குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, May 19, 2019

பேஸ்புக் பொதுவுடமை கீதாசாரம்

நண்பர் Jo Simhaa அவர்கள் தனது எழுத்துக்களை பிரதி செய்து தனது எழுத்தாக பதியும் ஒருவரைப் பற்றி கருத்திட்டு இருந்தார்! 
பேஸ்புக் என்பது பொதுவுடமை வாதத்தை மக்கள் மனதில் திணித்து மக்களை அந்த தத்துவத்தை ஏற்றுக் கொள்வதற்காகவும் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் கீதாசாரத்தை அனுபவ உண்மை எனப் புரியவைக்கவும் உருவாக்கப்பட்ட ஒரு நுணுக்கமாக பொறி முறை என்பதும் உங்களில் எத்தனை பேரிற்கு தெரியும்! 
பொதுவுடமைக் கொள்கையின் அடிப்படை, பொருளாதார மற்றும் பௌதிக உற்பத்திகளை பொதுமைச் சமூகத்தின் சகல அங்கத்தவர்களிடையும் பகிர வேண்டும் என்றும் இதனால், ஒவ்வொருவரின் உழைப்பின் மூலமும் கிடைக்கும் பலனை சமமாகப் பகிர்ந்துக் கொள்ளலாம் என்பதாகும். 
ஒரு எழுத்தாளன், ஆய்வாளன் தனது உழைப்பான எழுத்தை பேஸ்புக்கில் பொதுவில் Public option இல் பதிவது பொதுவுடமைத் தத்துவத்தின் முதல் படி! 
பொதுவுடமைத் தத்துவத்தின் இரண்டாவது படியான ஒவ்வொருவரின் உழைப்பின் மூலமும் கிடைக்கும் பலனை சமமாகப் பகிர்ந்து கொள்வதை செய்வதற்கு இயல்பாகவே பலர் இருக்கிறார்கள். ஆனால் உழைப்பின் மூலம் கிடைக்கும் பலனை சமமாக பகிரவேண்டும் என்பது நடக்காது, Like உம் பாராட்டு comment களும் சமமாக பகிரப்படுவதில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்க விஷயம்!    
அவர்கள் உங்கள் துறை சார்ந்த எந்த அறிவும், உழைப்பும் செய்ய மாட்டார்கள், ஏதாவது ஒரு பேஸ்புக் பக்கமோ, ப்ளாக்கர் வலைத்தளமோ வைத்திருப்பார்கள். நீங்கள் பதிந்து அடுத்த கணம் அதைப் பிரதி செய்து தமது தளத்தில் போட்டு விடுவார்கள்! பேஸ்புக் எழுதியவரின் எழுத்தை அப்படியே share செய்யும் நவீன வசதியைத் தந்தாலும், அவர்கள் Copy & Paste என்ற கணனியின் பழைய option ஐப் பயன்படுத்தும் பழமை வாதிகள்! 
இற்றைக்கு எட்டு - ஒன்பது வருடங்களுக்கு முன்னர் நாம் எழுதிக் கொண்டிருந்த போது இன்னொரு பக்கத்தில் எனது கட்டுரைகளைப் பிரதி எடுத்து தனது பக்கத்தில் ஒருவர் தானே எழுதியதாக பதிவிட்டுக் கொண்டுக் இருந்தார். 
இன்னொருவர் எந்தக்கிலேசமும் இல்லாமல் நான் எனது தாத்தாவைப் பற்றி எழுதினால் அதையும் பிரதி செய்து தனது தாத்தா என்றது போல் பிரதியிடுவார். 
இன்னொருவர் சற்றுப் புத்திசாலி, கட்டுரையை எடுத்து அதை தனக்கு தனது தாத்தா, குரு உபதேசித்ததாக customize செய்து ஆனால் எவரோ எழுதியதை தானே எழுதியதாக பதிவிடுவார்!
ஒரு மிகப் பிரபலமான பக்தி தளத்தில் நான் தமிழில் மொழிப் பெயர்த்த ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாம உரையை பிரதியிட்டு அதற்கு நூற்றுக்கணக்கானவர்கள் "அருமை ஐயா" என்று கூற அதை மகிழ்வுடன் " நன்றி ஐயா" என்று தானே எழுதியதாக ஏற்றுக் கொண்டு மகிழ்பவரைப் பார்த்து நான் மன மகிழ்ந்து கொண்டு இருந்தேன்! அவரிடம் டாக்டர் ருத்திரன் இது யார் எழுதியது என்று கேட்டதற்கு நேரே பதில் சொல்ல விருப்பமில்லாமல் சுற்றி மழுப்பி பதில் சொல்லியிருந்தார்! ஏனென்றால் டாக்டர் ருத்திரன் ஆரம்பக் காலத்திலிருந்து நான் எழுதிய உரைகளைப் படித்து வந்திருக்கிறார். 
முதல் முதலில் இதை பிரதி செய்பவரைப் பார்த்த போது ஒருவித மனசஞ்சலம் அடைந்த நான் சிலகாலத்திற்கு பிறகு அவற்றை இரசிக்கும் ஒருவனாக மாறி இருந்தேன்! 
ஏனென்றால் உலகத்தின் இயற்கையை பேஸ்புக் புரியவைத்திருந்தது!
எதை நீ கொண்டுவந்தாய் அதை இழப்பதற்கு
எதை நீ படைத்தாய் அது வீணாவதற்கு
எதை நீ எடுத்தாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது
எதை கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது
எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள் அது வெறோருவருடையதாகிறது
இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமும்" 
என பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறியதை பேஸ்புக்கில் சொந்தமாக எழுதுகிறோம் என்று நினைப்பவர்களுக்கு புரிய வைக்க, ஞானத்தை தர இறைவனால் உருவாக்கப்பட்ட தூதர்கள் தான் இந்த  பேஸ்புக் Copy & Paste எழுத்தாளர்கள்! 
   
ஆகவே எவராவது எமது எழுத்துக்களை பிரதி செய்து தாமே எழுதியதாக பிரதியிடுகிறார்கள் என்றால் நாத்திகர்களும், கம்யூனிஸ்டுகளும் அவரை பொதுவுடமைவாதத்தின் தூதர்களாகவும்,
ஆத்திகர்கள், பக்தர்கள் அவர்களை பகவான் ஸ்ரீ கிருஷ்ணனின் கீதாசாரத்தை அனுபவமாக உணர்த்த வந்த தூதர்களாகவும் கருதி மதிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்!    
ஆகவே பேஸ்புக்கில் எழுதுவதாக இருந்தால் நீங்கள் ஒரு பொதுவுடமைவாதியாகவோ அல்லது கீதாசாரம் புரிந்த ஒருவராகவோ இருப்பது அவசியம்!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...