Posts

Showing posts from March, 2015

வசந்த நவராத்ரி லகு காயத்ரி அனுஷ்டான பூர்த்தி யக்ஜம் - 29 March 2015

Image
வசந்த நவராத்ரியில் லகு அனுஷ்டானம் எனக்கூறப்படும் ஒன்பது நாட்களில் மந்திர அட்சர ஆயிரம் ஜெபிக்கும் சாதனையினை காயத்ரி மந்திரத்திற்கு செய்யலாம் என்று கூறியிருந்தோம். 
சில அன்பர்கள் முயற்சித்திருந்தாலும் குறித்த எண்ணிக்கையினை பூர்த்தி செய்ய முடியாமல் போய்விட்டது என்று கவலைப்பட்டார்கள். கவலைப்படத்தேவையில்லை. அன்னை பராசக்தி படிப்படியாக அதற்குரிய வல்லமையினை தருவாள். மேலும் செய்த அளவிற்கு பலன் உண்டு. 
யக்ஜம் என்ற சொல்லிற்கு மூன்று பொருள் உண்டு. முதலாவது தேவ வழிபாடு, இரண்டாவது தர்மம் மூன்றாவது கூட்டுறவு. என்பது. எமக்கு இலகுவாக கிடைக்கும் பசு நெய், காய்ந்த மரசுள்ளிகளை அக்னியில் போட்டு குறித்த மந்திரங்களை ஜெபித்து  அவற்றின் பலன்களை எமக்கு மட்டும் அல்லாமல் இவ்வுலகில் உள்ள அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று ஆழமாக எண்ணி எண்ண சக்தியில் தெய்வ சக்தியை கலக்கும் ஒரு செயல் முறை. இந்த செயலில் எண்ணமும், செயலும் தூய்மை பெறுகிறது. 
ஆக யக்ஜம் என்பது அனைவரும் கூட்டுறவாக செய்யும் செய்முறை. சமூக ஒருமைப்பாட்டிற்கும், ஒருங்கிணைவிற்கும், ஒற்றுமைக்கான குறியீடு. காயத்ரி என்பது புத்தியினை தூய்மைப்படுத்தி அனைவரையும் ஒ…

ஸ்ரீ கண்ணைய ஆத்ம யோக ஞான தத்துவ அமிர்தம் - 02 : அமிர்த ஆகர்ஷண பிரணாயாமம்

உடலி அமிர்த கலையினை அதிகரிப்பதற்கான சூட்சுமத்திற்கு ஒரு முறை கூறியுள்ளார். அண்டத்தில் உள்ளது பிணடத்தில் உண்டு என்பதற்கமைய பிண்டத்தில் உள்ள அமிர்தம் அண்டத்தில் உள்ள சந்திரன் எனப்படும் சோமனில் இருந்து பெறப்படுகிறது. இதனை பிராணன் மூலம் எமது உடலில் ஈர்த்து சேமித்துக்கொள்ளலாம். அந்த முறை வருமாறு; 
பௌர்ணமிக்கு முன்பாக மூன்று நாட்களும் பின்பாக மூன்று நாட்களுமாக மாதத்தில் ஏழு நாட்கள் செய்யவேண்டும். இதை மேகம் மறைக்காத நிலவை பார்த்துக்கொண்டு செய்யலாம். சந்திரனை பார்த்தவாறு வசதியான ஆசனத்தில் அமரவும். தலை. கழுத்து, முதுகுதண்டு நேர்கோட்டில் இருக்கமாறு நிமிர்ந்து இருக்க வேண்டும். முதலில் காற்றை மூக்கின் வழியே ரேசிக்கவேண்டும். வாயை அகலமாக திறந்து அதன் வழி முடிந்தவரை காற்றை இழுக்கவும். இப்போது காற்றும் நிலவின் கதிர்களும் உள்ளே நிரம்பும். வாயை மூடி இயலுமான அளவு நேரம் கும்பகம் செய்த பின்னர் மூக்கின் வழியே மெதுவாக காற்றை வெளிவிடவும். சிறிதுநேரம் மூச்சுப்பாதையை காலியாய் விட்டு சூன்ய (பாஹ்ய) கும்பகம் செய்யவும். பின்னர் மறுபடியும் முன்மாதிரியே உள்ளிழுக்கவும். குறைந்தது ஐந்து தொடக்கம் பதினைந்து சுற்றுக்கள்…

