Posts

Showing posts from June, 2015

ஆத்ம ஞான யோக சபா தலைவருடனான கலந்துரையாடல்.

Image
***************************************************************** ஆத்ம யோக ஞான சபை அகத்தியனின் மூல சபை என்று ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரரால் உறுதியளிக்கப்பட்ட சபை. எழுபது வருடங்களுக்கு முன்னர் சென்னையில் குருநாதர் ஸ்ரீ கண்ணைய யோகியரால் ஆரம்பிக்கப்பட்டது. இதன் நோக்கம் அகத்தியர் ஆணையின் படி இறை ஆர்வம் உள்ளவர்கள் எதுவித வியாபர நோக்கமும் இன்றி, இறை சாதனைகளை குருமுகமாக கற்று முன்னேற வேண்டும் என்பது. சபை என்பது குருவை பிரதானமாக கொண்டது.அந்தக்காலத்தில் கண்ணையயோகீஸ்வரர் குருவாகவும், தலைவராகவும் இருந்து அகத்திய மகரிஷியால் வழிகாட்டப்பட்ட இறை சாதனையில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு சித்தி மனிதன் பயிற்சி, பரிணாம துரித பயிற்சி, காயத்ரி குப்த விஞ்ஞானம், சித்த யோக பயிற்சிப்பாடம், என பல்வேறு ஆத்ம, யோக, ஞான பயிற்சியுடன் கற்பிக்கப்பட்டு உயர்ந்த ஆன்மீக நிலை அடைந்தனர். இன்று உலகளாவிய யோக மையங்களை நடாத்திவரும் குருமார் பலரும் ஸ்ரீ கண்ணைய யோகியாரிடம் பாடம் பயின்றவர்கள், சபையின் சிறப்பியல்பு நிறுவன மயமாக்கல் இல்லை, கண்ணைய யோகியாரது காலத்தில் இலங்கையில் அவரது பிரதான முதன்மை சீடர்களில் ஒருவரான ஸ்ரீ காயத்ரி சித்தர் முருகே…

ஆட்ட கோட்பாடும் ஜோதிடமும் (Game theory & astrology)

ஆட்ட கோட்பாடும் ஜோதிடமும் (Game theory & astrology)  ***************************************************************************** ஆட்ட கோட்பாடு (விதி என்ற பிரயோகம் law என்று பொருள் படுமாதலால் இங்கு கோட்பாடு என்ற பதம் பாவிக்கப்படுகிறது) என்பது எல்லா அறிவியல் விதிகளைப்போலவும் தனது எல்லைகளை கொண்டுள்ளது. சினிமாக்களில் ஆட்ட விதி பற்றி படம் எடுக்கும்போது அது தெரிந்த கதாநாயகன் எப்போதும் வெற்றி பெறுவான் என்ற மயக்கத்தை தருகிறார்கள். ஆனால் இந்த கோட்பாடு அடிப்படையில் வெறுமனே ஒரு சுருக்க புரிதலை (abstract understanding) தருவதாகும். ஒரு சந்தர்ப்பத்தை ஆட்ட கோட்பாட்டின் அடிப்படையில் மாதிரியுருவாக்கம் செய்யும்போது அது அந்த சந்தர்ப்பம் பற்றிய சுருக்க புரிதலை தருமே அன்றி நூறு சதவீதம் யதார்த்த உண்மையினை பிரதிபலிக்காது. யதார்த்தத்தினை பிரதிபலிக்க மாதிரி உருவாக்கம் செய்பவரது அறிவின் ஆய்வு திறனும் அனுபவமும் முக்கியமானவை. முதல் நிலையில் இது குறித்த சந்தர்பத்தின் தர்க்க ரீதியான தொடர்பினை விளங்குவதற்கு உதவும். இந்த மாதிரியுருவாக்கம் அது உள்வாங்க கூடிய அனைத்துக் காரணிகளையும் உள்வாங்காமல் அதன் யதார்த்தம் எப்…