குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, May 15, 2019

ஸ்ரீ காயத்ரி சித்தரின் வழிகாட்டல் - 08

முந்தைய பகுதிகள்:
பகுதி - 01
பகுதி - 02 
பகுதி - 03 
பகுதி - 04 
பகுதி - 05 
பகுதி - 06 
பகுதி - 07

*******************************************

ஆசிரமத்தை அண்டி ஒரு சேரிப்புறம் இருந்தது, அங்குள்ள சில இளைஞர்கள் ஆசிரமத்தில் வேலை செய்துவந்தார்கள். தற்போது கோயில் கட்டி ஐயர் பூசைக்கு இருத்தப்பட்டதால் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி மூலஸ்தானத்திற்குள் எவரும் அனுமதிக்கப்படுவதில்லை. அதற்கு முன் சுவாமிகள் இளம் வயதில் அவரே பூஜை செய்யும் காலத்தில் அனைவரும் தேவியை தொட்டு வணங்கும் சூழல் இருந்தது. அப்போது இந்த சேரிப்புறத்து இளைஞ்சர்கள் தான் தேவியை கழுவி அபிஷேகம் செய்து சுத்தம் செய்வார்கள் என்று கூறியிருந்தார்கள். அடிப்படையில் சுவாமிகள் இறை சாதனையில் எந்த ஏற்றத்தாழ்வும் பார்ப்பதில்லை. 

இப்படி அந்த சேரியில் இருக்கும் ஒரு இளைஞன் சாமியிடன் வருவான். சாமியுடன் ஒருவித உரிமையுடனும், அன்புடனும் உரையாடுவான். அவனது பேச்சில் ஒருவித மிடுக்கு இருக்கும். மற்றவர்களுடன் சற்று திமிராகத்தான் பேசுவான். அவனைப் பற்றி ஒரு வதந்தி உண்டு. மாந்திரீகம் தெரிந்தவன், ஒரு முறை சிறு குழந்தையை மலையில் கொண்டு சென்று பலி இடப்பார்த்தவன், சுருக்கமாக சற்று மாந்திரீகம் தெரிந்த பயங்கரமானவன் என்பது அவனைப் பற்றிய பொதுவான பேச்சு. 

அடிக்கடி ஒரு சில நாட்களில் தனியாக வந்து கோயில் வாசலில் அமர்ந்து தானாக உரையாடிக்கொண்டு இருப்பான். அவனைப் பைத்தியக்காரன் என்றுதான் எல்லோரும் கருதினார்கள். ஆனால் பகலில் வேலை செய்யும் போது சாதாரணமாகத்தான் இருப்பான். 

தற்போது சாமி போய்விட்டதால் நான் ஆசிரமத்தில் நான் தனியாகவே நிற்க வேண்டிய சூழல். இரவு உணவு முடிந்த பின்னர் அந்த இளைஞன் வந்து விடுவான். கோயில் வாசலில் அடந்த குளிரில் கம்பளியைப் போர்த்திக்கொண்டு வானத்தை வெறித்துப்பார்த்துக்கொண்டு இருப்பான். ஆரம்ப நாட்களில் அவன் இருப்பதை  பார்த்து விட்டு நான் ஒன்றும் கூறாமல் உறங்கச் சென்று விடுவேன். 

ஒரு நாள் ஆசிரமத்திற்குள் இருக்க அவனைச் சென்று பார்க்க வேண்டும் என்று எண்ணம் மனதில் தூண்டுகிறது.  சிறிது நேரம் சிந்தித்த பின்னர் சரி என்று அவனைப் பார்க்கச் சென்றேன். என்னைப் பார்த்து விட்டு சிரித்தான். நானும் எப்படி இருக்கிறீங்க என்று கூறிவிட்டு அவனுக்கு எதிரில் அமர்ந்தேன். 

சற்று நேரத்தில் அவன் எனது சாதனை பற்றிக் கேட்க ஆரம்பித்தான். எனக்கு அந்தக் கேள்வி பிடிக்கவில்லை, உள்ளே இவன் யார் சாதனையைப் பற்றிக் கேட்பது என்ற எரிச்சல்.  எனினும் நான் மீண்டும் நீ தியானம் செய்வாயா என்றேன், அதற்கு அவன் சிரித்துக்கொண்டு அமைதியாக மீண்டும் வானத்தை வெறித்துப்பார்த்துக்கொண்டு இருந்தான். 

