Posts

Showing posts from February, 2012

ஆன்மீகமும் மதங்களும்

இன்றையகாலகட்டத்தில் மதங்கள் என்பன ஆன்மீகத்துடன் கலக்கபட்டு பெரும் குழப்பத்தில் மக்களை ஆழ்த்தி வைத்திருக்கின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை.இந்த சிறுபதிவில் மதம், ஆன்மீகம் என்பவற்றுக்கிடையிலான வேற்றுமைகள் எவை என்பது பற்றிப் பார்ப்போம். மதம் அல்லது சமயம் என்படுவது இரு கூறுகள் உடையதாகவே காணப்படுகிறது.  ஒன்று உண்மையான ஆன்மீகம் மற்றது சமயம் என்ற பொதுக்கட்டமைப்பு. 
உண்மையான ஆன்மீகம் என்பது மனிதனை தான் யார் என்பதனை அறிந்து தனக்கு மேலுள்ள ஒரு சக்தியுடன் ஒன்ற செய்யும் தனிமனித செயற்பாடு. இந்த செயற்பாடுகளுக்குள் அடங்கும் விடயங்கள் மெதுவாக குழுமக்கட்டமைப்பிற்குள் வரும் போது சமயம் தோற்றமாகிறது. எப்படியென்றால் ஒருவன் தான் அனுபவித்த இன்பத்தினை, உணர்வினை பகிரங்க படுத்த முனையும் போது அது அவரை சூழ உள்ள பலரிற்கு வியாக்கியானப்படுத்தப்படுகிறது. பின்னர் அதனை ஒழுங்காக நடைமுறைப்படுத்த ஒரு அங்கீகரிக்கப்பட்ட குழு உருவாகிறது, அவர்களே அதற்கு அதிகாரமுடையவர்களாகின்றனர், பின்னர் அவர் மட்டுமே அதிகாரம் உடையவர்களாகின்றனர், இது ஒரு அதிகார அலகாக, அரசியல் அலகாக தோற்றம் பெறுகிறது. இந்த மாயையில் சமூகம் சிக்கி உண்மை ஆன்மீகத்…

சித்த வித்யா பாடங்கள் 13 (அ): எண்ண‌ங்க‌ளின் இய‌க்க‌விய‌ல் - எண்ணங்களின் அடிப்படை

சதாரண மனம் உருவாக்கும் எண்ணம் ஒளியைவிட வேகம் குறைந்தது, பலமான மனம் உருவாக்கும் எண்ணங்கள் ஒளீயை விட வேகமானது. இதனாலேயே ஒளியினை தியானிப்பது யோகத்தின் தியானங்களில் உள்ள ஒரு அமிசமாகும். ஒளியினை தியானிக்கும் மனம் ஒளியளவு வேகமுடையதாக பரிவுற்று எண்ணங்க்களை உருவாக்க கூடியது. இது மந்திர சக்தியுடன் கலக்கும் போது அதைவிட பலமடங்கு சக்தியுடையதாகிறது. 
உருவாக்கப்படும் எண்ணங்கள் யாவும் ஆகாயத்தில் பதியப்படுகிறது, எந்த எண்ணமும் அழிவதில்லை, அதன் வலிமைக்கு ஏற்றவாறு செயல் நிலைக்கு வருகிறது. அதனை வலிமைப்படுத்தும் செயல் மனித உடலில் உள்ள மனிதர்களால் தீர்மானிக்கப்படுகிறது, எப்படியெனில் அதனை மீண்டும் மீண்டும் சிந்தித்து அதற்கு உரமூட்டுவதால் நடைபெறும். உதாரணமாக 2012 இல் உலகம் அழியும் என எண்ணுபவர்களும் உள்ளனர், இல்லையென்பவர்களும் உள்ளனர், இவற்றில் எந்த எண்ணத்திற்கு வலிமை கூடுகிறதே அது நடைபெறும், இதுவே எமது நாளாந்த வாழ்விலிருந்து பிரபஞ்ச இயக்கம் வரைக்கு உள்ள அடிப்படையாகும். 
ஒவ்வொரு எண்ணமும் குறித்த வலிமையும், அதிர்வும் உடையது. பரிமாற்றக்கூடியது. 
ஒவ்வொரு மனிதனுக்குமுரிய எண்ண உலகம் அவனுக்கே உரியது, அதன்படியே அவன…

