Posts

Showing posts from February, 2015

ஜோதிடம் வாழ்க்கைக்கு எவ்வளவு பிரயோசனமானது?

Image
எமது சமூகத்தில் காணப்படும் பல நம்பிக்கையில் ஜோதிடமும் ஒன்றாகும். குறிப்பாக வாழ்க்கையில் துன்பம்  வரும்போதும், ஆபத்துக்கள் வரும்போதும், திருமணம் போன்றவற்றில் ஜோதிடத்தின் பாதிப்பு இல்லாமல் முடிவேடுக்கப்படுவதில்லை. 
இது இப்படி இருக்க ஜோதிடம் என்பதும் பலரை கோழைகளாகவும், வாழ்க்கையில் நம்பிக்கை அற்றவர்களாகவும், சோம்பேறிகளாகவும் மாற்றிக்கொண்டு இருக்கிறது என்பது அனுபவப்பூர்வமாக காணப்படும் ஒன்று. 
செவ்வாய் தோஷம் என்று முப்பது வயது வரை திருமணம் முடிக்காத முதிர் கன்னிகள், ஏழரை சனி அதனால் படிப்பு வராது என்று ஒவ்வொரு முறையும் பரிட்சையில் பெயிலாகும் மாணவர்கள், அஷ்டமத்து சனி என்று வாகனத்தில் மோதிக்கொண்டவர்கள் என பலரையும் பட்டியலிடலாம். இத்தகைய பட்டியலில் உள்ளவர்களை பார்த்தால் தமது புத்தியினையும், மனதினையும் சரியான வழியில் பயன்படுத்த தெரியாமல், பேராசையால் அகலக்கால் வைத்து வியாபாரத்தில் விழுந்தவர்கள், வாழ்கையின் அடிப்படை தர்மம் தெரியாதவர்கள், வாழ்க்கையில் துன்பம் என்பதும் இன்பம் என்பது பொதுவானது, சவால்களை சமாளித்து வெல்வோம் என்ற மனவுறுதி இல்லாதவர்கள், படித்தால் மட்டும்தான் பரிட்சையில் சித்தியடைவோம் என்ற…

ஜோதிஷம் - ஒளி விளக்கு

ஜோதிஷம் என்றால் ஒளியினை காட்டுவது என்று பொருள். ஒளி எதற்கு தேவை, இருளில் இருப்பவற்றை பார்ப்பதற்கு. மனிதன் இருக்கும் இருள் ஒன்று புற இருள், மற்றையது அக இருள், புற இருளிற்கும் சூரியனும் விளக்குகளும் உள்ளன, அக இருளிற்கு தேவையானது ஞானம், ஞானத்தினை பெறுவதற்கு தெளிவு அவசியம், தெளிவிற்கு நாம் வாழும் இயற்கையும், சூழலும் அது எப்படி எம்மில் செல்வாக்கு செலுத்துகிறது என்பதனையும் தெரிந்து, அந்த செல்வாக்கிற்கு ஏற்றவாறு எமது வாழ்க்கையினை எப்படி அமைத்துக்கொள்வது என்பதனையும் தெரிந்து கொள்வதன் மூலம் எமது வாழ்க்கையினை சிறப்பாக அமைத்துக்கொள்ளலாம்.
பிரபஞ்சத்திற்கும் மனிதனிற்கும் இருக்கும் தொடர்பினையும் செல்வாக்கினையும் காட்டுவதே ஜோதிடம்.
ஜோதிடத்தில் எதிர்வு கூறல் என்பது அதனை கூறுபவரது ஞானத்தினை பொறுத்தே சரியாக இருக்கும் என்பதும், கூறுபவர் சரியாக கூறினால் ஒருவன் தனது ஆத்ம, மனோ பலத்தாலும், இறைவனின் கருணையினாலும் அந்த நிகழ்வினை மாற்றலாம் என்பதனை ஜோதிடத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் கருத்தில் கொள்ளவேண்டும்.
உங்கள் வாழ்க்கையினை பற்றி எந்த சோதிடராவது அவநம்பிக்கையாக கூறினால் ஜோதிடத்தினை மனிதகுலத்திற்கு தந்த மகரிஷிக…

தமிழில் ஏன் எழுத்துக்கள் உயிர், மெய், உயிர் மெய் என்று பிரிக்கப்பட்டிருக்கிறது?

எழுத்து என்பது சொல்லுக்கு முதற்காரணமாகிய ஒலியாகும். இந்த ஒலி எழுப்ப படுவதற்கு காற்றின் அசைவு அவசியமாகும். இது ஒலியின் பரு (ஸ்தூல) அமிசம். 
ஒலியின் நுண்ணிய (சூக்ஷ்ம) அமிசம் காற்றாகிய பரியில் ஏறி உடலிற்குள் பயணிக்கும் உயிராகிய பிராணனுடன் தொடர்புடையது. இதனையே சித்தர்கள் பரி என்றும் வாசி என்றும் கூறினார்கள். இதன் செய்கையினையே தொல்காப்பியர் கீழ்வருமாறு கூறுகிறார்; உந்தி முதலா முந்து வளி தோன்றி,
தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ,
பல்லும் இதழும் நாவும் மூக்கும்
அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான்
உறுப்புஉற்று அமைய நெறிப்பட நாடி,
எல்லா எழுத்தும் சொல்லுங் காலை
பிறப்பின் ஆக்கம் வேறுவேறு இயல
திறப்படத் தெரியும் காட்சி யான
(தொல்காப்பியம் .எழுத்து.83)

இதனை உரை செய்த தற்காலத்து தமிழ் அறிஞர்கள் (??) வளி உந்தி வரை போகாது, நுரையீரல் வரைதான் போகும், தொல்காப்பியருக்கு அந்த விஷயம் தெரியாது என்று பொருள் பட எழுதுகிறார்கள். பரிதாபம் என்ன வென்றால் முன்னோர்கள் பருப்பொருளுக்கு ஆதியான சூட்சுமத்தினை பற்றி ஆழமாக அறிதலையே உண்மை அறிவு என்று கொண்டார்கள், இதனை இவர்கள் அறிகிலர்!