ஸ்ரீ கண்ணைய ஆத்ம யோக ஞான தத்துவ அமிர்தம் - 01

ஸ்ரீ கண்ணைய யோகியார் 1882ம் ஆண்டு வைகாசி மாத பௌர்ணமியில் பிறந்து, ஆறு வயதில் அகஸ்திய மகரிஷியால் ஆட்கொள்ளப்பட்டு பதினாறு வருடங்கள் பொதிகை, நீலகிரி போன்ற மலைகளில் அமைந்துள்ள சூக்ஷ்ம ஆசிரமத்தில் ஆன்ம, யோக, ஞான சாதனைகள் பயின்று ஆன்ம பரிணாமத்தினை பூர்த்தி செய்து பின்னர் தனது உலக பரிணாமத்தையும் பூர்த்தி செய்வதற்காகவும், ரிஷி பரம்பரை மாணவர்களுக்கு தற்காலத்திற்கு ஏற்றவகையில் யோக வித்தையினை பயிற்றுவிப்பதற்காகவும் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் ஆணையின் பேரில் பூவுலகில் எண்பது வருடங்கள் வாழ்ந்து, யோகமாணவர்களுக்கு பல்வேறு கலைகளை கற்பித்த உன்னத யோகி, தான் பல்லாண்டு காலம் வழி, நூறாண்டு வாழும் சாதனை என்பதனை கற்பித்ததற்கு சான்றாக நூற்று எட்டு ஆண்டுகள் வாழ்ந்து   1990ம் ஆண்டு கார்த்திகை பௌர்ணமியில் உடலை விட்டு இன்றும் சூக்ஷ்மமாக வேண்டியவர்களுக்கு யோக ஆன்மீக வித்தைகளை கற்பித்து வழிகாட்டி வருகிறார். 
யோகியாரின் மாணவர்களில் நீண்டகால மாணவர் இலங்கை, நுவரெலியா  ஸ்ரீ காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகள். சுவாமிகள், 1957 அளவில் வேலை நிமித்தமாக திருச்சி சென்றபோது ஸ்ரீ ரங்கம் கோயிலில் வைத்து ஒரு முதியவரால் நீலகிரி மலைச…

சித்தர் யோக ஆசிரியர் யோகி வே. இராஜா கிருஷ்ண மூர்த்தி ஐயா அவர்களின் ஆசியும் வீட்டில் வாசியோக பாடங்களும்

பேராசிரியர், முனைவர் யோகி வே. இராஜா கிருஷ்ண மூர்த்தி ஐயா அவர்கள் சித்தர் வழியில் உயர்ந்த சாதனையான சிவயோகத்தில் இருந்து காயசித்தி, யோக சித்தி, வேதை சித்தி பெற்றவர். சித்தர் மருத்துவம், கற்பம், யோக சாதனை என்பவற்றை  விஞ்ஞான ரீதியாக விளக்கும் ஆற்றல் உள்ளவர். ஐயா விவசாய விஞ்ஞானத்தில் (வேளாண்மை) முனைவர் பட்டம் பெற்ற ஒய்வு பேராசிரியர்.
சித்தர்களின் வாசி யோகத்தினை தற்காலத்து மக்கள் விளங்கிக்கொள்ளும் படி யாரையும் பயமுறுத்தாமல், குழப்பாமல் எளிய பாடங்களாக எழுதி அனைவரும் பயன்படும்படி வெளியுட்டுள்ளார். தனது அனுபவத்துக்கு வராத எதையும் வெளிப்படையாக தனக்கு தெரியாது என்று கூறும் வெளிப்படையான மனமுடையவர். அதேபோல் தான் அறிந்த அனுபவித்த விடையத்தை அதீத கற்பனைகளை சேர்க்காமல் உறுதியுடன் உரைப்பவர்.