யோக சாதனையின் நோக்கம், தெளிவு, பாதை

இந்த கட்டுரையில் யோக சாதனையின் நோக்கம், தெளிவு, பாதை என்பது பற்றிநாம் எமது சாதனையிலும்,அனுபவத்திலும்,தெளிவிலும் கண்டவாறு விளக்குவதே நோக்கம். இந்த கட்டுரையின் முடிவில் நீங்கள் யோகம் ஏன் பயிலவேண்டும்? ஏப்படி பயிலவேண்டும்? அதற்கு நீங்கள் அறிந்து வைத்திருக்க வேண்டிய அடிப்படை அறிவு என்ன என்பது பற்றி ஒரு தெளிவும் புரிந்துணர்வும் ஏற்படும் என்று நம்புகிறோம்.
இன்று யோக சாதனை என்றாலோ, யோகா பழகுகிறேன் என்றாலோ ஆசனம் செய்வதையே பெரும்பாலும் குறிக்கிறார்கள், ஒரு சிலர் பிராணாயாம பயிற்சியினையும் சேர்த்து யோகா எனப் பொருள் கொள்கிறார்கள். அதாவது ஆசனம் செய்வதில் தொடங்கி, பிராணாயாம பயிற்சியுடன் குண்டலினி தியானம் வரைக்கும் செய்து வருகிறர்கள், இந்த நோக்கம் தான் என்ன? ஏன் இவற்றை செய்ய வேண்டும்? இப்படி செய்வதுதான் யோகமா?
பலரும் நினைப்பதனைப்போல் ஆசனம், பிராணாயமம் தொடங்கித்தான் யோக சாதனை செய்வதானால் இராமகிருஷ்ண பரமஹம்சர், ரமண மகரிஷி போன்றோர் அவ்வாறு செய்யவில்லையே?
பலர் யோக சாதனை செய்யத்தொடங்கி ஒரு சில படிகளுடன் மேலே செல்லாது காலம் பூராகவும் ஆசனப்பயிற்சியினையும் , பிராணாயாமத்தினையும் செய்தவண்ணம் சிறந்த உடல் ஆரோக்கி…

சித்த வித்யா பாடங்கள் 12:மனித காந்த சக்தியினை பிரயோகித்து பயன் பெறும் முறைகள்

சென்ற பதிவுகளில் மனித காந்த சக்தி பற்றிய விளக்கங்களும் அவற்றை வளர்ச்சியுற செய்யும் முறைகள் பற்றியும் கூறியிருந்தோம். இந்த பதிவில் அதனை நாளாந்த வாழ்க்கையில் எப்படி இவை பயன்படுத்த படுகிறது என்பதானியா பார்போம்.
மனித காந்த சக்தி மனிதனது உடலை சூழ முட்டை வடிவில் காணப்படுகிறது. இதனையே ஆரா (Aura) என்பார்கள். இந்த காந்த சக்தி உடலில் இருந்து அதிகம் வெளியாகும் பாகங்கள் கண்கள், கைகள், கால்கள் ஆகும். இதை அடிப்படையாக வைத்தே கண்திருஷ்டி, நட்பிற்கு கை குலுக்குதல், தீமை செய்ய காலடி மண் எடுத்தல் என்பன வழக்காகின. 
இதே அடிப்படையில் பிராண மன ஏகாக்கிர தன்மை பெற்றவர்கள் பழம், நீர், விபூதி போன்றவற்றில் தமக்கு தேவையான காந்த சக்தியினை பதிப்பித்து பயன்படுத்தி வரலாம். 
கண்திருஷ்டி கழித்தல் என்பது எம்மை சூழ உள்ள தீய காந்த சக்தியினை அகற்றும் செயல் முறைதான்.
இதனை செய்வதற்கு மனம் எகாகிரம் அடைந்த நிலையும் பிராண சக்தியும் அவசியம். 
இவற்றை மேலும் விரிவாக அறிந்துகொள்ள கேள்வி பதில் மூலம் தொடரலாம் என எண்ணி இந்த கட்டுரையினை முடிக்கிறோம். 
சத்குரு பாதம் போற்றி! 

சித்த வித்யா பாடங்கள்: 11 மனித காந்தசக்தியினை வளர்ச்சியுறச் செய்யும் பயிற்சிகள்

சென்ற பாடத்தில மனித கந்த சக்தியினை வளர்ச்சியுற செய்யும் அடிப்படைகளை விளக்கினோம், அதனை படித்த சில நண்பர்கள் அவற்றை தெளிவான பயிற்சி முறையுடன் விளக்கினால் நன்றாக இருக்கும் என கூறியிருந்தனர். அவர்களது விருப்பபடி அந்த முறைகளை தொகுத்து தந்துள்ளோம்.
மனித காந்தம் மனம் பிராணன் என்ற இரு பகுதிகளை உடையது. மனம் காந்தத்தின் தன்மையினை (Quality) தீர்மானிக்கும், பிராணன் அதன்  வலிமையினை (Strength) தீர்மானிக்கும். 
இதன் அடிப்படையில் கீழே கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கும், கடவுளை சாராமல் தமது காந்த சக்தியினை வளர்த்துக்கொள்ளவும் ஆன பயிற்சிகளை தருகிறோம்.
முதலாவது பிராணா சக்தியினை வளர்ப்பதற்கான பயிற்சி ;
அடிப்படை 
முதுகுத்தண்டு நேராக இருக்குமாறு நிமிர்ந்து உட்கார்ந்து கொள்ளுங்கள், முடியுமானால் பத்மாசனம், சித்தாசனம், சுகாசனத்தில் அமர்ந்து கொள்ளவும்.  இயலாதவர்கள் நேராக நின்று கொண்டும் செய்யலாம். 
கைகளை பக்க வாட்டில் தளர்ச்சியாக பக்கவாட்டில் தொங்க விட்டு மெதுவாக மூச்சினை முழுவதும் வெளியேற்றி விட்டு பின் மூச்சினை உள்ளிழுக்கும் பொது கைகளை மேலுயர்த்தி நன்றாக மூச்சினை எடுத்து பின்னர் மூச்சினை வெளிவிடும் பொது கைகளை …