Posts

Showing posts from 2011

சித்தவித்யா பாடங்கள்: 01 - குருகுலவாச ஆரம்பம்

இனி வரும் பதிவுகளில் பதியப்படும் சித்த வித்தை பாடங்களைப் படிப்பதற்கு முன் எப்படியான தன்மையில் இருந்து அவற்றை கற்கவேண்டும் என்பதனை விளங்கிக் கொள்தல் அவசியமாகும். இன்று இவற்றை கற்பிக்கும் முறைகள் எமது பாரம்பரிய கல்விமுறை அல்ல! எமது பாரம்பரிய கல்வி முறை குருகுலவாசமாகும். குருகுல வாசத்தில் மாணவன் எப்படி வித்தையினை கற்றுக்கொள்கிறான் என்பதனை அறிந்து அதன் செயல் முறையினை உணர்ந்தால் மட்டுமே உண்மையில் நாம் இவற்றை கற்றுக் கொள்ளமுடியும்.
பண்டைக்காலத்தில் ஒரு மாணவன் வித்தை கற்கவேண்டுமானால் குருவின் ஆசிரமத்திற்கு செல்லவேண்டும், அங்கு அவருடனேயே வசித்தவண்ணம் அவரது அன்றாட கடமைகளை செய்துகொண்டு அவர் கூறும் உபதேசங்களை மனதில் கிரகித்துக்கொண்டு தனது அன்றாட வேலைகளை தவறவிடாமல் செய்தவண்ணம் பயிற்சிக்க வேண்டும். குருவின் உபதேசம் மிக சுருக்கமாக சூத்திரமாகவே இருக்கும், அவற்றை கிரகித்து பயிற்சித்து தனது அனுபவமாக்கி கொள்வதே மாணவனின் கடமை. இது மனிதனில் சித்தமாகிய ஆழ்மனதை செயல்படுத்தி கற்கும் முறையாகும். இந்த முறையின் அடிப்படைகள்: குரு தனது அனுபவத்தினை சுருக்கமாக மாணவனிற்கு விளக்குவார்.அவன் தனது நாளாந்த கடமைகளினை தவறவி…

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

சித்த வித்யா பாடங்கள்
நோக்கமும் தெளிவும்


கடந்தநான்குஐந்துமாதங்களாகசித்தவித்யாவிஞ்ஞானம்என்றஇந்தவலைப்பூவில்நாம்கற்றசித்தர்களதுவித்தைகள்பற்றிஒருசிலகுறிப்புகளும், தொடர்கட்டுரைகளும்வெளியிட்டுவந்தோம். சிலஅன்பர்கள்சித்தவித்யா, சித்தவித்தைகற்பதற்குஎன்னவழி? எப்படிக் கற்பதுஎன்றகேள்விகளைகேட்டிருந்தனர். இந்தக்கேள்விகளுக்குபதிலாகவேஇந்தப்பதிவும்இனிவரும்பதிவுகளும்அமையப்போகின்றது.

சித்தவித்தைகற்கஎண்ணும்பலரிற்குஉள்ளதடைகளைகீழ்வருமாறுவகைப்படுத்தலாம்எனஎண்ணுகிறேன்.

எனது மனத்தளம் # 01

இன்றைய பதிவு இதுவரை கடந்த நான்கு மாதங்களில், இந்த வலைப்பூவில் எழுதத்தொடக்கியது முதல் நான் பெற்ற அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துகொண்டு அடுத்த ஆண்டு தொடக்கத்திலிருந்து ஒழுங்கமைவான பாதையுடன் செல்வதற்கான‌ எனது மனத்தளத்தில் உதித்த எண்ணங்களை பகிர்வதற்கானதாகும்.
வலைப்பூவில் எழுதுவது என்பது எனக்கு புதிய விடயம் (நான்கு மாதங்களுக்கு முன்னர்) இணையம் எனும் பெரும் வனத்தினுள், பாதை எதுவும் தெரியாமல், முகம் தெரியாத பலருடன் வாத பிரதிவாதங்கள், கருத்து தாக்குதல்கள், இணைய அரசியல், முகமூடி இராஜதந்திரங்கள் என பல  மாய விளையாட்டு உலகினுள் நானும் கருத்து பகிர்வுக்கு என வந்தேன், அல்லது வரவைக்கப்பட்டேன் எனலாம். எல்லாம் நன்மைக்கே என்று எடுத்து கொள்வது என் இயல்பு. அதன்படி எழுத்தத் தொடங்கினேன். என்ன எழுதுவது என எண்ணியபோது எனது அறிவுத்தளத்தில் இருப்பவை இரு விடயங்கள்
சிறுவயதிலிருந்து பாரம்பரியமாக‌ அகஸ்தியமகரிஷியினை ஆதிகுருவாக வணங்குவதாலும்  பின்பு 16 வயதில் குரு கிடைக்கப்பட்டதால் சித்தர்களது யோக, ஞான, ஆன்ம வித்தைகள் குருகுலவாசமாக முறையாக கற்க்கும் சந்தர்ப்பமும் குருவருளால் கிடைக்கப்பெற்றேன். பின்னர் பல்கலைக்கழக பட…