தன்னுடன் உரையாடும் அனைவருக்கும் “இறை அருள் பெறுக! தான் அவன் ஆகுக” என்ற சித்தர்களின் உயர்ந்த இலட்சியத்தை ஆசியாக கூறி அவர்கள் மனதில் உயர்ந்த ஆன்ம இலட்சியத்தை விதைப்பவர்!  
ஐயாவுடன் எனக்கு தொடர்பை ஏற்படுத்தி தந்தது அகத்தியர் ஞானம் முப்பது, பல்லாண்டுகளாக குருநாதர் ஆணையில் நாம் கற்று வரும் அகத்தியர் ஞானத்திற்கு ஐயா சுருக…

தற்கால சித்தர் தத்துவ அறிஞர்கள்

பேராசிரியர் தண்டங்கோரை நடேச கணபதி அவர்கள் தமிழ் நாட்டின் மிகுந்த புலமையுடைய தத்துவ பேராசிரியர். பலரும் பொருள் காண அஞ்சும், குழம்பும் சித்தர் பாடல்களிற்குள் மூழ்கி தைரியமாக மூடநம்பிக்கை இன்றி சித்தர்களின் பரிபாஷை எனப்படும் குறியீட்டு மொழியினை விளங்க, விளக்க  முயற்சித்தவர். சித்தர் பாடல்களை ஆங்கில வாசகர்களுக்கு, ஆய்வாளர்களுக்கு, சாதகர்களுக்கு அறிமுகப்படுத்தியதில் முன்னோடியானவர்.  
அத்தகைய சித்தர் தத்துவத்தில் பெரும் புலமை வாய்ந்த பேராசிரியர், முனைவர் டி. என் கணபதி ஐயா அவர்களுடன் நேற்று தொலைபேசியில் உரையாடும் வாய்ப்பு கிட்டியது.
எண்பத்து மூன்று வயதிலும் இளமையான குரலும், தெளிவான அன்பான பேச்சும் உடைய ஐயா வெறுமனே ஒரு சித்தர் தத்துவத்தை ஒரு ஆய்வுப்பொருளாக பார்க்காமல் பொருளுணர்ந்து அனுபவிக்கும் சித்தர் பரம்பரையினை சேர்ந்த ஒருவருடன் உரையாடிய திருப்தி கிடைத்தது.
சித்தர்கள் கூறிய ஞானத்தை விட்டுவிட்டு வெறுமனே அவர்களை ஒரு மாயாவிகள் மாதிரி திகில் கதை எழுதி குவிப்பவர்களை பற்றி கவலைப்பட்டார். அகத்தியரைப்பற்றி ஒரு நூல் எழுதிக்கொண்டு இருப்பதாகவும், வெகு விரைவில் வெளிவரும் எனவும் கூறினார். இந்த வரலாறு தற…

இராஜயோகமும் ஹட யோகமும் - Dr. பண்டிட். ஜி. கண்ணைய யோகி

Image
இராஜயோகமும் ஹட யோகமும் - Dr. பண்டிட். ஜி. கண்ணைய யோகி
*****************************************************************

யோகம் பயில்பவர்கள் கட்டாயம் தெளிவிற்கு வாசிக்க வேண்டிய கட்டுரைகள்

16 November 1964 இல் இலங்கை ஆத்மஜோதி இதழில் வந்த கட்டுரை

யோகம் என்பது ஜீவான்மா பரமான்மாவுடன் ஒன்றும் நிலை,
ஹடயோகிக்கும் இராஜயோகிக்கும் உள்ள வேற்றுமை என்ன?
எது உண்மை யோக மார்க்கம்

போன்றவற்றை விளக்கும் அரிய கட்டுரைஸ்ரீ நாக நாத சித்தர் வரலாற்று சுருக்கம் - ஆத்ம ஜோதி இதழ்

