அமைச்சர் மனோகணேசனின் பேச்சிற்கு எமது கருத்து:
தேசம் - state என்பதை அமைக்க விரும்பினால் முதலில் நாம் சிறுவட்டங்களில் இருந்து வெளி வரவேண்டும். மதம் என்பது ஒருவன் குறித்த குழு தமது அக ஆன்ம முன்னேற்றத்திற்காக அமைத்துக் கொண்டது. அதை மையமாகக் கொண்டு தேசத்தை உருவாக்கினால் அது மற்றைய மதத்தை சிறுமைப்படுத்தும், தேசம் நாட்டின் வளத்தினை மேம்படுத்தி, பொருளாதாரத்தை விருத்தி செய்து குடிகள் அனைவரினதும் நல் வாழ்க்கைக்கு தேவையானதைச் செய்வதற்கு உரிய நிறுவனம். இலங்கையின் சிறுபான்மையினர் எப்போதும் அந்நிய சக்திகளுக்கு ஆட்படும் ஒரு குழுவாகவே இருக்கிறார்கள் என்பதில் இது ஒரு சாராரிற்கு மட்டும் உரிய தேசம் என்ற எண்ணம் சிறுபான்மையினர் ஆழ்மனதிலும் இருப்பதால் தான் என்பதை சிங்களத் தலைமைகள் புரியவேண்டும். இப்படி இலங்கை என்ற தேசம் உருவாக்கப்பட்டிருக்கும் மக்கள் அனைவரது மனதையும் வெல்லாமல், நம்பிக்கையைக் கட்டியெழுப்பாமல் வெறுமனே மேலோட்டாமாக வார்த்தைகளில் சொல்லுவதால் பிரச்சனை தீரப்போவதில்லை. உதாரணம் சிங்கப்பூர், லீ குவான் இன் மந்திரம் " சிங்கப்பூர் சீனர்களுக்கோ, தமிழர்களுக்கோ, மலேயர்களுக்கோ சொந்தமானது அல்ல, இங்கு வரும் எல்லோருக்கும் சொந்தமானது", ஒரு தேசத்தை மதத்தால் வரையறுத்தால் அது மக்களின் மனதைச் சுருங்கச் செய்யும்!
ஆகவே இலங்கையர் என்ற உணர்வு முதல், மொழி இரண்டாவது, மதம் மூன்றாவது என்ற ஒழுங்கில் அமையவேண்டும்! அனைவரும் நாட்டின் வளத்தினைப்பேணவும், பொருளாதாரத்தை முன்னேற்றவும் ஒன்றுபடுவோம், மொழியை, மதத்தை கடைப்பிடிப்பதில் தனித்துவத்தை பேணுவோம்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.