Posts

Showing posts from March, 2016

ஆசீர்வாத மந்திரங்கள்

குருநாதர் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர் தனது ஸௌபாக்யா மந்திர சாதனா ஒலி நாடாவில் மூன்று ஆசீர்வாத மந்திரங்களை கூறியுள்ளார். இந்த மூன்று மந்திரங்களும் அனைவருக்கும் மிகுந்த பலனை அளிக்க கூடிய மந்திரங்களாகும். 
அவற்றை உங்களுக்கு பயன் படுமாறு இங்கு தந்துள்ளோம். 
தீர்த்த ஆசீர்வாதம்: செப்பு பாத்திரத்தில் நீரை வைத்து குறித்த மந்திரங்களை உச்சரித்து பின்னர் தெளித்து கொள்ளலாம். 
அக்ஷதை ஆசீர்வாதம்: பூஜையறையில்  அக்ஷதையினை செய்து வைத்து குறித்த மந்திரங்களை உச்சரித்து பின்னர் தலையில் தூவலாம். 
குங்கும ஆசீர்வாதம்: கையில் குங்குமத்தை எடுத்து வைத்துக்கொண்டு குறித்த மந்திரங்களை உச்சரித்து நெற்றியில் இட்டுக்கொள்ள வேண்டும். 
தீர்த்தஆசீர்வாதம் மந்திர புஷ்பம்
ஓம் யோபாம் புஷ்பம் வேத/ புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான் பவதி/ சந்த்ரமா வா அபாம் புஷ்பம்/புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான் பவதி ய ஏவம் வேத(1)
யாரொருவன் நீரின் மலரை அறிகிறானோ, அவன் மலர்களை உடையவனாக, மிருகங்களை உடையவனாக, சந்ததிகளை உடையவனாக ஆகிறான். நிலவே நீரின் மலர். யார்இவ்வாறு அறிகிறானோ அவன் சந்ததிகளை உடையவனாக, மிருகங்களை உடையவனாக ஆகிறான். (1)
யோபாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ அக்ன…

காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகளின் உபதேசம்

Image
இந்த  பதிவு  நாம்  குருனாதருடன்  இருந்த  காலத்தில் அவர் ஆற்றிய உபதேசத்தை  குறிப்பெடுத்து  வைத்திருந்தோம்.  தற்போது  கண்ணில் பட்டது. ஆர்வம் உள்ள இறை சாதகர்களுக்கு  உபயோகப்படும் என்று பதிவிடுகிறோம். 
ஸ்ரீ ஸக்தி சுமனன்.  ********************************************************************



















அகத்தியர் குருமந்திர தீட்சையும் அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் நூலும்.

சித்தர் மார்க்கத்தில் முன்னேற விரும்பும் மாணவன் பெறவேண்டியது முப்பத்தியிரண்டு என்று குருநாதர் கூறியுள்ளார். தீக்ஷை என்பது என்ன என்று இந்த பதிவில்கூறியுள்ளோம். 
சித்தர் மார்க்க முப்பத்தியிரண்டு தீட்சைகளின் விபரம் வருமாறு:  அகத்தியர் குருமந்திர தீக்ஷை சாபநிவர்த்தி தீக்ஷை சுப்பிரமணியர் குருமந்திர தீக்ஷை வைரவர் தீக்ஷை மூலாதார தீக்ஷை சுவாதிட்டான தீக்ஷை மணிப்பூரக  தீக்ஷை அனாகத தீக்ஷை விசுத்தி தீக்ஷை ஆக்ஞா தீக்ஷை சிவ தீக்ஷை பதினொன்று சக்தி தீக்ஷை பதினொன்று  எல்லா தீட்சைகளுக்கும் முதல் தீட்சை அகத்தியர் குருமந்திர தீக்ஷை, இந்த தீக்ஷையே மற்றைய எல்லா தீட்சைகளையும் தரும் குரு தீக்ஷையாகும். இந்த தீக்ஷை மந்திரம் அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் நூலில் அனைவரும் ஜெபிக்கும் வண்ணம் தரப்பட்டுள்ளது. 
அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் நூல் பற்றி விரிவாக அறிந்துகொள்வதற்கு  இந்த Facebookபக்கத்தை பார்வையிடவும். 

அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் நூல் வெளியாகிவிட்டது

Image
அன்பர்களே,



இரண்டாண்டு கால உழைப்பின் பின்னர் அகத்தியர் ஞானம் முப்பது நூலிற்கு எழுதிய சித்தவித்யா விளக்கவுரையான  அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் சென்னையில் ப்ரணவ் ஸ்வஸ்த ஸ்தான வெளியீடாக வெளியாகிறது.



இதனை நல்ல முறையில் அழகுற நூலாக வெளிப்படுத்துவதில் Dr. B. P. ப்ரணவ் (http://www.pranavsevas.com) அவர்களில்  அயராத உழைப்பும், Vector Vibe நிறுவன இயக்குனர் திரு. ச. கார்த்திகேயன் அவர்களதும் அவருடைய குழு உறுப்பினர்களும் முக்கிய பங்கு உள்ளது!

மேலும் நூல் உருவாக்கத்தில் சேர்மன்ராஜ், விமாலாதித்தன் ஆகியோரது உதவி பெரும் பங்காற்றியுள்ளது. 
இந்த நூலின் அட்டைப்படம், உள்ளே ஒவ்வொரு பாடலுக்கும் வரையப்பட்டுள்ள  படங்களும் நூலை வாசித்து முடித்தவுடன்  சித்த ரகசியங்களை மனதில் பதிவிக்கும் வகையில் நூல் அமைக்கப்பட்டுள்ளது. 
நூலை எழுதி முடித்து வெளியாகும் ஆறு மாத காலப்பகுதிகளுக்குள் எனது குருஜி ஸ்ரீ அம்ருதானந்த நாதர் தனது ஸ்தூல உடலை உகுத்து விட்டார். அனேகமாக  அவர் உடலுடன் இருந்து இறுதியாக  ஆசீர்வதித்தது எமது நூலாக இருக்கும் சிறப்பு இந்த  நூலுக்கு உண்டு. அவரது சக்தி ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா  அம்மையார் ஆசி கூறியுள்ளார். இ…