Image
ஸ்ரீ நாக நாத சித்தர் வரலாற்று சுருக்கம் - ஆத்ம ஜோதி இதழ்  *********************************************************************
ஈழத்து சித்தர் மரபு பெரும்பாலும் யோகர் சுவாமிகள், கடையிற் சுவாமிகள் என்று யாழ்ப்பாணத்தை சுற்றியே இருந்து வந்துள்ளது.
ஆனால் மத்திய மலை நாட்டில் பிறந்து தமது யோகசாதனையினால் உயர்ந்த சித்தர்கள் என்று கூறும் போது 1) மாத்தளை பரமகுரு சுவாமிகளும்,  2) குயில்வத்தை நாகநாதசித்தரும் .  3) நாவலப்பிட்டி நவநாத சித்தர் (குயின்ஸ்பெரி தோட்டத்தில் சமாதி கொண்டவர்) குறிப்பிடத்தக்கவர்கள்.
அந்த வரிசையில் மலையகத்தில் பிறந்து மக்களோடு மக்களாக வாழ்ந்த நாகநாத சித்தரின் வரலாற்று குறிப்பு.
யோகத்தெளிவு - Dr. பண்டிட். ஜி. கண்ணைய யோகி

Image
16 December 1962 இலங்கை ஆத்மஜோதி இதழில் வெளிவந்த Dr. பண்டிட். ஜி. கண்ணைய யோகியாரின் "யோகத்தெளிவு" என்ற கட்டுரை. 
யோகத்தில் ஆர்வமுள்ளவர்கள், யோகத்தை கற்பவர்கள், யோகத்தினை கற்பிப்பவர்கள் அனைவரும் வாசிக்கவேண்டிய அறிய கட்டுரை. 
இன்று ஆசனம் செய்ய தெரிந்தவுடன் புதுப்புது பெயர்களில் யோகத்தினை தமது மனம்போன போக்கில் உருவாக்கிக்கொண்டு, வியாபாரமாக்கி கொண்டு இருக்கும் இக்காலத்துக்கு தேவையான கட்டுரை. 
யோகம் என்பது யோகமே, அதற்கு எந்த அடைமொழியும் ஆதியில் இருக்கவில்லை, பிற்காலத்தில் தம்மை முன்னிறுத்துவதற்காகவும், தம் பெயர் நிலைப்பதர்காகவும் ஏற்பட்ட ஆடைமொழிகள் மக்களை பெரும் குழப்பத்தை ஆழ்த்தி இன்று யோகத்தின் இலக்கு தெரியாமல் மக்கள் குழம்புகின்றனர். 
யோகத்தில் ஆர்வமுள்ளவர்கள், யோகத்தை கற்பவர்கள், யோகத்தினை கற்பிப்பவர்கள் அனைவரும் வாசிக்கவேண்டிய அறிய கட்டுரை. 
பிராண சக்தி - - Dr. பண்டிட். ஜி. கண்ணைய யோகி

Image
16 November 1962 இல் இலங்கை ஆத்மஜோதி பத்திரிகையில் வெளியான - Dr. பண்டிட். ஜி. கண்ணைய யோகி யாரின் பிராண சக்தி என்றும் கட்டுரை. 

இந்த கட்டுரை பிராண சக்தி பற்றிய தத்துவ ஆராய்ச்சியினை கூறுகிறது. 

பிராண பிரணாயாம விளக்கம் - Dr. பண்டிட். ஜி. கண்ணைய யோகி

Image
14 January 1963 இல்  இலங்கை ஆத்மஜோதி இதழில் வெளிவந்த ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரரின் பிராண பிரணாயாம விளக்கம் எனும் கட்டுரை.

பிராணனின் உண்மைப்பொருள் என்ன?
பிராணன் எப்படி உடலில் செயல் கொள்கிறது?
பிரணாயாமம் என்றால் என்ன?
ஹிந்து மதத்தின் சிறப்புகள் - ஸ்ரீ கண்ணைய யோகியாரின் கட்டுரை

Image
14 March 1963 ம் ஆண்டு இலங்கை ஆத்ம ஜோதி ஆன்மீக இதழில் வந்தது.