சற்று நேரம் அப்படி இருந்து விட்டு நான் வந்து விட்டேன். பிறகு அவன் எவ்வளவு நேரம் இருந்தான் என்று தெரியவில்லை. இப்படி இரண்டு நாட்கள் சென்றது. 

அடுத்த நாள் நான் சென்று உட்கார, கண்ணை மூடி அமர்ந்து விட்டு சற்று உடலை உலுக்கிக் கொண்டு 

நீங்கள் எதற்காக இங்கு வந்திருக்கிறீங்க? என்றான்

எனக்கு அந்தக்கேள்விக்கு பதில் சொல்ல விருப்பம் இல்லை என்றாலும் சாமிக்கு சேவை செய்ய என்றேன். கண்ணைத்திறந்து 

உங்களுக்கு உங்கள் குலகுருவைத் தெரியுமா? என்றான். 

ஆம், அகத்திய மகரிஷி என்றேன். 

அவன் சிரித்து விட்டு மீண்டும் கண்களை மூடி தியானத்தில் அமர்ந்து விட்டான். சற்று நேரத்தில் உங்களுடைய முற்பிறப்புடன் தொடர்புடைய கோயில் ஒன்று உங்கள் குடும்பத்திற்கு சொந்தமானது இருக்கிறதா? என்று கண்களை மூடிக்கோண்டே கேட்டான். 

நான் தெரியவில்லை என்றேன். 

பிறகு கண்களை மூடிக்கொண்டு, கடற்கரை அதிலிருந்து சிறிது தூரத்தில் ஒரு பிள்ளையார் கோவில், கோவிலிற்கு நேரே அரசமரம், அதற்கு பின்னால் நீர் தங்கும் கேணி, கருவறைக்கு வலது புறம் கிணறு, கிணற்றில் இருந்து சற்றுத்தூரத்தில் ஒரு சித்தர் சமாதியில் இருக்கிறார். இது உங்களுடைய பூர்வ ஜென்மத்துடன் தொடர்புடைய இடம். உங்கள் குடும்பத்தவர்களுக்கு சொந்தமான கோவில் என்று கூறிவிட்டு அமைதியாகிவிட்டான். 

இந்த தொடர்புதான் உங்களை சாமியுடன் கொண்டு வந்து வைத்துள்ளது, நீங்கள் யார் என்பது அவருக்குத்தெரியும் அதனால்தான் இவ்வளவு நெருக்கமாக வைத்திருக்கிறார், ஆனால் உங்களுக்கு நீங்கள் யார் என்று தெரிய நீண்டகாலம் பிடிக்கும் என்றான். 

அவன் சொல்லுவது குறி சொல்லுவதுபோலவும் சற்று உபதேசம் போலவும் இருக்க எனக்கு சற்று இவன் அதிமேதாவித்தனமாக பேசுகிறான் என்று உள்ளூர கோபம் வர நான் வருகிறேன் என்று சொல்ல அவனும் பெரிய ஞானிபோல் எனது உள் மனதில் அவனைப்பற்றி என்ன நினைக்கிறேன் என்பது தெரிந்தது போல் சிரித்துக்கொண்டு பெரிய மகான் மாதிரி கைகளை தூக்கி என்னை ஆசீர்திப்பது போல் காட்டினான். 

நானும் வந்து விட்டேன். அதன் பிறகு அவனை அப்படி சென்று சந்திப்பதில்லை என்று முடிவு செய்து கொண்டு உறங்கச் சென்றுவிட்டேன். 

ஆனால் அவன் சொன்ன இடமும், கோவிலும், சமாதியும் உண்மையாகியது. எனது அப்பா எனக்குச் சொல்லாத எமது குடும்பத்தின் முன்னோர்கள் பற்றிய கதையின் ஒரு பாகத்தை அவன் சொல்லியிருந்தான். அடுத்த எட்டு ஒன்பது மாதங்களில் அந்த இடத்திற்கு நான் அழைத்துச் செல்லப்பட்டேன்! 

தொடரும்.... 

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...