட்டும்தானே உபாசிக்க கூடியது? இந்த மாயை சுயநலமிகளால் உருவாக்கப்பட்ட கட்டுக்கதை. பழைய சாஸ்திரங்களை ஆராய்ந்தால் காயத்ரி பிராமணர்களுக்கு மாத்திரமல்ல, ஷத்திரியர், வைசியர் ஆகிய மூவருக்கும் விதிக்கப்பட்டிருக்கிறது, தகுந்த பண்பையும், தெளிந்த அறிவையும்  பெற்றவன் பிராமணன், இது பிறப்பால் வரும் தகுதி அல்ல,  பிராமணத்துவம் ஒருவன் காயத்ரியை உபாசிப்பதாலேயே பெறுகிறான், ஆகவே காயத்ரியினை உபாசிப்பதால் எவரும் பிராமண…