பின்வரும் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன;

ஹிந்து மதத்தை ஏன் சனாதன தர்மம் என்று கூறுகிறோம்.மண்ணுலகில் வாழும்போதே மோக்ஷத்தை பெறும் ஞானத்தை கூறிய ஒரேமதம் மோக்ஷம் என்பது கடவுள் கொடுத்து பெறுவதல்ல, ஒருவன் தனது குணங்களை தெய்வ தன்மைக்கு உயர்த்தி பெறுவது. மற்றைய மதங்களில் பாவத்தினை போக்கி கொள்ள இறைவனை இறைஞ்சி பெரவேண்டும் என குறிப்பிட ஹிந்து மதம் இறைசக்தியை ஈர்த்து தன்வசப்படுத்திக்கொண்டு அதன் மூலம் தனது இன்பங்களை பெறலாம் என்ற வழியினை கூறுகிறது. மந்திரங்கள் எனும் சப்த அலைகளால் இறைசக்தியை கவரும் அற்புத முறைகளை தரும் தர்மம் ஹிந்து மதம். ஜடத்திலும் இறைசக்தியை விழிப்பத்து மனிதனில் சூக்ஷ்ம தன்மையினை உணரச்செய்ய வழிகாட்டும் மதம். 
ஆணிற்கு பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் ஏன் தேவை - யோகியரின் யோக விளக்கம்

Image
குருநாதர் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரரின் ஆன்மீக கட்டுரை, 1965 ம் ஆண்டு இலங்கை ஆத்மஜோதி ஆன்மீக பத்திரிகையில் வந்தது.
நாகநாத சித்தர் பற்றிய குறிப்புகள்

Image

காயத்ரி சாதனை வழிகாட்டி

எமது தளத்தினை படித்து காயத்ரி ஜெபம் செய்பவர்களுக்கும், அதிலிருந்து உயர்ந்த சாதனை செய்து மன, பிராண, ஆன்ம சக்திகளை அதிகரித்துக்கொள்ள விரும்புபவர்களுக்கும் இதனை எப்படி தொடங்குவது என்பதில் பல்வேறு மனத்தடங்கல்கள் இருக்கும். அவற்றில் இருந்து வெளியே வந்து தெய்வான்மீக பாதையில் எப்படி முன்னேறுவது என்பது பற்றி இந்த பதிவு படிமுறைகளாக வழிகாட்டும். மேலும் உங்களை நீங்கள் எந்த நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு எப்படி தயாற்படுத்திக்கொள்வதுன் என்பது பற்றி விளக்கத்தினையும் தரும். மந்திர ஜெபம் என்பது மூடநம்பிக்கையில் அல்லது ஏதோவொரு நம்பிக்கையில் கண்ணை மூடிக்கொண்டு இயந்திர தனமாக உச்சரிப்பதில்லை. அது பிராணன் – மனம் – உடல் ஆகிய மூன்றையும் இணைத்து சக்தி பெறும் முறை.பிராணனை இணைக்க மூச்சினை மெதுவாக, ஆழமாக உள்ளிழுத்து வெளிவிட தெரிந்திருக்க வேண்டும். நிறுத்துவது அவசியமில்லை. நாடிசுத்தி தெரிந்தவர்களாக இருப்பின் குறைந்தது ஐந்து வட்டமாவது செய்துவிட்டு ஜெபத்தினை ஆரம்பிக்கவேண்டும்.மனதிற்கு காயத்ரி போன்ற மந்திரமானால் மந்திரத்தின் பொருளை கிரகித்து வைத்திருக்க வேண்டும். ஜெபத்தின் போது மனம் அலையும் வேளைகளில் மந்திரத்தின்…

இலங்கையில் உள்ள சித்தர் தலங்கள் - புஜண்டகிரி நாக நாத சித்தர்

Image
மூன்று நாட்களுக்கு முன்னர் நண்பர் ஒருவர் மூலம் இந்தியாவிலிருந்து ஒரு சாது வந்திருப்பதாகவும் அவர் இலங்கையில் நூறாண்டுகளுக்கு முன்னர் மலையக தோட்ட மக்களிடையே வாழ்ந்து தபஸ் புரிந்து பின்னர் சிவகங்கை மாவட்டம் வடவன் பட்டியில் சமாதியான நாகநாத சித்தரின் ஜீவ சமாதியை பராமரிப்பவர் என்றும் இலங்கயில் நாக நாத சித்தர் வாழ்ந்த இடங்களை ஈழத்து சித்தர்கள் என்ற ஆத்ம ஜோதி நா. முத்தையா ஐயா அவர்கள் எழுதிய நூலின் உதவியுடன் தனக்கு கிடைத்த சில காகபுஜண்ட மகரிஷியின் ஓலையுடன் புஜண்ட மகரிஷியின் சீடரும் இலங்கையில் வாழ்ந்து சித்தர்  தபம் செய்த இடங்களை பார்த்து தரிசித்து செல்வதற்காக வந்து செல்வதாகவும் கூறினார். மேலும் தான் என்னை சந்திக்க விரும்புவதாகவும் சனிக்கிழமை கொழும்பில் சந்திக்கலாம் என்றும் கூறினார். அவருடன் பேசும்போது நான் இலங்கையில் இன்னொரு திசையில் இருந்தேன். சந்திக்கும் வாய்ப்பு இல்லை, மேலும் வார இறுதியில் நான் கண்டிக்கு செல்வதால் சந்திக்கும் வாய்ப்பு இல்லை என்றும் கூறினேன். அதற்கு தான் வெள்ளிகிழமை மாலை தான் கண்டியில் நாகநாத சித்தர் தபஸ் புரிந்த ஒரு குகை இருப்பதாகவும் தான் அங்கு செல்வதாகவும் கண்டி வரும்போது…

ஸ்ரீ ஸக்தி சுமனன்

எனது சித்த வித்யா விஞ்ஞானம் வலைத்தளத்தில் யோக ஞானப்பதிவுகளை எழுதும் போது உபயோகிக்கப்படும் பெயரான சுமனனுடன்  "ஸ்ரீ ஸக்தி" இணைக்கப்பட்டு இனிமேல் "ஸ்ரீ ஸக்தி சுமனன்" என்று பாவிக்கப்படும்.

அன்புடன்

ஸ்ரீ ஸக்தி சுமனன்

காயத்ரி மந்திர சாதனையும் ஆயுர்வேத வைத்திய சித்தியும்

ஆயுர்வேத வைத்தியர் ஒருவருக்கு நோயினை நிதானிக்கும் நுண்புத்தியும், சிகிச்சி, மருந்தினை முடிவு செய்யும் ஆற்றலும் அவசியம். இது வெறும் நூற்களை கற்பதாலோ பட்டங்களை பெறுவதாலோ வருவதில்லை. மனமும், பிராணனும் உடலில் எப்படி செயற்படுகிறது என்பதனை அறியும் ஆற்றல் இருக்க வேண்டும். இதனை தருவது காயத்ரி மந்திர சாதனை. இதற்கு சான்றாக இருப்பது மாதவ நிதானம். ஆயுர்வேதத்தில் இன்றும் நோயினை நிதானிப்பதற்கு மூல நூலாக இருப்பது மாதவ நிதானமாகும். இதனை எழுதியவர் மாதவாச்சாரியார் எனும் பிருந்தாவனத்தில் வசித்த ஞானி ஒருவராகும். இவர் இந்த நூலினை எழுதுவதற்கு முன்னர் பன்னிரண்டு வருடம் காயத்ரி உபாசனையினை செய்து வந்தார். ஆனால் காயத்ரி தேவியின் தரிசனத்தை பெறமுடியாமல் மனம் விரக்தியாகி ஒரு தாந்திரீகரின் ஆலோசனையின் பேரில் பைரவ உபாசனையினை தொடங்கினார். பைரவ உபாசனை தொடங்கி ஒருவருடத்திற்குள் பைரவரின் தரிசனத்தை பெற்றுவிட்டார். பைரவர் மாதவாச்சாரியாரின் முன்னால் தோன்றாமல் பின்புறமாக நின்றுகொண்டு அவரது விருப்பத்தினை கேட்கும்படி கூறினார். ஆச்சரியமடைந்த மாதவாச்சாரியார் தனக்கு முன்னால் வந்து தரிசனம் தரும்படி கூற, பைரவர் “காயத்ரி சக்தியால் …